செவ்வியின் ஆங்கிலப் பிரதி வடிவம்
ஔச்! பொறி பறக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் நான் எதிர்பார்க்காத வகையில் ஜெயலலிதாவை கரன் தாபர் வெறுப்பேற்றினார்.
ஒரு நேர்மையானவர் எத்தனை கடினமான கேள்வியாக இருந்தாலும் மன சுத்தியோடு சரியான, அல்லது தன் மனதில் தோன்றும் யோக்கியமான பதிலைச் சொல்லியிருப்பார். சரி, போகட்டும். நேர்மையில்லாதவராக இருந்தாலும், ஒரு தேர்ச்சி பெற்ற அரசியல்வாதியாகவேனும் இருந்திருந்தால் எத்தனை கடினமான கேள்வியாக இருந்தாலும் அதை புத்திசாலித்தனத்தோடு கையாண்டு தனக்கு சாதகமாக மாற்றியிருக்க முடியும்.
ஆனால் ஜெயலலிதாவின் சுயரூபம் - ஆணவம், பதில் சொல்ல விரும்பாத மனநிலை, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்தல் - அத்தனையும் வெளிப்பட்டது.
தொடக்கத்தில் ஒருசில கேள்விகளுக்கு, ஜெயலலிதா தாளில் எழுதியவற்றைப் பார்த்துப் படிப்பது போல இருந்தது. கரன் தாபர் ஜெயலலிதாவிடம், ஏன் தாளிலிருந்து அறிக்கை படிப்பது போலப் படிக்கிறீர்கள் என்று கேட்டார். உடனே ஜெயலலிதா நான் பேசும்போது உங்கள் கண்களைப் பார்த்துத்தான் பேசுகிறேன். அவ்வப்போது குறிப்புகளைப் பார்த்துக் கொள்கிறேன், அவ்வளவே என்றார். ஆனால் ஜெயலலிதா அதைச் சொல்லும்போது கோபம் கொப்பளித்தது.
பல இடங்களில் ஜெயலலிதா அறிக்கை படிப்பதைப்போல கொள்கை விளக்கங்கள் கொடுக்கும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் கரன் தாபரும் இடைமறித்து வேறு கேள்வியைக் கேட்க ஆரம்பித்தார். அப்போதெல்லாம் ஜெயலலிதா கடும் கோபம் கொண்டார். தன்னை முழுதாகப் பேச விடவில்லை என்று புகார் சொன்னார். ஜெயலலிதா HardTalk போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பதே இல்லை என்று தெரிகிறது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் காலில் விழும், குலை நடுங்கும் கட்சித் தொண்டர்கள்தானே?
எந்தக் கேள்விக்கும் யோக்கியமான பதில் ஜெயலலிதாவிடமிருந்து வரவில்லை. தான் பாராளுமன்றத் தேர்தல் தோல்வியினால் உந்தப்பட்டே பல சட்டங்களை வாபஸ் பெற்றார் என்று ஒப்புக்கொள்ளவில்லை. இரண்டே வருடத்தில் தமிழகத்தின் நிதி நிலைமையை முழுவதுமாக சீர் செய்து விட்டதாக குண்டு விட்டார். தன் கட்சி ஆணித்தரமாக திராவிட பாரம்பரியத்தைச் சேர்ந்தது என்றார். பெரியார், அவரது மத எதிர்ப்பை மெதுவாக காற்றில் பறக்க விட்டு, அண்ணா 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று சொன்னதை எடுத்துக் காட்டினார். எம்ஜிஆர் பெயரை ஒருமுறை கூட சொல்லவில்லை. தான் தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டவள், தனக்கு சரியான குடும்பப் பின்னணியில்லாததால்தான் மீடியா தன்னை கேவலமாகப் பேசுகிறது என்றெல்லாம் சினிமா வசனம் விட்டார். அசிங்கமாக இருந்தது.
