Wednesday, August 16, 2006

'அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்' சட்டம்

தமிழக அரசு கொண்டுவந்த Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Ordinance, 2006 எனப்படும் அவசரச்சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

உடனே, 'சமூகநீதி செத்துவிட்டது', 'நீதிபதிகள் பார்ப்பனர்கள்', etc. etc. என்று பலரும் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

இப்பொழுது வந்துள்ளது 'இடைக்காலத் தடை'. சில முக்கியமான கேள்விகளுக்கு விடைகள் தேவை என்று உச்சநீதிமன்றம் கருதியுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் சட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லர். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உதவியுடன்தான் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. ஆனால் சமீப காலங்களில் ஓட்டைகள் இல்லாமல் திடமாக இருக்கக்கூடிய சட்டங்கள் இயற்றப்படுவது குறைந்துள்ளது.

தமிழக அரசின் இணையத்தளத்தில் புது அரசால் இயற்றப்பட்ட வேறு சில அவசரச் சட்டங்கள் இருந்தனவே ஒழிய மேற்படி அவசரச்சட்டத்தின் வடிவம் கிடைக்கவில்லை. அதனால் சட்ட வடிவத்தில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை.

நீதிமன்றங்களைக் குறைகூறும் முன்னர், உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள இரண்டு முக்கியமான தீர்ப்புகளை கவனித்துவிடுவது நல்லது.

1. Seshammal & Others vs State of Tamil Nadu [1972]

The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act (Tamil Nadu 12 of 1959) என்னும் சட்டத்தில் 1970-ல் சில மாறுதல்கள் கொண்டுவரப்பட்டன. அதில் முக்கியமானது பரம்பரை பரம்பரையாக அர்ச்சகர்களை நியமிப்பதை மாற்றுவது.

பரம்பரை பரம்பரையாக அர்ச்சகர்களை நியமிப்பது என்றாலே பார்ப்பனர்களைத் தவிர பிறருக்கு அர்ச்சகர்கள் ஆகும் தகுதி ஒட்டுமொத்தமாக மறுக்கப்படுகிறது என்பதுதான். ஆனால் 1970 சட்டத் திருத்தத்தை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அர்ச்சகர்கள் பரம்பரை பரம்பரையாக நியமிக்கப்படவேண்டியதில்லை என்றும் தகுதி படைத்த யாரும் அர்ச்சகராக்கப்படலாம் என்றும் தீர்ப்பு கூறியது.

அந்தத் தீர்ப்பிலிருந்து சில மேற்கோள்கள்:
Thus the appointment of an Archaka is a secular act and the fact that in some temples the hereditary principle was followed in making the appointment would not make the successive appointments anything but secular. It would only mean that in making the appointment the trustee is limited in respect of the sources of recruitment. Instead of casting his net wide for selecting a proper candidate, he appoints the next heir of the last holder of the office. That, after his appointment the Archaka performs worship is no ground for holding that the appointment is either a religious practice or a matter of religion. In view of sub-section (2) of section 55, as it now stands amended, the choice of the trustee in the matter of appointment of an Archaka is no longer limited by the operation of the rule of next-in-line of succession in temples where the usage was to appoint the Archaka on the hereditary principle. The trustee is not bound to make the appointment on the sole ground that the candidate is the next-in-line of succession to the last holder of Office. To that extent, and to that extent alone, the trustee is released from the obligation imposed on him by section 28 of the Principal Act to administer the affairs in accordance with that part of the usage of a temple which enjoined hereditary appointments. The legislation in this respect, as we have shown, does not interfere with any religious practice or matter of religion and, therefore, is not invalid.
இந்த வழக்கின் வாதத்தின்போது, வாதியின் தரப்பிலிருந்து மாநில அரசு வேண்டுமென்றே 'தகுதி' இல்லாதவர்களை அர்ச்சகர்களாக்கும் என்று கூறப்பட்டது. அதாவது ஆகமங்களுக்கு எதிராக ஒரு சைவக் கோயிலுக்கு வைணவரையோ, வைணவக்கோயிலுக்கு சைவரையோ அர்ச்சகராக்கும் உரிமை மேற்படி சட்டத்திருத்தத்தின்மூலம் அரசுக்குக் கிடைத்துவிடுகிறது என்று வாதம் எழுந்தது. மேலும் தகுதி படைத்த யாரையும் அர்ச்சகராக்கலாம் எனும்போது நாளை அரசு 'தகுதி' என்று எதுவுமே வேண்டியதில்லை என்று முடிவு செய்யலாம், பின் யாரை வேண்டுமானாலும் தகுதிகள் எதும் இன்றியே அர்ச்சகராக்கலாம் என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தனர்.

