Thursday, August 31, 2006

69% இட ஒதுக்கீடு

உச்சநீதிமன்றம் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய பெஞ்சை அமைத்து தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69% ஒட ஒதுக்கீடு செல்லுமா செல்லாதா என்பதை விசாரிக்க உள்ளது.

சிறு வரலாறு:

1. தமிழகத்தில் பல ஆண்டுகளாக பல தரப்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்துள்ளது.

2. மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் பேரில் மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு கொண்டுவர முற்பட்டதை அடுத்து அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்திரா சாஹ்னி v. இந்திய அரசு வழக்கின் தீர்ப்பில் (16 நவம்பர் 1992) உச்சநீதிமன்றம், மத்திய, மாநில அரசுகளுக்கு சாதிகள் அடிப்படையில் வேலையிலோ, படிப்புக்கான நுழைவிலோ இட ஒதுக்கீடு வழங்கும் உரிமை உண்டு என்று கூறியது. ஆனால் அதே தீர்ப்பிலேயே இவ்வாறு வழங்கப்படும் இட ஒதுக்கீடு மொத்தத்தில் 50%-ஐத் தாண்டக்கூடாது என்றும், கிரீமி லேயர் எனப்படுவோரை வரையறை செய்து இட ஒதுக்கீட்டின் பலன் அவர்களுக்குப் போகாமல் இருக்குமாறு செய்யவும் ஆணையிடப்பட்டது.

3. ஆனால் தமிழகத்தில் பல வருடங்களாகவே 69% இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வந்தது. இந்திரா சாஹ்னி வழக்கை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் 1993-94-ம் கல்வி ஆண்டுக்கான நுழைவில் 69% இட ஒதுக்கீடு இருக்கலாம் என்றும் ஆனால் அடுத்த ஆண்டுகளிலிருந்து இது 50% ஆகக் குறைக்கப்படவேண்டும் என்றும் தீர்ப்பானது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது தமிழக அரசு. ஆனால் அங்கு எதிரான தீர்ப்பே கிடைத்தது. அதாவது 50%-க்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என்று.

4. தமிழக அரசு 1993-ல் Tamil Nadu Backward Classes, Scheduled Castes and Scheduled Tribes (Reservation of Seats in Educational Institution and of appointments or posts in the Services under the State) Bill, 1993 என்ற சட்டத்தின்மூலம் 69% இட ஒதுக்கீட்டை சட்டபூர்வமாக்கி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதா 1994-ல் சட்டமானது.

5. உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில் இருப்பதால் இந்தச் சட்டத்தைச் செயல்படுத்த அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும். எனவே மத்திய அரசு 1994-ல் 76-வது சட்டத்திருத்தத்தின்மூலம் மேற்குறிப்பிட்ட தமிழக சட்டம் (1994)-ஐ, அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது ஷரத்தின்கீழ் கொண்டுவந்தது.

ஒன்பதாவது ஷரத்தின்கீழ் இருக்கும் சட்டங்கள்மீது மேல்முறையீடு செய்ய நீதிமன்றத்துக்குப் போகமுடியாது.

6. இவ்வாறு ஒன்பதாவது ஷரத்தின்கீழ் 69% இட ஒதுக்கீடு தமிழக அரசின் சட்டம் கொண்டுவரப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 76 செல்லாது, அது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று. அதை விசாரிக்க 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தேவை. ஆனால் 1999 முதற்கொண்டே இது உருவாக்கப்படவில்லை.

இப்பொழுது 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ஒன்றை உருவாக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
The grounds on which the matter was referred to nine judges were: "Judicial review is a basic feature of the Constitution; to insert in the Ninth Schedule an Act which, or part of which, has been struck down as unconstitutional in exercise of the power of judicial review is to destroy the basic structure of the Constitution. To insert into the Ninth Schedule after April 24, 1973 an Act, which, or part of which, has been struck down as being violative of the fundamental rights conferred under the Constitution is to destroy or damage its basic structure."

