Sunday, March 07, 2004

ஆம்பூர் கணினிப்பட்டறை

சிறிய வகுப்பறை ஒன்றில் கிட்டத்தட்ட நூறு மாணவர்களுக்கு மேல் கூட்டம்! அத்தனை பேர் முகத்திலும் நிசமான ஆர்வம் இருந்தது. நீங்களே பாருங்களேன்?



என் மடிக்கணினி, திரை ஆகியவற்றை சரி செய்து கொண்டே அவர்களிடம் பேச்சுக்கொடுத்தேன். அதிகமாக எதையும் சொல்லிகொடுத்து விட முடியாது என்று தெரியும். ஆனால் என்னென்ன சாத்தியம் என்பதை மட்டுமாவது சொல்லிகொடுக்க வேண்டும் என்று தோன்றியது. டிஜிட்டல் கேமரா மூலம் படமெடுத்து அதைக் கணினியில் கொண்டுபோக முடியும் என்பதைக் காட்டிவிட்டு, தமிழில் கணினியில் எழுதுவது எப்படி என்பதையும் விளக்கிக் காட்டினேன்.

வலைப்பதிவுகள் பற்றிப் பேசினேன். பின்னர் அவர்கள் விருப்பப்படி த்ரிஷா படத்தை கூகிள் மூலம் தேடி, உடனடியாக அதனை என் வலைப்பதிவில் ஏற்றி, அதனை அவர்களுக்கு அங்கேயே பெரிய திரையில் தெரியுமாறு காட்டினேன்.



பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போய்விட்டது.

அதே நேரம், சக்காரியா அரங்கில் கவிதைப்பட்டறை நடந்துகொண்டிருந்தது. அதனைப் பற்றிய விவரங்களை ராகவனின் வலைப்பதிவில் படித்துக்கொள்ளவும்.

மதிய உணவு நேரம் நெருங்கியதும் மாணவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு மீண்டும் ரூமி வீட்டிற்கு மதிய உணவுக்கும் போனோம்.

No comments:

Post a Comment