நீதிபதிகள் இந்த வாதங்களை ஏற்கவில்லை.
But the petitioners apprehend that it is open to the Government to substitute any other rule for rule 12 and prescribe qualifications which were in conflict with Agamic injunction. For example at present the Ulthurai servant whose duty it is to perform pujas and recite vedic mantras etc. has to obtain the fitness certificate for his Office from the head of institutions which impart instructions in Agamas and ritualistic matters. The Government, however, it is submitted, may hereafter change its mind, and prescribe qualifications which take no note of Agamas and Agamic rituals and direct that the Archaka candidate should produce a fitness certificate from an institution which does not specialize in teaching Agamas and rituals. It is submitted that the Act does not provide guidelines to the Government in the matter of prescribing qualifications with regard to the fitness of an Archaka for performing the rituals and ceremonies in these temples and it will be open to the Government to prescribe a simple standardized curriculum for pujas in the several temples ignoring the traditional pujas and rituals followed in those temples. In our opinion the apprehensions of the petitioners are unfounded; Rule 12 referred to above still holds the field and there is no good reason to think that the State Government wants to revolutionise temple worship by introducing methods of worship not current in the several temples. The rule making power conferred on the Government by section 116, is only intended with a view to carry out the purposes of the Act which are essentially secular. The Act nowhere gives the indication that one of the purposes of the Act is to effect change in the rituals and ceremonies followed in the terms. On the other hand, section 107 of the Principal Act emphasizes that nothing contained in the Act would be deemed to confer any power or impose any duty in contravention of the rights conferred on any religious denomination or any section there of by Article 26 of the Constitution.

....

In our opinion, therefore, the apprehensions now expressed by the petitioners are groundless and premature. In the result, these Petitions fail but in the circumstances of the case there shall be no order as to costs.
இந்தத் தீர்ப்புக்குப் பின் பரம்பரை அர்ச்சகர் பிரச்னை முடிவுக்கு வந்தது. அடுத்த முக்கியமான வழக்கு

2. N. Adithayan Vs The Travancore Devaswom Board & Others [2002]

கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில் ஒன்றில் பார்ப்பனரல்லாத ஒருவரை அர்ச்சகராக ஆக்கியதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு கடைசியாக உச்சநீதிமன்றம் வந்தது. இந்த வழக்கில் கேரளா உயர்நீதிமன்றத்தில் முழு பெஞ்ச், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியிருந்தது. உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பை முழுமையாக உறுதிசெய்தது. அந்தத் தீர்ப்பிலிருந்து மேற்கோள்:
In the present case, it is on record and to which we have also made specific reference to the details of facts showing that an Institution has been started to impart training to students joining the Institution in all relevant Vedic texts, rites, religious observances and modes of worship by engaging reputed scholars and Thanthris and the students, who ultimately pass through the tests, are being initiated by performing the investiture of sacred thread and gayatri. That apart, even among such qualified persons, selections based upon merit are made by the Committee, which includes among other scholars a reputed Thanthri also and the quality of candidate as well as the eligibility to perform the rites, religious observances and modes of worship are once again tested before appointment. While that be the position, to insist that the person concerned should be a member of a particular caste born of particular parents of his caste can neither be said to be an insistence upon an essential religious practice, rite, ritual, observance or mode of worship nor any proper or sufficient basis for asserting such a claim has been made out either on facts or in law, in the case before us, also.

...

Any custom or usage irrespective of even any proof of their existence in pre-constitutional days cannot be countenanced as a source of law to claim any rights when it is found to violate human rights, dignity, social equality and the specific mandate of the Constitution and law made by Parliament.

...
இவ்வாறு சொல்லி, பார்ப்பனரல்லாதவர்களுக்கும் ஆகம முறைப்படியான தகுதிகள் இருந்தால் அர்ச்சகர்கள் ஆகும் உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் ஆணித்தரமாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தி ஹிந்து செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பது:
Appearing for the petitioners, senior counsel, K. Parasaran said that since the amendment provided for appointment of archakas irrespective of caste or creed or race, even those who followed Buddhism or Sikhism could be appointed as these two religions were said to be the offshoot of Hinduism.

He said such a provision offended Articles 25 and 26 of the Constitution (right to freedom of religion) and violated the Agama sastras, custom and usage. He pleaded for stay of the impugned provision, as it would disturb the three-decade-old practice.
ஆகமங்களில், முக்கியமாக வைகானச ஆகமத்தில், சைவர்கள் விஷ்ணு கோவிலில் அர்ச்சகராவதும் வைஷ்ணவர்கள் சைவக்கோவிலில் அர்ச்சகராவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த விவாதம் சேஷம்மாள் வழக்கிலும் எடுத்துக்காட்டப்பட்டது. ஆனால் மாநில அரசு அதுமாதிரி வழக்கில் இல்லாத ஒன்றைச் செய்யப்போவதில்லை என்று உச்சநீதிமன்றம் அந்த விவாதத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இப்பொழுது வாதிகள் தரப்பிலிருந்து புத்த, சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகர் கல்லூரியில் சான்றிதழ் வாங்கிவிட்டால் அவர்கள்கூட சைவ, வைஷ்ணவக் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்ற தங்களது சந்தேகத்தை நீதிமன்றம் முன் வைக்கிறார்கள். நீதிமன்றம் தமிழக அரசின் அவசரச்சட்ட நகலைப் பார்த்து அரசின் வாதங்களைக் கேட்டு தமது தீர்ப்பை வழங்கவேண்டும்.

