Wednesday, August 09, 2006

தொழிற்கல்விக்கு நுழைவுத்தேர்வு தேவையா?

அஇஅதிமுக அரசு சென்ற ஆட்சியில் நுழைவுத்தேர்வை ரத்து செய்து கொண்டுவந்த அரசாணை, அவசரச் சட்டம், பின் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம் ஆகியவை சென்னை உயர்நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டன. இவற்றை எதிர்த்து ஜெயலலிதா அரசு உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றமும் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையைத் தடைசெய்ய மறுத்துவிட்டது.

ஆட்சிமாற்றத்துக்குப் பிறகு திமுக அரசு மு. ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை நியமித்து நுழைவுத் தேர்வு தேவையா இல்லையா என்பது பற்றி மக்களிடம் கருத்து கேட்கச் சொல்லியுள்ளது.

இதைப்பற்றிய தி ஹிந்து செய்தி

நேரில் வந்து கருத்து சொல்லமுடியாதவர்கள் மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம் - ஆகஸ்ட் 20ம் தேதிக்குள். அனுப்பவேண்டிய முகவரி: lo@tndte.gov.in

===

பழைய பதிவுகள் சில:

1. நுழைவுத் தேர்வு ரத்து சட்டத்தை எதிர்த்து வழக்கு
2. நுழைவுத் தேர்வு ரத்துச் சட்டம் - வழக்கு
3. நுழைவுத் தேர்வுச் சட்டம் ரத்து

4 comments:

  1. I have sent my response. Have you sent yours? It is an excellent opportunity to be heard. So please send in your views - either for or against along with reasons.

    I may post my letter at a later date.

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி திரு.பத்ரி.

    ஆனால், நம் நாட்டில்(பள்ளிக் கல்வியில்) ஏன் இத்தனை கல்வி முறைகள் உள்ளன. ஒரே மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை ஏன் பல்வேறு கல்விமுறைகள்?..?..( இதற்குக் கூட, மாநில பாகுபாடுகளைக் காரணம் காட்டி ஏதாவது காரணம் இருந்து விடக்கூடும்.. எனக்குத் தெரியாததால் கேட்கிறேன். 'ஏன் இருக்கக்கூடாது.. பலநாடுகளில் இந்தமுறை இருக்கிறது' என்று தயவு செய்து யாரும் சொல்லவேண்டாம்.. அப்படி இருப்பதால்தான் இந்த பிரச்னையே என்பது தான் எனது ஆதங்கம்)

    state board, matriculation(இதில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமாம்-அதற்குப்பின் பிளஸ்1, பிளஸ்2வுக்கு மாநில கல்விமுறைக்கு மாறிவிடுவார்களாம்.. என்ன கொடுமையடா இது..), CBSE, இதெல்லாம் போக Anglo-indian என்றெல்லாம் இன்னும் பல பெயர்களில் பள்ளிகளில் பாடம் நடத்தப் படுகிறது.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தரத்தில்.. இதனால் தானே இந்த Entrance Exam தேவையா இல்லையா என்ற கேள்விகளெல்லாம்.. ஏன் தமிழ்நாடு முழுதும் ஒரே ஒரு கல்வி முறையை அமல்படுத்தக் கூடாது?..(-Entrance coaching நிறுவனங்களை நடத்தும் ஒரு 'கல்வியாளர்' ஏதோ தமிழ்நாட்டுக்கே இவர்கள் சேவை செய்வதாக தொலைக்காட்சி பேட்டிகளில் சொல்லிக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன் -இந்த Entrance Exam பிரச்னையில் Coaching என்ற பெயரில் கொள்ளையடிக்கும் ஒருசில குள்ளநரிகளிடம் பணத்தை அழ வேண்டிய தேவை யாருக்கும் ஏற்படாது.. ஒரே பாடத்திட்டம் கொண்டுவந்தால் கல்வியின் பெயரில் கொள்ளையடிக்கும் இந்தக் கொள்ளைக்காரர்களையும் தடுக்கலாம்.)

    எந்த பாடத்திட்டம் மிகச் சிறந்தது என்று கல்வியாளர்களைக் கொண்டு முடிவு செய்து, அந்தக் கல்வித் திட்டத்தையே நமது மாநில முழுதும் ஒரே பாடத்திட்டமாக ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு.

