பிரதமராக வி.பி.சிங் பதவியில் இருந்தது ஒரு வருடத்துக்கும் சற்றுக் குறைவுதான். ஆனால் momentous தினங்கள் அவை.
வி.பி.சிங் நிதி அமைச்சராக ஆனபோதுதான் நான் அவரைக் கவனிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் நான் செய்தித்தாள்களை தீவிரமாகப் படிக்கத் தொடங்கியிருந்தேன். முதன்முதலாக தொலைக்காட்சியில் தினமும் செய்திகளைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்திருந்தது. ராஜீவ் காந்தி என்ற இளம் ஹீரோ இந்தியாவை எங்கோ உயரத் தூக்கிக்கொண்டு போகப்போகிறார் என்று இளைஞர்கள் அனைவரும் நினைத்த நேரம் அது.
ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் பல புதிய முகங்கள் இருந்தன. எப்போதும் காங்கிரஸ் அமைச்சரவையில் காணப்படும் சில கிழடுகளும் இருந்தன. வி.பி.சிங் கண்டிப்புக்கும் நேர்மைக்கும் பெயர்போனவர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அந்த நேரத்தில் லைசென்ஸ் கோட்டா ராஜ்ஜியம் உச்சத்தில் இருந்தது. பணம் படைத்த தொழிலதிபர்கள், அமைச்சர்களுக்கும் கட்சிக்கும் லஞ்சம் கொடுத்து, தமக்கு வேண்டியவற்றை சாதித்துக்கொண்டனர். அப்போதுதான் வி.பி.சிங் திருபாய் அம்பானியை முதலில் எதிர்கொண்டார்.
நிதி அமைச்சராக, அந்நியச் செலாவணி, வருமான வரி, ஆயத்தீர்வை, சுங்கம் என எல்லாமே வி.பி.சிங்கின் கையில் இருந்தன. இந்திரா காந்தி காலத்தில் வருமான வரி மிக அதிகமாக இருந்தது. எனவே வருமான வரி ஏய்ப்பும் சர்வசாதாரணமாக நடந்தது. அதேபோல உற்பத்திக்கு கோட்டா இருந்தது. ஆனால் கோட்டாவுக்குமேல் உற்பத்தி செய்வது, ஆனால் கோட்டா அளவுக்கு மட்டுமே ஆயத்தீர்வை செலுத்தி, அதிகமாக உற்பத்தி செய்த பொருள்களை வரி ஏதும் செலுத்தாமல், கள்ளத்தனமாகச் சந்தைக்குள் விடுவது என்பதும் பரவலாக நடந்துவந்தது.
சிங், இந்தச் சமயத்தில் கண்டிப்புடன் நடந்தது அம்பானியின் தொழிலை ஆட்டம்காணச் செய்தது. விளைவாக, பல காய்கள் நகர்த்தப்பட்டு, வி.பி.சிங் நிதித் துறையிலிருந்து ராணுவ அமைச்சராக மாற்றப்பட்டார். ராஜீவ் காந்தி இதைச் செய்ததே அசிங்கம். வி.பி.சிங் மீது எந்தக் குற்றச்சாட்டையும் நேரடியாக வைக்கமுடியாத நிலையில், ராஜீவின் இந்தச் செயலே, சிங்குக்கு பலத்த ஆதரவைக் கொடுத்தது. அப்போதே, ராணுவ அமைச்சகத்தில் சிங் என்ன செய்வார் என்ற ஒரு பரபரப்பு மக்களிடம் இருந்ததை நான் கண்டிருக்கிறேன்.
அதற்கு ஏற்றார்போல, இன்றுவரை முடிவுறாத போஃபர்ஸ் ஊழல் வெளியே வந்தது. சோனியா காந்தி, ராஜிவ் காந்தி இருவரும் ஏதோ வகையில் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்னையில் வி.பி.சிங் எதைக் கண்டுபிடித்தாரோ தெரியாது... அவர் பதவியிலிருந்து எறியப்பட்டார். வி.பி.சிங்கும் தான் இறக்கும்வரை தான் கண்டுபிடித்தவற்றைத் தெளிவாகச் சொல்லவும் இல்லை. ஆனால், சிங்கிடம் எந்தத் தவறும் இல்லை என்பதே மக்கள் கருத்தாக இருந்தது. சிங்கும் அதே வேகத்தில் கட்சியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார்.
