இந்தியா (டாஸ்) 281/8 (50 ஓவர்கள்), பாகிஸ்தான் 194 ஆல் அவுட் (45.2 ஓவர்கள்)
கொதிக்கும் வெய்யிலில், கொட்டும் வியர்வை மழையில், இந்தியா பாகிஸ்தானை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த ஆட்டத்தில் ஒரு சில முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டும் பார்ப்போம். டாஸில் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு முதல் பந்திலேயே அதிர்ஷ்டம். சாமியின் பந்துவீச்சில் சேவாக் வெட்டி ஆடுகிறார். பாயிண்ட் திசையில் மொஹம்மத் ஹஃபீஸ் கேட்சை நழுவ விடுகிறார். பின் சேவாக் 8 ரன்களில் இருக்கும்போது நவீத்-உல்-ஹஸன் வீசிய எழும்பும் பந்தை ஸ்லிப் திசையில் தட்டி விடுகிறார், பந்து கம்ரான் அக்மலின் கையுறையில் பட்டு எல்லைக்கோட்டுக்குப் போகிறது. அடுத்து சேவாக் வாய்ப்பைத் தருவது அவர் 108-ல் இருக்கும்போதுதான்.
அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் இந்தியாவின் பழம்பெரிசுகள் ஆட்டம் இழக்கின்றன. டெண்டுல்கரும் கங்குலியும் சேர்ந்து இந்தியாவுக்கு எத்தனையோ ஒருநாள் போட்டிகளை ஜெயித்துத் தந்திருக்கிறார்கள். ஆனால் இன்றைய தேதியில் இருவருமே பேட்டிங்கில் சற்றே தடுமாறுகிறார்கள். கங்குலி அதிகமாகவே. நவீத்-உல்-ஹஸன் பந்தை வெட்டி ஆடி முதல் நான்கைப் பெறுகிறார் டெண்டுல்கர். ஆனால் அடுத்து எழும்பி வரும் பந்தை 'புல்' செய்யப் போய் சரியாக மட்டையில் படாமல் மிட்-ஆனில் எளிதான கேட்ச். அடுத்த பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியில் குத்தி காலுக்குப் பின்னாலிருந்து லெக் ஸ்டம்பின் வெளிப்புறத்தில் அடிக்கிறது. ஸ்டம்ப் உருண்டோடி ஆஃப் ஸ்டம்புக்கு ஏழெட்டடி தள்ளி விழுகிறது! கங்குலி 0. முகத்தில் கலக்கம்.
சேவாகும், திராவிடும் ஜோடி சேர்ந்து அற்புதமாக ஆடுகிறார்கள். ஒரு நிலையில் இருவரும் 36 ரன்களில் சேர்ந்தே இருக்கிறார்கள் (ஆனால் திராவிட் அதிகப் பந்துகளை சந்தித்துள்ளார்). பின் இருவரும் ஐம்பதை சேர்ந்தே நெருங்குகிறார்கள். ஆனால் சேவாக் திடீரென வேறொரு கியருக்குச் செல்கிறார். திரும்பிப் பார்ப்பதற்குள் சேவாக் 70, 80, 90 என்று ஓடிவிடுகிறார். பின் சதத்தையும் அடித்து, அப்துல் ரஸாக் பந்தில் பவுல்ட் ஆகிவிடுகிறார். சேவாக் சதமடித்தது தான் சந்தித்த 84வது பந்தில். கடைசியில் 95 பந்துகளில் 108, 9x4, 3x6. திராவிட் முன்னைப் போலவே ஒரே சீரான வேகத்தில் செல்கிறார். மறுமுனையிலோ பிறர் சட-சடவென அவுட்டாகிறார்கள். சதத்தைத் தாண்டியபின் திராவிடால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ரன் அவுட் ஆகிறார். அதுவரையில் பாகிஸ்தான் தடுப்பாளர்கள் மூன்று ரன் அவுட் வாய்ப்புகளைத் தடவியிருந்தனர்.
