[பாகம் 1 | பாகம் 2]
ஆசிஃப் அலி சர்தாரி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஆப்-எட் எழுதுகிறார். மும்பை தீவிரவாதத் தாக்குதல்கள் அவருக்குக் கண்ணில் ரத்தத்தை வரவழைக்கிறதாம். அவரது மனைவியும் தீவிரவாதத் தாக்குதலில்தான் உயிரை விட்டாராம். உண்மைதான்.
இன்று தன் நாட்டின் தலைமைப் பதவியில் இருப்பவர். தன் மனைவியைக் கொன்றவர்களைப் பழிவாங்க என்ன செய்கிறார்? அதிகம் ஒன்றும் செய்வதாகத் தெரியவில்லை.
பாகிஸ்தானில் இரண்டு தீவிரவாதக் குழுமங்கள் உள்ளன. சர்தாரியும் சரி, பிற பாகிஸ்தானி சிவிலியன்களும் சரி, இதைப் புரிந்துகொள்வதில்லை அல்லது வேண்டுமென்றே தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொள்கிறார்கள்.
ஒரு குழு, தாலிபன்கள், அவர்களது ஆதரவாளர்கள், பாகிஸ்தான் அரசாங்கத்தின் இறையாண்மையை ஏற்காத வடமேற்குப் பிராந்தியத்தினர். இவர்களுடன் முஷரஃப் அரசு ஆரம்பித்த யுத்தம், இன்றும் தொடர்கிறது. பேனசீர் புட்டோ உயிர்விட்டது இவர்கள் கையிலாகத்தான் இருக்கவேண்டும். பல்வேறு தற்கொலைத் தாக்குதல்களை பாகிஸ்தான் மண்ணில் நிகழ்த்துவது இவர்களாகத்தான் இருக்கவேண்டும்.
மற்றொரு பக்கம், ஜெய்ஷ்-ஏ-முஹம்மத், லஷ்கர்-ஈ-தோய்பா (அல்லது ஜமாஅத்-உத்-தவா) போன்றவை பாகிஸ்தான் உளவு ஏஜென்சி ஐ.எஸ்.ஐ ஆதரவில், காஷ்மீரில் பிரச்னையை வலுக்கச் செய்ய உருவாக்கிய தீவிரவாதிகள். இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், மும்பை தாக்குதல் ஆகியவற்றில் ஈடுபட்டவை. இவை பாகிஸ்தானில் எந்தப் பிரச்னையையும் செய்வதில்லை.
ஒரு பக்கம் இந்தியாவில் பிரச்னையைத் தூண்டிவிட்டுக்கொண்டே, மறுபக்கம், நாங்களும் தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் அப்பாவிகள் என்பதுபோல பாகிஸ்தான் பேசினால் அதை யாரும் ஏற்கமாட்டார்கள்.
பாகிஸ்தான் பத்திரிகைகள் இதை விளக்குவதில்லை. பொத்தாம்பொதுவாக தீவிரவாதிகள் என்று சொன்னால் போதாது. இந்தியா வேண்டுமென்றே பாகிஸ்தான்மீது குற்றம் சாட்டுகிறது என்பதுதான் பாகிஸ்தான் பத்திரிகைகள் அனைத்தும் சொல்வது. அதேபோலத்தான் பாகிஸ்தான் அறிவுஜீவிகளும். இதுவரையில் பாகிஸ்தானின் எந்த அரசியல்வாதியோ, சமூகத் தலைவரோ, பாகிஸ்தான் இந்தியாவில் பிரச்னைகளை ஏற்படுத்துவதை நிறுத்தவேண்டும்; பாகிஸ்தான் தீவிரவாத வழியிலிருந்து ஒதுங்கி, உள்நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்று பேசுவதில்லை.
பாகிஸ்தானின் சிவில் சமூகம், தன்னுடைய கடமையை முற்றிலுமாக விட்டுக்கொடுத்துவிட்டது. தங்களது அரசாங்கத்தின் கையாலாகத்தனம் கண்டு அவர்கள் கொதித்து எழுவதில்லை. தெருவில் போராட்டங்கள் ஏதும் இல்லை. நாடு அன்னியச் செலாவணி இல்லாமல் போண்டியாகும் நிலையில் உள்ளது. ஆனால் மக்கள் கொந்தளிக்கவில்லை. எதிர்க்கட்சி, ஆளும்கட்சி என எல்லாமே டம்மிகளாக உள்ளன.