ராஜீவ் காந்தியின் இறங்குமுகம் அதற்கு முன்பிருந்தே ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும், வி.பி.சிங் வெளியேற்றம்தான் ராஜீவ் காந்தியின் ஆட்சிக்கு சாவு மணியாக இருந்தது.
அந்தத் தேர்தல் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வரும்போது, ஐஐடி மூன்றாம் வருடப் படிப்பில் இருந்தோம். Industrial Tour என்ற பெயரில் நாடு முழுவதும் ஐஐடி காசில் சுற்றிப் பார்ப்பது வழக்கம். அந்தப் பயணத்தின்போது பெரும்பாலும் ரயிலில் ரேடியோப் பெட்டியில் செய்திகள் கேட்டு, காங்கிரஸ் தோற்ற செய்தியை மாணவர்கள் அனைவருமே கொண்டாடியது எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஒரு வருடத்துக்குள்ளாக ஐஐடி மாணவர்கள் (பெரும்பான்மையினர்) வி.பி.சிங்கை எதிர்க்கப் போகின்றனர்.
போஃபர்ஸ் பிரச்னையை வைத்துத்தான் ராஜீவ் தேர்தலில் தோல்வியடைந்தார். தேர்தலுக்கு முன்பே ராஜீவ் காந்திக்குத் தெரிந்துவிட்டது. ஒருபக்கம் போஃபர்ஸ் கறை படிந்த தான். மறுபக்கம் ஊழல் கறை படியாத வி.பி.சிங். எனவே அரச இயந்திரங்களை முடுக்கிவிட்டு வி.பி.சிங்மீது அந்நியச் செலாவணிக் குற்றச்சாட்டு ஒன்று கொண்டுவரப்பட்டது. அதற்காக ஆவணங்கள் ஃபோர்ஜ் செய்யப்பட்டன. (செயிண்ட் கிட்ஸ் ஃபோர்ஜரி ஊழல்.) எப்பாடுபட்டாவது வி.பி.சிங்கும் ஊழல் பேர்வழிதான் என்று காண்பித்தாகவேண்டும் என்று ராஜீவ் செய்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.
ஆனால் இந்திய அரசியலின் மிகப்பெரும் பலவீனமே, வலுவான எதிர்க்கட்சி அமைந்தாலும், ஒரு தலைவரை ஏற்காத குழிபறிக்கும் மனப்பான்மை. வி.பி.சின், தேவிலால், சந்திர சேகர் ஆகியோருக்கிடையில் நடந்த போட்டியில், வி.பி.சிங் பிரதமரானார். ஆனால் முதல் நாளிலிருந்தே சந்திர சேகர் அமைச்சரவைக்கு வெளியில் இருந்தபடியும், தேவிலால் அமைச்சரவைக்கு உள்ளிருந்தபடியும் குழி தோண்ட ஆரம்பித்தனர். போதாக்குறைக்கு வி.பி.சிங்குக்கு ஆதரவளித்த ஒரு கட்சி பாஜக. அவர்களது சிந்தனை வேறு திசையில் இருந்தது.
ஒரு வருடத்துக்கும் குறைந்த காலத்தில், வி.பி.சிங், ராஜீவின் பஞ்சாப், இலங்கை உடன்பாடுகளை கவனிக்கவேண்டியிருந்தது. இந்திரா காந்தியின் கொலைக்குப் பிறகு நடந்த டெல்லி சீக்கியப் படுகொலைகளுக்குப் பிறகு, சீக்கியர்களுக்கு காங்கிரஸ்மீதும் ராஜீவ் காந்திமீதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. வி.பி.சிங்மீது நியாயமாகவே அந்த நம்பிக்கை வந்தது. வி.பி.சிங் அமைச்சரவையில் இடம் பெற்ற திமுகவின் தூண்டுதலின்பேரில் இலங்கையிலிருந்து, இந்திய அமைதிப்படையைத் திரும்பப் பெறவேண்டியிருந்தது.
