Wednesday, August 02, 2006

Podcasting - நான் எப்படிச் செய்கிறேன்?

கார்த்திக் எனது முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் "பத்ரி அண்ணே, இந்த மாதி பொட்காஸ்ட் செய்யும் முறையை பற்றி எங்களுக்கும் புரிகிறமாதி ஏதாவது எழுதி அதை பொதுவுடைமையாக்க முடியுமா?" என்று கேட்டிருந்தார்.

நான் கடந்த பல மாதங்களாகவே ஒலித்துண்டுகளை என் பதிவில் சேர்த்து வருகிறேன். ஆனால் அவற்றை podcast என்ற சிறப்பு வார்த்தையினால் குறிப்பிடவில்லை. மேலும் பலமுறை இந்த ஒலித்துண்டுகளை wma (Windows Media Audio) வடிவில் சேர்த்திருந்தேன். இப்பொழுது MP3 ஆகவும், அதற்கென தனி xml ஓடையையும் சேர்த்திருப்பதனால் தனியாகப் பதிவு போட்டேன்.

செய்வது எளிதுதான்.

1. நல்ல ஒலி ரெகார்டர் வேண்டும். முடிந்தவரையில் MP3 கோப்பாகவே சேமிக்கும் ரெகார்டர் இருப்பது நல்லது. நான் உபயோகிப்பது Dyne Digital Voice Recorder - DN 7128. தென் கொரியா தயாரிப்பு. சிங்கப்பூரில் 2005-ல் வாங்கினேன். வாங்கியபோது சுமார் 100 USD. இதைவிடச் சிறப்பான, விலை குறைந்த ரெகார்டர்கள்/பிளேயர்கள் கிடைக்கும். நல்ல, விலை குறைவான MP3 ரெகார்டர்கள் USD 40-50க்குள் இன்று கிடைக்கும்.

Dyne பிரச்னை என்னவென்றால் இது பேட்டரியில் இயங்குவது. மின்சாரத்தால் சார்ஜ் செய்யமுடியாது. எனவே பேட்டரி நிறையத் தீர்ந்துபோய் படுத்தும். செலவு அதிகமாகும்.

2. யாருடனாவது நேர்காணல், அல்லது ஏதாவது பொதுநிகழ்ச்சி என்றால் இத்துடன் ஆஜராகிவிடுவேன்.

Dyne ரெகார்டர் மூலம் சேமிக்கும் கோப்பு TCV என்ற பெயரில் வரும். இதுவும் MP3 வகையைச் சார்ந்ததே.

3. ரெகார்ட் செய்த ஒலித்துண்டை Audacity என்னும் திறந்த மூல நிரலியை வைத்து எடிட் செய்வேன். தேவையில்லாத பாகங்களை வெட்டுதல், வாக்கியங்களுக்கு இடையேயான வெற்று இடைவெளியைக் குறைத்தல், High Pass Filter, Noise Reduction ஆகியவற்றைச் செய்வேன். ஒலித்துண்டுகள் பலவற்றை ஒரே கோப்பாகச் சேர்க்கலாம்.

4. கடைசியாக MP3 கோப்பாக மாற்றுவேன். Audacity நிரலியிலேயே Lame Encoder என்பதைச் சேர்ப்பதன்மூலம் இதனைச் செய்யலாம்.

5. அதன்பிறகு எங்கு FTP செய்யவேண்டுமோ அங்கு அனுப்பிவிட்டு, XML கோப்பை மாற்றி சேமிப்பதன்மூலம் podcast செய்யவேண்டியதுதான்.

3 comments:

  1. xml கோப்பினை கைமுறையாகத்தான் மாற்றுகிறீர்களா?

    (அது பெரிய வேலை இல்லைதான் என்றாலும்) இதனை தாமகவே செய்யும் சேவைகள் எதுவும் இருக்கிறதா?

    audacity பயன்படுத்துவதை அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

    அது என்னுடைய விளையாட்டுப்பொருள்.

    speex இல் வின்டோசில் எப்படி பதிவு செய்ய முடியும் என்று தெரியவில்லை. லினக்சில் இலகுவாக இதனை செய்யலாம். அனேகமாக க்னோம் உடன் அல்லது கேடீ ஈ உடன் வரும் ஒலிப்பதிவு மென்பொருட்கள் இதனை செய்யும்.
    ffmpeg மூலம் வடிவ மாற்றம் செய்துகொள்ளலாம்.

    வின்டோசில் speex இனை கையாளும் வழிமுறைகள் இருந்தால் அறியத்தாருங்கள்.

    ReplyDelete