இதுநாள் வரை நாம் அதிகம் நம்பி இருந்தது திராவிட்தான். இப்பொழுது அந்த லிஸ்டில் சேவாகையும் சேர்த்துக் கொள்ளலாம். சேவாகை இனியும் இந்தியாவின் தலைசிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவராக சேர்ப்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
இன்ஸமாம்-உல்-ஹக் அணித்தலைமையும் சரியாக இல்லை. இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள். சேவாக், திராவிட் இருவரில் ஒருவர் அவுட்டாகியிருந்தாலும் இந்தியாவின் நிலைமை படுமோசமாகியிருக்கும். ஆனால் இவர்கள் மீது கடுமையான அழுத்தத்தைத் தராமல் எளிதாக விட்டுவிட்டார் என்றுதான் தோன்றியது. மேலும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சரியாகத் தேர்வு செய்யப்படவில்லை. டெஸ்ட் போட்டிகளில் வெகு அருமையாக வீசிய தனீஷ் கனேரியா இல்லை. பதிலுக்கு ஆல்-ரவுண்டர்கள் என்று சொல்லிக்கொண்டு நான்கைந்து பேர் இருந்தார்கள். இரண்டு ஆஃப் ஸ்பின்னர்கள்: அர்ஷத் கான், மொஹம்மத் ஹஃபீஸ். இருவருமே இந்திய அணியினரைத் தொல்லை செய்யவில்லை. கடைசியில் அர்ஷத் கான் நான்கு விக்கெட்டுகளைப் பெற்றாலும் அவரது பந்துவிச்சு எவ்வகையிலும் திராவிட், சேவாகை கஷ்டப்படுத்தியிருக்காது.
பாகிஸ்தானால் அடிக்கக் கூடிய டார்கெட்தான். இந்தியாவின் தொடக்கப் பந்து வீச்சு சற்று சுமார்தான். கங்குலி பாயிண்டில் நின்று கொண்டு இரண்டு கேட்ச்களை விடுகிறார். யுவராஜ், காயிஃப், சேவாக் போன்றவர்கள் இருக்கும்போது இவர் ஏன் பாயிண்டில் நிற்க வேண்டும் என்று தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் கடுப்பாகின்றனர். சோகமாக கங்குலி தன் இடத்தை சேவாகுக்குக் கொடுத்துவிட்டு ஸ்லிப்பில் போய் நிற்கிறார். [ஸ்லிப்பில் எப்பொழுதும் நிற்கும் திராவிட் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு பதில் தினேஷ் மோங்கியா ஃபீல்டிங்.] இரண்டு பந்துகள் கழித்து சேவாக் கையில் நேராக ஒரு கேட்ச். இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது பாகிஸ்தானின் தோல்வி.
அடுத்த ஓவரிலேயே சல்மான் பட் கேட்ச் ஸ்கொயர் லெக்கில் நிற்கும் கங்குலிக்குச் செல்கிறது. நல்லவேளையாக அவர் அதைப் பிடித்து விடுகிறார். இல்லாவிட்டால் அவரது கதை கந்தல்தான். அடுத்த பாலாஜி ஓவரில் மீண்டும் பாயிண்ட் திசையில் நல்ல கேட்ச். இம்முறை யுவ்ராஜ் சிங். அடுத்தடுத்து மூன்று ஓவர்களில் விழுந்த இந்த மூன்று கேட்ச்களில் ஆட்டம் முடிவதில்லை. அதற்கடுத்த இரண்டு விக்கெட்களில்தான் ஆட்டம் இந்தியா வசமாகிறது. யூசுஃப் யோஹானா ஏழு பந்துகளில் ரன்கள் எதுவும் பெறாமல் இருக்கிறார். அவர் அடிப்பதெல்லாம் நேராக தடுப்பாளர் கைகளுக்கே செல்கிறது. மறுமுனையிலோ இன்ஸமாம் எந்தத் தொந்தரவும் இல்லாமல் ரன்கள் பெறுகிறார். ஜாகீர் கான் மீண்டும் வந்து போடும் ஓவரின் முதல் பந்தில் யோஹானா ஆன்-டிரைவ் செய்கிறார். பந்து சற்றே மேலாக ஜாகீர் கானுக்கு வலப்புறத்தில் செல்கிறது. ஜாகீர் கான் அற்புதமாக டைவ் அடித்து கீழே விழுந்து தன் வலது கையை நீட்டிக்கொண்டே இருக்கிறார். தரைக்கு ஒரு செ.மீ மேலே பந்து அவர் கையில் மாட்டிக்கொள்கிறது. இது மிக முக்கியமானதொரு விக்கெட்.