    இருப்பதிலேயே சிறந்த பாடத்திட்டம் நமது மாநிலம் முழுதும் பயிற்றுவிக்கப் பட்டால் நமது குழந்தைகளுக்குத் தானே நல்லது.. மாநிலம் முழுதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வருவதில் என்ன சிக்கல்?.. தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்களேன்.

    பனிரெண்டாம் வகுப்புக்குப் பின் எல்லா மாணவர்களும் கல்லூரிக்குச் சென்றபிறகு(சேர்ந்தபிறகு) அவர்கள் எந்த கல்வி முறையில் படித்து வந்தார்கள் என்பது அவசியமில்லாத ஒன்றாகி விடுகிறது.. இத்தனை பாடத்திட்டம் இருப்பதால் தானே இது பற்றிய சர்ச்சையும்,சட்ட சிக்கல்களும், நீதிமன்றம் செல்லும் தேவையும் ஏற்படுகிறது..

    பிளஸ்1,பிளஸ்2-வுக்கு மட்டுமாவது, (அட்லீஸ்ட் இத்தனை பிரச்னை ஏற்படுத்தக் கூடிய கணிதம், அறிவியல் பாடங்களுக்கு மட்டுமாவது) 'அந்த' பிரச்னைக்குரிய, 'CBSE' பாடத்திட்டம் சிறந்ததாக இருந்தால், அதைப் பின்பற்றினால் என்ன கெட்டுப் போகிறது?.(நமது மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் M.Sc போன்ற முதுநிலைக் கல்வி கற்றவர்களே..அவர்களுக்கு CBSE பாடத்திட்டத்தில் பிளஸ்2 வகுப்பு நடத்துவது ஒன்றும் சிரமம் இருக்காது.. நமது தமிழக மாணவர்கள் யாருக்கும் குறைந்தவர்களும் அல்ல.. மற்ற மாநில மாணவர்கள் 'படிக்க'முடியும் என்றால், நமது மாணவர்களால் கண்டிப்பாக 'சாதிக்கவும்' முடியும்..நாம் ஏன் CBSE முறை பார்த்து பயப்படவேண்டும்?.) கேள்வித்தாள் கூட நாடு முழுதும் எல்லோருக்கும் ஒன்றாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே.. தமிழ்வழி படிக்கும் மாணவர்களுக்கு அந்தப் பாடத்தை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து, தமிழக அரசு புத்தகங்களை வெளியிடலாம்.. மற்ற பாடங்களில்தான், ஆளுங்கட்சி(எந்தக் கட்சி வந்தாலும்) தங்களுக்குப் பிடித்த கொள்கைகளைத் திணிக்கும் வேலை நடைபெறுகிறது.. அறிவியலிலும், கணிதத்திலும் இது நடக்க(அதிக) வாய்ப்பில்லையே..


    இதில் என்ன பிரச்னைகள் வரக்கூடும் என்று வலை சிந்தனையாளர்கள் கருத்து கூறலாமே.. இதில் கிடைக்கும் நல்ல கருத்துக்களை தமிழக அரசின் பார்வைக்கும் அனுப்பலாமே.. அடிப்படையில் ஒரு மாநிலத்தில் ஏன் இத்தனை கல்வி முறைகள்.. நீண்ட காலமாக எனக்குள் இந்தக் கேள்வி இருந்து வருகிறது.. இதை வெளிப்படுத்த வாய்ப்பளித்த உங்கள் பதிவுக்கு மீண்டும் நன்றி திரு.பத்ரி..(இது குறித்து எனது கருத்துக்கள் யாரையாவது புண்படுத்தினால்- மன்னிக்கவும்.. எனது நோக்கம் அதுவல்ல.. இப்போதே சொல்லிவிடுகிறேன்.. ஆளாளுக்கு வம்புக்கு வராதீங்கப்பா.. நான் உங்க 'ஆட்டத்துக்கே' வரலை..)

    ReplyDelete
  3. சிறந்த கல்விமுறை எதுவென்று தேர்ந்தெடுத்து அதனை மாநிலம் முழுவதும் நல்ல முறையில் கற்பித்தால் நுழைவுத்தேர்வுக்கு அவசியமே இல்லை.

