Wednesday, October 20, 2004

சமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 3

சென்ற வாரங்களில் எழுதியவற்றின் தொடர்ச்சி. அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் வேலைகளினால் இந்தியாவில் என்ன பிரச்னைகள் என்பது பற்றி. யூனிகோடில் இங்கே.

3 comments:

  1. வெளியில்கொடுக்கும்வேலை (outsourcing) பற்றி மிக விரிவாகவே எழுதியுள்ளீர்கள். எல்லா தளங்களையும் தொட்டு சென்றது.

    பணத்தைச் செலவழிப்பது முதல் வேலை செய்யும் இடங்களிலேயே கிடைக்கும் அரை மணிநேர இடைவெளியில் இருபாலரும் உடலுறவு கொள்வது வரை (அப்படித்தான் சில செய்தித்தாள்கள் பேசுகின்றன) சீரழிவு நடக்கிறது.இது படிக்க கசப்பானதாக இருந்தால் கூட, எதுவும் நடக்கும்.

    அழைப்பு மையங்களில் வேலை செய்பவர்களை பல 3rd Party BPO நிறுவனங்கள் விரட்டி விரட்டி வேலை வாங்குகின்றன. மற்றுமொரு தொலைபேசி அழைப்பை எடுத்து அந்த பிரச்னையை சமாளித்தால் அதிகப்பணம் உண்டு என்ற வகையில் சிறிதும் ஓய்வின்றி வேலை செய்வதால் மிக சீக்கிரத்திலேயே உடலும், மூளையும் சோர்வடைகிறது. வேண்டிய நேரத்தில் அலுவலகத்தில் விடுப்பு கிடைக்காது. இதனால் வெளியார் உறவின்றி இவர்கள் தனித்தீவாக வசிக்க வேண்டியதாகிறது. அழைப்பு மையங்களில் அமெரிக்காவில் இருப்பவர்களுடன் சூசி, ஷாரன், சமாரா, சாம், டாம், பாப் என்ற பெயரிலெல்லாம் பேசி, அவர்களிடம் பேஸ்பால் பற்றியும், "அமெரிக்கன்" புட்பால் பற்றியும், ஹாலிவுட் படங்கள் பற்றியும் அறுத்து கண்ணாடிக் கட்டடத்தை விட்டு வெளியே வந்தவுடன் கீழ் மத்தியதரக் குடியிருப்பில் வசித்துக் கொண்டு, தண்ணீர் பிரச்னை, போக்குவரத்து நெரிசல், குடும்பத்தினருடன் சண்டை, தனியறை இல்லாமை என்று ரவியாகவும், புவனாவாகவும் வாழ்வது கொடுமைதானே?

    அழைப்பு மையம் என்றில்லை... எங்கெல்லாம் வேலைகள் பொதி போல முதுகில் சுமர்த்தப்படுகின்றதோ, அங்கெல்லாம் வேலை செய்பவர்கள் இரண்டு, மூன்று வருடங்களுக்குள் கிட்டத்தட்ட பைத்தியமாகி விடும் நிலை உள்ளது.
    சத்தியமான உண்மை. உடலுழைப்பைவிட மன/மூளை உழைப்பில் அசதி அதிகம். நீங்கள் சொல்லும் பைத்தியமாகிவிடும் நிலையில்தான் நானுட்பட வங்கி மற்றும் பல துறைகளில் செயல்படும் production support consultantsன் நிலை. அது இங்கு சிங்கப்பூரில் மற்ற பல அழுத்தங்களால் எல்லா துறைகளிலும் பரவியிருக்கிறது. வாழ்வை தொலைத்து பணம் சம்பாதிக்கும் நிலை.

    இதுதான் அங்கு சென்னையிலும், இந்தியாவிலும் நடக்கும். அள்ளி அள்ளி காசு தருபவர்கள் சும்மா தரமாட்டார்கள். போட்ட காசுக்கு பிரதிபலன் இல்லாவிடில் - திரும்பி சென்றுவிடுவர்.

