நேபாளில் ஏப்ரல் 2006-ல் மக்கள் புரட்சி வெடித்தது. ஆயுதம் ஏந்திய புரட்சி அல்ல. ஆனாலும் ஆவேசமான புரட்சி. மக்கள் - 50 லட்சத்துக்கும் மேல் என்று சொல்கிறார்கள் - கூட்டம் கூட்டமாகத் தெருவுக்கு வந்தனர். மன்னர் ஞானேந்திராவின் கீழ் உள்ள ராணுவம் செய்வதறியாது திகைத்தது.
எங்களுக்கு மக்களாட்சிதான் வேண்டும், மன்னராட்சி அல்ல என்றனர் மக்கள். அடக்குமுறை தாங்காமல் கொதித்தெழுந்த மக்கள். மன்னருக்கெதிராகவும் ராணுவத்துக்கு எதிராகவும் சண்டைபோடும் மாவோயிஸ்ட் குழுவும் தன் ஆயுதங்களை விடுத்து அரசியல் கட்சியாகி மக்களாட்சி முறையில் போராடவேண்டும் என்று விரும்பினர் மக்கள். ராணுவத்தால் மட்டுமல்ல, மாவோயிஸ்டுகளாலும் ஏகப்பட்ட தொல்லைகள் மக்களுக்கு.
மாவோயிஸ்டுகள் முடிவாக, நேபாளில் உள்ள ஏழு அரசியல் கட்சிகளோடு கூட்டுசேர முடிவு செய்தனர். ரகசிய ஒப்பந்தம் இந்திய மண்ணில் கையெழுத்தானது. இது மக்களுக்குத் தெரிந்ததும் தன்னெழுச்சியில் ஏற்பட்டதுதான் ஏப்ரல் கலவரம். மே மாதத்தில் அரசியல் கட்சிகளுக்கு அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு பல்பிடுங்கிய பாம்பானார் மன்னர்.
இந்த சுதந்தர இயக்கத்துக்குத் தலைமை தாங்கியவர்கள் என்று யாருமில்லை. ஒரு காந்தியோ, ஒரு மண்டேலாவோ நேபாள மக்களுக்குத் தேவையிருக்கவில்லை.
அருகில் நின்று அனைத்தையும் பார்த்தவர்களுல் ஒருவர் கனக் மணி தீக்ஷித். ஹிமால் என்னும் பத்திரிகையின் நிறுவனர், ஆசிரியர்.
நேற்று Indian School of Social Sciences ஆதரவில் சென்னை Asian College of Journalism கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார் கனக் மணி. கனக்கை கூட்டத்துக்கு அறிமுகப்படுத்தினார் பன்னீர் செல்வம் (முன்னாள் அவுட்லுக், சன் நியூஸ்). அந்தப் பேச்சைத் தொடர்ந்து சில கேள்விகளுக்கு கனக் பதிலளித்தார்.
அந்த ஆங்கிலப் பேச்சின் podcast கீழே (1.09 மணிநேரம்), embedded flash player வழியாக (நன்றி பரி).
If the embedded flash player is mucking up, click here to download/play the mp3 file.
நேபாள் பற்றிய என் முந்தைய பதிவையும் அதில் மயூரனின் பின்னூட்டையும் மயூரன் தன் பதிவிலே எழுதியிருக்கும் கருத்துகளையும் (ஒன்று | இரண்டு) தமிழரங்கம் எனுமிடத்தில் வெளியான பதிவையும் படித்துவிடுங்கள்.
சொக்கன் எழுதி, கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியான புத்தகம்
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
4 hours ago
பத்ரி,
ReplyDeleteஇன்று நேபாளத்தை பொறுத்த வரை மாவோயிஸ்டுகளின் குரல் மக்கள் குரலாகிவிட்டது.
இந்திய கம்யுனிஸ்டு விரோதிகளின் ஆதரவு பெற்ற ஏழு கட்சி கூட்டணி மக்களிடம் அம்பலமாகி 2லட்சம் பேர் திரண்ட மாவோயிஸ்டுகளின் பொதுக் கூட்டம், மன்னரை ஆட்சியிலிருந்து இறக்க வைத்த அந்த கடைசிப் போராட்டத்தில் ஏழு கட்சி கூட்டணியின் கோரிக்களைக் கடந்து, மக்கள் ஜன நாயகத்துக்கு குரல் கொடுத்தார்களே, அதெல்லாம் என்ன அர்த்தம் என்று நினைக்கிறேர்கள்?
