Thursday, April 28, 2005

கெட்டிமேளம்

பா.ராகவன் கதை-வசனம் எழுதும் டிவி சீரியல் மெகா காவியம் 'கெட்டிமேளம்', திங்கள் கிழமை, 2-5-2005, இரவு 9.00 மணி முதல் ஜெயா டிவியில் ஆரம்பிக்கிறது.

ராகவன் என்னிடம் இந்தக் கதையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். இரண்டு தொழிலதிபர்களின் வாழ்க்கை, அவர்களுக்கிடையேயான போராட்டம் என்று செல்லும் கதை.



ஆனால் நம்மூரில் தொலைக்காட்சி சீரியலை இப்படியெல்லாம் எடுக்க விட்டுவிடுவார்களா என்ன? இரண்டு மூன்று பெண்களையாவது கொண்டுவரவேண்டுமே? சரி, கொண்டுவந்தாயிற்று. வெளியில் விளம்பரத்தைப் பார்த்தீர்களானால் மூன்று பெண்களின் கதை என்றுதான் இருக்கும். ஆனால் கதை பொதுவான டிவி சீரியல் அம்சங்கள் இல்லாமல் நன்றாக இருக்கும் என்கிறார் ராகவன்.

பொதுவாக நான் சீரியல்களே பார்ப்பதில்லை. முதல் சில நாள்களுக்காவது இந்த சீரியலைப் பார்ப்பேன். அதற்குமேல் எப்படி போகிறது என்று பார்ப்போம்!

16 comments:

  1. kane and able to tell a little more about the storyline?

    ReplyDelete
  2. புகைப்படத்தில் இருக்கும் பொண்ணு ரொம்ப அழகாக இருக்கிறது...

    ReplyDelete
  3. //kane and able to tell a little more about the storyline? //

    ரெண்டு தொழில் அதிபர்கள் என்ற உடனே கேனும் ஏபெலுமா? ஜெ·ப்ரி ஆர்ச்சன் 'உள்ளே' கீறார்ங்ற என்ற தைரியம் போலிருக்கிறது : ஸ்மைலி

    ReplyDelete
  4. Icarus: அவர் வெளியே வந்துட்டாருங்க. (on probation).

    ReplyDelete
  5. புத்தகம். எழுத்து. சின்னத்திரை. பா.ரா, கலக்குங்க, எப்ப வெள்ளித்திரையில எண்ட்ரி. சொல்லுங்க, ரஜினிக்கு கொடுக்கற மாதிரி ஒரு அட்டகாசமான பிஜி ரெடி பண்ணிடலாம். :)

    // பா.ராகவன் கதை-வசனம் எழுதும் டிவி சீரியல் மெகா காவியம் 'கெட்டிமேளம்', திங்கள் கிழமை, 2-5-2005, இரவு 9.00 மணி முதல் ஜெயா டிவியில் ஆரம்பிக்கிறது.//

    என்ன சொல்லுங்கள், காவியம்ன்னு சொல்றதெல்லாம் கொஞ்சம் ஒவரா தெரியலை ;-)

    ReplyDelete
  6. மெகா காவியம்?! அதுவும் தமிழ் தொலைக்காட்சியில்? கிண்டல் தானே...:)

    பாரா...முயற்சி செய்யுங்கள்...ஆனால் இதற்கு மெனக்கெடுவதற்கு பதில், நீங்கள் எழுத வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. சீரியல்கள் எல்லாம் தேவிபாலா போன்ற உதவாக்கரை எழுத்தாளர்களுக்கு.

    ReplyDelete
  7. அண்ணாச்சிக்கு வாழ்த்துகள். சீரியல் எல்லாம் மோசம்னு எல்லாம் ஒதுங்கியிருந்தா அப்புறம் யார் இறங்கி சரி பண்றது. அதான் பாரா இறங்கி இருக்கார். எனக்குத் தெரிந்த டீவியில் சில நல்ல சீரியல்கள் வந்திருக்கின்றன. கெட்டி மேளம் அவற்றில் ஒன்றைப்போல இருக்கும் என எதிர்பார்க்ககூடாதா,,?? என்னைப் பொறுத்தவரை இது சரியான திசைதான். விகடனால் அறிமுகப்படுத்தப்பட்ட திருமுருகன் சன் டீவி சீரியல் மூலம் எங்கே போய்க் கொண்டிருக்கிரார் பாருங்கள். Let us hope that it is going to be better.

