சக தமிழ் இணைய வாசிகள் பலரும் ஒருசேரக் கண்ணில் பட்டனர். பெங்களூரில் இருந்து ஐயப்பன், ஷக்திபிரபா, என்றும் அன்பகலா மரவண்டு, கொல்கொத்தாவிலிருந்து நிர்மலா அவரது பெண்ணுடன், பாலராஜன் கீதா தம்பதியினர், சென்னையிலிருந்து ஹரி கிருஷ்ணன் தம்பதியினர், வெங்கடேஷ், பா.ராகவன், நான், சித்ரன், இகாரஸ் பிரகாஷ், பிட்சைப்பாத்திரம்-ஸ்வஸ்திக் அட்வர்டைசிங்-சுரேஷ் கண்ணன், சாகரன் மனைவியுடன், எஸ்.கே எனப்படும் சைபர் பிரம்மா, ஆசாதின் மனைவி, மகள், கல்கி அட்டை புகழ் கவிஞர் மதுமிதா, நெல்லையிலிருந்து விமர்சகர் பிரசன்னா, ஆசீஃப் சார்பாக அவரது தந்தை சாத்தாள்குளம் அப்துல் ஜப்பார், புதுவையிலிருந்து இராஜ.தியாகராஜன், புஜைராவிலிருந்து உஷா என்று பலரும் வந்திருந்தனர்.
எலிஜிபிள் பேச்சிலர்கள் ரஜினி ராம்கி, ஷங்கர் (எப்பொழுதும் போல இங்கும் லேட்) இருவரும் வந்திருந்தனர்.
பலரையும் இதுதான் வாய்ப்பென்று படம் பிடித்தேன். நாளை யாருக்காவது சாகித்ய அகாதெமி பரிசு கிடைக்கும்போது பட்டென்று வலைப்பதிவில் படத்தைப் போட்டுவிடலாம் அல்லவா?
கல்யாண மாப்பிள்ளை ராஜா அங்கும் இங்குமாக சரளமாக அனைவரிடமும் பேசி அளவளாவிக் கொண்டிருந்தார். சிறிதுநேரம் கழித்து அவரைப் பிடித்து இழுத்துக்கொண்டுபோய் பந்தலில் நிறுத்திவிட்டனர். அதைத் தொடர்ந்து கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் மணமக்களைச் சூழ்ந்துகொள்ள videocapture, photocapture நிகழ்ச்சிகள் படு விமரிசையாக நடந்தேறின.
கல்யாண வரவேற்புகளில் இப்பொழுதெல்லாம் பிரசித்தமான ஆர்கெஸ்டிரா - மிகச்சத்தமாக மணடபமே அதிர அதிர நடந்துகொண்டிருந்தது.
விமர்சகர் பிரசன்னா மேற்படி ஆர்கெஸ்டிராவின் பேனரில் இரண்டு தவறுகளைக் கண்டுபிடித்தார். என்னெவென்று கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு எதுவும் கிடையாது.
Á½Áì¸û Ò¨¸ôÀ¼ò¾¢üÌ ¿ýÈ¢ Àòâ!
ReplyDeleteÅ£ðÊüÌò ¦¾¡¨Ä§Àº¢Â§À¡Ð, «õÁ¡ ¾¢ÕÁ½ ÅçÅüÀ¢Ä¢ÕóÐ þýÉÓõ ¾¢åõÀÅ¢ø¨Ä ±ýÚ ¦¾Ã¢ó¾Ð. ÅçÅüÀ¢üÌ Åó¾ ¾Á¢ú þ¨½Âò¾¡Ã¢ý Ò¨¸ôÀ¼í¸û º¢Ä¨¾ þí§¸ À¸¢÷óЦ¸¡ûÙí¸§Çý? Å¢ÕÐ ¸¢¨¼ì¸¢ÈôÀ þý¦É¡Õ ¾¼¨Å ÀÂýÀÎò¾¢ì ¦¸¡ñ¼¡ §À¡îÍ. ;)
±ýÉ ¦º¡øÈ£í¸ Àòâ?
Á¾¢
திரைப்படப்புகழ்?
ReplyDeleteBy: M. Kannan
காணக் கண்கொள்ளாக் காட்சி.
ReplyDeleteமணமக்களுக்கு வாழ்த்துகள்.
கே.வி.ராஜா (எ) கொஸப்பேட்டை குப்ஸாமி - கோமதி
ReplyDeleteமணமக்களுக்கு வாழ்த்துகள்
தகவலுக்கும் புகைபடத்திற்கும் நன்றி
மணமக்களுக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteஅன்புள்ள பத்ரி,
ReplyDeleteஃபோட்டோ அருமை! கோமதியின் புடவை 'சூப்பர்...!'
தகவலுக்கு நன்றி!
மதி சொன்னதுபோல சக வலைப்பதிவாளர்கள் படங்களையும் போடுங்களேன்,ப்ளீஸ்!
என்றும் அன்புடன்,
துளசி.
நான் ஏற்கெனவே புத்தகக் கண்காட்சியில் படமெடுக்க அனுமதித்து சாகித்ய அகாதெமி பரிசுக்கு கர்ச்சீஃப் போட்டு விட்டேன் :-)
ReplyDeleteராஜா மற்றும் அவரது துணைவியாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
By: Meenaks
மணமக்களுக்கு வாழ்த்தும்.அழகாக வார்த்தைகளால் படம்பிடித்த பத்ரிக்கு நன்றியும்..
ReplyDeleteமணமக்களுக்கு வாழ்த்துக்கள். அந்த இன்னொரு தவறு "சார்லஸ்"-ஆ?
ReplyDeleteமணமக்களுக்கு வாழ்த்துக்கள். அந்த இன்னொரு தவறு "சார்லஸ்"-ஆ? ஒரு நிகழ்ச்சி போகததால, சாகித்ய அகாதெமி எனக்கு கை நழுவிப் போயிடுச்சுப்பா ;-)
ReplyDeleteமற்றொரு தவறு "திறைப்பட"!!!
ReplyDeleteஇந்த பிரசன்னாவுக்கு குற்றம் கண்டுபிடிப்பதே வாடிக்கையா போச்சுப்பா..(ஹிஹிஹி)
வாழ்க மணமக்கள்.
By: மூர்த்தி
மரத்தடியில் இட்ட மடலை இங்கேயும் பின்னூட்டமாகக்
ReplyDeleteகொடுத்து விடுகிறேன்.
----------------------------
அருமையான ஒரு வாய்ப்பை இழந்திருக்கிறேன் என்பது நன்றாகவே தெரிகிறது!
அடுத்து, யாருப்பா கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க? :-)
அன்புடன்,
'சுபமூகா'
By: 'சுபமூகா'