அரசாங்கத்தில் ஊழலைக் கட்டுப்படுத்தவேண்டும், அழிக்கவேண்டும் என்பதை எடுத்துக்கொண்டு போராட பொதுநல அமைப்புகள் அதிகம் காணப்படுவதில்லை. ராணுவம் சிவிலியன் அரசுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்பதை வெளிப்படையாகச் சொல்வதற்கு அங்கு யாருமே இல்லை.
தமிழ்நாட்டில் சில வருடங்களுக்குமுன் ஜெயலலிதா ஆட்சி இருக்கும்போது, “சத்தமாப் பேசாதே, ஆட்டோ வரும்” என்று மக்கள் பயம் காட்டினார்களே, அதுபோல, “சத்தமாப் பேசாதே, ராணுவ டிரக் வரும்” என்பதே மக்களின் பயமாக உள்ளது.
அத்துடன், “அரசியல்வாதிகள் என்றால் ஊழல். ராணுவம்தான் நாட்டுக்கு சரி” என்ற எண்ணம் அந்த நாட்டில் பரவியுள்ளது. என்னைக் கேட்டால், ஊழல் மிக்க ராணுவ ஜெனரலைவிட, ஊழல்மிக்க அரசியல்வாதி என்றுமே சிறந்தவன். பின்னவனை, தேர்தலில் தூக்கியாவது எறியலாம். முன்னவன் கேள்வியே கேட்காமல், உன்னைச் சுட்டுக் கொன்றுவிடுவான்.
ஆனால், பாகிஸ்தான் சிவில் சமூகத்தினரிடம் இன்று காணக்கிடைப்பது ஒருவிதமான இயலாமை மட்டுமே. எங்கள் நாட்டுக்கு யாரும் வந்து கிரிக்கெட் விளையாட மாட்டேன் என்கிறார்கள். எங்கள் நாட்டில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு யாரும் எதிர்ப்பு காட்டமாட்டேன் என்கிறார்கள். இப்படிப் புலம்புவது மட்டும்தான் அங்கே காணக்கிடைக்கிறது.
உங்கள் நாட்டின் அடிப்படைப் பிரச்னைகளை நீங்கள்தான் தீர்க்கவேண்டும். இவ்வளவு மோசமாக பாகிஸ்தான் ஆகியுள்ளதற்குக் காரணம் பாகிஸ்தானிகள்தானே? அந்நியர்கள் கிடையாதே?
பாகிஸ்தான் சிவில் சமூகம் உடனடியாக மாறவேண்டும். போராட்டத்தில் இறங்கவேண்டும். அரசியலைச் சுத்தம் செய்ய. ராணுவத்தின் கொட்டத்தை அடக்க. உள்நாட்டு அரசியல்வாதிகளும் ராணுவத்தினரும் சூழ்ச்சிசெய்து, தீவிரவாதிகளைப் பிற நாட்டின்மீது ஏவாமல் இருக்க.
மும்பை உயிரிழப்பு அதையாவது அந்த நாட்டில் சாதித்தால் நல்லது.
அமரன் - ஒரு மகத்தான படைப்பு
4 hours ago
Perceptive analysis Badri. Pakistan civil society is in a moribund state. As you rightly noted, we are yet to see a voice of reason from there. Even human rights campaigner, Asma Jehangir, faults India for accusing Pakistan of their complicity. Pakistan is mired in a hopeless state. We in India ought to strengthen our intelligence and internal security.
ReplyDeleteநல்ல கருத்துக்கள்!
ReplyDelete//இன்று தன் நாட்டின் தலைமைப் பதவியில் இருப்பவர். தன் மனைவியைக் கொன்றவர்களைப் பழிவாங்க என்ன செய்கிறார்?
//
அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பணியாற்றும் ஜனாதிபதி 'பழிவாங்கும்' வேலையில் இறங்கலாமா ? அந்த சொற்பிரயோகம் சரியாகப் படவில்லை!