ஏன் மந்திரிகளை கோலிகுண்டு விளையாடுவது போல உருட்டி மாற்றி விளையாடுகிறீர்கள் என்று கேட்டதற்கு சடாரென "அது என்னுடைய உரிமை" என்றார். ஆம், ஒப்புக்கொள்கிறோம். செய்திறனை அதிகரிக்கவே அப்படியாம். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தொழிலாளர் நல அமைச்சரை மாற்றுவதனால் செய்திறன் அதிகமாகுமா?
கடந்த மூன்று வருடங்களாக வெளியிடங்களில் தன் கட்சியாளர்கள் தன் காலில் விழுவதில்லை என்றார். இது அப்பட்டமான பொய். (ஏன் வீட்டுக்குள் காலில் விழுகிறார்கள் என்று தாபர் கூட தோண்டித் துருவவில்லை.) கருணாநிதியின் காலிலும்தான் விழுகிறார்கள் என்று மீண்டும் அதற்கு பதில். பின், வயதானவர்கள் காலில் விழுந்து மரியாதை செலுத்துவது தமிழர் மரபு என்று பதில்.
கடவுள் நம்பிக்கை, எண்கணிதத்தில் நம்பிக்கை, பெயரில் ஓர் 'A' அதிகமாக சேர்த்தது போன்றவற்றுக்குப் பதில் சொல்லும்போது உண்மையைத் தவிர கோபம்தான் வெளிப்பட்டது. திடீரென இது எது பற்றியும் நான் உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை என்றார்.
கருணாநிதி கைதின் போது அவர்களது 'குடும்ப டிவி' டேப்பை எடிட் செய்து பொய்யாக செய்தி வெளியிட்டது என்றார். உண்மையாகவே இருக்கலாம். கருணாநிதி ஊழல் செய்ததால்தான் அவரைக் கைது செய்தேன் என்றார். அவர் மீது வழக்கு பதிந்தார்களா? அந்த வழக்கு என்னவானது? தான் தன் மீது போட்டிருந்த 12 வழக்குகளில் முழுமையாக விடுதலை அடைந்து விட்டதைப் பற்றி பெருமையாகப் பேசினார். டான்சி நில வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றி கருத்து சொல்லமுடியாது என்று மழுப்பினார். இதுதான் ஜெயலலிதாவிடம் ஒருவர் பகிரங்கமாக டான்சி ஊழல் வழக்கின் தீர்ப்பைப் பற்றி கேள்வி கேட்பது முதல்முறை.
சோனியா பற்றி பெரும் மழுப்பல். ஆனால் மீண்டும் எந்தவொரு வெளிநாட்டவரும் இந்தியாவில் ஆட்சி செய்யக்கூடாது என்பதே தன் கருத்து என்று ஆணித்தரமாக பதில்.
இன்னும் ஏதாவது கேள்விகள் இருக்கின்றனவா என்று எகத்தாளமாக தாபரைப் பார்த்து ஒரு முறைப்பு. தாபர் ஜெயலலிதாவிடம், நீங்கள் மிகவும் கடினமானவராக (tough) இருக்கிறீர்கள் என்றபோது, அதற்கு பதில்: "உங்களைப் போன்றவர்களால்தான்!". கடைசியில் தாபர் "உங்களிடம் பேசியதில் பெரு மகிழ்ச்சி" என்று சொல்லி கை குலுக்க வந்தபோது, பட்டென்று கையைக் கும்பிடு போட்டு "உங்களிடம் பேசியதில் எனக்கு துளிக்கூட மகிழ்ச்சி இல்லை" என்று விருந்தோம்பலில் சிறந்து விளங்கினார்!
ஜெயலலிதா நடுவில் ஒருமுறை "I'm sorry I agreed to do this interview." என்றார். உண்மைதான். ஏன் ஒப்புக்கொண்டார் என்று புரியவில்லை. பாதியிலேயே எழுந்து சென்றுவிடுவார் என்றுதான் நான் கூட நினைத்திருந்தேன்.