இதற்கிடையில் துணைப்பிரதமர் தேவிலால் தனது கரங்களை வலுப்படுத்த மாபெரும் விவசாயிகள் கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அத்வானி இந்துக்களை ஒன்றுதிரட்ட அயோத்திப் பிரச்னையைக் கையில் எடுத்தார். பெரும்பான்மை இந்திய ஊடகக் கதையாடல்களில் இந்தப் பிரச்னைகளைச் சமாளிக்கத்தான் வி.பி.சிங் மண்டல் கமிஷன் அறிக்கையைக் கையில் எடுத்தார் என்பார்கள். அயோத்தி ரத யாத்திரையும் விவசாயிகள் கூட்டமும் முழுவதும் அரசியல் நோக்கம் கொண்டவை. மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அரசியல் பின்னணி கொண்டதாக இருந்தாலும் ஒரு நிர்வாகம் நியமித்த கமிஷனின் பரிந்துரைகள். இந்தப் பரிந்துரைகளை ஏன் வி.பி.சிங் செயல்படுத்தினார் என்று கேட்பதைவிட, அதுவரையில் அவை ஏன் கிடப்பில் போடப்பட்டன என்ற கேள்வியை யாரும் கேட்க மறுக்கிறார்கள்.
[மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் சட்டமாக்கியபோது மத்திய அரசின் செயலராக இருந்த பி.எஸ்.கிருஷ்ணன் சென்னையில் பேசிய பேச்சின் ஒலிவடிவம் இங்கே உள்ளது.]
வி.பி.சிங் கொண்டுவந்த சட்டம் அவரது பதவியைப் பிடுங்கிக்கொண்டது. ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து வி.பி.சிங் கொண்டுவந்த சட்டம் நியாயமானதே என்று உச்ச நீதிமன்றமே உறுதி செய்தது. எனவே வி.பி.சிங் இந்திய சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்தியவர் என்று இந்தியா டுடே போன்ற பத்திரிகைகள் எழுதுவது உச்ச நீதிமன்றக் கருத்துக்கு எதிரானது என்றுகூடச் சொல்லலாம்.
வி.பி.சிங் 1990-ல் மண்டல் கமிஷனின் ஒரு பரிந்துரையான அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு என்பதை மட்டுமே அப்போது கொண்டுவந்தார். இப்போதுதான் ஐஐடி, ஐஐஎம் ஆகிய இடங்களில் இட ஒதுக்கீடு ஆரம்பித்துள்ளது.
அத்வானி ரத யாத்திரை நிறுத்தப்பட, பாஜக, வி.பி.சிங்குக்குக் கொடுத்த ஆதரவை விலக்கிக்கொள்ள, சிங் ஆட்சி முடிவுக்கு வர, சந்திர சேகர் மிகவும் மகிழ்ச்சியுடன் ராஜீவ் காந்தியின் ஆதரவுடன் பிரதமரானார். பின் சில மாதங்களுக்குள்ளாகவே, ராஜீவின் தொல்லை தாளாமல் ஆட்சியை இழந்தார்.
வி.பி.சிங், பரம்பரை ராஜ குடும்பத்தில் பிறந்தவர். மாந்தா என்ற சமஸ்தானத்தின் மன்னரான பகவதி பிரசாத் சிங், விஷ்வநாத் பிரதாப் சிங்கை தத்து எடுத்துக்கொண்டார். பகவதி பிரசாத் சிங்கின் மறைவுக்குப் பின், 1941 முதல் இந்தியா சுதந்தரம் அடையும்வரை விஷ்வநாத் பிரதாப் சிங் மாந்தாவின் ராஜாவாக இருந்தார். பின்னர், வி.பி.சிங், 1967-ல் வினோபா பாவேயின் பூதான் இயக்கத்தின்போது ஏகப்பட்ட நிலங்களைத் தானமாகக் கொடுத்தார். அதன் பின்னர்தான் அவர் அரசியலில் புகுந்து உத்தரப் பிரதேசத்தின் முதல்வரானார்.