இந்த அடிப்படை இதற்கு முந்தைய வழக்குகளிலும் காணப்பட்டதுதான்.

சமூகநீதிக்கான போராட்டம் எளிதானதல்ல. கொள்கை முடிவுகள் சட்டவரைவுகளாகும்போது சரியாக அமையவேண்டும். எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் கொள்கைகள் நியாயமாக இருக்கும்போது, சட்ட வரைவுகள் சரியாக இருக்கும்போது, எதிர்ப்புகள் நிச்சயம் பலனற்றுப் போகும்.

தொடர்புள்ள சில பதிவுகள்:

இடைக்காலத் தடை - ரவி ஸ்ரீநிவாஸ்
சீக்கியரும் அர்ச்சகர் ஆகலாமா? - பிரபு ராஜதுரை
அர்ச்சகர் பிரச்னையின் பயணம்... - பிரபு ராஜதுரை

15 comments:

 1. useless details for those who are the Perpetrators of the version of "சமூக நீதி"...that is prevalent in India.

  நீங்க என்ன சொல்லி என்ன பிரயோசனம் பத்ரி, அவிங்களுக்கு, பூநூல் போட்டவனல்லாம் திட்டனும் விரட்டனும்...

  இந்த சட்டத்தை கேஸ்போட்டு தடை வாங்கியதே பார்ப்பானர்கள் இல்லை என்பதையும் கொஞ்சம் சொல்லுங்கள்.

  ReplyDelete
 2. ////இந்த சட்டத்தை கேஸ்போட்டு தடை வாங்கியதே பார்ப்பானர்கள் இல்லை என்பதையும் கொஞ்சம் சொல்லுங்கள். /////

  பின்ன என்ன பறையன்களா தடை வாங்கினார்கள்?

  எந்தப் பள்ளனாவது, பறையனாவது சிவாச்சாரியார்கள் சங்கம் வெச்சுக்கிட்டு இருக்கானா?

  ReplyDelete
 3. பத்ரி, பதிவின் மூலம் நீதிமன்றங்களின் தீர்ப்பு பற்றி சொல்ல விழையும் செய்தியோடு எனக்கு மாறுதல்கள் உள்ளன, நீதிமன்றங்கள் புனிதபசுக்கள் அல்ல, நீதிமன்றங்கள் ஒரே பிரச்சினையில் எடுத்த பல்வேறு நிலைப்பாடுகள் நமக்கு தெரிந்ததே, அதுவும் குறிப்பாக No Work No Pay வில் AIMS க்கு ஒரு மாதிரியாகவும் மற்றவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் நீதிமன்றங்கள் நடந்துகொண்ட முறை அறிந்ததே, முடிந்தால் பிறகு விளக்கமாக பதிலிறுக்கின்றேன்.

  சிதம்பரம் கோவில் தொடர்பான இடைக்காலத்தடையே முற்றிருதி தீர்ப்பானதே.

  http://kuzhali.blogspot.com/2006/07/1.html

  http://kuzhali.blogspot.com/2006/08/blog-post.html

  ReplyDelete
 4. பத்ரி,
  சில முக்கிய விவரங்களை அளித்துள்ளீர்கள். இடைக்கால தடை என்பது நிரந்தர தடை அல்ல என்பதும், மேலும் விசாரணை நடக்கும் எனவும் அனைவரும் புரிந்துக்கொள்ளுதல் நலமே.
  அர்ச்சகர் ஆக சரியான தகுதி வரைமுறை வைத்து அதில் தேர்வடைந்தால் மட்டுமே யாரும் அர்ச்சகர் ஆகலாம் என்று வைப்பதே நல்லது.

  ReplyDelete
 5. குழலி / Kuzhali said...

  பத்ரி, பதிவின் மூலம் நீதிமன்றங்களின் தீர்ப்பு பற்றி சொல்ல விழையும் செய்தியோடு எனக்கு மாறுதல்கள் உள்ளன, நீதிமன்றங்கள் புனிதபசுக்கள் அல்ல, நீதிமன்றங்கள் ஒரே பிரச்சினையில் எடுத்த பல்வேறு நிலைப்பாடுகள் நமக்கு தெரிந்ததே,/////


  http://balaji_ammu.blogspot.com/2006/08/blog-post_15.html

  குழலி எழுதுனதை படிச்சுட்டு இதையும் படிங்க...ஒரே தீர்ப்பு வந்தாலும்..வெவ்வேர தீர்ப்பா வந்தாலும்....எந்த விஷயத்திலும் தனக்கு சாதகமான தீர்ப்பு வரும் வரை இவர்களது வசை பாடல் தொடரும்

  ReplyDelete
 6. Badri,
  Thanks for providing the finer details on this issue.