ராஜாவின் பதிவு
Saturday, October 02, 2004
Subscribe to:
Post Comments (Atom)
//குறிப்புகளைப் பார்த்துக் கொள்கிறேன், அவ்வளவே என்றார். ஆனால் ஜெயலலிதா அதைச் சொல்லும்போது கோபம் கொப்பளித்தது. //
ReplyDeleteஅதவிட மீண்டும் தாபர் பேப்பரில் இருந்து ஏதோ வாசிக்க ஆரம்பிக்க, உடனே ஜெ: இப்போது நான் உங்கள் கண்ணைப் பார்த்து பேசிக்கொண்டிருக்கிறேன், நீங்கதான் எழுதிவைத்ததை படிக்கின்றீர்கள் என்று பதிலுக்குபதில் கேட்டார் கவனித்தீர்களா.
மொத்தத்துல அதிரடியா இருந்துச்சு. இது நேரடி-இல்லதானா அப்போ எப்படி இதை ஒளிபரப்ப அனுமதித்தார்?
Karan Tapar பரவாயில்லை, முன்னாள் இருந்த Ian Sebastian இதைவிட அதிரடியாக பேட்டி காண்பார். அவராக இருந்திருந்தால் பளாரென்று அறைந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை :)
ReplyDeleteபரி,
ReplyDeleteIan Sebastian இருந்திருந்தால் - யாரு, யாரை?
அந்தப் பேட்டி முடிவில் " I can’t predict what will happen in the next elections but you will be around I suppose. Wait and see what happens " என்றார் ஜெயலலிதா. I suppose?????? . கரண் தாபர் ஒழுங்காக ஊட்டுக்குப் போய் சேர்ந்தாரா என்று விஜாரிக்கணும் :-)
ReplyDeleteBy: prakash
//Ian Sebastian இதைவிட அதிரடியாக பேட்டி காண்பார்//
ReplyDeletepari: Tim Sebastian?
By: prakash
Prakash: May be. It's been a too long. Atleast I got the last name correct :)
ReplyDeleteyes, Tim Sebastian.
ReplyDeletehttp://news.bbc.co.uk/1/hi/programmes/hardtalk/2000692.stm
By: rk
ஜெ. பரவாயில்லை...'தானைத்தலைவரை' வரவழைத்து குடும்ப அரசியல் பற்றியும், வைகோ திமுகவை விட்டு பிரிந்ததற்கான காரணம் பற்றியும், விடுதலைப் புலிகள் மீதான திமுகவின் தற்போதைய அணுகுமுறை குறித்தும் கேள்விகள் கேட்டால் என்ன பதில் வந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. உடனே கடந்த தேர்தலுக்கு முன்பு 'தானைத் தலைவரிடம்' ரஜினி - எம்.ஜி.ஆரை ஒப்பிட்டு கேள்வி கேட்ட 'மாட்டிக்' கொண்ட உள்ளூர் நிருபர் தான் நினைவுக்கு வருகிறார். எதற்காக இதை கூறுகிறேன் என்றால், 'தேர்ந்த அரசியல்வாதியாக இருந்திருந்தால்...' என்ற வரியைப் படித்தவுடன் ஏனோ இந்த நிகழ்வுதான் நினைவுக்கு வந்து தொலைத்தது!
ReplyDeleteடிம் செபாஸ்டியன் இப்பொழுதும் இருக்கிறார் - இந்த கரன் தாபர் ஹார்ட் டாக் சிறப்பு இந்திய நிகழ்ச்சி. ஹார்ட் டாக் இந்தியா.
