Thursday, August 10, 2006

IT நில ஊழல்

Rediff News

தமிழக அரசின் எல்காட் நிறுவனத்துக்குச் சொந்தமான, காஞ்சிபுரத்தில் உள்ள 123 ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு ஐந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விற்க முயற்சி செய்ததாக கடந்த அஇஅதிமுக ஆட்சியின்மீது புகார் வந்துள்ளது.

ஏக்கருக்கு ரூ. 3 கோடிக்குமேல் செல்லும் இந்த நிலங்களை ரூ. 48 லட்சத்துக்கு விற்பனை செய்ய முந்தைய அரசு முடிவெடுத்திருந்ததாம்.

காக்னைசண்ட் டெக்னாலஜிஸ் - 20 ஏக்கர்
மெகாசாஃப்ட் - 25 ஏக்கர்
புரோட்டான் வெப் - 3 ஏக்கர்
பெஞ்ச்மார்க் - 25 ஏக்கர்
அட்வான்ஸ்ட் சாஃப்ட்வேர் - 50 ஏக்கர்

என்று மேற்படி ஐந்து நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட இருந்ததாம்.

பின் தேர்தலுக்கு வெகு அருகில் முடிவு செய்யப்பட்டது என்பதால் இந்த ஆணை செயல்படுத்தப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்த விற்பனையைத் தடைசெய்யச் சொல்லியும் சிபிஐ விசாரணை கோரியும் பொதுநலவழக்கு ஒன்று நீதிமன்றத்தில் இருப்பதாலும் இந்த ஆணையில் முறைகேடுகள் இருந்ததாலும் சென்ற மாதமே மாநில கேபினெட் இந்த விற்பனையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது.

இதைப்பற்றி நேற்றும் இன்றும் சட்டப் பேரவையில் விவாதம் நடந்துவருகிறது.

2 comments:

  1. காக்னசண்ட்டின் நிலத்தேவையான 20 ஏக்கரைப் புரிந்து கொள்ள முடிகிறது.
    ஆயிரக்கணக்கான தலைக்கட்டுகள் நிறைந்த நிறுவனம் காக்னசண்ட்.

    மெகாசாப்ட்டைக் கூட சிறிதளவு புரிந்து
    கொள்ள முடிகிறது. விட்டு விடலாம்.

    ஆனால், இந்த பெஞ்ச்மார்க் நிறுவனம்
    25 ஏக்கர் (காக்னசண்ட்டைவிட அதிக)
    வாங்க முனைந்தது அல்லது ஒதுக்கப் பட்டிருப்பது சிந்திக்க வைக்கிறது.

    அரை ஏக்கர் நிலமே அவர்களின் தேவையை விட அதிகம் (குறைந்தது ஓராண்டுக்கு முன் இருந்த அவர்களின் நிலை)்.

    ReplyDelete
  2. இது சம்பந்தமான கோப்புகளில் சம்பந்தப்பட்ட துறை செயலர்கள் ஒப்பிட மறுத்ததாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதே!

    ReplyDelete