இன்றைய நிலைமையில் மாவோயிஸ்டுகள்தான் அங்கு மிகப் பெரிய சக்தியாக உள்ளனர் என்பதற்க்கு நீருபணம். சமீபத்தில் ஐ.நா. மேற்பார்வையில் நடத்தும் தேர்தல் குறித்த ஒப்பந்தத்தில், மாவோயிஸ்டுகளையும் ,ராணுவத்தையும் ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்றுதான் போடப்பட்டுள்ளது. அதாவது நேபாள அரசின் ராணுவமும், மாவோயிஸ்டுகளின் ராணுவமும் சமம் என்ற அர்த்தத்தில்தான் போடப்பட்டுள்ளது. இதையெல்லாம் பார்க்காமல் மாவோயிஸ்டுகள் மக்கள் அழுத்தம் காரணமாக ஆயுதத்தைப் போட்டுவிட்டனர் என்று கூறுவது சுத்த அபத்தம்.
நேபாளத்தின் அரசியல் திசைவழி மாவொயிஸ்டுகள் தலைமையிடம் உள்ளது என்பதுதான் நிதர்சனம். அவர்களின் கோரிக்கை சிறிது குறைவான கோரிக்கைகளைக் கூட மக்கள் ஏற்றுக்கொள்ள தாயாராயில்லை.
புதிய ஜன நாயகத்தில் வந்துள்ள் கட்டுரையின் மென்பதிப்பு இல்லை. தமிழ் சர்க்கிளில்(tamilcircle.net) அதைப் போட்டவும் சுட்டி தருகிறேன்
நன்றி,
அசுரன்
நேபாள நாட்டின் வறுமை அந்த நாட்டுப்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடவைத்து பிழைக்கிறது. லெபனானில் இஸ்ரேல் குண்டுபோட்டபோது பக்கத்து நாட்டினரையும் காப்பாற்றி கொண்டு வந்ததாக டிவிக்களில் பீற்றிக்கொண்டோம். அப்போது சண்டையிலிருந்து காப்பாற்றி கொண்டுவரப்பட்ட நேபாள நாட்டுப்பெண் ஒருத்தியை காட்டினார்கள். அந்த பெண்ணோ அவர்களுடன் லெபனானில் இருந்த மற்றொரு நேபாளப் பெண்ணின் காலில் குண்டு பட்டுவிட்டதாகவும், அவளை அவர்களுடைய "மேடம்" ஒரு அறையில்வைத்து பூட்டி இருப்பதாகவும், அதனால் அந்த நேபாளப் பெண் லெபனானிலேயே மாட்டிக்கொண்டுவிட்டதாகவும் சொன்னாள். இஸ்ரேலை எதிர்க்க வேண்டும் என்ற போதனையின் ஆவேசத்தில் இருந்த நாம் அந்த பெண் சொல்லும் கதையின் கதை என்ன என்பதை கவனிக்கவில்லை.
ReplyDeleteஇப்படி ஒரு நாட்டை வைத்திருந்த ராஜ்ய பரிபாலனம் அழிய வேண்டியதுதான். மக்கள் ஆட்ஷி வர வேண்டியதுதான்.
ஆனால் இன்னொன்றை கவனிக்கவேண்டும்.
இந்த மாவோயிஸ புரட்ஷியின் ஆரம்பம் அரசரை எதிர்த்து ஏற்பட்டது இல்லை. முன்னாள் அரசர் கொண்டுவந்த மக்களாட்ஷியை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட ஒரு விஷயம். குழந்தைகளையும், இளைஞர்களையும், தங்களை பார்த்து வணங்காதவர்களையும் கொல்லும் ஒரு புனித அமைப்பு. சீனாவின் நில விஸ்தரிப்பு முயற்சிக்களின் வேறுவடிவம்.
ஜனநாயக கட்ஷிகள் மாவோயிஸ கொலைகாரர்களின் ஆதரவை வேண்ட காரணம், ஜனநாயகத்தை எதிர்க்கும் இந்த கொலைகாரர்கள் அரசரை டம்மியாக்கும் முயற்சியில் பிரச்சினை எதுவும் தரக்கூடாது என்பதற்காகத்தான்.