If Pak's Civil society does not wake up to reality soon enough, Pak will very soon join the list of unmanageable/failed states...
ReplyDeletePak. civil society should realize their potential and its energy needs to be channelized properly by able leaders.
யாரவது முல்லா, இதை உருதுவில் மொழி பெயர்த்து பகிஸ்த்தான் மக்களுக்கு கொடுத்தால் சரி..
ReplyDeleteபாகிஸ்தானில் சிவில் சமூகம் பலமற்று உள்ளது.இதற்கு பல காரணங்கள் உள்ளன.
ReplyDeleteஅது வலுப்பெற வேண்டுமானால் ஜனநாயகம்
உண்மையாக நிலவ வேண்டும்.ராணுவத்தில் தயவில் ஜனநாயகம் உயிர் வாழும் நாடு அது. சமூகத்தில் ராணுவம் ஒரு இணை அரசாக இருக்கிறது.முதற் கோணல் முற்றும்
கோணல் என்பது போல் பாகிஸ்தானின்
துவக்க காலத்திருலிருந்தே இருக்கும் சிக்கல்
இது.இதைச் சொன்னால் இங்குள்ள முஸ்லீம்
அமைப்புகள், அவற்றின் ஆதரவாளர்கள்
ஏற்கமாட்டார்கள். அவர்களுக்கு தலிபான்
பாகிஸ்தானை ஆண்டாலும் சரிதான்.
படித்த வர்க்கம் அங்கு இருந்தாலும் ஒரளவிற்கே செயல்பட முடியும்.
ஜனாதிபதி பழிவாங்குவதில் தப்பில்லை பாலா. அவர் யாரைப் பழிவாங்குகிறார்? சட்டத்துக்குப் புறம்பாக நடப்பவர்களைத்தானே? இங்கே பழிவாங்குதல் என்பது (அ) அந்தத் தீவிரவாத அமைப்புகளை அடித்து நொறுக்குவது (ஆ) அதில் ஈடுபட்ட தீவிரவாதிகளைக் கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்துவது (இ) இவைமூலம் நாட்டு மக்களுக்கு சட்டம் ஒழுங்கின்மீது நம்பிக்கை வரவைப்பது.
ReplyDelete//ஒரு குழு, தாலிபன்கள், அவர்களது ஆதரவாளர்கள், பாகிஸ்தான் அரசாங்கத்தின் இறையாண்மையை ஏற்காத வடமேற்குப் பிராந்தியத்தினர். இவர்களுடன் முஷரஃப் அரசு ஆரம்பித்த யுத்தம், இன்றும் தொடர்கிறது. பேனசீர் புட்டோ உயிர்விட்டது இவர்கள் கையிலாகத்தான் இருக்கவேண்டும். பல்வேறு தற்கொலைத் தாக்குதல்களை பாகிஸ்தான் மண்ணில் நிகழ்த்துவது இவர்களாகத்தான் இருக்கவேண்டும்.
ReplyDeleteமற்றொரு பக்கம், ஜெய்ஷ்-ஏ-முஹம்மத், லஷ்கர்-ஈ-தோய்பா (அல்லது ஜமாஅத்-உத்-தவா) போன்றவை பாகிஸ்தான் உளவு ஏஜென்சி ஐ.எஸ்.ஐ ஆதரவில், காஷ்மீரில் பிரச்னையை வலுக்கச் செய்ய உருவாக்கிய தீவிரவாதிகள். இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், மும்பை தாக்குதல் ஆகியவற்றில் ஈடுபட்டவை. இவை பாகிஸ்தானில் எந்தப் பிரச்னையையும் செய்வதில்லை.
ஒரு பக்கம் இந்தியாவில் பிரச்னையைத் தூண்டிவிட்டுக்கொண்டே, மறுபக்கம், நாங்களும் தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் அப்பாவிகள் என்பதுபோல பாகிஸ்தான் பேசினால் அதை யாரும் ஏற்கமாட்டார்கள்.
//
A well-structured enunciation of the situation in Pak.
"நல்ல" தீவிரவாதிகளைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் தான் தன்னால் "கெட்ட"
தீவிரவாதிகளை எதிர் கொள்ள முடியும் என்பதே பாகிஸ்தானின் கணக்கு. இதை
அமெரிக்காவும் (tacitly) அங்கீகரிக்கிறது. இதனால் பாகிஸ்தான் அரசாங்கத்தையோ
அமெரிக்காவையோ இந்தியா நம்பியிருப்பதில் பயனில்லை என்பதே உண்மை.
பத்ரி,
ReplyDeleteமிகச் சரியாக பாக்கிஸ்தானுடைய பிரச்சினையை அலசியுள்ளீர்கள். உண்மையில் இது பாக்கிஸ்தானுடைய பிரச்சினை மட்டும் அல்ல. உலகில் உள்ள அனைத்து முஸ்லீம்களின் பிரச்சினையும் இதுதான். ஒரு இஸ்லாமிய அரசு தன் அண்டை நாட்டை இஸ்லாமியத்திற்குள் இழுக்க தீவிரவாதத்தை கையாளும். ஒரு தீவிரவாத தளத்தை உருவாக்கும். அதேபோல, அந்த அரசினால் ஆளப்படும் இஸ்லாமிய மக்கள் தூய இஸ்லாமை அந்த இஸ்லாமிய அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்பதற்காக தீவிரவாதத்தை கையிலெடுக்கும். அது ஒரு தீவிரவாத தளத்தை உருவாக்கிவைத்திருக்கும்.
ஆனால், அந்த இரண்டு தீவிரவாத குழுக்களும் மற்றொன்றை குறை சொல்லாது. ஏனென்றால், தூய இஸ்லாம் என்பது தீவிரவாதம் என்பதால், தீவிரவாதத்தை கையாளாத மற்ற இஸ்லாமியர்கள் கண்டிக்கப்படுவார்கள். இங்கனம், இஸ்லாத்தின் ஒரு பகுதி வெளிநாட்டில் உள்ள மக்களை கொன்று குவிக்கும்போது, அதன் மற்றொரு பகுதி உள்நாட்டு மக்களை கொன்று குவிக்கும். இதுதான் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய வரலாறு.
இந்தியாவிலேயே பாருங்கள், இஸ்லாமிற்குள் நுழையாத ஹிந்துக்களை ஒழிக்க பல தீவிரவாத குழுக்கள் இயங்குகின்றன. கோயம்புத்தூரிலும், கொசுகடிச்சான்பட்டியிலும் குண்டுகள் வைத்து குழந்தைகள் பெண்கள் முதியவர்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லுகின்றன. ஆனால், அவர்களுக்குள் இருக்கும் வேறு சில தீவிரவாதக் குழுக்கள் தர்க்கா வழிபாடு தவறு, சந்தனக்காப்பு திருவிழாக்கள் தடுக்கப்படவேண்டும், ஷியா-சுன்னி, சுன்னி-ஷியா, முகம்மதுவின் முடி, பல் போன்ற பாகங்களை வழிபடுவது தவறு என்று சொல்லி மாலேகாவ்ன், ஹைதராபாத் போன்ற இடங்களில் உள்ள தர்க்காக்களின்மேல் குண்டு வெடிப்பை நிகழ்த்துகின்றன.
உங்கள் கட்டுரையில் உள்ள பாக்கிஸ்தான் என்னும் வார்த்தையை இந்திய இஸ்லாமியர்கள் என்று மட்டும் மாற்றினால் போதும். அப்படியே மிகப் பொருத்தமாக இருக்கிறது. ஆனால், பாக்கிஸ்தானை கொஞ்சம் கஷ்டப்பட்டு குற்றம் சொல்ல முடிகிற இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற் சிந்தனையாளர்களுக்கு இந்திய இஸ்லாமியர்களை திட்ட முடியாது என்பதால், நீங்கள் தொடர்ந்து பாக்கிஸ்தானுடைய குறைகளைப்பற்றி விமர்சனங்களை எழுதும்படி வேண்டுகிறேன். :)) !!