வெகு நாள்களுக்குப் பிறகு அவரது மனைவியே, “என் கணவர் மனநிலை சரியில்லாது இருந்தபோது நிலத்தைத் தூக்கிக் கொடுத்துவிட்டார். எனவே அது செல்லாது என்று அறிவித்து, அந்த நிலங்களைத் திருப்பித் தரவேண்டும்” என்று கேட்ட அசிங்கமும் நடந்தது.
1990-க்குப் பிறகு, வி.பி.சிங் அரசியலைவிட்டு விலகிவிட்டார். அவர் அப்படிச் செய்திருக்ககூடாது. ஆனால் அவர் எதிர்பார்த்த குறைந்தபட்ச நேர்மை அப்போது அரசியலில் இருக்கவில்லை என்பதையும் நாம் ஏற்கவேண்டும்.
கேன்சர் வந்து, அதிலிருந்து மீண்ட சிங், இப்போது இறந்துவிட்டார். பிரதமராக இருந்தது 11 மாதங்களே என்றாலும், இந்தியாவின் மிக முக்கியமான பிரதமர்களுள் இவரது பெயர் எப்போதும் இருக்கும். ஆனால், பெரும்பான்மை ஊடகங்கள் இவர்மீது வெறுப்பைக் கக்குவது கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டும்.
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
3 hours ago
my 2cents on v.p.singh
ReplyDeletehttp://ravisrinivas.blogspot.com
'வி.பி.சிங் கொண்டுவந்த சட்டம் அவரது பதவியைப் பிடுங்கிக்கொண்டது. ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து வி.பி.சிங் கொண்டுவந்த சட்டம் நியாயமானதே என்று உச்ச நீதிமன்றமே உறுதி செய்தது. எனவே வி.பி.சிங் இந்திய சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்தியவர் என்று இந்தியா டுடே போன்ற பத்திரிகைகள் எழுதுவது உச்ச நீதிமன்றக் கருத்துக்கு எதிரானது என்றுகூடச் சொல்லலாம்.'
ReplyDeleteThere is nothing wrong with that.Criticism
of the Supreme Court's judgment is well
within the right to expression. I know
P.S.Krishnan's views on reservation and
I dont agree with his views.
மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அரசியல் பின்னணி கொண்டதாக இருந்தாலும் ஒரு நிர்வாகம் நியமித்த கமிஷனின் பரிந்துரைகள். இந்தப் பரிந்துரைகளை ஏன் வி.பி.சிங் செயல்படுத்தினார் என்று கேட்பதைவிட, அதுவரையில் அவை ஏன் கிடப்பில் போடப்பட்டன என்ற கேள்வியை யாரும் கேட்க மறுக்கிறார்கள்.
ReplyDeleteThe question should be why did he implement
only one of the suggestions of Mandal
Commission- reservation in jobs.Why no
party that claims to speak in favor of
social justice is not pressing for
implementing other recommendations.
Rajiv Gandhi opposed the implementation
of Mandal Commission's recommendation
for reservation in jobs.He opposed it
in the debate in Lok Sabha.Janata govt.
appointed Mandal as the chairman of the
commission on backward classes.By the
time the commission gave its report
janata party was not in power and
Mrs.Gandhi was the prime minister.
Congress was not keen to implement
the recommendations.V.P.Singh became
P.M in Nov 89 but announced the
reservation on the basis of Mandal
Commission in August 1990 when
Devi Lal was projecting himself
as leader of farmers and was
mobilising support for him.
V.P.Singh played the Mandal
card as a part of the strategy
to consolidate his position
in the party.
