இது தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி. அதாவது தமிழ் வார்த்தைகள் ஏதேனும் பொருள் விளங்கவில்லையென்றால் அதற்கான தமிழோ, ஆங்கிலமோ இணைச்சொல்லை, பொருளைக் காண முடியும். ஆனால் ஆங்கிலச் சொல் ஒன்றுக்குப் பொருள் புரியவில்லை என்றால் அதற்கான நேரடிப் பொருளை இதில் காண முடியாது! இதனால் தமிழர்களுக்கு முழுமையான பயன் கிடையாது. முழுமையான பயன் வேண்டுமென்றால் தமிழ்->தமிழ், ஆங்கிலம் + ஆங்கிலம்->ஆங்கிலம், தமிழ் என இரண்டும் வேண்டும்.
எழுத்துக்களை Tamilnet99 மூலமாகத்தான் உள்ளிட முடிகிறது. அது தெரியாதவர்கள் மென்பொருள் விசைப்பலகை ஒன்றைப் பயன்படுத்தலாம்.
எனக்கு ஒரு சந்தேகம். வணிகச் செயலிகள் பலவற்றையும் இப்படி இலவசமாக வெளியிடுவதற்காக அரசு இந்த நிறுவனங்களுக்கு ஏதேனும் பணம் கொடுத்துள்ளதா? அப்படியானால் யார் யாருக்கு எவ்வளவு? என்ன கணக்கு? ஏதேனும் டெண்டர் முறைப்படி நடந்ததா? ஏன் பால்ஸ் தமிழ் அகராதி? வேறு தமிழ்-ஆங்கில, ஆங்கில-தமிழ் மின்-அகராதிகள் மாறுகடையில் கிடைக்கின்றனவா?
"எழுத்துக்களை Tamilnet99 மூலமாகத்தான் உள்ளிட முடிகிறது"
ReplyDeleteஎழுத்துக்களை ஆங்கில வகை (anjal) மூலமாகமும் உள்ளிட முடிகிறது. விருப்பம் என்ற பகுதிக்கு சென்று உள்ளிடும் முரையை மாத்தலாம்.
roy.
ஏன் unicodeல் இல்லை???
ReplyDeleteஇனி எல்லாமே unicode தானே...?
TAM TAB ;-(