உங்களுடைய கட்டுரை இந்திய முஸ்லீம்களுக்கும் பொருத்தமானதாக இருக்கிறது என்பதை காட்டும் வகையில் பாக்கிஸ்தான் என்பது போன்ற வார்த்தைகளுக்கு பதிலாக பொருத்தமான வார்த்தைகளைப் போட்டுள்ளேன். பாருங்கள், ஆஹா, முப்பத்திரண்டிற்கும் மேல் பொருத்தங்கள் !!!
--------------------------------------------------------------------------------------------
சோனியா காந்தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஆப்-எட் எழுதுகிறார். மும்பை தீவிரவாதத் தாக்குதல்கள் அவருக்குக் கண்ணில் ரத்தத்தை வரவழைக்கிறதாம். அவரது கணவரும் தீவிரவாதத் தாக்குதலில்தான் உயிரை விட்டாராம். உண்மைதான்.
இன்று தன் நாட்டின் தலைமைப் பதவியில் இருப்பவர். தன் கணவரைக் கொன்றவர்களைப் பழிவாங்க என்ன செய்கிறார்? அதிகம் ஒன்றும் செய்வதாகத் தெரியவில்லை.
இந்திய இஸ்லாமியத்தில் இரண்டு தீவிரவாதக் குழுமங்கள் உள்ளன. இந்திய அரசாங்கமும் சரி, பிற இளிச்சவாய் இந்தியர்களும் சரி, இதைப் புரிந்துகொள்வதில்லை அல்லது வேண்டுமென்றே தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொள்கிறார்கள்.
ஒரு குழு, தாலிபன்கள், அவர்களது ஆதரவாளர்கள், இந்திய அரசாங்கத்தின் இறையாண்மையை ஏற்காத காஷ்மீரப் பிராந்தியத்தினர். இவர்களுடன் இந்திய அரசு ஆரம்பித்த யுத்தம், இன்றும் தொடர்கிறது. இந்திய ஜனநாயகம் உயிர்விட்டது இவர்கள் கையிலாகத்தான் இருக்கவேண்டும். பல்வேறு தற்கொலைத் தாக்குதல்களை இந்திய மண்ணில் நிகழ்த்துவது இவர்களாகத்தான் இருக்கவேண்டும்.
மற்றொரு பக்கம், ஜெய்ஷ்-ஏ-முஹம்மத், லஷ்கர்-ஈ-தோய்பா (அல்லது ஜமாஅத்-உத்-தவா) போன்றவை இந்திய இஸ்லாமிய ஏஜென்சிகளின் ஆதரவில், காஷ்மீரில் பிரச்னையை வலுக்கச் செய்ய உருவாக்கிய தீவிரவாதிகள். இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், மும்பை தாக்குதல் ஆகியவற்றில் ஈடுபட்டவை. இவை பாக்கிஸ்தானில் எந்தப் பிரச்னையையும் செய்வதில்லை.
ஒரு பக்கம் இந்தியாவில் பிரச்னையைத் தூண்டிவிட்டுக்கொண்டே, மறுபக்கம், நாங்களும் தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் அப்பாவிகள் என்பதுபோல இந்திய இஸ்லாமியன் பேசினால் அதை யாரும் ஏற்கமாட்டார்கள்.
இந்திய இஸ்லாமிய பத்திரிகைகள் இதை விளக்குவதில்லை. பொத்தாம்பொதுவாக தீவிரவாதிகள் என்று சொன்னால் போதாது. ஹிந்துத்துவர்கள் வேண்டுமென்றே இந்திய இஸ்லாமியர்மீது குற்றம் சாட்டுகின்றனர் என்பதுதான் இந்திய பத்திரிகைகள் அனைத்தும் சொல்வது. அதேபோலத்தான் இந்திய அறிவுஜீவிகளும். இதுவரையில் இந்திய இஸ்லாமிய அரசியல்வாதியோ, சமூகத் தலைவரோ, இந்திய இஸ்லாமியன் இந்தியாவில் பிரச்னைகளை ஏற்படுத்துவதை நிறுத்தவேண்டும்; இந்திய இஸ்லாமியன் தீவிரவாத வழியிலிருந்து ஒதுங்கி, உள்நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்று பேசுவதில்லை.