//The question should be why did he implement
ReplyDeleteonly one of the suggestions of Mandal
Commission- reservation in jobs.//
முதலில் ஒரு படி தான் சாமி எடுத்து வைக்க முடியும்.
அதை செய்ததற்கே அந்த பாடு என்றால் முழுவதும் செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்
அதற்கு 16 வருடங்கள் கழித்து கல்வியில் இடப்பங்கீடு கொண்டுவர முயன்ற போது, டெல்லி மாணவர்கள் (பிற்பட்ட சமுகத்தினரை பார்த்து) தொலைகாட்சியில் பாடிய பாடல் “உங்கள் வேலையை பார்த்துக்கொண்டு போங்கள்”
2006லேயே இந்த நிலை என்றால் 1990 எப்படி என்று ஊகிப்பது எளிது தானே
//V.P.Singh played the Mandal card as a part of the strategy to consolidate his position
in the party.//
அது உங்கள் கருத்து.
//V.P.Singh became
ReplyDeleteP.M in Nov 89 but announced the
reservation on the basis of Mandal
Commission in August 1990 when
Devi Lal was projecting himself
as leader of farmers and was
mobilising support for him.
V.P.Singh played the Mandal
card as a part of the strategy
to consolidate his position
in the party.//
மண்டல் கமிசன் பரிந்துரைகளை அமல் படுத்துவது 1989 நாடாளுமன்றத் தேர்தலின் போது தேசிய முன்னணியின் (மற்றும் அதன் அங்கமாகிய ஜனதா தளத்தின்) தேர்தல் வாக்குறுதியாகும். எனவே சந்திரசேகர்-தேவிலாலையோ அல்லது பாரதிய ஜனதாவையோ சமாளிப்பதற்காகவே வி.பி.சிங் இடப்பங்கீட்டை அறிவித்தார் என்று மீண்டும் மீண்டும் சிலர் சொல்லித் திரிவது மேல்சாதிப்பற்றினால் வெளிவரும் பச்சைப் பொய்.
தேர்தல் வாக்குறுதியில் தேசிய முன்னணி அறிவித்ததற்கு தி.மு.க. ஒரு முக்கியக் காரணமெனலாம். வி.பி.சிங் முதலில் சாதி மற்றும் சாதிய அரசியல் குறித்த முழுப்புரிதல் இல்லாதவராக இருந்திருக்கலாம். வேறு எத்தனையோ அரசியல் நிலைப்பாடுகளில் கூட போதிய அறிதலும், தெளிவும் இல்லாதாவராக இருந்திருக்கலாம், அதனால் அவர் காங்கிரசில் இருந்த காலத்தில் அவ்விசயங்களில் கவனம் செலுத்தவில்லை. தன்னுடைய வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து அரசியலை அனுபவரீதியாக நேர்மையாகக் கற்றும், அதனால் தன் நிலைப்பாடுகளை நேர்மையாக மறுபரிசீலனை செய்து மாற்றிக் கொண்டும் சுயநலமின்றி உறுதியாகச் செயல் பட்ட ஒரே தலைவர் வி.பி.சிங். மகாத்மாவாகச் சித்தரிக்கப் படும் காந்தி கூட இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கைகளையும் புரிந்து தம் கொள்கைகளை வகுத்துக் கொள்ள வேண்டும் என்ற நேர்மையில்லாதவராகவும், எப்பொழுதும் தன்னிச்சையாகச் செயல்படும் கொள்கை-சர்வாதிகாரியாகவும்தான் இருந்தார்.
துளிக் கூட கூச்சநாச்சமில்லாமல் தம்மை ஒரு சாதியுடன் அடையாளப் படுத்திக் கொண்டு கல்வி நிறுவனங்களில் தம் சாதியின் ஆதிக்கம் போகிறதே என்று பதைபதைக்கும் அறிவுஜீவிகளுக்குக் கூட வி.பி.சிங் எதிரிதான்.
