சென்ற செவ்வாய்க்கிழமை, பத்திரிகையாளர் ஞாநி பங்குபெற்ற கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தின் ஒலிப்பதிவை இறக்கிக்கொள்ள சுட்டி கீழே உள்ளது.
பல பார்வையாளர் கேள்விகள் தெளிவாக இருக்காது. அவர்கள் மைக்கில் பேசவில்லை. எனவே ஞாநியின் பதிலைக் கொண்டு, கேள்வி என்ன என்பதை நீங்கள் கண்டுபிடிக்கக்கூடும்.
ஒலிப்பதிவு
.
ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?
11 hours ago
கேள்வி கேட்கும் பார்வையாளருக்கு ஒலிவாங்கி எனப்படும் மைக் வசதி செய்துதரப்பட முடியாதபட்சத்தில், பதில் சொல்லும் பேச்சாளர் பதில் சொல்லத் தொடங்கும்முன் - அவரோ அல்லது நிகழ்ச்சியின் மட்டுறுத்துனரோ - கேட்கப்பட்ட கேள்வி என்ன என்பதை (தம் வசதிக்கேற்ப திரித்துக்கூறாமல்) ஒலிவாங்கியில் அறிவித்துப் பின்னர் பதில் சொல்லத் தொடங்கினால், அது பார்வையாளர்களுக்கு வசதியாக இருக்கும். இம்முறையை இனிவரும் கூட்டங்களில் நடைமுறைப்படுத்துவீர்கள் என நம்புகிறேன்.
ReplyDelete- ஸ்வாமி
இனி வரும் கூட்டங்களின் வீடியோ பதிவை வெளியிடுங்கள்.
ReplyDelete/’இன்று இந்தியாவில் நிலவும் இஸ்லாம் இந்துப் பிரச்சினைக்கு பாப்ரி மசூதி இடிப்பே காரணம். அதற்கு முன்பு எங்கும் இந்தியாவில், ஜம்மு காஷ்மீரைத் தவிர, மதக் கலவரங்கள் நிகழ்ந்ததே இல்லை.’...அப்படி ஒருவேளை பாபர் மசூதி இடிப்புக்கு முன்னர் கலவரங்கள் நடந்திருக்குமானால், அது தேர்தல் ஆதாயத்திற்காக ஆர்.எஸ்.எஸ். தூண்டிவிட்ட கலவரமாக இருந்திருக்கும் என்றார்//
ReplyDelete1980 இல் 5 இந்துக்கள் உயிரோடு கலவரத்தில் எரிக்கப்பட்டனர். இந்த கூட்டத்துக்கு தலைமை ஏற்றது அமீனா பீபீ என்கிற பெண் எரிக்கப்பட்டதில் பத்து வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளும் அடக்கம். (உள்-இலாக்கா அறிக்கையிலிருந்து) 1989 இல் பிப்ரவரி 24, 1989: பம்பாய் கலவரத்தில் பெரிய அளவில் பொது சொத்து அழிக்கப்பட்டது. காரணம் சல்மான் ரஷ்டி நூல் சர்ச்சைக்காக முஸ்லீம்கள் செய்த ஆர்ப்பாட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. 12 பேர் உயிரிழந்தனர். ஹைதராபாத்தில் முகமது சர்தார் என்கிற மாஃபியா போலிஸுடனான என்கவுண்டரில் கொல்லப்பட்டான். இதனுடைய விளைவு ஹைதராபாத்தில் ஹிந்து சமுதாயத்தினர் வாழும் இடங்களில் மிக அதிக அளவில் ஹிந்துக்கள் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டனர். (ஸ்டேட்ஸ்மென் 11/12/1990) இது கர்நாடகாவில் நடந்த மற்றொரு