  ReplyDelete
 7. பத்ரி,

  //சமூகநீதிக்கான போராட்டம் எளிதானதல்ல. கொள்கை முடிவுகள் சட்டவரைவுகளாகும்போது சரியாக அமையவேண்டும். //

  நல்லா தொகுத்து வழங்கியுள்ளீர்கள்..

  நன்றி..

  ReplyDelete
 8. ///நீங்க என்ன சொல்லி என்ன பிரயோசனம் பத்ரி, அவிங்களுக்கு, பூநூல் போட்டவனல்லாம் திட்டனும் விரட்டனும்...///

  திட்டுக்கும், விரட்டுக்கும் தகுதியானவனுங்க தான் பூணூல் போட்டவனுங்க.

  ReplyDelete
 9. பத்ரி,
  இது ஒரு சீரியஸான விஷயம் எனவே Guideline செட் பண்ண வேண்டும் என்றுகூறி இடைக்காலத் தடைவிதிதுள்ளார்கள்.

  ஆச்சர்யமாக இருக்கிறது. இதற்கு இடைக்காலத் தடை என்பது டூ மச். இப்போது கோயிவிலில் பூசாரிகளாக இருப்பவரையெல்லாம் பிடித்து வெளியில் தள்ளப் போகிறார்களா என்ன? எந்த வகையில் இது சென்சிடிவான விஷயம், இடைக்காலத் தடை வழங்க?

  அநீதியாக மறுக்கப்பட்ட சமூக நீதி அளிப்பதில் ஏன் இவ்வளவு எச்சரிக்கை? Guideline செட் பண்ணும்வரை என்ன கெட்டுவிடப் போகிறது?

  ReplyDelete
 10. அது சரி, மருத்துவ மாணவர்கள் மேற்படிப்பு குறித்த ஒரு வழக்கில் இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம் "how can the court go into the validity of a policy decision" என்று கூறிய்து ordered interim stay of the operation of the judgment.

  When Mr. Muthukumaraswamy submitted that the High Court had interfered with the policy decision of the Government, the Judges observed, "how can the court go into the validity of a policy decision" and ordered interim stay of the operation of the judgment. The Bench issued notice to the doctors who had filed petitions in the High Court. (http://www.hindu.com/2005/02/13/stories/2005021314240400.htm)

  See the judgement here
  http://www.nellaimedicos.com/blog/doctorsandlaw/2005/02/supreme-court-slpcno-2229-of-2005.html

  What happened to the importance of policy decision now. THe court could have taken the matter into consideration without giving a stay saying it is a policy decision

  Especially with regard to how the Supreme Court applied to the No Work No pay concept to AIIMS doctors, make us believe that there is a need for revamping the system

  ReplyDelete
 11. Dr.Bruno should know that courts do go into and examine policy decisions when the decisions violate fundamental rights.The
  constitution of india guarantees some rights which cannot be taken
  away by the state.

  ReplyDelete
 12. Sorry for my ignorance.

  What right has been "taken" away in the temple case.

  If at all a right was taken away, it was in the PG Case and the Supreme Court refused stayed the high court judgement which was a relief to the students. If you see that case, by that stay, the case was lost (it was regarding a question of 2 years or 3 years. The court gave a stay and now 3 years have elapsed !!!! - this is a classic case of judgement delayed becoming judgement denied)

  Coming to the question - What right has been "taken" away in the temple case and taken from whom. Can you explain it a bit more.

  ReplyDelete
 13. பத்ரி,

  ஏன் உங்கள் பதிவுகள் தேன்கூட்டில் தெரிவதில்லை...உங்களுக்கு பின்னூட்டமாக எனது பதிவு
  http://marchoflaw.blogspot.com/2006/08/blog-post_19.html

  ReplyDelete
 14. While the govt. has right to make changes in necessary qualification
  in terms of no. of years as service
  it has to explain the rationale behind it.High Court need not go in to the validity of the policy decision but can examine whether
  due process has been observed and
  the change does not unduly affect the interests of one section of
  doctors.Read the judgment given
  in Maneka Gandhi case.
  In Archakas case according to
  newspapers the right to religious
  worship and freedom of religion had
  been invoked as grounds to challenge that section of the ordinance.

  ReplyDelete
 15. Hi Badri,
  where are you?
  Thanks

  ReplyDelete