தாங்கள் சரியாக சொன்னபடி, இந்த எழுச்சி மக்களின் எழுச்சிதான். நம்மூர் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுகக்களைப்போல லாரியில் கொண்டுவந்து "இந்தப் படை போதுமா" என்றெல்லாம் கூவிய கூட்டமில்லை. இந்த போராட்டத்திற்கு அங்குள்ள ஜனனாயகத்தை ஏற்றுக்கொள்கிற கட்ஷிகள் முக்கிய காரணம் என்றாலும். கலந்து கொண்டவர்களுக்கு குறிப்பிட்ட கட்ஷி சார்பெல்லாம் இல்லை.
விபச்சாரம் செய்தும், பக்கத்து நாடுகளில் கூர்க்கா வேலை செய்தும் பிழைப்பதற்கு பதில் இப்படி போராட முன்வந்த குரல்கள் அவை.
இதன் விளைவாக ஏற்பட்டுள்ள அரசை கவிழ்க்கத்தான் மாவோயிஸ கொலைகாரர்கள் தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒன்று நடக்கும்போது, சீனா வடகொரியாவிற்கு கொடுக்கிற மரியாதையை நேபாளத்திற்கு கொடுக்காது. ஏனெனில், பொதுவாகவே இந்தியர்கள் அடிமைகள். எனவே எளிதாக சீனாவின் வாலை வணங்கி, காலை நக்குவோம் என்று அசுர சபதம் எடுப்பவர்கள். எடுப்பார்கள்.
பத்ரி,
ReplyDeleteமாவோயிஸ்டுகளின் பல்வேறு தத்துவ நிலைப்பாடுகள் சரியா தவாறா என்பது விவாதத்திற்குரியது.
ஆனால், நேபாள உள் நாட்டு பிரச்சனைகளை பொறுத்தவரை அவர்க்ள் மார்க்சிய லெனினிய தத்துவத்தை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதன் விளைவே இன்று மக்கள் ஆட்சி மலர்வதற்க்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பத்து வருட ஒருங்கிணைந்த தியாகம் இல்லையெனில் நேபாளா நிலபிரபுத்துவம் அழுகி பூசணம் பூத்து அது இன்னும் கேவலாமான வறுமையில் இன்னேரம் வாடிக் கொண்டிருப்பதைப் பற்றி இங்கு இந்தியாவில் பதிவுகள் போட்டு அங்காலாய்த்து கொண்டிருப்போம்.
விடுதலையின் திறவுகோல் மாவோயிஸ்டுகளின் துணிச்சலான, சமரசமற்ற செயல் தந்திரம்தான். அதை குறுக்கும் வகையில் ஏதோ பத்தோடு பதினொன்றாக பார்க்கும் வகையில் தங்களது கட்டுரை உள்ளது வருத்தம் தருகிறது.
நேபாளத்தின் 70% சதவீத நிலப்பரப்பில் ஆட்சி செய்வது மாவோயிஸ்டுகளின் மக்கள் படை என்பதை மறந்து விடாதீர்கள்.
நன்றி,
அசுரன்
அசுரன்: கனக் மணி தீக்ஷித்தின் பேச்சை முழுமையாகக் கேட்டால் அதிலிருந்து சிலவற்றை கவனித்திருப்பீர்கள்.
ReplyDelete1. மாவோயிஸ்டுகளின் குரல் மக்களின் குரலல்ல. அப்படிச் சொல்வது மாவோயிஸ்டுகளுக்குப் பிடித்தமாக இருக்கலாம். ஏனெனில் மாவோயிஸ்டுகளால் மக்களுக்குத் தொல்லைகள் பல இருந்தன என்கிறார் தீக்ஷித்.
2. ஐக்கிய நாடுகள் சபை உள்ளே நுழைவது மாவோயிஸ்டுகளையும் ராணுவத்தையும் யுத்த நிறுத்தத்தைக் கையாளச் செய்து அமைதியைக் கொண்டுவரவே. அதில் குடியாட்சி முறையில் போராடும் கட்சிகளைச் சேர்க்கவேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் கையில் ஆயுதங்கள் கிடையாது.
3. கனக் சொல்கிறார் புது தில்லியில் மாவோயிஸ்டுகளும் ஏழு கட்சிக் கூட்டணியும் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு கூட்டாக மன்னராட்சியை எதிர்ப்போம் என்றனர் என்று. அதில் காம்ரேட் சீதாராம் யெச்சூரிக்கும் பங்குண்டு என்று அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் குடியாட்சிக் கட்சிகளையும் அவற்றின் பலத்தையும் உணராமலா இதில் இறங்கியிருப்பர்?