அடுத்து புதியவர் மொஹம்மத் ஹஃபீஸ், இன்ஸமாம்-உல்-ஹக்குடன் சேர்ந்து எளிதாக ரன்களைப் பெறுகிறார். இந்நிலையில் கூட பாகிஸ்தான் ஜெயிக்க ஓரளவு வாய்ப்பு உள்ளது. இந்தியா இதுதான் சாக்கு என்று டெண்டுல்கர் மூலம் சில ஓவர்களைத் தள்ளிவிடப் பார்க்கிறது. அதுகூட சேவாக் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் உள்ளே சென்றதால்தான். திராவிட் எக்கச்சக்கமான de-hydrationஆல் மதியம் ஃபீல்டிங் செய்யவே வரவில்லை. சேவாக் தொடக்கத்திலிருந்தே ஃபீல்டிங் செய்தார். முதல் கேட்சைப் பிடித்ததும் அவரே. ஆனால் அதற்குப் பிறகு உள்ளே சென்றுவிட்டார். பின் அவர் வந்ததும் பந்துவீச முடியாத நிலை. அவர் மீண்டும் களத்தில் 45 நிமிடங்கள் (எவ்வளவு நேரம் உள்ளே இருந்தாரோ, அவ்வளவு நேரம் மீண்டும் களத்தில் இருந்தபிறகுதான்) பந்து வீசமுடியும்.
சரி, டெண்டுல்கருக்கு சில ஓவர்கள் கொடுத்துப் பார்ப்போமே என்று கங்குலி முடிவு செய்கிறார். டெண்டுல்கரின் முதல் ஓவர் படுமோசம். லாங் ஹாப், ஃபுல் டாஸ். பின் அடுத்த சில ஓவர்கள் வீசும் கை விக்கெட்டை விட்டு விலகிவர, கால்களுக்குத் தள்ளி வீசுகிறார். ஆனால் consistency கிடையாது. மொஹம்மத் ஹஃபீஸ் இறங்கி வந்து லாங் ஆன் மேல் ஒரு சிக்ஸ் அடிக்கிறார். இனி டெண்டுல்கருக்கு அதிக பட்சம் ஓர் ஓவர்தான் கிடைக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் யாருமே எதிர்பார்க்க்காத வகையில் வேகமாக வீசிய ஒரு பந்து - லெக் ஸ்டம்பில் விழுந்து ஆஃப் ஸ்டம்பை நோக்கிச் செல்கிறது. இன்ஸமாம் கட் செய்ய முயற்சி செய்கிறார். மட்டையில் பந்து படவில்லை. திடீரென பின்னால் நிற்கும் விக்கெட் கீப்பர் மஹேந்திர சிங் தோனி துள்ளிக் குதிக்கிறார். இன்ஸமாமால் நம்ப முடியவில்லை. பந்து ஆஃப் ஸ்டம்ப் மீது நிற்கும் பெயிலை சற்றே தட்டி விட்டுச் சென்றிருக்கிறது. ஒருவேளை தோனியே பெயிலைத் தட்டிவிட்டாரோ என்று இன்ஸமாம் அங்கேயே நிற்கிறார். தொலைக்காட்சி ரீப்ளேயில் பார்த்தால் அது கிளீன் பவுல்ட் என்று தெரிகிறது.
இங்கு... இங்குதான் இந்தியாவின் வெற்றி நிச்சயமாகிறது. அதற்குப் பிறகு டெண்டுல்கருக்குக் கிடைத்த மீதி நான்கு விக்கெட்டுகளும் ஓசி. ஒன்று ஷார்ட் ஃபைன் லெக்கில் கேட்ச். ஒன்று டீப் மிட் விக்கெட்டில் கேட்ச். ஒன்று டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்ச். ஒன்று டெண்டுல்கர் கைக்கே. எல்லாம் முடிந்துவிடும் என்று பார்த்தால் கடைசி விக்கெட்டுக்காக 42 ரன்கள் சேர்க்கின்றனர் அர்ஷத் கானும் நவீத்-உல்-ஹஸனும். ஜாகீர் கான் வந்து பந்துவீசி கடைசி விக்கெட்டை எடுக்க வேண்டியிருக்கிறது.
சேவாக் ஆட்ட நாயகன். இந்தியா மிக எளிதாக வெற்றிபெற்றது போலத் தோன்றினாலும் பேட்டிங்கில் உள்ள குறைபாடுகள் தெள்ளத் தெளிவு. பந்துவீச்சு தேவலாம். ஹர்பஜன் நன்றாகவே வீசினார். நேஹ்ரா, பாலாஜி, ஜாகீர் மூவருமே நன்றாக வீசினார்கள். அடுத்த ஆட்டம் இதேபோல humidity மிக அதிகமாக இருக்கும் விசாகப்பட்டிணம். அங்கும் எக்கச்சக்க ரன்கள் வரும். ஆட்டத்தைப் பார்க்க 30-40,000 பேர்கள் இருப்பார்கள். கங்குலிக்கு இங்காவது அதிர்ஷ்டம் இருக்கும் என்று எதிர்பார்ப்போம்.
