சரியாக மாலை 4.55க்கு நான் போய் காந்தி சிலை பின்னால் உட்கார்ந்தேன். முதலில் வந்து சேர்ந்தவர் மதுரபாரதி. பின் எஸ்.கே. அடுத்த சில நிமிடங்களில் ஹரி கிருஷ்ணன் மனைவியுடன் வந்தார். பின் ஒருவர் பின் ஒருவராக பலரும் வந்தனர். வந்த பிறர் அனைவரையும் இங்கு ஒருமுறை குறிப்பிட்டு விடுகிறேன்.
இரா.முருகன், தேசிகன், அருள் செல்வன், இகாரஸ் பிரகாஷ், பா.ராகவன், டோண்டு ராகவன், சோம. வள்ளியப்பன், மதுமிதா, கிருஷாங்கினி, நாகராஜன், இலந்தை இராமசாமி, ஷங்கர், நாகரத்தினம் கிருஷ்ணா, வாஞ்சிநாதன்.

உண்மையில் சுற்றிலும் சற்று சத்தம் இருக்கத்தான் செய்தது. அலைகளும் காற்றும் எழுப்பும் உஷ் உஷ் ஒருபுறம். நாங்கள் வந்து உட்கார்ந்த பிறகு ஆரம்பித்த சின்ன சைஸ் merry-go-ride எழுப்பிய ஓயாத இசை. பச்சிளம் குழந்தைகள் கைகளில் சுண்டல் பாத்திரத்துடன் வந்து அவ்வப்போது சுண்டல் வேண்டுமா என்று கேட்ட வண்ணம் இருந்தனர். அப்படி முதலில் வந்த ஒரு சுண்டல் பாலகனைப் பார்த்து இரா.முருகன் கலங்கி விட்டார். "அப்படியே அவனை மடியில் உட்கார வைக்க வேண்டும் போல இருக்கிறது, பாவம் இத்தனை சின்ன வயசில் சுண்டல் விற்க வேண்டிய நிலைமை" என்றார்.

முருகன் பேசி முடித்ததும் மதுரபாரதி தன் பையிலிருந்து ஒரு சால்வையை எடுத்து ஹரிக்குப் போர்த்தினார். சால்வை போர்த்தும் formal கூட்டமல்ல என்றாலும் தனக்கு செய்யத்தோன்றியது என்பதால் செய்தேன் என்றார்.

ஆடியோ ரெகார்டிங்க் செய்யும்போதும் சற்றே சொதப்பி விட்டது. நான் டிஜிட்டல் ரெகார்டர் கையில் வைத்திருந்தேன். ஷங்கர் கையில் ஓர் அனலாக் டேப் ரெகார்டர் கொண்டுவந்திருந்தான். என் டிஜிட்டல் ரெகார்டர் பாதியில் பேட்டரி தீர்ந்து போனதால் இரா.முருகன், மதுரபாரதி பேச்சினை ரெகார்ட் செய்ததை சேமிக்கவில்லை.
பின் வேறு பேட்டரி மாற்றி ஹரி-முருகன் கலந்துரையாடலைப் பதிவு செய்தேன். அதனால் முதலிரண்டு ஒலித்துண்டிலும் நிறைய வெளிச்சத்தம் கேட்கும். தயவுசெய்து சகித்துக்கொள்ளவும்!
முருகன், மதுரபாரதி பேசியதும் முருகன் சில கேள்விகளைக் கேட்க அதற்கு ஹரி பதில் சொன்னார். [30.19 min, 4.50 MB] அதனைத் தொடர்ந்து இலந்தை இராமசாமி ஹரியை வாழ்த்திப் பேசினார். [6.14 min, 955 KB] [இந்த கடைசி இரண்டு ஒலித்துண்டுகளும் வெளிச்சத்தம் மிகக்குறைவாக, கேட்கக் கூடியதாக இருக்கும்.]
அதன் பின்னர் பேச்சு informal-ஆக பல விஷயங்களையும் தொட்டது. எனவே ஒலிப்பதிவை நிறுத்தி விட்டேன்.
கூட்டத்தின் ஒரு பகுதி இதோ:

நான் சிறிது நேரம் பதிப்பகத் தொழில் பற்றியும், நாங்கள் மேற்கொண்டு என்ன செய்ய விரும்புகிறோம் என்பதைப் பற்றியும் பேசினேன். வேறு பலரும் புத்தகங்கள் பற்றி, எழுத்தாளர்கள் பற்றி, தங்களைப் பற்றி என்று நிறையப் பேசினார்கள். சுமார் 8 மணியளவில் சுண்டல், நேந்திரங்காய் வறுவல் சாப்பிட்டுவிட்டு மெதுவாகக் கலைந்து சென்றோம்.
யோசித்துப் பார்க்கையில் மீண்டும், தொடர்ச்சியாகவே கடற்கரையில் கூட்டம் நடத்தலாம் என்று தோன்றுகிறது. இன்னமும் சற்று முன்னதாகவே தொடங்க வேண்டும் - வெயில் இருக்கும்போதே. டிஜிட்டல் ரெகார்டரில் பேட்டரி சரியாக இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
இந்த தடவை தவற விட்டுட்டேன். அடுத்த முறை என்ன ஆனாலும் சரி, வந்தே தீரணும். அது சரி, என்ன டிஜிட்டல் ரிகார்டர் உபயோகிக்கிறீர்கள். ஐபாட் வாங்குங்க தல!
ReplyDeleteசில புத்தகங்களின் முன்னுரைகளைப் படிக்கும்போது, இதைப் போல கடமைக்கு எழுதுவதை விட எழுதாமலே இருக்கலாம் என தோன்றும்.
ReplyDeleteமுன்னுரைகளுக்குப் பதிலாக, இந்தக் கடற்கரைக் கூட்டங்கள் போன்ற informal-ஆன நூல் வெளியீட்டு நிகழ்வுகளை நூலின் முன்னுரை/முகவுரை என பதிவு செய்தாலே சிறப்பாக இருக்கும்.
Raj Chandra
http://rchandra.blogspot.com
புத்தக வெளியீட்டை வித்தியாசமாக நடத்தியதற்கும், எங்களைப்போல தூர தேசத்தாருக்கு ஒலிப்பதிவாக்கிக் கொடுத்ததற்கும் பாராட்டும், நன்றியும்.
ReplyDeleteதிரு. ஹரிக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
-காசி