20 comments:

  1. தற்போதைக்கு தமிழகத்தில் 69% இடஒதுக்கீடே இல்லை, வெறும் 50% தான், 69% ஒதுக்கீடு செய்து பின் மீண்டும் OCக்கு மட்டும் இடங்களை அதிகமாக்கி கடைசியில் கிடைப்பது 50% இடஒதுக்கீடு மட்டுமே....

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் இயற்றப்பட்ட சட்டம் உச்சநீதிமன்றங்களினால் மாற்றப்படுமெனில் அல்லது நிராகரிக்கப்படுமெனில் அப்போது நடப்பது மக்களாட்சியா நீதிமன்ற ஆட்சியா?

    இந்தியாவில் நடப்பது உச்சநீதிமன்ற ஆட்சியா? மக்களாட்சியா? (அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்படவர்கள் ஆட்சியா) என்ற குழப்பம் எனக்கு பல நேரங்களில் வருகின்றது... தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யோக்கியதை தனிக்கதை....

    ReplyDelete
  2. சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும் சட்டத்தை உருவாக்கும் பணியை கொண்டது. நீதிமன்றங்கள் சட்டத்தின் படி வழக்குகளை ஆய்ந்து தீர்ப்பு வழங்க வேண்டியவர்கள். சட்டம் நீதியானதா இல்லையா என கருத்து சொல்ல நீதிமன்றங்கள் எல்லா பிரச்சனைகளிலும் இறங்கினால். நீதித்துறைக்கும் மக்களமைப்புகளான பாராளுமன்றம் சட்டமன்றங்களுக்கு இடையில் மல்யுத்தமாக தான் முடியும்.

    இதே உச்சநீதிமன்றம் தான் சமூக ஏற்ற தாழ்வு அடிப்படையிலான இடஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தபட்ட மக்களுக்கு வழங்கலாம் என இருந்த அரசியல் சட்டப்பிரிவை எதிர்த்து தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றங்களின் சமூக அக்கறை எந்த விதத்தில் அமைகிறது என்பதற்கு இது சரியான உதாரணம். இந்த தீர்ப்பை மாற்ற அரசியல் சட்டத்திருத்தம் தேவைப்பட்டது அதன் விளைவாக சமூகநீதிக்கான இடஒதுக்கீடு உருவானது. இது இடஒதுக்கீடு பெற 50 ஆண்டுகள் நடந்த போராட்டங்களின் துவக்க வரலாறு. இன்னும் நீதிமன்றங்கள் தங்களது பார்வையில் சமூகநீதி என்பதை எப்படி புரிந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த வழக்கும் பதில் சொல்லும். உரிமைகள் போராடாமல் கிடைப்பதில்லை. இடஒதுக்கீட்டிற்கும் அது பொருந்தும்.

    ReplyDelete
  3. மக்களாட்ச்சி இந்தியாவில் நடந்ததே இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் ஆட்சியும் தற்போதய காலத்தில் நடப்பதில்லை. கூட்டணி என்ற பெயரில் களவாணித்தனம் மட்டுமே நடக்கிறது.
    இருக்கும் சட்டத்தை வளைத்து, தங்கள் இஷ்டத்திற்கு, தனக்கு வேண்டியவருக்கு மட்டுமே பயன்படும் வகையில் ஆட்சி நடத்த இந்த அரசியல்வாதிகள் முனைவது வெட்கக்கேடு. இந்நாட்டின் சாபக்கேடு.
    மக்களோ, சர்வாதிகாரமோ - நீதி பரிபாலனம் (திராவிட சிசுக்களின் சமூக நீதி அல்ல இது) மட்டுமே முக்கியம். உச்ச நீதிமன்றமே மேன்மையானது.

    ReplyDelete
  4. //
    இந்தியாவில் நடப்பது உச்சநீதிமன்ற ஆட்சியா? மக்களாட்சியா?
    //

    ஆமா, மரம் வெட்டி கட்சி செஞ்சா, மக்களாட்சி, மத்தவன் செஞ்சா அது மக்களாட்சி இல்லை...போங்கய்யா போயி, காட்டுல காஞ்ச சுள்ளி பொருக்குறவண்ட போயி உங்க சமூக நீதியப் பேசுங்கய்யா..

    ReplyDelete
  5. அது ஏங்க 69% ..100% த்தையும் ஒதுக்கீட்டுலயே பண்ணிறவேண்டியது தானே...

