நாளை (ஞாயிறு, 17/4/2005) அன்று மயிலாப்பூர் பி.எஸ்.மேல்நிலைப் பள்ளி, தக்ஷிணாமூர்த்தி அரங்கத்தில் மாலை 6.00 மணி அளவில் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் (Swadeshi Jagran Manch) நடத்தும் பொதுக்கூட்டத்தில் 'சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு' பற்றி டாக்டர் ஆபிரகாம் வர்கீஸ் என்பவர் பேசுகிறார். இவர் சு.வி.இ அமைப்பின் அகில இந்திய இணையமைப்பாளர். ப்ரூக் பாண்ட் இந்தியாவின் முன்னாள் நிர்வாக இயக்குனர்.
கலந்து கொள்ளும் பிறர் எச்.ராஜா, எம்.எல்.ஏ, பா.ஜ.க; ஜி.பிரபாகர், காஞ்சி கிழக்கு மாவட்டத் தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை.
Reflections on Postmodern Literature
20 hours ago

இத்தலைப்பு குறித்த செய்தியைக் கொஞ்ச நாட்களுக்குமுன் economic times-ல் படித்தேன். Wal-mart நிறுவனம் தற்போது இங்குள்ள பன்னாட்டு நுகர்பொருள் நிறுவனங்களை அழைத்து அவர்களுடன் பேசியதாகச் செய்தி வெளியாகியிருந்தது.
ReplyDeleteWal-mart நிறுவனத்துடன் போட்டிபோடும் அளவிற்கெல்லாம் நம்மூரில் பேரங்காடிகள் உள்ளனவா என்று தெரியவில்லை (இல்லையென்றே நினைக்கிறேன்). சிறு நகரங்களிலெல்லாம் இதன் கிளைகள் முளைக்குமானால் அங்குள்ள கடைகளின் நிலை எப்படியிருக்கப்போகிறதோ?
இராதாகிருஷ்ணன் : வால்-மார்ட் அளவுக்கு இல்லை என்றாலும், இந்தியாவில் ரீடெயில் வர்த்தகம் முன்னேறிக் கொண்டு வருகிறது. ஆர்.பி.கோயங்கா குழுமத்தின் ·புட்வேர்ல்ல், ஷாப்பர்ஸ் ஸ்டாப் போன்ற ரீடெயில் வர்த்தக நிறுவனங்களின் வளர்ச்சி, ரீடெயில் தொழில் பற்றி, நம்பிக்கை தருவதாக இருக்கிறது. உதாரணமாக, ரீடெயில் விற்பனைக்கு என்று தனியாக, பட்ட./பட்டயப் படிப்புகளை, சமீபத்தில், பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தி இருக்கிறது. பொறியியல், வாகன உற்பத்தி, மின்சார உற்பத்தி, எண்ணெய் சுத்திகரிப்பு, பிற உற்பத்தி, மென்பொருள், விளம்பர இயல், மேலாண்மை போன்ற அதிக முதலீட்டுத் தொழில்களில் கவனம் செலுத்தும் CII போன்ற, அரசு அங்கீகாரம் பெற்ற, தன்னிச்சையான அமைப்புகள், தற்போது ரீடெயில் துறையிலும் கவனம் செலுத்துகின்றது. கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக, கருத்தரங்குகள், industrial fairs போன்றவற்றையும் நடத்தி வருகின்றது. இத்துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ReplyDeleteஇராதாகிருஷ்ணன் வால்-மார்ட் பேசியது உண்மை ஆனால்,அது இந்தியாவில் கடைபரப்ப இல்லை. இந்தியாவிலிருந்து பொருட்களை கொள்முதல் செய்யவே. சுமார் $6 பில்லியன் பெருமானமுள்ள இந்தியா பொருட்களை வாங்க 2005-06இல் வால் மார்ட் உத்தேசித்திருக்கிறது. ஏற்கனவே, ஒனிடாவின் கேண்டி டிவிகள் வால் மார்டில் விற்கப்படுகின்றன என்பது குறுங்குறிப்பு.
ReplyDelete