கலவரம் டைம்ஸ் ஆஃப் இந்தியா ரிப்போர்ட்: "ஒரு பெண் தலூக்தர் கானைச் சேர்ந்த சமூக விரோதிகளால் கிண்டல் செய்யப்பட்டதைதொடர்ந்து தலூக்தர் கானை ஒரு கும்பல் மோதியதை (mobbed) தொடர்ந்து ஆரம்பித்தது. செம்ப்டம்பர் 30 அன்று ஊர்வலத்தை தாக்க அவன் தனது ஆதரவாளர்களுடன் திட்டமிட்டான்"(டைம்ஸ் ஆஃப் இந்தியா, 7/10/1990) இது வட இந்தியாவில் 3-11-1990 சமாச்சார் போஸ்ட் என்கிற இதழில் வந்த ரிப்போர்ட் "துர்க்கா வாஹினி அமைப்பைச் சேர்ந்த சுமார் நூறு பெண்கள் கொண்ட ஊர்வலம் சென்றுக்கொண்டிருந்த போது வகுப்புவாத கோஷங்களை அவர்கள் எழுப்பினர். எனவே காந்தா கார் (Ghanta Ghar) பகுதியில் அவர்கள் மீது கல் எறிந்ததுடன் வெடிகுண்டுகளையும் எறிந்தனர்." ஆக 'வகுப்புவாத' கோஷங்களை பெண்கள் எழுப்பினால் உடனே அவர்கள் மீது எறிய வெடிகுண்டுகள் பிரசன்னமாகிவிடுகிறது எப்போது 1990 இல் - சர்ச்சைக்குரிய கட்டடம் உடைக்கப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே! அலிகார் அருகே புலண்டாஷாரில் 1990 இல் ஒரு வெடிகுண்டு தொழிற்சாலை தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது. அதில் வேலை செய்தவர்கள் தெரியாத்தனமாக வெடிமருந்துகளை கையாளும் போது வெடித்து இறந்து போனதால். இந்த தொழிற்சாலை சொந்தக்காரர் ஒரு முஸ்லீம். இதனை சொல்வது பக்கா இடதுசாரி இதழான பேட்ரியாட் (12/12/1990) 1950 முதல் 1990 வரை இந்த நாட்டில் 2500 இந்து முஸ்லீம் கலவரங்கள் நடந்துள்ளன. இவற்றில் இந்துக்களின் கை ஓங்கிய கலவரங்கள் மட்டுமே (பிவண்டி அல்லது பகல்பூர்) முற்போக்குவியாதிகளின் கவனத்தைப் பெற்றுள்ளன. கோத்ராவில் மட்டும் 1947, 52, 59, 61, 65, 67, 72, 74, 80, 83, 89 மற்றும் 90 களில் வகுப்புகலவரங்கள் நிகழ்ந்துள்ளன.
அரைவேக்காடு அரவிந்தனுக்கு,
ReplyDeleteஉம் மேற்கோள் முற்றும் தவறானது (வேண்டுமானால் ஒலிப்பதிவின் நேரத்தைக் குறிப்பிடவும்). ஞானி கூறியது 1993 முன் மதத்தின் பெயரால் காஷ்மீர் தவிர இந்தியாவில் வேறெங்கும் தீவிரவாதத் தாக்குதல் நிகழ்ந்ததில்லை. நீர் குறிபிட்டுள்ள கலவரங்கள் குறித்தும் அதன் காரங்கள் குறித்தும் ஞானி பேசியுள்ளார். ஒழுங்காய் இன்னொரு முறை கேளும்
பெயரில்லா முழுவேக்காடு மரமண்டையில் ஏறாத கேள்வி என்னவென்றால்...
ReplyDelete1992 க்கு முன்னர் பல மதக்கலவரங்கள் நிகழ்ந்துள்ளன, அதெல்லாம் அரசியல் ஆதாயத்திற்காக ஆர்.எஸ். எஸ் டவுசர் கிழப்போல்டுகள் செய்யக்கூடிய சொஃபெஸ்டிகேஷன் உடையவர்களா ? என்பது தான்.