எஸ்.ஆர்.எம் கல்லூரியின் நிர்வாகவியல் படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் செய்துள்ள சில பிராஜெக்ட்களை மதிப்பிடுவதற்காக சென்ற வாரம் (புதன்கிழமை) நான் அங்கு சென்றிருந்தேன். என்னை ஏன் அழைத்திருந்தார்கள் என்று ஒருவர் கேட்டிருந்தார். உண்மையைச் சொல்லவேண்டுமானால் "தெரியாது" என்றுதான் சொல்லவேண்டும்.
முதலாவதாக இது கல்லூரிக் கல்வியின் ஓர் அங்கம் இல்லை. அதிகப்படியான பிராஜெக்ட். இதற்கு மதிப்பெண்கள் கிடையாது. எஸ்.ஆர்.எம் ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்பதால் அவர்களாகவே இதுபோன்று தம் மாணவர்களின் தரத்தை உயர்த்த வேண்டுமென்று செய்திருக்கிறார்கள் என்று தோன்றியது. வெவ்வேறு துறையிலிருந்து பலரும் இந்த பிராஜெக்ட்களை மதிப்பிட வந்திருந்தனர்.
நான் சென்ற வகுப்பில் கிட்டத்தட்ட 60 மாணவர்கள் (இருபாலரும் உண்டு). சிலர் அன்று வரவில்லை. அங்கு இருந்தவர்கள் 11 குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். சில குழுக்களின் ஐந்து பேர், சில குழுக்களில் நான்கு பேர்.
இந்தக் குழுக்கள் எடுத்துக்கொண்ட தலைப்புகளில் சிலவற்றைத் தருகிறேன்.
"எல்.ஜி வாஷிங் மெஷின் பற்றி பயனாளர் கருத்து"
"சியட் டயர் நிறுவனம் சென்னையில் முதலிடத்துக்கு வர என்ன செய்ய வேண்டும்?"
"வாடிக்கையாளரைத் திருப்தி செய்வதில் தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கிகள் - ஓர் ஒப்பீடு"
"இந்தியன் ஏர்லைன்ஸ் - ஏர் டெக்கான் - ஒப்பீடு"
"தாம்பரம் பகுதியில் குப்பைகள் அகற்றுவதில் குறைபாடுகள் - ஓர் ஆய்வு"
"சூப்பர் மேக்ஸ் பிளேடுகளும், பிற பிராண்ட்களும் - மார்கெட் ரிஸர்ச்"
"காஸ்மெடிக் உபயோகத்தில் பன்னாட்டு நிறுவன பிராண்ட்கள் நிலை"
"எஸ்.ஆர்.எம் கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடையே குடியின் கேடு"
மேற்கொண்டு இதுபற்றி அடுத்த பதிவில்.
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
6 hours ago
"தாம்பரம் பகுதியில் குப்பைகள் அகற்றுவதில் குறைபாடுகள் - ஓர் ஆய்வு"
ReplyDeleteஇது மிகவும் ஆர்வத்தை தூண்டுகின்றது.
The selected titles were worthy. Expecting your views on how the contents were.
ReplyDeleteRaj