இளிச்சவாய் இந்திய சிவில் சமூகம், தன்னுடைய கடமையை முற்றிலுமாக விட்டுக்கொடுத்துவிட்டது. தங்களது அரசாங்கத்தின் கையாலாகத்தனம் கண்டு அவர்கள் கொதித்து எழுவதில்லை. தெருவில் போராட்டங்கள் ஏதும் இல்லை. நாடு அன்னியச் செலாவணி இல்லாமல் போண்டியாகும் நிலையில் உள்ளது. ஆனால் மக்கள் கொந்தளிக்கவில்லை. எதிர்க்கட்சி, ஆளும்கட்சி என எல்லாமே டம்மிகளாக உள்ளன.
அரசாங்கத்தில் ஊழலைக் கட்டுப்படுத்தவேண்டும், அழிக்கவேண்டும் என்பதை எடுத்துக்கொண்டு போராட பொதுநல அமைப்புகள் அதிகம் காணப்படுவதில்லை. அரசியல்வாதிகள், அம்பேத்கார் வடிவமைத்த இந்திய இறையாண்மைக்கு அடங்கி நடக்கவேண்டும் என்பதை வெளிப்படையாகச் சொல்வதற்கு இங்கு யாருமே இல்லை.
தமிழ்நாட்டில் சில வருடங்களுக்குமுன் ஜெயலலிதா ஆட்சி இருக்கும்போது, "சத்தமாப் பேசாதே, ஆட்டோ வரும்" என்று மக்கள் பயம் காட்டினார்களே, அதுபோல, "சத்தமாப் பேசாதே, இஸ்லாமிய கொலைகாரர்கள் வருவர்" என்பதே மக்களின் பயமாக உள்ளது.
அத்துடன், "அரசியல்வாதிகள் என்றால் ஊழல். இஸ்லாம் போன்ற சர்வதிகாரமான அமைப்புத்தான் நாட்டுக்கு சரி" என்ற எண்ணம் இந்த நாட்டில் பரவியுள்ளது. என்னைக் கேட்டால், சர்வதிகாரம் செலுத்தும் முல்லாவைவிட, ஊழல்மிக்க அரசியல்வாதி என்றுமே சிறந்தவன். பின்னவனை, தேர்தலில் தூக்கியாவது எறியலாம். முன்னவன் கேள்வியே கேட்காமல், உன்னைச் சுட்டுக் கொன்றுவிடுவான்.
ஆனால், இந்திய சிவில் சமூகத்தினரிடம் இன்று காணக்கிடைப்பது ஒருவிதமான இயலாமை மட்டுமே. எங்கள் நாட்டுக்கு யாரும் வந்து கிரிக்கெட் விளையாட மாட்டேன் என்கிறார்கள். எங்கள் நாட்டில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு யாரும் எதிர்ப்பு காட்டமாட்டேன் என்கிறார்கள். இப்படிப் புலம்புவது மட்டும்தான் இங்கே காணக்கிடைக்கிறது.
நம் நாட்டின் அடிப்படைப் பிரச்னைகளை நாம்தான் தீர்க்கவேண்டும். இவ்வளவு மோசமாக இந்தியா ஆகியுள்ளதற்குக் காரணம் இந்திய இஸ்லாமியர்கள்தானே? அந்நியர்கள் கிடையாதே?
இந்திய சிவில் சமூகம் உடனடியாக மாறவேண்டும். போராட்டத்தில் இறங்கவேண்டும். அரசியலைச் சுத்தம் செய்ய. சிறுபான்மையினர் மதவெறி கொட்டத்தை அடக்க. உள்நாட்டு அரசியல்வாதிகளும் சிறுபான்மை மதவெறியரும் சூழ்ச்சிசெய்து, தீவிரவாதிகளைப் பிற மாநிலங்களின்மீது ஏவாமல் இருக்க.
மும்பை உயிரிழப்பு அதையாவது இந்த நாட்டில் சாதித்தால் நல்லது.
இதையே பாகிஸ்தானில்(உருது மொழியில்) வெளியிட்டால் வேற மாதிரியாக இருக்கும், அதாவது பாகிஸ்தான் இடத்துல இந்தியாவை வெச்சிருப்பாங்க. அவ்ளோதான் வித்தியாசம்
ReplyDelete