    சாதிக்கு சதவிகிதம்...40% தேவர் என்றால் எல்லாவற்றிலும் 40% இடம்...கக்கூஸ் கழுவுவதிலிருந்து, சிவில் சர்வீஸ் மேலாண்மை வரை அரசு வேலைகள் அனைத்திலும்...40% சீட்டுகள் அவர்களுக்கு.

    வன்னியர் 35% என்றால் அதே தான் அவர்களுக்கும்...

    2% பிராமணர்கள் என்றால் அவர்களுக்கும் எல்லாவற்றிலும் அதே 2% தான்...

    பொது கேட்டகிரி (ஓப்பன் காம்படீஷன்) இருந்தாத்தானே பிரச்சனை...!

    எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்...அது தானே சமூக நீதி...?!! இட ஒதுக்கீடு கூட எல்லோரும் பெற்று தமிழ் சமூகத்து நீதி சிறப்பாய் வாழவேண்டும் என்று 9 நீதிபதிகள் சொல்வார்களா?

    ReplyDelete
  6. //ஆமா, மரம் வெட்டி கட்சி செஞ்சா, மக்களாட்சி, மத்தவன் செஞ்சா அது மக்களாட்சி இல்லை...போங்கய்யா போயி, காட்டுல காஞ்ச சுள்ளி பொருக்குறவண்ட போயி உங்க சமூக நீதியப் பேசுங்கய்யா.. //

    நடப்பது மக்கள் ஆட்சியா? உச்சநீதிமன்ற ஆட்சியா? என்ற உண்மையை கேட்டால் பொத்துக்கொண்டு கிளம்பிவரும் ஆட்களே மரம்வெட்டி அப்படியே கஞ்சியும், சாராயமும் காய்ச்சி குடித்துக்கொண்டு இடுப்பில் துண்டைக்கட்டிக்கொண்டு இங்கே முதுகு வளைந்து அடிபணிந்து கூலிக்கு நின்று பின் அப்படியே சேரிப்பக்கம் போய் ஏய்.. என சத்தம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும், அப்போது தானே சேரியில் இருப்பவங்களையும் தட்டி வைத்த மாதிரி ஆனது மரம்வெட்டிகளையும் மட்டையாக்கியே வைத்த மாதிரி ஆனது அப்படியே வர்ணாசிரமத்தையும் காப்பாற்றிய மாதிரியும் ஆனது, மரம்வெட்டிகளெல்லாம் வேறுமாதிரி யோசிக்க ஆரம்பித்தால் வர்ணாசிரமத்தை காப்பாற்றும் காவல் நாய் வேலையை எவன் பார்ப்பது என்ற வருத்தமோ? பேச வந்துட்டாங்கய்யா...

    சனநாயகத்தின் நான்கு தூண்களில் ஊடகத்தூணை 75%மேல் ஆக்கிரமித்து, நீதிமன்ற தூணை கிட்டத்தட்ட முழுவதும் ஆக்கிரமித்து வேணுகோபால்கள் மாதிரி ஆட்கள் அரசு இயந்திர தூணையும் ஆக்கிரமித்து சமூகநீதிக்கு எதிராக இருக்கும்போது வேறு வழியே இல்லாமல் சமூகநீதிக்கு ஆபத்பாந்தவன்களாக இருப்பது மரவெட்டி அரசியல்வாதிகளும், ஊழல் அரசியல்வாதிகளும் தான்.... என்னை பொறுத்தவரை மற்ற மூன்று உயர்சாதி வெறி ஆதிக்கம் கொண்டவர்களின் தூண்களை விட அரசியல்வாதிகள் நிரம்பியிருக்கும் தூண் எவ்வளோ பரவாயில்லை...

    ReplyDelete
  7. //இட ஒதுக்கீடு கூட எல்லோரும் பெற்று தமிழ் சமூகத்து நீதி சிறப்பாய் வாழவேண்டும் என்று 9 நீதிபதிகள் சொல்வார்களா?
    //
    நீதிமன்றம் என்றாலே எப்படியும் தீர்ப்பு இடஒதுக்கீட்டிற்கு எதிராகத்தானே வரப்போகின்றது பிறகெதற்கு பெஞ்ச், டேபிள் எல்லாம்....