நன்றி - சொ.சங்கரபாண்டி
அருமையான பதிவு தோழர் பத்ரி அவர்களே,
ReplyDeleteஇன்றும் இந்தியா டுடே போன்ற பத்திரிகைகளின் செயல் இப்படி இருக்கிறது என்றால் தொண்ணுறுகளில் யப்பா!!!!..
வாழ்த்துக்கள் தோழரே
முகமது பாருக்
//Devi Lal was projecting himself
ReplyDeleteas leader of farmers and was
mobilising support for him.
V.P.Singh played the Mandal
card as a part of the strategy
to consolidate his position
in the party.//
This is pretty naive to say the least.
V.P. Singh took initiative to implement the Mandal report long back..That is, when he was the Chief Minister of Uttar Pradesh.
//பெரும்பான்மை ஊடகங்கள் இவர்மீது வெறுப்பைக் கக்குவது கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டும். //
Well, it is understandable as his decision to implement Mandal recommendation unleashed the social and political power of Dalits and OBCs across the country in such a massive scale.This section has started demanding greater social justice and a rightful share in society, politics, governance and administration which is against the interest of this English speaking "upper caste" elites whom these media dutifully represents.
அருமையான கட்டுரை! நேர்மையாகவும் எளிமையாகவும் எழுத்தப்பட்டுள்ளது மேலும் கவர்கிறது! ரவிசீனிவாசுக்கு ஒரு சின்ன பதில். மண்டல் கமிசன் பரிந்துரைகளை ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்துவோம் என்று அன்று தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டதற்குக் கூட தேவிலாலின் பிற்காலத்திய விவசாயிகள் கூட்டமும் தான் காரணமும் என்றால் .. என்னால் நகைக்க மட்டுமே முடிகிறது! ரவி சீனிவாசின் வாதத்தை பார்க்கும்போது!!
ReplyDeleteV P Singh remains one of the most hated politicians even after almost 20 years of demitting office. The Hindu upper caste would never forgive him for the single act of 'Mandalisation' of Indian society, which finally resulted in a clear change in India's parliament. Though, he was often blamed that Mandal Commission Report was implemented to sideline Devi Lal. The fact was that implementation of Mandal Commission report was part of National Front manifesto. He was just following the manifesto. Moreover, even if he did it for political purposes, why did the champions of social justice not support it?
ReplyDeleteV.P.Singh was essentially a loner in politics. In the dirty word of politics, where personal loyalties are considered important and money plays an important role, he kept himself away from this. In his remarkable political career, he would be perhaps the only ranking in that top positions ( PMs, CMs and Ministers) who chose to live with great simplicity. His life was an open secret. One of the most accessible political leader, Singh never mind even sitting on Dharana with a few young activists and this was the reason why the social action groups working in the slums of Delhi found in him their patron. At the time when even the local corporation member do not travel without a few gun trotting guards and streams of vehicles Singh could shun publicity and security. In fact immediately after demitting the office, he asked the government to withdraw his SPG.
V.P.Singh is often charged with playing politics. His detractors found it difficult to counter him argumentatively as though Singh might not have been a rebel rouser in political sense as he never lost sight of decency and could mingle with people very easily speaking with them in chaste Bhojpuri, yet because of his sheer conviction and clean personal life, none of them could really challenge him. We all remember those hey days of 1986 when he was expelled from Congress Party and it did everything to stop him addressing public meetings. As youths we all saw in him a hope, an aspiration from getting rid of corruption, which the Congress party epitomized that time. Every where, the ruling Congress that time disrupted meeting, stopped permission for grounds, spied him privately and threatened action against him. His files were traced and journalists like M.J.Akbar were used to get stories published in newspapers like Hindustan Times and Telegraph that Singh has an account in St Kitts. The business-journalist-rightwing nexus is very powerful in India and politicians use it.