    ReplyDelete
  8. /ரெண்டு தொழில் அதிபர்கள் என்ற உடனே கேனும் ஏபெலுமா? ஜெ·ப்ரி ஆர்ச்சன் 'உள்ளே' கீறார்ங்ற என்ற தைரியம் போலிருக்கிறது : ஸ்மைலி/
    நினைச்சேன்; சாரோட வக்கீல் வாய்தாக்கு வருவீங்கன்னு. West இலே Sep 11 அறிக்கை அப்டியே கிழக்கிலே செப் 11 அறிக்கையா அப்பாத கொறையா வந்ததை இடதுகைல அந்தப்பொத்தகத்தையும் வலது கைல இந்தப்பொத்தகத்தையும் வைச்சு நிறுத்துப்பாத்திட்ட அனுபவத்திலெ சொல்லிட்டேன். ஷமிக்கணும் ஸாமி: ரெண்டு ஸ்மைலி

    ReplyDelete
  9. கொஞ்சம் நிதானித்து யோசிக்கிறேன்; என்னிலே தவறுதான். நான் தொடரைப் பார்க்காமலே கருத்துச் சொல்லியிருக்கக்கூடாது. அதற்கு பாராகவன், பத்ரி, பிரகாஷ் மூவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எப்படியும் தொடரை NUMTV இலே இணையத்தூடாகப் பார்த்துவிடுவேன். மிகுதி பின்னால்: மூணு அழுலி.

    ReplyDelete
  10. "கெட்டிமேளம்" என்ற தலைப்பே தொடர் எடுபடா விட்டால் மெல்ல பெண்கள் கண்களைக் கசக்கும் கதைக்கு மாற்றிக் கொள்ளும் எண்ணத்துடன் வைக்கப்பட்டுள்ளது போல் படுகின்றது.

    ReplyDelete
  11. thank god, i have no access to tamil tv channels.even when they are retelecast in some channels i avoid them like plague.

    ReplyDelete
  12. புகைப்படத்தில இருக்கிற பொண்ணு, "கிழக்குச் சீமையிலே" படத்தில் ராதிகாவின் மகளாக அறிமுகமான அஸ்வினி மாதிரி இருக்கே, அவங்க தானா??

    ReplyDelete
  13. நம்மில ஒருவர் புதியதொரு முயற்சியில் இறங்கும் போது, அந்தத் துறையில் இதுவரை நிகழ்ந்திருப்பது நமக்கு உடன்பாடில்லையெனினும் வாழத்து சொல்லுவதே முறை. சினிமாவும், தொலைக்காட்சி தொடர்களும் பல்வேறு தனிநபர்களின் கூட்டு முயற்சியில் உருவாகிற வேலை. எனவே அதில் வருகிற நிறை, குறைகளுக்கு ஒருவரை மட்டும் குறை சொல்லுவது நியாயமாகாது.

    'மெட்டி ஒலி' போல 'கெட்டி மேளம்' சிறப்பாக ஒலிக்க என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. http://www.hindu.com/fr/2005/04/29/stories/2005042902350500.htm
    ரெண்டு தொழில் அதிபர்கள் - where are they

    ReplyDelete
  15. Anonymous: நான் எழுதியுள்ளதை கவனித்தால்

    "வெளியில் விளம்பரத்தைப் பார்த்தீர்களானால் மூன்று பெண்களின் கதை என்றுதான் இருக்கும்."

    இதப் படித்திருப்பீர்கள். தொழிலதிபர்கள் பற்றியெல்லாம் வெளியில் விளம்பரம் செய்தால் யாரும் சீரியலைப் பார்க்க மாட்டார்களாம். பெண்களின் கதை என்றால் மட்டும்தான் சீரியல் பார்க்கக் கூட்டம் வரும்.

    ReplyDelete
  16. அன்பு ஹரி,

    பொதுவாக தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாமே 'ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்கிற மேற்கோளுக்கு உதாரணமாகத்தான் திகழ்கிறது. பக்கத்து வீடுகளில் உள்ளவர்களைப் பற்றி எதிர் வீட்டுக்காரர்களிடம் வம்பு பேசிக் கொண்டிருக்கிறவர்களுக்கு ஒரு மாற்றாக வந்து வெற்றி பெற்றிருப்பவைதான் இந்த தொலைக்காட்சி தொடர்கள் என்பது உளவியல் உண்மை.

    'மெட்டி ஒலியிலும்' கதை என்று எந்த எழவு சமாச்சாரமும் இல்லை என்பதை நானறிவேன். என்றாலும் அந்தத் தொடரை இயக்குநர் திருமுருகன் சுவாரசியமாக நகர்த்தி சென்றிருந்த விதமும், எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் இயல்பான வசனங்களும் (சில இடங்களில் செயற்கையாக இருந்தாலும்) எனக்குப் பிடித்திருந்தது. சுவாரசியமாக கதை சொல்கிற எந்த கதை சொல்லியையும் எனக்குப் பிடிக்கும். எல்லோருக்கும் இந்த உத்தி பிடிபட்டுவிடாது. அதனாலேயே சுஜாதாவின் சில நாவல்களின் அடிப்படையான தளம் வலுவாக இல்லாவிட்டாலும் அவரை தொடர்ந்து படிப்பதற்கு காரணம். சுவாரசியமாக கதை சொல்லும் உத்தியை புரிந்து கொள்வதற்காக.

    ReplyDelete