    எனக்குத்தெரிந்த அதுஏற்கனவே ஒருசில நிறுவங்களில் நடக்க ஆரம்பித்துவிட்டது. உதாரணத்திற்கு ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி இங்கிருந்த மொத்த தகவல்தொழில்நுட்ப சேவையையும் சென்னையிலிருந்து செய்ய ஸ்கோப் இண்டெர்னேஷனல் என்ற நிறுவனம் ஆரம்பித்து ஏகப்பட்டபேரை நியமித்து செயல்பட ஆரம்பித்துளனர். ஆனால், இப்போது பல நடைமுறை சிக்கல்கள். இங்குள்ள தேவை, அவசரக்குத்துக்கேற்ப அங்குள்ளவர்கள் நடந்துகொள்வதில்லை. முன்பைவிட சேவைத்தரம் குறைந்துவிட்டது. கொஞ்சம் வற்புறுத்தினால் வேறு வேலைதேடி உடனே கிளம்பி விடுகின்றனர். இதுபோன்ற பல பிரச்சனைகளுடன் தொடர்கிறது, பார்க்கலாம்.

    (எது எப்படியோ one of my elective this semester I chosen is: Managing IT Outsourcing அதற்கு உங்களுடைய தொடரில் சில தகவல்கள் கிடைத்தது, மிக நன்றி.)

    என்றென்றும் அன்புடன்,
    அன்பு

    ReplyDelete
  2. பத்ரி, அருமையான கட்டுரை.

    இந்த கால்செண்டர்,பி.பி.ஓ கம்பெனிகள் எத்தனை காலம் - எல்லா ஆட்களையும் வீட்டுக்கு வந்து அழைத்து, கொண்டுவிட்டு செல்லப்போகிறார்கள். இவர்களின் வளர்ச்சி விகித ப்ளானை கவனித்தால் - ஆயிரக்கணக்கில் ஆள் சேர்ப்பு நடக்க இருக்கும் பட்சத்தில், எல்லோரையும் (அம்பத்தூரிலிருந்தோ, தொண்டையார்பேட்டையிலிருந்தோ, போருரிலிருந்தோ சோழிங்கநல்லூருக்கு டாடா சுமோ அல்லது குவாலிஸில் அழைத்து சென்று.. எல்லா ஊர் (சென்னை, பெங்களூர்...) சாலைகளும் இந்த வண்டிகளாலேயே நிரம்பியிருக்கும் போல.

    குமார்.வி

    பி.கு: ஒரு சம்பந்தமில்லாத கேள்வி: குங்குமம் 10 லட்சம் தாண்டி விற்றுள்ளதாமே
    சமீபத்திய குங்குமம் இதழை அட்டை டூ அட்டை விமர்சனம் பண்ணமுடியுமா ?
    மேலும் சுமார் ரூ.500 வைத்து பதிப்பிக்கப்பட்ட டாலர் தேசம் புத்தகம் இதுவரை எவ்வளவு விற்றுள்ளது. பெங்களூர் புத்தக கண்காட்சியில், கிழக்கு பதிப்பக புத்தகங்களுக்கு வரவேற்பு எப்படி ? தமிழில் கிரிக்கெட் மற்றும் அம்பானி டை புத்தகங்களை வாங்கினார்களா ?

    By: Kumar V

    ReplyDelete
  3. டாலர் தேசம் ரூ. 350 தான் (500 அல்ல). நன்றாகவே விற்கிறது.

    பெங்களூர் புத்தக கண்காட்சியில் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை.

    அம்பானி புத்தகம் சூப்பர் செல்லர். போட்டதெல்லாம் விற்று மேலே இன்னமும் அச்சிட்டிருக்கிறோம், அதுவும் பரபரவென விற்றுக்கொண்டுதான் இருக்கிறது. கிரிக்கெட் புத்தகங்கள் நிதானமாகத்தான் போய்க் கொண்டிருக்கின்றன. கிரிக்கெட் புத்தகங்கள் தமிழுக்குப் புதிதுதானே?

    ===

    குங்குமம் - விமர்சனம் செய்ய அதில் ஒன்றுமே இல்லை. ஆனால் குங்குமத்தை முழுதாக மாற்ற என்னிடம் ஒரு யோசனை உண்டு. அதைப்பற்றி எழுதுகிறேன்.

    ReplyDelete