Monday, December 01, 2008

மும்பை தாக்குதல்: ஞாநியின் கட்டுரை

மும்பை தாக்குதல் தொடர்பாக ஞாநி எழுதிய ஆங்கிலக் கட்டுரை.

முழுவதுமாக உடன்படுகிறேன். கடைசிப் பத்தி மட்டும் இங்கே, தமிழாக்கத்தில்:
30 மணி நேரமாக தொலைக்காட்சி கவரேஜைப் பார்த்தபிறகு, கடும் கோபத்திலும் விரக்தியிலும் அனைத்து செய்தி சானல்களுக்கும் ஒரு தகவலை அனுப்பினேன். அவர்கள்தானே, தொடர்ந்து, எதைப்பற்றி வேண்டுமானாலும் எங்களுக்குத் தகவல் அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்? நான் அனுப்பிய தகவல் இதுதான்: “இதை நான் மிகுந்த வேதனையுடன் அனுப்புகிறேன். மத்திய ரயில்வே நிலையத்தின் படுகொலையை உங்களது சானலையும் சேர்த்து அனைத்து சானல்களும் காண்பிக்கவே இல்லை. அங்குதான் உண்மையான மும்பை மக்களும் இந்தியாவின் சாதாரணர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதற்காக நீங்கள் அனைவரும் மன்னிப்பு கேட்கவேண்டும். ஐந்து நட்சத்திர மேட்டுக்குடியினர் மீதான உங்களது அதீதக் காதல், அருவருப்பைத் தருகிறது. அச்சு ஊடகங்களிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.”

எந்த சானலுமே இதைக் கண்டுகொள்ளவில்லை. ஸ்ரீனிவாசன் ஜெயின் மட்டும் பதில் அனுப்பினார். “நீங்கள் சொல்வது சரிதான். இன்று சம நிலையைக் கொண்டுவர முயற்சிக்கிறோம்.”

இந்தக் கட்டுரையை எழுதும் விநாடிவரை, தாக்குதல் ஆரம்பித்து 66 மணி நேரத்துக்குப் பிறகும், ஒன்றும் நடக்கவில்லை.
[பின்குறிப்பு: இன்று மாலை கிளம்பி நாளை - 2 டிசம்பர் 2008 - அன்று மும்பை டிரைடெண்ட் ஹோட்டலில் நடக்க இருந்த ஒரு நாள் கான்ஃபரன்ஸ் ஒன்றில் கலந்துகொள்ள நானும் சத்யாவும் செல்வதாக இருந்தது. அந்தக் கூட்டம் ரத்தாகியுள்ளது என்பதை சொல்லத் தேவையில்லை. அதன்பின் 3 டிசம்பர் 2008 காலை சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கிளம்பி பூனா செல்லவேண்டும்.

இரண்டு இடங்களையுமே தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். கூடவே தாஜ், இன்னும் சில இடங்கள். ஆனால் ரயில்வே ஸ்டேஷனில் என்ன ஆனது, யார் இறந்தார்கள், எத்தனை நேரம் தாக்குதல் நடந்தது. எதுவுமே தொலைக்காட்சிகளில் காணோம்:-( இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இல்லையில்லை, அருவருக்கத்தக்கது.]

5 comments:

  1. ஞாநி என்ற வக்கிரம் பிடித்த பிராமணரின் உளறல்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. முன்பு விகடனிலும் தற்போது குமுதத்திலும் சற்றும் நடுநிலையில்லாமல், குறிப்பாகப் பயங்கரவாதம் பற்றி எழுதிக்குவிக்கும் இவருக்கு மற்ற ஊடகங்களைக் குறை சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது?

    ஐந்து நட்சத்திர ஓட்டலில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளரும், சமையல் உதவியாளரும், சலவைக்காரரும் ஆம்-ஆத்மி அல்லாமல் வேறு எவராம்? தீவிரவாதத்தைக் கண்டிக்கத் துப்பில்லாமல் வர்க்க அரசியல் செய்கிறார் இந்த தகரஞானி.

