Friday, December 12, 2008

NHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (2)

[முதல் பதிவு]

இந்தப் புத்தகங்கள் உங்களுக்கு வேண்டுமா?
  1. ஒபாமா, பராக், ஆர்.முத்துக்குமார்
  2. ஸ்ரீமத் பாகவதம், உமா சம்பத்
  3. ஜனகணமன, மாலன்
  4. சே குவேரா, மருதன்
  5. இரவுக்கு முன்பு வருவது மாலை, ஆதவன்
  6. உடல் மண்ணுக்கு, பெர்வீஸ் முஷரஃப், தமிழில் நாகூர் ரூமி
  7. இயேசு என்றொரு மனிதர் இருந்தார், சேவியர்
  8. கரைந்த நிழல்கள், அசோகமித்திரன்
  9. வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு, ஷாராஜ்
  10. அரசூர் வம்சம், இரா.முருகன்
  11. கேண்டீட், வோல்ட்டேர், தமிழில் பத்ரி சேஷாத்ரி
  12. சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி, டாக்டர் எம்.மருதுபாண்டியன்
  13. சித்த மருத்துவம் சொல்லும் கை வைத்தியம், டாக்டர் அருண் சின்னையா
  14. ஆஸ்துமா சித்த மருத்துவம், டாக்டர் துர்க்காதாஸ் எஸ்.கே.ஸ்வாமி
  15. ஸ்ரீ நாராயண குரு, பருத்தியூர் கே.சந்தானராமன்
  16. ஸ்காந்த புராணம், ஸ்ரீ கோவிந்தராஜன்
  17. முனீஸ்வரன் பூஜை, பொன்.மூர்த்தி
  18. Rishi Moolam, Jayakanthan (English)
  19. Sons of the Sun, Sa.Kandasamy (English)
  20. கிருஷ்ணா கிருஷ்ணா, இந்திரா பார்த்தசாரதி, ஆடியோ சிடி
கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டால் போதும்!
  1. உங்களிடம் ஒரு வலைப்பதிவோ, வலைத்தளமோ (தமிழோ, ஆங்கிலமோ) இருக்கவேண்டும்.
  2. கீழே உள்ள புத்தகங்களில் எது உங்களுக்கு வேண்டும் என்று குறிப்பிடுங்கள்.
  3. ஒவ்வொரு புத்தகத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பிரதிகளையே வழங்க உள்ளோம். அதனால் முதலில் தொடர்புகொள்கிறவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
  4. உங்களது அஞ்சல் முகவரியையும் செல்பேசி எண்ணையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்தியாவுக்குள் என்றால் எங்கள் செலவில் அஞ்சலில் அனுப்பிவைப்போம். அல்லது நீங்களே எங்களது அலுவலகத்துக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.
  5. பெற்றுக்கொண்ட புத்தகத்தைப் படித்துவிட்டு, உங்களது வலைப்பதிவில் அதைப்பற்றி 800 வார்த்தைகளுக்குக் குறையாமல் (தமிழிலோ, ஆங்கிலத்திலோ) விமர்சனம் எழுதவேண்டும்.
  6. விமர்சனம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். புத்தகம் நன்றாக இல்லை, பிடிக்கவில்லை என்றால் அதை உள்ளது உள்ளபடியே குறிப்பிடலாம். ஆனால் கட்டாயமாக விமர்சனம் எழுதியாகவேண்டும். 800 வார்த்தைகளுக்குக் குறையாமல்.
  7. புத்தக விமர்சனப் பதிவின்கீழ், அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் இணைய வணிகத் தள முகவரி (URL) இருக்கவேண்டும். அந்த முகவரியை உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சலில் அனுப்பிவிடுவோம்.
  8. விமர்சனம் எழுதிமுடித்தவுடன் அந்தப் பதிவின் முகவரியை எங்களுக்கு அனுப்பிவைக்கவேண்டும். அதனை நாங்கள் எங்களது தளத்தில் சேர்த்துக்கொள்வோம்.
  9. ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு புத்தகத்தை மட்டுமே பெறமுடியும். ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை ஒரே நேரத்தில் பெறமுடியாது. ஆனால், புத்தகங்களைக் கேட்கும்போது, 2 அல்லது 3 விருப்பங்களை வரிசைப்படுத்திக் கேட்கவும். உங்களது முதல் விருப்பம் முற்றுப்பெற்றுவிட்டால், அடுத்த விருப்பத்தைக் கொடுக்க முயற்சி செய்வோம்.
  10. ஒரு புத்தகத்தைப் படித்து, விமர்சனம் எழுதிய பின்னரே, நீங்கள் அடுத்த புத்தகத்தைக் கேட்டுப் பெறலாம்.
  11. இந்தத் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு நிறுவனத்துக்கு எல்லாவித உரிமையும் உள்ளது. சில காரணங்களுக்காக ஒரு சிலருக்குப் புத்தகங்களை வழங்காமல் இருக்கவும், காரணத்தைப் பொதுவில் சொல்லாமல் இருப்பதற்கும் நிறுவனத்துக்கு உரிமை உள்ளது.
  12. இத்திட்டம் தொடர்பாக மின்னஞ்சலில் மட்டுமே தொடர்புகொள்ள வேண்டும்.
  13. புத்தகம் அனுப்பப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்துக்குள் விமர்சனம் எழுதவேண்டும்.
  14. ஏற்கெனவே விமர்சனத்துக்கென புத்தகங்களை வாங்கியவர்கள், அதற்கான விமர்சனத்தை எழுதி, எங்களுக்கு அனுப்பியிருந்தால் மட்டுமே, அடுத்த புத்தகத்தைப் பெறமுடியும். ஏற்கெனவே புத்தகத்தை வாங்கி, விமர்சனம் எழுதியவர்கள், இந்த முறை புத்தகம் கேட்கும்போது, முன்னர் எந்தப் புத்தகத்தை வாங்கினீர்கள், நீங்கள் விமர்சனம் எழுதிய சுட்டி ஆகியவற்றை மின்ஞ்சலில் குறிப்பிடவும்.
மின்னஞ்சல் அனுப்பவேண்டிய முகவரி: haranprasanna@nhm.in

5 comments:

  1. //சில காரணங்களுக்காக ஒரு சிலருக்குப் புத்தகங்களை வழங்காமல் இருக்கவும், காரணத்தைப் பொதுவில் சொல்லாமல் இருப்பதற்கும் நிறுவனத்துக்கு உரிமை உள்ளது.//

    ???? !!!!! :) :) :)

    ReplyDelete
  2. இரண்டு முறை கருத்துகள் இட்டேனே..??

    ReplyDelete
  3. வணக்கம் ஹரன் அவர்களே,
    நான் உங்களிடம் இருந்து பெற்ற ரகுவம்சம் என்ற புத்தகத்திற்கு கீழ்கண்ட முகவரியில் விமர்சணம் எழுதியுள்ளேன். படித்துப் பார்க்கவும்.

    இப்படிக்கு
    சப்தரிஷி சுரேஷ்

    ReplyDelete
  4. மாலன் அவர்களின் ஜனகணமன புத்தகத்துக்கு நான் விமர்சனம் எழுதி அனுப்பியுள்ளேன்

    அது கிழக்கு வலை தளத்தில் எப்போது வரும்

    சந்திரமௌளீஸ்வரன்

    ReplyDelete