என்னிடம் நான்கு நாடகங்களுக்கு, ஒவ்வொன்றுக்கும் இரண்டு டிக்கெட்டுகள் வீதம், உள்ளன. நாடகங்கள் அனைத்தும் சென்னை, தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள சர் பிட்டி தியாகராயா அரங்கில் நடைபெறுகின்றன.
26 டிசம்பர் 2008, மாலை 7.00 மணி - சாவியின் “வாஷிங்டனில் திருமணம்”, கோவை பத்து குழுவினர்
27 டிசம்பர் 2008, மாலை 7.00 மணி - சுஜாதாவின் “கடவுள் வந்திருந்தார்”, மறைந்த பூர்ணம் விஸ்வநாதனின் குழுவினர்
28 டிசம்பர் 2008, மாலை 4.15 மணி - கிரேஸி மோகனின் “சாக்லேட் கிருஷ்ணா”
28 டிசம்பர் 2008, மாலை 7.00 மணி - டி.வி.வரதராஜனின் “ரியல் எஸ்டேட்”
விரும்புபவர்கள் என்னைத் தொடர்புகொண்டு, டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். டிக்கெட்டுகளை இன்றே எனது அலுவலகத்தில் (கிழக்கு பதிப்பகம், எல்டாம்ஸ் ரோட், ஆழ்வார்பேட்டை) வந்து பெற்றுக்கொள்ளவேண்டும். முதலில் மின்னஞ்சல் அனுப்புங்கள். உங்களுக்கென எடுத்துவைத்துவிடுகிறேன்.
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
11 hours ago
மொட்டை மாடி புத்தக அறிமுக நிகழ்ச்சிக்கு வருபவர்களுள், விருப்பமுள்ளவர்களின் பெயர்களைக் குலுக்கி எடுத்துப் பரிசாக அளிப்பதே சாலச் சிறந்தது.
ReplyDelete- ஸ்வாமி
ஸ்வாமி: இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை:-) இன்று மாலை ஒரு நாடகம் நடக்கிறது. மொட்டைமாடி நிகழ்ச்சிக்கு வருபவரால் இன்றைய நாடகத்தைப் பார்க்கமுடியாதே? எனவே விருப்பம் சார்ந்ததாக இருக்கட்டும். நாளை அல்லது அதற்கு அடுத்த நாள் டிக்கெட்டுகளை யாரும் கேட்கவில்லை என்றால், இன்று மாலை மொட்டைமாடிக் கூட்டத்தில் அதை “ஏலம்” விடப் பார்க்கிறேன்.
ReplyDeleteசாக்லேட் கிருஷ்ணா - டிக்கெட்கள் gone. மற்றவை உள்ளன.
ReplyDeleteரியல் எஸ்டேட் - டிக்கெட்கள் காலி.
ReplyDelete26, 27 டிக்கெட்டுகளை யாருக்கும் தரவேண்டாம். கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் வந்து கலந்துகொள்ளட்டும். :-)
ReplyDelete