4. பிரச்சண்டா சொல்லிய சிலவற்றை கனக் தன் பேச்சில் தொட்டுச் செல்கிறார். அதில் ஒன்று தாங்கள் ஆயுதப்போராட்டத்தை விடுத்து ஜனநாயக ஜோதியில் கலப்பதை புரட்சியின் அங்கமாகவே கருதுவதாகச் சொல்லியிருக்கிறார். இந்தியா மாவோயிஸ்டுகளும் அதனைப் பின்பற்றவேண்டும் என்று அவர் சித்தார்த் வரதராஜனுக்கு (தி ஹிந்து) அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
5. "மாவோயிஸ்டுகள் கையில் 70% நிலம் உள்ளது." இதை கனக் தீக்ஷித் மறுக்கிறார். நேபாளில் உள்ள 75 மாவட்டங்களில் எந்த ஒரு மாவட்டத்தின் தலைநகரைக்கூடக் கைப்பற்ற முடியாத நிலையில்தான் மாவோயிஸ்ட் வீரர்கள் இருந்தனர் என்கிறார் கனக்.
6. நான் மாவோயிஸ்டுகளின் புரட்சியையோ மக்களின் புரட்சியையோ கேவலப்படுத்தவில்லை. எனக்கு நேபாள் விவகாரம் முழுமையாகத் தெரியாது. நான் சென்ற ஒரு பேச்சில் சொல்லப்பட்டவற்றை ரெகார்ட் செய்து இங்கே கொடுத்துள்ளேன். முழுமையான பேச்சும் இங்கேயே உள்ளது.
It plays at fast forward speed!
ReplyDeleteI did a quick search, this came up.
http://www.podcastpickle.com/forums/lofiversion/index.php/t7122.html
Along with the player (well, if it works at normal speed :) ), you might want give the link for mp3.
பத்ரி,
ReplyDeleteநான் சொன்னதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் தற்பொழுது எடுத்துள்ள நிலைப்பாடு சரியானதுதான்.
ஆனால் அவர்கள் எங்குமே ஆயுதத்தை கீழே போடுவோம் என்று சொல்லவில்லை. இப்பொழுதும் கூட தேவைப்பட்டால்(அதாவது முழுமையான ஒரு குடியரசுக்கான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால்) இன்னொரு ஆயுதப் போராட்டம் செய்யத் தாயாராக இருப்பதாகத்தான் சொல்கிறார்.
இதை வலியுறுத்தத்தான் ஐ.நா. மேற்பார்வையில் நடக்க இருக்கும் தேர்தல் பற்றிய ஒப்பந்தம் மாவோயிஸ்டுகளின் ராணுவத்தை, நேபாள ராணுவத்துக்கு இணையாக வைத்து போடப்பட்டதை குறிப்பிட்டிருந்தேன்.
மக்கள் ஆதரவு இல்லாமலா அது நடந்திருக்கும்.....
ஆம், அதிகார மையங்களில் மாவொயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தவில்லை என்பது உண்மைதான். மன்னரின் கூலிப்படை இருக்கும் பொழுது அப்படியொன்று நடப்பது சாத்தியமில்லை. ஆனால் மக்கள் மன்றங்களில் மாவொயிஸ்டுகள் செல்வாக்கனாவர்கள் என்பதுதான் 7 கட்சி கூட்டணி மன்னரிடம் சரண்டைய விழைந்த போது கூட மக்கள் அதை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு சென்ற விசயம்.
அங்கீகாரமும், நிலைத்து நிற்பதும் வெறும் ஆயுதங்களால் மட்டும் வருவதில்லை. அதனால்தான் ஹிட்லர் கூட ஒரு கட்சி தொடங்கி பொது அபிப்ராயத்தை உருவாக்கினான் முதலில்.
அதனால் ஒரு பெரிய அரசியல் சக்தி என்பதும், மக்களை பிரதி நிதித்துவப் படுத்துவதும் வெவ்வேறு என்று பார்ப்பதே தவறான பார்வை.
மாவொயிஸ்டுகளின் நேற்றைய குரலைத்தானே இன்றைக்கு மக்கள் உரக்க முழங்குகிறார்கள். இதை மாவொயிஸ்டுகளின் குரல் மக்கள் குரலாகி விட்டது என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது.