    அரசியல்வாதிகளின் யோக்யதை எப்படி தனிக்கதையோ அதே போல ஏன் அதையும் விட நீதிபதிகளின் யோக்கியதையும் தனிக்கதை என்பது வேறுகதை...

    ReplyDelete
  8. குழலி: நீங்கள் சொல்வது உண்மைதான். தமிழகத்தில் பல தளங்களில் 69% இட ஒதுக்கீடு - அரசு வேலையில், பதவி உயர்வில் - இருந்தாலும் தமிழ்நாடு தொழில்கல்வி நுழைவுத் தேர்வில் 1993 முதல் நடைமுறையில் (உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக) 50% இட ஒதுக்கீடுதான் இருந்து வருகிறது.

    ReplyDelete
  9. திரு.குழலியின் கோபத்தினை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், மக்களாட்சி என்பதால் சட்டமன்றங்கள் கேள்வி கேட்பாரின்றி இயங்க அனுமதிக்க முடியாது. மக்கள் பிரநிதிகளால் இயற்றப்படும் சட்டமானது நியாயத்திற்கு புறம்பாக இருப்பினும் கீழ்ப்படிய வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி வந்த பல அரசியல் விஞ்ஞான நிபுணர்கள் நாஜிக்கள் அவர்களது சட்டத்திற்கு உட்பட்டு நடத்திய கொடுமைகளை பார்த்து தங்களது கருத்தினை மாற்றிக் கொண்டனர்.

    உதாரணமாக, பிஜேபி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்து, இந்தியாவினை ஒரு இந்து நாடாக அறிவித்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியுமா? அத்தகைய ஆபத்து நிகழும் பொழுதில் நீதிமன்றங்களின் மறுபரிசீலனை (judicial review) அதிகாரம் ஒன்றே சிறுபான்மை மக்களூக்கு பாதுகாப்பாக இருக்க முடியும். சட்டமன்றம் (legislature) அதிகார வர்க்கம்(executive)போல நீதிமன்றங்களும் மக்களாட்சியின் ஒரு அங்கம்தான். சட்டமன்றங்கள் மட்டுமே மக்களாட்சியாக முடியாது. எனவே, நமது அரசியல் சட்டத்தினை வடிவமைத்தவர்கள் நீதிமன்றங்களுக்கு அளித்த இந்த அதிகாரம் தேவையான ஒன்றுதான்.

    வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஏதோ நீதிபதிகள் சர்வ வல்லமை பொருந்தியவர்கள் போல தெரியும். ஆனால், தனது குடியிருப்பில் தண்ணீர் குழாயினை சரி செய்வது போன்ற சிறிய காரியங்களுக்கு கூட பொதுப்பணித்துறை அலுவலர்களை சார்ந்திருக்கும் சாதாரணர்கள்தான் அவர்கள். மும்பையில் தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு செஷன்ஸ் கோர்ட் பெண் நீதிபதி ஒருவர் கேலியாக 'i can order to hang a man but not a fan in my house'என்று குறிப்பிட்டார்.

    ReplyDelete
  10. //நீதிமன்றங்களின் மறுபரிசீலனை (judicial review) அதிகாரம் ஒன்றே
    //
    பிரபு நீதிபதிகளின் நீதிபரிபாலனை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, சாதி வெறுப்பு விருப்பின்றி நடந்துகொள்ளப்படுமெனில் யாருக்கும் எந்த பிரச்சினையுமில்லை, உங்களது கருத்துபடி நீதிமன்ற நீதிபதிகள் புனிதர்களாக இருக்க வேண்டிகள், ஆனால் நீதிபதிகளும் நீதிமன்றமும் பச்சை சாதி வெறியோடு உயர் ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாக இடஒதுக்கீட்டு, அதற்கு எதிரான எய்ம்ஸ் மருத்துவர்கள் வேலை நிறுத்தம், அர்ச்சகர் பிரச்சினையிலிருந்து பல தீர்ப்புகள் ஆளுக்கு ஆள் மாறுபடுகின்றதே... அப்படி இருக்கும் பட்சத்தில் மக்காளாட்சி மன்றங்களில் சமூகநீதிக்காக ஏற்படுத்தப்படும் சட்டம் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும்போது நீதிமன்றங்களை நான் எந்த ஹிட்லருடன் எந்த நாஜிக்களுடன் ஒப்பிடுவது... மற்றபடி நீதிபதிகளின் நீதிமன்றத்தை தாண்டிய அதிகாரத்தை பற்றி எமக்கு கவலையில்லை....

