Tuesday, October 12, 2004

ஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது

நேற்று மாலை ராதாகிருஷ்ணன் சாலையில் போக்குவரத்தில் சிறிது தடங்கல். தெருவோரத்தில் அதிமுக தொண்டர்கள் கைகளில் கொடியுடன் வரிசையாக நின்று கொண்டிருந்தனர்.

தெருவெங்கும் ஜெயலலிதாவின் உருவப் படங்கள், சிறு மின்விளக்குகளாலான 'அம்மா' உருவங்கள், கட்சிக் கொடிகள்.

பக்கத்து ஊர்களிலிருந்து வந்து குவிந்திருக்கும் வேன்கள், குழுமிய தொண்டர்கள்.

என்ன திருவிழா?

முதல்வர் ஜெயலலிதா ஆண்-பெண் சமத்துவத்துக்காக, பெண்களின் நிலை உயர்வதற்காகப் பாடுபட்டார் என்பதனால் உக்ரேன் நாட்டைச் சேர்ந்த The International Human Rights Defence Committee (IHRDC) என்னும் அமைப்பு ஜெயலலிதாவுக்கு The Golden Star of Honour and Dignity Award என்றதொரு விருதளிக்கும் விழாதான் அது.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த விருது பற்றி அஇஅதிமுக கட்சி சார்பில் ஒரு செய்தியறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இன்று ஜெயா டிவி சார்பில் பல செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்கள்.

மேற்படி அமைப்பு IHRDC கடந்த வருடங்களில் இந்த விருதினை ஐ.நாவின் கோஃபி அன்னான், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புடின் ஆகியோருக்கு வழங்கியுள்ளதாம். அந்த வரிசையில் வருகிறார் ஜெயலலிதா.

இதுபற்றிய தி ஹிந்து செய்தி, தினமணி செய்தி, தினமலர் படம்

மேற்படி விழாவில் கலந்து கொண்ட உலகத் தமிழ் இளைஞர்கள் கூட்டமைப்பின் (இப்படி ஓர் அமைப்பு இருப்பது உங்களில் யாருக்காவது தெரியுமா?) தலைவர் டாக்டர் விஜய் பிரபாகர் தன் சார்புக்கு, அடுத்த ஆண்டு அமெரிக்காவின் சர்வதேச நட்புறவுக் கழகம் என்னும் அமைப்பு ஜெயலலிதாவுக்கு சிறந்த அரசியல் தலைவருக்கான விருதை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

4 comments:

  1. தமிழர்கள் யாருக்கும் புரியக்கூடாதுன்னு உக்ரேனிய மொழியிலேயே இருக்கோ இந்த "பன்னாட்டு" அமைப்பு? அம்மாவுக்கு டாக்டர் பட்டமெல்லாம் அலுத்துவிட்டது போல. பிபிசியில முந்தா நாளு கோபாலன் இந்த விஷயத்தைச் சொன்னார். அந்த விஜய் பிரபாகருக்கு இந்த மாதிரி விருதுகளை ஏற்படுத்திக் குடுத்துக்கிட்டே இருக்கதுதான் வேலைன்னும் சொன்னார். அம்மாவோட பிபிசி செவ்வியப் பத்தி வாயே திறக்காத நம்ம பத்திரிகைகளெல்லாம் தங்கத் தாரகைக்கு மகுடம் சூட்டுறாங்க. இந்த விஷயத்துல பத்திரிகைகளை விட வலைப்பதிவுகள் எவ்வளவோ மேல்.

    ReplyDelete
  2. இதே போல முன்னே கிருஷ்ண ஸ்ரீனிவாஸ் என்ற ஒருத்தர் இருந்தார், அவர்க்கும் இது போல விருதுகள் வாங்கிக் குடுக்கிற ஏஜெண்ட் வேலைதான். அவர் இடத்தை பிரபாகர் பிடித்துக் கொண்டாரொ என்னமோ? :-)

    By: prakash

    ReplyDelete
  3. ஆனாலும் அநியாயம்ப்பா! தலைவிக்கு ஒரு அவார்டு கிடைக்கக்கூடாதே! ஆணாதிக்கச்சக்திகளெல்லாம் ஒண்ணா சேர்ந்திடுவீங்களே! தங்கத்தலைவிக்கு இதெல்லாம் சாதாரணம்!

    (ஆனாலும் ரொம்பத்தான் கோபப்பட்டுட்டீங்க தலைவி பி.பி.சி பேட்டில! அடக்கி வாசிச்சிருக்கணும்!)

    பச்சைச்சேலை, மேளம், தாளம்ன்னு கலக்கிட்டாங்க போல! உடன் பிறப்புகள்ன்னா சும்மாவா?

    எம்.கே.

    ReplyDelete
  4. அம்மாவோட பிபிசி பேட்டிய பார்க்கறதா, இல்லை நம்ப லல்லுக்கு வர யோசனைகளை படிக்கிறதா, இல்லை புஷ் - கெரி விவாதத்தை பார்ப்பதா... யப்பப்பா.. வெளிய போய் தனியா comedy படமெல்லாம் தேடவே வேணாம்...

    ReplyDelete