நீங்கள் கர்நாடக மாநிலத்தில் இல்லையென்றால் இது உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.
தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டது அல்லவா? இப்பொழுது கன்னடத்தையும் செம்மொழி என்று அறிவிக்க வேண்டும் என்று கன்னட அறிஞர்கள் சிலர் மைசூரில் உள்ள இந்திய மொழி ஆராய்ச்சி மையமான Central Institute of Indian Languages முன் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த மையத்தின் இயக்குனர் போராட்டக்காரர்களுக்கு எழுதிய கடிதம் ஆங்கிலத்தில் இருந்தது, கன்னடத்தில் இல்லை என்பதால் அந்தக் கடிதத்தைக் கிழித்துள்ளனர்.
இந்த மையத்தின் இயக்குனர் உதய நாராயண் சிங் - பேரைப் பார்த்தால் உத்தர பிரதேசத்தவர் போலத் தெரிகிறது. பாவம்!
தி ஹிந்து செய்தி
தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டதால் உருப்படியாக இந்த மொழிக்கு எதுவும் - இதுவரை - நடந்துவிடவில்லை, அதனால் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று போராடும் கன்னட நண்பர்களிடம் யாராவது சொன்னால் தேவலை.
Conversations with Aurangzeb
7 hours ago
செம்மொழி கன்னடம் - போராட்டத்திற்கு கண்டனம் பதிவிலா ?
ReplyDeleteநல்ல தமாஸ் !!!
:))
தீயோ பேயோ ஒரு எடத்துல பிடிச்சா அப்படியே பரவும்ல.
ReplyDeleteநாங்க இதனால பெரியவங்கன்னு சொல்லிக்கிறது ஒரு சொகம். அதுல இதுவும் அடக்கம்.
போற போக்கைப் பார்த்தா ஒவ்வொருத்தரா கிளம்புவாங்கபோல இருக்கே:-)
ReplyDeleteமொத்தம் எத்தனை மொழி இருக்கு?
22?
இல்லி நோடு பெரகாசு, அண்ட கந்தசாமி ..பத்ரி சாரு தாக்குன்னாரு
ReplyDeleteஇனிய பத்ரி,
ReplyDeleteபலன் - பலனில்லை விஷயத்துக்குள் நுழையாமல் ஒரு செய்தியை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.
சென்ற விடுமுறையில் மணவை முஸ்தபா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இராம.கி. அய்யாவும் உடனிருந்தார். பேச்சினிடையே தமிழ் செம்மொழியாவதற்கு முன் நிகழ்ந்த சில நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார்.
அதிலிருந்து ஒன்று.
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட கோப்பின் முகப்பில் அரசு சார்பில் எழுதப்பட்ட பரிந்துரையில் சமயோசிதமாக கன்னடம் செம்மொழியாவதற்கான 'ஹோம்வொர்க்' செய்யப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டார். அனேகமாக இது மொழியின் வயது குறித்த செய்தி.
குறிப்புகள் எதையும் எடுக்காததாலும், சந்திப்பு நடந்து நாள்களாகிவிட்டபடியாலும் சரியான விவரத்தைச் சொல்ல இயலவில்லை. மன்னிக்கவும்.
இன்னும் ஒரு மாதத்தில் மணவை முஸ்தபாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். அப்பொழுது கேட்டு அந்த 'ஹோம்வொர்க்' என்ன என்பதை விவரமாக எழுதுகின்றேன்.
மக்கள் விரும்பினால், மணவையாரைத் தொடர்பு கொண்டால் விவரங்கள் கிடைக்கலாம்.
அன்புடன்
ஆசாத்
கன்னடம் என்றால் என்ன அதுவும் திராவிட மொழிதானே!
ReplyDeleteசெம்மொழி ஆவதற்கு தகுதி இருக்குமானால் இந்திய அரசு கன்னடத்தையும் செம்மொழி ஆக்கவேண்டும் என்பதே என் கருத்து!!!
செம்மொழியாக ஏற்பதற்கு அது ஒரு திராவிட மொழி எனும் தகுதி மட்டும் போதாது. அதற்கான தகுதிகள் குறிப்பிடும் மொழியில் இருக்கின்றனவா என்பதை ஆராயப்படவேண்டும்.
ReplyDelete