    ReplyDelete
  11. Kuzhali should know that 27% reservation for OBCS in central
    govt. jobs was upheld by
    Supreme Court.Kuzhali does not
    know the basic facts in most
    issues nor cares to read
    judgments or laws.He sounds like
    a PMK worker who worships Ramadoss
    and his family.

    ReplyDelete
  12. //He sounds like
    a PMK worker who worships Ramadoss
    and his family. Edit
    //
    கடைசியாக இங்கே தான் வந்து நிற்பார்கள், மறுத்து பேச நியாயங்கள் எதுவுமில்லாத போது....

    நன்றி

    ReplyDelete
  13. One wonder why Tamil Nadu govt cannot follow the language policy like in Karnataka. Reservation there has Kannada language in mind.

    In Karnataka CBSE and other school who dont teach Kannada as a compulsory subject lose their license. In Tamil Nadu all Kendriya Vidyalayas, Bhavans schools and also boarding schools such as La Chatelaine all have Hindi as compulsory subject (only North Indians benifit while Tamils are forced with Hindi right from Std 2).

    Reservation should be for Tamils - those who speak, read and write Tamil. With current system there is no bearing on Tamilness.

    Veermani had said in a while back that “creamy layer concept divides OBC community”…Why did he not say present reservation divides Tamil society. Veeramni is not caring for his Tamil identity only for his caste identity.

    One wonders whether reservation (as it exists now) is plan to divide Tamil society completely by favouring several non Tamil OBC/ST/SC castes.

    Next to keep in mind is offical language implementation of Tamil. TN flights only have Hindi. Karunanidhi had promised Tamil annoucements but now that promise has no priority at all for him. Karunanidhi is for national control of all TN airports. National control of TN ports and airports means Hindi gains preference. Why cant TN govt take control of TN ports/airports have Tamil implemented in all signs and annoucments.

    Even after Karunanidhi coming to power the 4th time, CBSE Hindi imposition is full swing in Tamil Nadu (unlike in Karnataka where these schools are threatened to be shut).

    While Kerala is ahead of its plans with Air Kerala there is nothing of that sort even in concept in Tamil Nadu. Yes, Tamil Nadu needs Tamil Nadu Airways (தமிழக வான்வழி) where passengers will here sweet Tamil annoucements and see beutiful Tamil labels and signs.

    RESERVATION SHOULD DEFINE THE TAMIL CASTE…The very existance of caste terms Brahmins, Paapaans, Devars, Dalits is design for destroying the Tamil race while the Hindis and other non-Tamils slowly claim TN reservation
    (www.tn.gov.in/bcmbcmw/bclist.htm)

    Coming to airports, why is Coimbatore airports not being developed. Because it is under control of the national AAI which favours only the Hindian airports Delli and Bombay. If TN state took control over our airports, Coimbatore and Madurai will be on the international map…and other airports like Vellore, Tuticorin, Salem would be blooming. These 3 are empty airports. Karunanidhi (a self claimed Tamil patriot) still favours Hindians to control TN airports. Why are the staff in TN airports not even talking in Tamil?!!

    Why is Hosur railway station not even under control of Southern Railway headquartered in Madras? TN govt should take over Southern Railways and claim Hosur division and implement Tamil.

    Presently in highways Hindi is being implemented even when surface transport ministers is a TN ministers. He has already fallen at the Hindian master’s feet.

    IT WILL TAKE A COURAGEOUS HARDEND TAMIL PATRIOT TO BREAK (abolish) CASTE BARRIERS WITHIN THE TAMIL RACE, HAVE TN full control of its ports, railways and airports, have Tamil implemented in railways, flights, airports, shop signs, highways.

