Friday, August 04, 2006

இட ஒதுக்கீடு பற்றி P.S.கிருஷ்ணன்

இரண்டு நாள்கள் முன்னதாக சென்னை Indian School of Social Sciences என்னும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் P.S.கிருஷ்ணன் "Social Justice and Reservation" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் பேசினார்.

கிருஷ்ணன் ஓய்வுபெற்ற IAS. மத்திய அரசில் பல துறைகளுக்குச் செயலராக இருந்துள்ளார். National Commission for SC/ST, National Commission for Backward Classes ஆகியவற்றுக்குத் தலைவராக member-secretary ஆக இருந்துள்ளார். மண்டல் கமிஷன் அறிக்கையைத் தூசுதட்டி எடுத்து அதனைச் செயல்படுத்த வி.பி.சிங் முனைந்தபோது அந்தத் துறையின் செயலராக இருந்து அந்த வேலையைச் செய்தவர் கிருஷ்ணன்.

இட ஒதுக்கீடு பற்றி இவரிடமிருந்து தெரிந்துகொள்ள நிறைய உள்ளது. அடுத்து வரும் இரண்டு ஒலித்துண்டுகள் பற்றிய விவரம்:

1. முதல் ஒலித்துண்டில் சஷி குமார், Asian College of Journalism, கிருஷ்ணனை அறிமுகம் செய்து வைக்கிறார். தொடர்ந்து கிருஷ்ணன் பேசுகிறார்., 58.43 நிமிடம், 26.8 MB, 64kbps MP3 கோப்பு

2. இரண்டாம் ஒலித்துண்டில் கேள்வி பதில்கள். துண்டுச்சீட்டில் எழுதப்பட்ட கேள்விகளை கிருஷ்ணன் அல்லது சஷி குமார் வாசிக்க, கிருஷ்ணன் பதிலளிக்கிறார்., 42.37 நிமிடம், 19.5 MB, MP3 கோப்பு

இந்தப் பேச்சில் வரும் பல விஷயங்களை அவர் கிட்டத்தட்ட Frontline-ல் எழுதியுள்ளார்.

2 comments:

  1. பத்ரி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. அதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டீர்கள். நன்றி பத்ரி. தொடரட்டும் உங்கள் சேவை.

    ReplyDelete
  2. National Commission for SC/ST, National Commission for Backward Classes ஆகியவற்றுக்குத் தலைவராக இருந்துள்ளார்

    member-secretary

    ReplyDelete