Singh was perhaps the only politician who not only shunned businessmen but also the middlemen Babas. If he did not hesitate in raiding the industrial houses who were evading taxes particularly notorious Reliance during that time, he also tried to investigate the illegal accounts of our political class. We all know we do not have the proof but a large number of Indians have illegal money in Switzerland. And when an individual fight against the system, with in being part of system, he meet with the fate as VP Singh met. His close colleague Bhure Lal, who was director in the enforcement directorate were shunted. Singh was transferred to Defence Ministry. There also he found that heavy commission was paid in the HDW Submarine deal and ordered inquiry. The price was immense. He was expelled from the Congress.
- ராவட் அவர்களின் சமீபத்திய அழகான கட்டுரையை உங்களின் இந்த பதிவின் மூலம் பிற்சேர்க்கை செய்ய விரும்புகிறேன்!
Yes. He was not an another brick in the wall. So many people came as messiah of poor and downtrodden and went on to amaze wealth in Crores like one CM whose party is a symbol of poor Dalits! So in any count V.P.Singh will be remembered as one of the honorable people who left their mark in the dirty game of politics in a possitive way. Good article.
ReplyDeleteபத்ரி நீங்கள் விபி.சிங் பற்றி எழுதியிருப்பது மிகவும் மேலோட்டமாக இருக்கிறது என்றே தோன்றுகிறது. அவரின் ஆட்சிக்கு பிறகுதான் இந்தியாவில் நிறைய மாற்றங்கள் ஏற்ப்பட்டன, பொருளாதாரம் குழப்பம்,நிரந்தரமான பல கட்சி ஆட்சிமுறை, எந்த ஒரு தனிகட்சியும் ஸ்திரமான ஆட்சியை கொடுக்கமுடியாத நிலை, பெரும் பொருளாதார சரிவு அதை தொடர்ந்து சந்திரசேகர் காலத்தில் வெளிநாட்டில் நமது தங்கம் அடகு வைக்கப்பட்டது அப்போது மிக பிரபலமாக பேசப்பட்டது. காங்கிரஸ் நிரந்தரமாக பலவீனப்படுத்தப்பட்டது, இப்படி நிறைய சம்பவங்களின் பின் அவரின் ஆட்சி காரணமாய் இருந்தது, அவரால் மிகப்பெரிய நன்மை பெற்றது பி.ஜெ.பி தான். அதன் பின் தான் பி.ஜே.பி யின் எம்பிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
ReplyDeleteஅவரின் முடிவுகள் நாட்டை ஒரு ஸ்திர மற்ற நிலைக்கு அப்போது கொண்டு போனதாக அப்போது தோன்றியது.
அவரின் மனைவி மூலம் கொடுத்தநிலத்தை திரும்ப பெற அவர் செய்ததாக சொல்லப்படும் நாடகங்கள் அவரின் எந்த புகழையும் வாழவிடாது,
தனது மருத்துவத்திற்காக வெளிநாட்டில் இருந்து பெரும் செலவுகள் பற்றி பாராளுமன்றம் வரை விவாதம் வந்த பின் தான் அவர் இந்தியாவில் சிகிச்சைக்கு திரும்பினார் என்பதெல்லாம் கவனிக்கவேண்டும், மறக்கமுடியாத பிரதமர்தான் ஆனால் எந்த வகையில் என்பது யோசிக்க வேண்டியவிஷயம்
Facts are facts even if folks like Sudalai Madan fail to recognise them because of their hatred against the principle of equality and their wholehearted support for caste based reservations.
ReplyDelete1)V.P.Singh did not discuss the issue of Manadal Commission in any party forum
and announced it when Devi Lal was
mobilising support for him. The timing
was significant.
2)He was the minister in Centre
for many years.What did he do
to convince Indira Gandhi and
Rajiv Gandhi to accept and
implement the recommendation.
As far as I know, nothing.
3)Even V.P.Singh would have laughed
at the comments made by Sudalai
Madan on him and Gandhi.V.P.Singh
was a loyalist of the Indira Gandhi
family. He was close to Sanjay Gandhi
and had no political base worth the name.
His rise in the party and government had
more to do with his loyalty to the family
than with his political skills.