    தமிழ் வாழ்க..தமிழ் ஜாதி வளர்க, தமிழில் ஜாதிகள் ஒழிக

    tamilnation.com

    ReplyDelete
  14. It's not a welcome gesture to try and overrule a policy created by our elected bodies.

    But then, when the elected bodies try to sneak these policies in a unconstitutional way, the Supreme Court has to intervene like it does now.

    Reservations are necessary - but, for how many more years we have to do this to create a common play field?
    Has the 'backward' society really benefited all these years?

    I think what we need is a 9 bench committee to evaluate whats not working with our current reservation system.

    -BNI

    ReplyDelete
  15. உச்ச நீதிமன்றத்திற்கு வக்காலத்து வாங்கி வருபவர்்கள் கவனிக்க வேண்டியது.
    காஞ்சி சுப்பிரமணி,டில்லி சந்திரசாமி திருச்சி பிரமானந்த சாமி அனைவரும் உச்ச நீதி மன்றத்திலே ஒன்றாக நடத்தப்பட்டார்களா?
    உச்ச நீதிமன்றம் உயர் சாதி அதிகாரத்தின் கடைசிக்கூடாரமா இலையா?
    9 ஆவது அட்டவணையில் சேர்ப்பது அவ்வளவு எளிதா?மக்கள் மன்றத்தின் 2/3 ஒரே கட்சி ஆட்சியில் இருந்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன ?
    50 விழுக்காடுதான் தரலாம் என்று சொல்ல உச்ச நீதி மன்றத்திற்கு யார் அதிகாரம் கொடுத்தது> 90% முதல்
    100% பின் தங்கியவர்களே உள்ள மாநிலங்களில் மீதி விழுக்காட்டை உச்ச நீதி மன்றத்திற்கே தந்துவிட வேண்டுமா?

    ReplyDelete
  16. பிரபு ராஜதுரை சொல்வது சரி. அதனால்தான் மக்களாட்சியில்
    நீதிபதிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எங்கெங்கோ
    ரெகமந்தேஷனில் நியமனம் வாங்கியவர்களே நீதிபதிகளாக
    இருப்பதே இவர்களுடைய அதிகாரத்தை கேள்விக்குறி
    ஆக்குகிறது.

    இந்த 50 சதவிகிதத்தை எந்த அறிவியல் ஆராய்ச்சி
    அடிப்படையிலும் கண்டுபிடிக்கவில்லை. தோராயமாக
    நீதிபதிகள் கண்டுபிடித்த ஒரு நம்பர்தான் இது.

    இந்தியாவை இந்து நாடு என்று அறிவித்தால் அது
    அரசியல் சட்டத்துக்கு புறம்பாக இருக்கும்.

    69 சதம் ஒதுக்கீடு என்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம்பானது
    என்று சொன்னார்களா? பிரபுதான் விளக்க வேண்டும்.

    ReplyDelete
  17. 50 விழுக்காடுதான் தரலாம் என்று சொல்ல உச்ச நீதி மன்றத்திற்கு யார் அதிகாரம் கொடுத்தது> 90% முதல்
    100% பின் தங்கியவர்களே உள்ள மாநிலங்களில் மீதி விழுக்காட்டை உச்ச நீதி மன்றத்திற்கே தந்துவிட வேண்டுமா?

    SC derives its power from constitution.The OBC % in India
    is a matter of dispute.In Tamil
    Nadu are really 88% of population
    are backward enough to need reservation.Those who have enjoyed
    benefits of reservation in an
    unjust manner are against SC
    challenging that.These castesist
    elements are the enemies of the
    principle of equality.They are
    worse than Nazis.Just as Nazis
    hated Jews these elements hate
    some castes.As SC is putting hurdles in their plans they
    hate it.

