Friday, April 29, 2005

கட்டாயக் காத்திருப்பில் தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்

இந்த வாரம் தெஹெல்காவில் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் நான்கு தலித் அதிகாரிகள் எந்த வேலையும் கொடுக்கப்படாமல் கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அதை எதிர்த்து கிறிஸ்துதாஸ் காந்தி (இவரும் கட்டாயக் காத்திருப்பில் இருப்பவர்) நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறார் என்றும் எழுதியிருந்தனர்.

வழக்கம் போல இதைப்பற்றி முன்னணி செய்தித்தாள்களும் தொலைக்காட்சிச் செய்திகளும் எதுவும் சொல்லவில்லை. அந்த நான்கு பேர் கிறிஸ்துதாஸ் காந்தி, சிவகாமி, கோவிந்தன், கண்ணகி பாக்கியநாதன்.

இதற்குமேல் தலைமைச் செயலர் லக்ஷ்மி பிரானேஷ், காந்தியும் சிவகாமியும் ஜனவரி மாதம் ஒரு தலித் கூட்டத்தில் கலந்துகொண்டதற்காக விளக்கம் கேட்டு கடிதங்கள் எழுதியுள்ளாராம். இந்தக் கூட்டத்தை "வகுப்புவாதக்கூட்டம்" (communal) என்று லக்ஷ்மி விளித்துள்ளார்.

காந்தி நீதிமன்றத்துக்குச் சென்ற பிறகு மேற்படி நால்வரி்ல் இருவருக்கு வேலை ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று தெஹெல்கா கூறுகிறது. ஆனால் அந்த இருவர் யாரென்று சொல்லவில்லை. ஓரளவுக்கு யூகித்தால் சிவகாமி, காந்தி இருவருக்கும் வேலை ஒதுக்கப்பட்டிருக்காது என்று நினைக்கிறேன்.

இதற்கிடையில் லக்ஷ்மி பிரானேஷ் ஓய்வு பெறுகிறார். புதிய தலைமைச் செயலர் இன்றோ நாளையோ அறிவிக்கப்படுவார்.

[ஜனவரி 2004-ல் மித்ர வெளியீடாக சிவகாமியின் சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டது. காந்தி வெளியிட, பிரதிபா ஜெயச்சந்திரன் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார். நான் வேறொரு புத்தகத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அந்த மேடையில் அமர்ந்திருந்தேன். எனக்கும் சிவகாமியின் சிறுகதைத் தொகுதி பிரதி கிடைத்தது. அதன்பின் அதைப் படிக்க முழுவதுமாக மறந்துபோனேன். இன்று மீண்டும் தெஹெல்கா செய்தியைப் படித்ததும், அந்த சிறுகதைத் தொகுதியைக் கையில் எடுத்துள்ளேன். முதல் கதையைப் படித்து முடித்துவிட்டேன். அடுத்த வாரம் அனைத்தையும் படித்து முடிந்தபின் எழுதுகிறேன்.]

7 comments:

  1. பத்ரி,

    காந்தியின் பிரச்சனையைப் பற்றி சென்ற வார ஜூனியர் விகடனில் எழுதியிருந்தார்கள்.தொடர்ந்து நிகழ்ந்து வந்த நிழல் போராட்டம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

    இதைத் தவிர இவ்வார குமுதத்தில் கீரிப்பட்டி பிரச்சனையைப் பற்றி எழுதியுள்ளார்கள். படிக்கவும்.

    அன்புடன்

    ராஜ்குமார்.

    ReplyDelete
  2. ஜூனியர் விகடன், ரிப்போர்ட்டர், நக்கீரன் போன்ற வாரமிருமுறை இதழ்களில் கடந்த இரு வாரங்களாக இது தொடர்ந்து செய்தியாக வந்து கொண்டிருக்கிறதே..

    ReplyDelete
  3. இப்பதான் தெரியும் இது. நன்றிகள்.

    .

    ReplyDelete
  4. அந்த தெஹல்கா செய்தியினை அவர்களின் இணையத்தளத்தில் காணவில்லை. அதனால், முழு செய்தியினை ஆங்கிலத்திலேயே என் பதிவில் கொடுத்திருக்கிறேன்.

    பார்க்க: http://urpudathathu.blogspot.com/2005/04/blog-post_111476354988922919.html

    ReplyDelete
  5. பத்ரிக்கு
    வணக்கம். சென்ற ஆண்டு அமெரிக்க தமிழ்ச் சங்க விழாவிற்கு திருமதி சிவகாமி வந்து இருந்தார்கள்.
    அவர்களோடு தனிப்பட்ட முறையில் பேசி பழகும் வாய்ப்பு ஏற்ப்பட்டது. மிக தைரியமான, துணிச்சல்
    மிக்க பெண். அவர்களுடைய சிந்தனை, எண்ணம், எழுத்து எல்லாம் மாறுப்பட்ட கோணம் கொண்டவை அதே சமயத்தில் சிந்திக்க வைக்க கூடிய நபர். தலித் மக்களுக்கு போரடும் ஓர் முற்போக்கு எண்ணம் கொண்ட நபர். சளைக்காமல் போராடும் பெண். அவருடைய எழுத்துகளை படித்துவிட்டு அவசியம் நீங்கள் எழுதுங்கள். ஆவலோடு காத்து இருப்பேன்...
    நன்றி.
    மயிலாடுதுறை சிவா...

    ReplyDelete
  6. செய்திக்கு நன்றிகள். சிவகாமி அவர்களின் கதை தொகுப்பு பற்றி அவகாசமிருப்பின் குறிப்பு எழுதுங்கள்.

    ReplyDelete
  7. «ñ½ý ÀòâìÌ

    Á§Äº¢Â¡Å¢Ä¢Õó¾ ͧÄ ±ØÐÅÐ,

    ³.².±… ÀÊò¾ ¾Ä¢ò ¦Àñ¸ÙìÌ þó¾ ¦¸¡Î¨Á¡ ±ýÚ ¾Á¢ú¿¡ð¨¼ ±ñÏõ§À¡Ð ÀÂÁ¡ ¯ûÇÐ.

    ºÃ¢ «ñ½ý ¿£í¸û «Êì¸Ê þ¨¾ ÀÊòÐ Óò¾×¼ý ±Øи¢§Èý. «¨¾ §¾ÊÂô À¢ÈÌ ±Øи¢§Èý. «¨¾ À¡÷ò¾ À¢ÈÌ ±Øи¢§Èý. ¿¢¨È ¦º¡øÄ¢ ²í¸ ¨Åì¸¢È£í¸ ²ý? À¡ø… «¸Ã¡¾¢ô ÀüÈ¢ ¦¸¡ÎôÀ¾¡¸ ¦º¡ýÉ£÷ ±ýÉÅ¡ÉÐ? ¿ýÈ¢ ²§¾Ûõ ¿£í¸û ¸ñÎ þú¢ò¾ þÂü¨¸ ¿¢¸ú׸û ÀüÈ¢... À¼òмý ±ØÐí¸û

    ±¾¢÷À¡÷ôÒ¼ý
    Suresh
    Malaysia.

    ReplyDelete