ReplyDeleteபிபிசி, இந்தப் பேட்டியை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில்தான் எடுத்தனர். ஜெயலலிதா எப்படி இந்த ஒளிபரப்பை தடைசெய்திருக்க முடியும்? வேண்டுமானால் பேட்டியை பாதியிலே முடித்துக் கொண்டு, தாபரை அந்த இடத்தை விட்டுத் துரத்தியிருக்கலாம்.
மாயவரத்தான்: கருணாநிதி பிபிசியோ அல்லது வேறெந்த தொலைக்காட்சியோ முன்னேற்பாட்டுடன் செய்ய வந்த பேட்டியென்றால் மிகவும் கவனமாகவே நடந்து கொண்டிருப்பார். அவர் யோக்கியமானவர் என்று நான் சொல்லவில்லை, ஆனால் நிச்சயம் ஜெயலலிதாவை விடத் தேர்ந்த அரசியல்வாதி. சில பத்திரிகை நிருபர் கூட்டங்களில் அடிப்பேன், உதைப்பேன் என்றெல்லாம் பேசியுள்ளார்... ஆனால் அதெல்லாம் அவசர உணர்ச்சிக் கொட்டல்கள்.
இது போன்ற விஷயங்களிலெல்லாம், லாலு பிரசாத் யாதவ்தான் இந்தியாவிலேயே மிக அதிகத் திறமை வாய்ந்தவர். அவர் பத்திரிகை நிருபர்களிடம் கோபப்பட்டு எங்காவது பார்த்திருக்கிறீர்களா? ஏதாவது நேர்முகச் செவ்வியில் அவர் வெறுப்பாகிப் பார்த்திருக்கிறீர்களா? எவ்வளவு முறை அவரைக் கோமாளியாக்க என்.டி.டி.வி முயன்றது, ஆனால் அதையெல்லாம் சட்டை செய்ததேயில்லை அவர்.
பத்ரி, நீங்கள் லாலு பற்றி சொல்லும் போது இது எனக்கு ஞாபகம் வருகிறது.
ReplyDeleteஒரு முறை ஆஜ் தக்கில் லாலு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். அப்போது அவர் ரயில்வே மந்திரியாகி சில வாரங்களே ஆனது. அந்நிகழ்ச்சியில் ஒருவர் ,"நீங்கள் ரயில்வே மந்திரி ஆன பிறகு தான், பீகாரில் ரயிலில் நடக்கும் திருட்டு அதிகரித்துள்ளது. அந்த திருடர்கள் நீங்கள் ரயில்வே மந்திரி ஆன சந்தோஷத்தில் உங்களுக்கு கொடுக்கும் வரவேற்பா ? எங்களுக்கு ரயிலில் செல்வது பாதுகாப்பற்ற உணர்வினை அளிக்கிறது", என்ற ரீதியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. சமாளிப்பில் மன்னரான லாலு அன்று வெகுண்டு எழுந்து, கோபமாக, "இனி நீ ரயில்ல போகாதே" என்று சொல்லிவிட்டு நிகழ்ச்சியின் பாதியிலேயே எழுந்து சென்றுவிட்டார்.
¦ƒÂÄÄ¢¾¡¨Åô ÀüÈ¢ ¿ÁìÌ ¿ýÈ¡¸ò ¦¾Ã¢Ôõ ±ýÈ¡Öõ, º¢í¸ò¨¾ «¾ý ̨¸Â¢§Ä§Â (?!) ºó¾¢ò¾ ¸Ãñ ¾¡ôÀ÷, ¦ƒ.¨Å §ÅñΦÁý§È §¿¡ñÊÉ¡ü §À¡ø ±ÉìÌ §¾¡ýÈ¢ÂÐ. ±ôÀʧ¡, þÉ¢ ´Õ 6 Á¡¾ ¸¡Äò¾¢üÌ §ÅÚ ±ó¾ ¿¢ÕÀÕõ ¾Á¢ú¿¡ðÊüÌ ÅÃÁ¡ð¼¡÷¸û.
ReplyDeleteSuresh
By: Suresh