மதுரை புத்தகக் காட்சியில் இன்று இருப்பேன்
10 hours ago
I don't agree that sachin is performing bad as a batsman - IMO, He is consistently performing, irrespective of the media hype / criticism.
ReplyDeleteLast 15 ODI Innings of ::
a. Sachin :
27, 28, 141, 0, 7, 37, 18, 11, 82*, 78, 18, 74, 19, 47, 4
b. Sehwag :
16, 1, 81, 5, 17, 4, 0, 1, 17, 10, 53, 0, 70, 45, 108
c. Dravid :
82, 5, 1, 16, 0, 13, 1, 52. 30*, 67, 16, 53, 60, 75, 104
Runs Scored :
Sachin - 591
Sehwag - 428
Dravid - 575
Averages :
Sachin - 42.2
Sehwag - 28.5
Dravid - 41.1
- N. Chokkan
In addition, Sachin has 23 Wickets in his last 15 ODI Matches ... I don't think all those can be 'OC' wickets.
ReplyDelete23 Wickets and almost 600 runs in 15 matches - If this is underperforming, I didn't know who else can be called overperformer in this indian team, or among other teams !
NagaS
Sorry, I didn't mean to create two entries with different names - iraNdum naanae :)
ReplyDeleteNagaS / N. Chokkan
Dear Chokkan,
ReplyDeleteThats a gr8 stat.
I agree totally with you regarding sachin's performance. He is undoubtedly the greatest batsman!
No doubt about it!
Regards,Arun Vaidyanathan
Statistics looks good. But clearly Tendulkar is struggling right now. He was in transition for some time but the time he is taking is too long. Clearly, he has to get back to the best shape against the best teams.
ReplyDeleteI am not bashing him but if he is the one who plays the game aggressively at the same time technically correct(clearly, Sehwag doesn't fit the bill in that context). Sehwag is like 21st Century Srikanth, as long as he is having eye and hand coordination, he clicks. The moment one of them fails, the bowlers will have a field day(like Akram against Srikanth).
«¸¢Ä ¯Ä¸ ºîº¢ý ú¢¸÷ ÁýÈò¾¨ÄÅ÷ ±ý. ¦º¡ì¸ý «Å÷¸§Ç, ¯í¸û ÒûÇ¢ Å¢ÅÃõ À¡÷òÐô ÒøÄâòÐ §À¡É ´Õ ÒøÄý ±Ø¾¢ì¦¸¡ûÅÐ.¸¢Ã¢ì¦¸ð§¼ ´Õ ¦ÅðʧŨÄ. «¾üÌ þò¾¨É ¦ÅÈ¢ò¾ÉÁ¡É ú¢¸÷¸û §ÅÚ. ¿¡Î ¾¡í¸¡¾ö¡, ¾¡í¸¡Ð. þ¾üÌ ¦ºÄÅÆ¢ìÌõ §¿Ãò¾¢ø ¯ÕôÀÊ¡¸ ²¾¡ÅÐ ±Øи. ¾¢ñ¨½ «È¢Å¢Âø Ҩɸ¨¾ô §À¡ðÊ¢ø ÀÃ¢Í ¦ÀüȾüÌ Å¡úòÐì¸û.
ReplyDeleteWhat makes ppl talk abt Sachin's alleged under-performance is his past.
ReplyDeleteFor a long time, he made things look very easy and as a consequence, expectations are more from him. Fans want him to hit a century everytime he walks out to bat.
Now his "strike rate" has taken a beating.. I dont have an stats to prove this.. but its quite apparent. Thats the main reason for many to say that he is struggling.
That aside, looking at the score of last 15 innings, only 5 of them are decent innings (141, 82, 78, 74, 47) though the aggregate & avg are impressive. If the world's most feared batsman could hit a decent score only in 1/3rd of the innings, it is bound to raise some eyebrows. What do you say, NagaS?
http://thoughtsintamil.blogspot.com/articles/20040722_tamiloviam.html
ReplyDeleteமேற்படி கட்டுரையில் டெண்டுல்கரின் ஆட்டத்தில் என்னென்ன மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன என்று விவரமாகச் சொல்லியுள்ளேன்.