    ReplyDelete
  18. அன்புள்ள அப்பாவித் தமிழரே!
    நான் சொன்ன 100% உச்ச நீதி மன்றத்திலே ஒரு சாதீய நீதிபதி கேட்ட கேள்விக்கு மரியாதைக்குறிய முன்னாள் சட்ட அமைச்சரும்,தலைசிறந்த வழக்கறிஞருமான ஜெத்மலானி அளித்த பதில்.நான் ஆடும் ஆட்டமல்ல!
    அநியாயம் எவ்வளவு் தூரம் போய்விட்டது என்பதை நம்மைப் போன்ற படித்து வந்துள்ள தமிழர்களே சரியாக அறிந்து கொள்ளாமலும் புரிந்து கொள்ளாமலும் இருப்பது பெருங்குறை.
    மருத்துவ மேல்படிப்பில் மாநிலத்திற்கு இருந்த உரிமையைப்பறித்து மாநிலத்திற்கு 50% மீத் 50% மத்திய ஒதுக்கீடு ஆனால் அந்த மத்திய ஒதுக்கீட்டில் இடஒதுக்கீடு கிடையாது என்று கொண்டு வந்து செயல் படுத்திவிட்டார்கள்.தாழ்த்தப்பட்டவர்கட்கு மத்திய 50% விழுக்காட்டில் 22% வேண்டும் என்று போராடி இப்போது வேறு வழியின்றி உச்ச அநீதி மன்றம் இந்திய அரசின் பெரும் வற்புறுத்துதலுக்குப்பின் ஒத்துக்கொண்டுள்ளது.
    இடஒதுக்கீடு யாரோ போடும் பிச்சையல்ல!இந்திய அரசியல் சட்டத்திலே உள்ள உரிமை என்பது எத்துனை பேருக்குத்தெரியும்.அதை 50 காண்டு காலம் மறைத்து வந்தனர்.பல போராட்டங்கட்குப் பின்னர் சட்டமாக்கவேண்டிய நிற்பந்தம்.ஆனால் அத்ற்கு எத்தனை முட்டுக்கட்டைப் போடமுடியுமோ அத்தனை முட்டுக்கட்டை,உச்ச அநீதி மன்றம் வரை ஒவ்வொரு ஆண்டும்!
    தமிழக 69% சரியென்றோ தப்பென்றோ உச்ச நீதி அளிக்கப்படவில்லை,ஆனால் ஆண்டு தோறும் அதிக இடங்கள் கொடுத்து அதை நீர்க்க அடிக்கமட்டும் உத்தரவு,எத்தனை ஆண்டுகள்,ஆம் 10 ஆண்டுகள்.இன்னும் எத்தனை ஆண்டுகளோ யார் அறிவார்?
    முதல் முதலிலே இட ஒதுக்கீட்டிற்கு எதிர்த்து வழக்குப்போட்டதே திருட்டு வழக்கு என்பது ந்ம்மில் எத்துனை பேருக்குத் தெரியும்.ஒருவருக்கு இடந்தரவில்லை என்பது வழக்கு.ஆனால் அவர் விண்ணப்பமே போடவில்லை என்பது வழக்கு முடியும் வரை மறைக்கப்பட்டு பின்னர்தான் தெரிய வந்தது!இதை வாதாடிய போய்யர் திலகம் ச்ட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான் அல்லாடி் கிருஷ்ணசாமி அய்யங்கார்.அவர்கள் யோக்கியதை தெரிகிறதா?
    நேர்மையும் நீதியும் பார்ப்பது நாம் தான்.அவாள் செய்வது கடைந்தெடுத்த அநியாயமும் அயோக்கியத்தனமுமாகும்.

    ReplyDelete
  19. ஏன் தமிழகத்தி இந்தி பேசும் பல்வேறு சாதிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது?

    தமிழ் பேசும் முற்பட்டோருக்கு இடவிலகல்...ஆனால் இந்தி, தெலுங்கு, கன்னடம் பேசும் ஜாதிகளுக்கு இடஒதுக்கீடு தருகிறார்களே...!!!

    தற்போதைய தமிழக இடஒதுக்கீடு சட்டத்தில் தமிழ் என்கிற அடிப்படையே காணோமே...

    'தமிழ்'அகம் தமிழர்க்கில்லாதகம் போலுள்ளதே!!!

    ReplyDelete
  20. HI ANBU THAMIZHARGALE
    www.tn.gov.in/bcmbcmw/bclist.htm
    IPPATTIYALIL THAMIZH PESAADHA JAATHIGALAI ENNIPPAARUNGA...

    ReplyDelete