நேற்று சென்னை, ராணி சீதை ஹாலில், ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியரும், கேரளா திட்டக் குழுவின் துணைத் தலைவரும், உலகப் பொருளாதாரச் சிக்கல் குறித்து ஐ.நா உருவாக்கியுள்ள செயல்குழுவின் ஓர் உறுப்பினருமான டாக்டர் பிரபாத் பட்நாயக், உலகப் பொருளாதாரச் சிக்கல் குறித்து உரையாற்றினார்.
அந்த உரையின் ஒலிப்பதிவு இங்கே.
Indian School of Social Sciences, Asian College of Journalism, Media Foundation ஆகியவை சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தன.
பட்நாயக் மிக அருமையாகப் பேசக்கூடியவர். இந்தப் பேச்சை தமிழில் மொழிபெயர்த்துச் சொல்ல ஏற்பாடு செய்திருந்தவருக்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் வரவில்லை. தமிழில் சுருக்கமான விளக்கம் கொடுக்கப்பட்டபோது நான் கிளம்பிவிட்டேன். அதனால் இந்தப் பேச்சின் சாரம் முழுமையாக வெளியானதா என்று சொல்லமுடியாது. தொடர்ந்து கேள்வி-பதில்கள் இருந்தன. அதற்கும் நான் இருக்கவில்லை.
கேய்னீசியன் பொருளாதாரம், குமிழும் வெடித்தலும் தொடர்ந்து நடக்கும், சர்வதேச நிதியால் இழுத்துச் செல்லப்படும் முதலியல் வளர்ச்சி, இப்போதைய உலகப் பொருளாதாரச் சிக்கலை எதிர்கொள்வது எப்படி - புஷ் சொல்வது போல சும்மா இருப்பதா, அல்லது 20-25 நாடுகள் ஒருங்கிணைந்து, தங்களது நிதிப் பற்றாக்குறையை அதிகரித்து, செலவு செய்வதா? அப்படிச் செய்தால் போதுமா? இதுபோன்ற பல கேள்விகளுக்கு இடதுசாரிப் பொருளியல் வாதங்களை அழகாக எடுத்து வைத்தார்.
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
2 hours ago
இதுபோன்ற பல கேள்விகளுக்கு இடதுசாரிப் பொருளியல் வாதங்களை அழகாக எடுத்து வைத்தார்.
ReplyDeleteLefty...Stinky...
//குமிழும் வெடித்தலும் தொடர்ந்து நடக்கும்//
ReplyDeleteMultiplier Effect க்கான தமிழ் வார்த்தைங்ளா?
குமிழ்: bubble. வெடித்தல் - bursting.
ReplyDeleteபத்ரி - பட்நாயக் ஒலிப்பதிவை பகிர்ந்ததுக்கு நன்றி.
ReplyDeleteஇடது சாரி பொருளியல் வாதங்களை, பால் க்ருக்மன் - 2008 பொருளாதார நோபெல் விருது பெற்றவர், தனது இணைப்பில் தினமும் அழகாக எழுதுகிறார்.
http://krugman.blogs.nytimes.com/
1930 பொருளாதார சிக்கலை பற்றிய கெய்ன்ஸ் எழுதிய கட்டுரையை "ப்ராஜெக்ட் குடென்பெர்க்-ல்" காணலாம்
http://www.gutenberg.ca/ebooks/keynes-slump/keynes-slump-00-h.html
"This is a nightmare, which will pass away with the morning. For the resources of nature and man's devices are just as fertile and productive as they were. The rate of our progress towards solving the material problems of life is not less rapid. We are as capable as before of affording for everyone a high standard of life - high, I mean, compared with, say, twenty years ago - and will soon learn to afford a standard higher still. We were not previously deceived. But today we have involved ourselves in a colossal muddle, having blundered in the control of a delicate machine, the working of which we do not understand. The result is that our possibilities of wealth may run to waste for a time - perhaps for a long time. "
"But no one can take the first step except the central banking authorities of the chief creditor countries; nor can any one Central Bank do enough acting in isolation."
வலது சாரி வாதங்களை "வால் ஸ்ட்ரீட் ஜர்னல் - ஒபினியன்-ல்" படிக்கலாம்
http://online.wsj.com/public/page/news-opinion-commentary.html
"Classical Economics" மற்றும் "Keynesian Econmics" முக்கிய வித்தியாசத்தை இங்கு காணலாம்.
ReplyDeletehttp://www.slideshare.net/kmadeiras/classical-vs-keynesian-economics-presentation
இடது சாரியினரின் வாதம்:
பொருளாதாரத்தை உசுப்பி விட (stimulate) அரசாங்கம் நிதி பற்றாக்குறை அதிகரித்து infrastructure project-களில் செலவு செய்து மக்களை வேலைக்கு அனுப்ப வேண்டும்.
வலது சாரியினரின் வாதம் :
அரசாங்கம் நிதி பற்றாக்குறை அதிகரித்து infrastructure project-களில் செலவு செய்வது வீண் செலவு என்றும், 80-களில் ஜப்பான் பிரயோஜனமின்றி இதை முயற்சி செய்தது என்றும் உதாரணம் காட்டுவர். இந்த பொருளாதார சிக்கலை தீர்க்க அரசாங்கம் செலவு செய்தே ஆகா வேண்டும் என்றால், வரி விலக்கு செக்குகளாக (tax rebate checks) மக்களுக்கு அனுப்ப வேண்டும். மக்கள் கையில் பணம் கிடைத்தால் அதை செலவு செய்வர் அதனால் பொருளாதாரம் பெருகும் என்பர். புஷ் இதை பிரயோஜனமின்றி போன வருடம் முயற்சி செய்து விட்டார்.
இதற்க்கு இடது சாரியினரின் பிரதிவாதம் மக்களுக்கு அளிக்கும் ஒரு ரூபாயில் முப்பது பைசா மற்றுமே செலவு செய்வர் ஆகையால் முழு பலன் கிடைக்காது. Infrastructure project (roads, bridges, schools, green energy) - களில் அரசாங்கம் செலவு செய்வதால் நாடும் முன்னேறும் அதே சமயம் பொருளாதாரமும் பெருகும் என்பது இவர் வாதம். ஆனால் project அங்கிகாரம் பெற்று அமல் செய்ய வெகு காலம் எடுத்தால் stimulus அதன் குறிக்கோளை இழந்து விடும்.
ஒபாமா பொருளாதார குழு பெரும்பாலும் கேய்நேசியன் கொள்கை ஆதரிப்பதாகவே தோன்றுகிறது. மேலும் இது சர்வதேச சிக்கல் என்றும் அமேரிக்கா தனியே தீர்க்க முடியாது என்றும் உணருகிறார் என்றே தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்போம்...