***************
நீங்கள் கூறிய 'தீக்ஷித்.' யார் என்று தெரியவில்லை. அவரை விட முகம் அறிமுகமான சில எழுத்தாளர்களின் மூலமாகவும்தான் மேற்கூறிய 'மக்களின் குரல்' என்ற வரிகளை வைத்தேன்.
ஏகாதிபத்திய, பிற்போக்கு பன்றிகளின் பிரச்சார பலம் என்ன என்று கம்யுனிஸ்டுகளுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை. நேற்று வரை மாவோயிஸ்டுகளை ஒரு துரும்பை விட கேவலமாகத்தானே பார்த்தனர். அதனால் இது போன்ற அதிக அறிமுகம் இல்லாத ஆட்களின் வார்த்தைகளின் அடிப்படையில் ஒரு வலுவான விவாதத்தை நடத்துவதோ அல்லது கருத்துக்களை வலுப்படுத்துவதோ சாத்தியமில்லை என்பது எனது கருத்து.
*********
நீங்கள் சொல்லிய அதே இந்து மற்றும் அதன் துணை ஏடுகள், வேறு சில பத்திரிக்கைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில்தான் மாவொயிஸ்டுகள் 70% நிலப்பரப்பில் தங்களது அதிகாரத்தை நிலை நிறுத்தியுள்ளனர் என்று சொன்னேன். இதை எனக்கு ஞாபகம் இருக்கும் அதே வரிகளில் கொடுக்கிறேன்:
"மன்னரனின் அரசு என்பது பெரும்பாலும் நகரங்களிலும், அரசு அலுவலுகங்களீலும் மட்டுமே காணக்கிடக்கிறது....."
இதில் தாங்கள் கூறிய மாவட்ட தலைநகரங்களும் வருகிறது என்பதை கவனத்தில் கொள்க.
மேலும் அவர்களது தத்துவ பார்வையில் உள்ள குறைபாடு என்று நான் சொன்னது இந்தியா மற்றும் ஏகாதிபத்தியங்கள் பற்றியது. அதை இங்கு விவாதிப்பது சரியாக இருக்காது. மேலும் இந்திய பாதையை பற்றி அவர்கள்(னேபாள மாவொயிஸ்டுகள்) தீர்மானிப்பது கேலிகூத்தானது(எப்படி மாவோ இந்திய பாதையை சொல்ல முடியாதோ அப்படி).
********
ஐ. நா வுடன் தேர்த்ல் குறித்து போடப்பட்ட ஒப்பந்தம் என்னவென்று தங்களுக்கு தெரியுமா?
குறைந்த பட்சம் அதில் ஆயுதங்களை கையாளுவது பற்றி போடப்பட்ட விசய்ம் என்ன வென்று பார்க்கவும்.
*********
பிரச்சந்தாவின் அந்த இரு பகுதியாக வந்த பேட்டியை நானும் படித்தேன். அவர் குடியரசில் பங்கு பெறுவது(தேர்தல்) பற்றித்தான் விமர்சித்திருந்தார். மற்றபடி ஆயதத்தை கீழே போடச் சொல்லி எதுவும் சொன்னமாதிரி எனக்கு தெரியவில்லை.
மேலும் இந்திய மாவொயிஸ்டுகளின் தத்துவ நிலைப்படுகள் சரியில்லை என்பது போல சில விசயங்களை கோடிட்டுக் காட்டியிருந்தார். இதில் எனக்கும் உடன்பாடே.
நன்றி,
அசுரன்.
மேலும், குறிப்பாக எனது வருத்தமெல்லாம் மாவொயிஸ்டுகளின் போற்றத்தகுந்த தியாகங்களை நிராகரித்து விட்டு, நிலபிரபுத்துவத்துக்கு(இதை அந்த ஏழு கட்சிக் கூட்டணியில் இருந்த எந்தக் கட்சியும் முழு வீச்சாக் செய்யவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும்) எதிராக போராடிய அந்த பத்து வருட போராட்டத்தை நிராகரித்து விட்டு இன்றைய நேபாள மக்களின் எழுச்சியை எதோ முற்றிலும் தனியான ஒரு அம்சம் போலவும், குறீப்பாக மாவொயிஸ்டுகளின் போராட்டத்தின் பங்களிப்பு அதில் இல்லை என்பது போலவும் அதனால்தான் அவர்கள் தற்பொழுது ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு வருகிறார்க்ள் என்ற புரளியையும் வலியுறுத்தும் விதமாக தங்களுடைய இந்தக் கட்டுரை உள்ளது என்பதுதான்.