    ஒரே கல்வி முறையில் கற்பிப்பதற்கு என்ன பிரச்சினை இங்கே.
    எல்லோருக்கும் தரமான கல்வி சீறிய முறையில் தரப்பட்டால் பல பிரச்சினைகள் தாமே அழிந்துவிடுமே.

    அரசு செய்யுமா?

    மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு வழியுறுத்தினால் ஏன் செய்யாது?

    -அபுல்

    ReplyDelete
  4. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி கல்வி என்பது concurrent list - அதாவது பொதுப் பட்டியலில் உள்ளது. மத்திய அரசும் மாநில அரசுகளும் கல்வி வழங்குவது, கல்வித் தரத்தை நிர்ணயிப்பது போன்றவற்றில் ஈடுபடலாம்.

    இதுதான் பல குழப்பங்களுக்கும் ஆதாரக் காரணம்.

    Central Board of Secondary Education - CBSE என்பது பல மாநிலங்களின் கல்வித்துறை போர்டுகளை இணைத்து உருவாக்கப்பட்டது. இது இன்றைய தேதியில் மத்திய அரசிடமிருந்து எந்த நிதி உதவியும் பெறுவதில்லை. தன்னாட்சி அமைப்புடன் இயங்குவது. ஆனாலும் உண்மையில் மத்திய மனிதவள அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது.

    இதைப்போலவே CISCE - Council for the Indian School Certificate Examination என்பதும் இந்தியா முழுமைக்குமாக இயங்கும் ஒரு கல்வி அமைப்பு.

    இதைத்தவிர ஒவ்வொரு மாநிலமும் தத்தம் பகுதிகளில் பொதுவில் ஒரு கல்வித்துறை அமைப்பை பள்ளிக்கல்வி அளவிலே செயல்படுத்தி வருகிறது. தமிழகத்திலோ, நீங்கள் சொல்வது போல மொத்தமாக நான்கு பள்ளி இறுதிக்கல்வி முறை:

    1. State Board of School Examination
    2. Board of Matriculation Schools
    3. Anglo Indian
    4. Oriental

    இதில் 3/4 இரண்டையும் மறந்துவிடலாம். வெகு குறைவானவர்களே படிக்கின்றனர். இருந்தாலும் ஒரு மாநில அரசு இப்படி தேவையில்லாமல் நான்கு தனித்தனி இறுதிக்கல்வி முறைகளை வைத்திருக்கவேண்டுமா என்பது நியாயமான கேள்விதான்.

    கல்வி பொதுப்பட்டியலில் இருக்கும்வரை ஒரு மாநிலத்தால் CBSE, ICSE ஆகியவற்றை ஒழிக்கவேண்டும் என்று கேட்க முடியாது. ஆனால் அவை இரண்டையும் ஒன்றாக்கி இனி ஒரே மத்திய முறைதான் அமலில் இருக்கவேண்டும் என்று செய்ய முயற்சி செய்யலாம்.

    அடுத்தது தமிழகத்துக்குள்ளாக... ஆங்கிலோ இண்டியன், ஒரியண்டல் ஆகிய இரண்டு முறைகளையும் ஒட்டுமொத்தமாக ஒழித்துவிடலாம். பின்னர் மெட்ரிக், ஸ்டேட் போர்ட் ஆகிய இரண்டையும் ஒன்றாக்கி ஒரே தரத்தில் உள்ளதாக, தமிழகத்துக்கென ஒரு போர்டு மட்டும் உள்ளதாக மாற்றலாம்.

    இதிலிருந்து தமிழகத்தைப் பொருத்தமட்டில் இரண்டு முறைகள் இருக்கும் - மத்திய முறை ஒன்று, தமிழக மாநில முறை ஒன்று. இதைத்தவிர பிற மாநிலங்களில் படிக்கும் மாணவர்கள் தமிழகத்தில் தொழில்கல்வி படிக்க விரும்பலாம்.

    எப்படி இருந்தாலும் பல்வேறு பாடத்திட்டங்களை ஒழித்து மாநிலத்துக்கு ஒன்று அல்லது இரண்டு (மத்தியத் திட்டத்தையும் சேர்த்து) என்று ஆக்குவதே குழப்பங்களைக் குறைக்கப் பெருமளவுக்கு உதவும்.

    ReplyDelete