    ”பயங்கரவாதிகளே, நீங்கள் போய் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திலோ அல்லது பா.ஜ.க. அலுவலகத்திலோ இதே போல் தாக்குதல் நடத்துங்கள். அதனால் ஆம் ஆத்மிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நாங்கள் பிரச்சாரம் நடத்தி உங்களை எவரும் கண்டுகொள்ளாமல் செய்துவிடுகிறோம்” என்ற செய்தியே ஞாநியின் இக்கட்டுரை என்பது அவரது அரசியலை ஓரளவுக்கு அறிந்தவர்கள்கூட புரிந்துகொள்ளலாம்.

    இத்தோடு ஏன் நிறுத்திக்கொண்டார் என்று புரியவில்லை. ”இந்திய ராணுவத்தாலும், சிறப்புப் படையினராலும் அப்பாவி மக்கள் சாவதைத் தடுக்கமுடியவில்லை; அதனால் அவற்றை உடனே கலைத்துவிட்டு அதற்காகும் செலவை கல்வித் துறைக்கு உடனே திருப்பிவிடவேண்டும்; கல்வி பெற்ற மக்கள் தீவிரவாதத்தை நிறுத்திவிடுவார்கள்” என்றும் உளறிக் கொட்டியிருக்கலாம். இடதுசாரிகளிடம் சின்ன கைதட்டலாவது கிடைத்திருக்கும்.

    ReplyDelete
  2. Till today there is no news about that RS.

    ReplyDelete
  3. இந்த சோபா டே என்ற பெண்மணி, அரசியல்வாதிகள் மீது பாய்ந்த பாய்ச்சல் படுகேவலமாக இருந்தது..இந்தம்மா இதுவரை தீவிரவாதம் பற்றி உருப்படியாக எதையும் எழுதியதாக நினைவில்லை..தன் சுற்றமும்,நட்பும் சூழும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைத் தாக்கியவுடன் மட்டும் இந்தம்மாவுக்குப் பொங்கிவிட்டது. இதுங்களை எல்லாம் சுனாமி வந்து தூக்கிப்போகக் கடவது.

    ReplyDelete
  4. // ஞாநி என்ற வக்கிரம் பிடித்த பிராமணரின் உளறல்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது //
    என்ன சொன்னார் என்பதை விட யார் சொன்னார் அவர் பூணூல் போட்டிருக்கிறாரா இல்லையா என்பதே அவசியமாய் தெரிந்துகொள்ளவேண்டியது என்ற காலம் போய்விட்டது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இது தமிழ்நாடு. இங்குள்ளவர்கள் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு (இல்லை அடுத்த கபாடபுரம் moolkiyadhu ponradhoru ஊழி வரை) பூணூல் போபியாவிலிருந்து விடுபடமாட்டார்கள் என்பது தெளிந்தது.
    இவரும் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுபோகட்டும். முதல் variyileye என்னை padikkaamal seythu vittaar என்பதை unarvaaraa?

    ReplyDelete
  5. a request to the administrator, pls dont encourage the persons who dont have the guts to expose themselves to express their thoughts.
    my dear anonymous friend, u have the full rights to express yourself if u dont like a person or his thoughts, but quoting the jadhi name is an uncivilized act either for a dalith or for a bhramin.yes ofcourse bramines might have done some thing which affected our cultural equalty ,but you should understand that repeating the same mistake now from the other side is not the end,and u r simply making your version of vernam.
    on gani's thought, its certainly true , i think the terrorists wanted to provoke india and bombed several places in india last year,thats all just newses than an outcry,so they decided, the icons not the common people,are the main bothering of the government and the medias,they planed for taj and obrai.after all this not our first thing to concentrate but the terrorism. by preventing the inequality we can prevent the growth of terrorism.because its not the religion but the economic inequality that is the root of every thing

    ReplyDelete