Wednesday, August 02, 2006

அரிசி கொள்முதல்

கிலோ ரூபாய் இரண்டு என்ற கணக்கில் ரேஷனில் அரிசி கொடுக்கும் திட்டத்தைத் தொடர்ந்து வெளிச்சந்தை அரிசி விலை குறைந்துள்ளதாம்.

நல்லவிலை கிடைக்கக்கூடும் என்று இதுவரையில் அரிசியைத் தேக்கிவைத்திருந்த சில பெரிய, நடுத்தர விவசாயிகள் இப்பொழுது சிவில் சப்ளைஸ் கார்பொரேஷனுக்கு அரிசி விற்க வந்துள்ளனர். நெல் விலை கிலோ ரூ. 5.80 - 6.00 வரையில் என்று விவசாயிகளுக்குக் கொடுக்கப்படுகிறது.

இதனால் விவசாயிகள் நிலை மேம்படப்போவதில்லை.

விவசாயப் பொருளாதாரம் மேம்படவேண்டும் என்றால்...

* அரசு நெல்லுக்கான கொள்முதல் விலையை வெகுவாக அதிகரிக்கவேண்டும்.
* நல்ல பாசன வசதி. நீர்நிலைகள் அதிகரிப்பு.
* ரேஷனில் குறைந்தவிலை அரிசி வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படவேண்டும். பிறர் அனைவருமே பொதுச்சந்தையில் அரிசியை வாங்கவேண்டும்.
* கிராமப்புறங்களில் வேண்டிய அளவு மின்சாரம். அத்துடன் குளிர்சாதனக் கிடங்கு வசதி.

இவையெல்லாம் இருந்தால் விவசாயக் கடன் ரத்து; இலவச மின்சாரம் போன்றவை தேவையில்லை.

No comments:

Post a Comment