ReplyDeleteஇதைக் குறிப்பிட்டுத்தான் எனது முந்தைய பின்னூட்டத்தில் கீழ்கண்ட வரிகளை வைத்தேன்:
////ஆனால், நேபாள உள் நாட்டு பிரச்சனைகளை பொறுத்தவரை அவர்க்ள் மார்க்சிய லெனினிய தத்துவத்தை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதன் விளைவே இன்று மக்கள் ஆட்சி மலர்வதற்க்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பத்து வருட ஒருங்கிணைந்த தியாகம் இல்லையெனில் நேபாளா நிலபிரபுத்துவம் அழுகி பூசணம் பூத்து அது இன்னும் கேவலாமான வறுமையில் இன்னேரம் வாடிக் கொண்டிருப்பதைப் பற்றி இங்கு இந்தியாவில் பதிவுகள் போட்டு அங்காலாய்த்து கொண்டிருப்போம்.
விடுதலையின் திறவுகோல் மாவோயிஸ்டுகளின் துணிச்சலான, சமரசமற்ற செயல் தந்திரம்தான். அதை குறுக்கும் வகையில் ஏதோ பத்தோடு பதினொன்றாக பார்க்கும் வகையில் தங்களது கட்டுரை உள்ளது வருத்தம் தருகிறது.////
வறுமையும் அடக்குமுறையும் மட்டுமே புரட்சிக்கான சூழல் என்று கருதினால் முதல் தவறு செய்கிறீர்கள், இதே சூழல் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் எந்த புரட்சியும் வந்து விடவில்லை. இதே சூழல் இருந்த இந்தியாவில் ஒரு ஒருங்கிணைந்த புரட்சி வந்து விடவில்லை. ஒரு வலுவான புரட்சிகர அமைப்பு இல்லையெனில் புரட்சி இல்லை என்பதை கருத்தில் கொள்க. உறுதியாக நேபாளத்தின் ஒரே புரட்சிகர அமைப்பு மாவோயிஸ்டுகள்தான். மற்றவையெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் பொழுது காலைவாரியவைதான். இதை உணர்ந்து கொள்ள புரட்சி நடந்த ஒரு சில தினங்களீல் அதிகாரத் திமிருடன் நேபாள் காங்கிரசு தலைவர் மாவொயிஸ்டுகளை நோக்கி வைத்த ஆயுதத்தை கீழே போடும் கோரிக்கை, அதைத் தொடர்ந்து மாவொயிஸ்டுகள் காத்மென்டுவில் நடத்திய லட்சக்கணக்கானோர் திரண்ட பொதுக் கூட்டமும். ஆகப் பெரும்பான்மையாக கிராமங்களில் உள்ள நேபாளத்தில், மாவோயிஸ்டுகளின் பலத்தையும் உணர்ந்து அவர் கீழிறங்கி வந்ததுதான் ஐ.நா. வுடனான சமீபத்திய ஒப்பந்தம்.
அங்கு மன்னராட்சியின் முடிவை உறுதி செய்த கடைசி மக்கள எழுச்சி என்பது நீண்ட பத்து வருடங்கள் நடந்த ஒரு ரத்தம் தோய்ந்த, சதிகள், கவிழ்ப்புகள், துரோகம், அக்கிரமிப்புகள் நிறைந்த ஒரு புரட்சியின் ஒரு அங்கம் தான். கிளைமாக்ஸ் இன்னும் வரவில்லை என்றூ கூட சொல்லலாம்.
தங்களது கட்டுரையோ அந்த ஒரு அங்கத்தை நேபாளத்தின் ஒட்டு மொத்த புரட்சிகர வரலாறாக குறுக்கி பார்க்க ஏதுவான உணர்வுத்தளத்துக்கு முட்டு கொடுக்கிறது.
நன்றி,
அசுரன்.
அசுரன்: கனக் மணி தீக்ஷித் உடனான நேர்முகம் இன்றைய 'தி ஹிந்து'வில் வந்துள்ளது.
ReplyDeleteஉங்களது பல கேள்விகளுக்கு நான் பதில் தரவேண்டும். இந்த வாரத்துக்குள் எழுதுகிறேன்.
படித்தேன்
ReplyDelete