4)Arif Mohammed Khan opposed changing the
law to overcome the Supreme Court judgment
in Sha Bano case.V.P.Singh toed the party
line and supported it. The left opposed it.
5)Arun Shourie was exposing the scandals
and corruption in Mrs.Gandhi's government
and rule in the 80s. At that time, this
'Mr.Clean' was part and parcel of the
ruling regime. I am not arguing that he indulged in corrupt practices. All I am
saying is much before Bofors many scandals
surfaced and media, particularly Indian
Express wrote about them. These had no
effect on 'Mr.Clean'. Perhaps he discovered that he had conscience only when it suited him to play the role of
crusader against corruption.
Of course those benefiited from the reservation he introduced would
be grateful to him. For those who lost
the story is different.
http://tehelka.com/story_main41.asp?filename=hub201208personalhistories.asp
பத்ரி,
ReplyDeleteநல்ல பதிவு. நம்மால் மறக்கப்பட்ட நேர்மையான ஒருவர் V. P. Singh. அவர் நினைவில் இந்தப் பதிவு மிகவும் பொருத்தமானது.
-SK
ஒரு விதத்தில் பார்த்தால் தமிழ் நாட்டில் மட்டும் பின் தங்கிய வகுப்பினர்க்கு பல ஆண்டுகளாக கிடைத்து வந்த இட ஒதுக்கீடு நாடு முழுதும் கிடைக்க ஆரம்பித்தது மண்டல் திட்டம் வீ .ப.சிங்கினால் அமல் படுத்தப்பட்டபோது தான் . தமிழகத்தில் பல பிரிவினருக்கு இடையில் ஏற்றத்தாழ்வு (இந்தியாவின் மாற்ற பகுதிகளை ஒப்பு நோக்கினால்) குறைவாக இருக்கிறது என்றால் அதற்கு இட ஒத்க்கீடு ஒரு வலுவான காரணம். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று தமிழகத்து அனைத்து பிரிவுகளுமே மண்டலை ஆதரித்தன.. " தவறான காரணங்களுக்காக நல்ல முடிவு எடுப்பது" என்று ஆங்கிலத்திலே ஒரு தொடர் உண்டு. வி பி சிங்கும் அது போன்று இதை முன்னிறுத்தி இருக்கலாம்; ஆனால் மேல் வகுப்பினருக்கும் ஷெட்யூல்ட் வகுப்பினருக்கும் இடையேயும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் உண்டு: அவர்களுக்கு ஒரு இட ஒதுக்கீடு வேண்டியது தான். தவிரவும், ஷெட்யூல்ட் வகுப்பினரின் இட ஒதுக்கீடு முறையில் அரசியல் சட்ட அமைப்பு செய்த தவறை (பொருளாதார அடிப்படையில் உயர்ந்து இருப்பவர்களுக்கும் ஒதுக்கீடு என்பதால் அப்பிரவினரிலும் திரும்ப திரும்ப சில குடும்பங்களே அதன் பயனை அனுபவித்துக் கொண்டு இருப்பது) (க்ரீமி லேயர்) மண்டல் செயல்படுத்துவதில் செய்யவில்லை. ( அந்த க்ரீமி லேயர் முறையை நீக்கி விட்டு அதிலும் பொருளாதார நிலையைப் பார்க்கவேண்டாம் என்று செய்வதில் பல கட்சிகள் முயல்வது வேறு விஷயம்) .
ReplyDeleteநல்ல பதிவு.
வி.பி.சிங் அவர்கள் சாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமைகளை கொணர சட்ட வடிவாக்க பாடுபட்டவர். மண்டல் அறிகையை காங்கிரசு, பாசக போன்ற கட்சிகள் கிடப்பில் போட்டதை தூசு தட்டிஎடுத்ததற்காகவே பதவியை இழந்தவர். மைய அரசுப்பணியில் கல்வியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு உண்டு என்ற நம்பிக்கை துளிரை காட்டியவர்.
ReplyDelete-மணிவர்மா