கிரிக்கெட் ரசிகர்கள் வேறு, டெண்டுல்கர் ரசிகர்கள் வேறு. இது சினிமா பாஷையில் சொல்லப்போனால் சினிமா ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள் மாதிரி.
நாங்கள் பலரும் கிரிக்கெட்டை ரசிப்பவர்கள். அதில் டெண்டுல்கரின் ஆட்டத்தில் ரசிக்கத்தகுந்த அம்சம் இருந்தால் அதை ரசிப்போம். அந்த ரசிக்கத்தகுந்த அம்சங்கள் குறைந்து, வேறொரு ஆட்டக்காரரிடம் (சேவாக், திராவிட்) வேறு சில ரசிக்கத்தகுந்த அம்சங்கள் வந்தால் அதை ரசிப்போம். அதே சமயம் டெண்டுல்கரின் ஆட்டத்தில் பழுது உள்ளது என்று சொல்லவும் தயங்கமாட்டோம்.
ஆனால் சொக்கன் அப்படியல்ல. டெண்டுல்கர் ரசிகன்.
பாவம். மன்னித்துவிடுவோம்:-)
இங்கு எனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார். அவருக்கு இப்பூவுலகில் டெண்டுல்கரைத் தவிர யாவரையும் பிடிக்கும் . அவர் ஒரு இந்தியர் இல்லையென்று சொன்னால் ஆச்சரியம் இல்லை. அவரது குற்றச்சாட்டுக்கள் சற்றுமே நியாயம் இல்லாதவை. நல்லகாலம் டெண்டுல்கர் கனடாவில் இல்லை.
ReplyDeleteகிரிக்கெட் சம்பந்தமாக அடிக்கடி எழுதுங்கள் பத்ரி.
Badri,
ReplyDelete:) I don't feel bad to call myself a sachin fan ... So, ungaL mannippu avasiyamaagap padavillai !
I am only against your attempt to project dravid, sehwag and harbajan as greatest players ever, purposefully avoiding / criticising sachin everytime.
Anyway, I won't disturb you anymore with my pinnottangaL - I will leave it to genuine cricket fans :)
N. Chokkan,
Riyadh
தீவிர டிராவிட் ரசிகரான பத்ரி தன்னை நடுநிலை விமர்சகராக தம்பட்டம் அடித்துக் கொள்வது நல்ல நகைச்சுவையாய் இருக்கின்றது. டெண்டுல்கருக்கு கிடைத்த 5 விக்கட்டுகளும் ஏதோ அதிர்ஷ்டத்தில் கிடைத்தது போல் ஒற்றை வரியில் அவர் எழுதியிருப்பது அவரது நடுநிலை விமர்சனத்துக்கு ஒரு நல்ல உதாரணம். அரசியல் விமர்சகர் 'சோ' விற்கும், கிரிக்கெட் விமர்சகர் 'பத்ரி' க்கும் அதிக வித்தியாசம் இல்லை.
ReplyDeleteதீவிர டிராவிட் ரசிகரான பத்ரி தன்னை நடுநிலை விமர்சகராக தம்பட்டம் அடித்துக் கொள்வது நல்ல நகைச்சுவையாய் இருக்கின்றது. டெண்டுல்கருக்கு கிடைத்த 5 விக்கட்டுகளும் ஏதோ அதிர்ஷ்டத்தில் கிடைத்தது போல் ஒற்றை வரியில் அவர் எழுதியிருப்பது அவரது நடுநிலை விமர்சனத்துக்கு ஒரு நல்ல உதாரணம். அரசியல் விமர்சகர் 'சோ' விற்கும், கிரிக்கெட் விமர்சகர் 'பத்ரி' க்கும் அதிக வித்தியாசம் இல்லை.
ReplyDeleteGreg's column
ReplyDeletehttp://www.hindu.com/2005/04/07/stories/2005040701182100.htm
the KING on sachin
http://www.hindu.com/2005/02/10/stories/2005021008151600.htm
http://www.hindu.com/2005/02/11/stories/2005021107792100.htm
ஆனாலும் எனக்கு பிடிச்சது இந்த பத்தி தான் :)
Tendulkar stands still at the crease but loves to attack and is very positive. He could have scored more runs but then he is no Geoff Boycott. As a person, Tendulkar has invited less controversy than Brian. On a different note, I can't help commenting that when it comes to style, I find Rahul Dravid most stylish. In boxing parlance, he gets his punches without anyone noticing it. At the end of it, his opponent is bruised!