Monday, October 04, 2004

உலகப் புகழ் பெற்ற 'வைப்பாட்டிகள்'

வைப்பாட்டி என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்கு மன்னிப்புக் கோருகிறேன். Mistress என்பதற்கு சமமான, ஆனால் ஓர் எதிர்மறைக் கண்ணோட்டமில்லாத, யோக்கியமான சொல் உடனடியாகத் தோன்றவில்லை.

சென்ற வாரம் பிபிசியில் பார்த்த பல சுவாரசியமான நிகழ்ச்சிகளில் ஒன்று உலகப்புகழ் பெற்ற ஆண்கள் சிலரின் (மணமாகாப்) பெண் துணைகள் பற்றி. ஒவ்வொரு கதையும் சுவாரசியமானது. கதைகளைப் பின்னர் விரிவாகப் பார்க்கலாம் ;-) இப்பொழுது அவர்கள் பெயர்கள் மட்டும்.
  1. Price Charles, Camilla Parker Bowles
  2. Bill Clinton, Monica Lewinsky
  3. Thomas Jefferson, Sally Hemings
  4. John F Kennedy, Judith Campbell Exner
  5. Benito Mussolini, Margherita Sarfatti
  6. Aristotle Onassis, Maria Callas
  7. Charles Dickens, Ellen Ternan
  8. Francois Mitterand, Anne Pingeot
  9. Cecil Parkinson, Sarah Keays
இதில் யார் கதைகள் உங்களுக்குத் தெரியாது?

இதுபோல தமிழ்நாட்டில் ஒரு பட்டியல் போட வேண்டுமென்றால் யார் பெயர்கள் வரும்?

17 comments:

  1. Hi Badri, is it part of post modernist kalagam that you wrote this post? :-) Do you need this post and especially the last line? I think there are other commercial magazines to do this kind of job better. :-) Thanks and regards, PK Sivakumar

    By: PK Sivakumar

    ReplyDelete
  2. என்ன பத்ரி,

    யார்கிட்டயாவது அடி வாங்க ஆசையா?

    ReplyDelete
  3. பத்ரி சார், இது இங்க அவசியமா? Deviate ஆகலாமா?
    - பென்னி

    By: Benny A

    ReplyDelete
  4. 'ஆசை நாயகி' சரியா வருமா? (உபயம்: தினத்தந்தி வகையறா)

    ReplyDelete
  5. அப்பாடி! இவ்வளவு பலமான ரியாக்ஷன் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. முதலில் அந்த உறவுக்கு எந்தவொரு negative connotationஐயும் வைக்கவில்லை நான். சிலர் மணம் புரிந்து கொள்ளுகிறார்கள். சிலர் மணம் புரிந்து கொள்வதில்லை. சேர்ந்து வாழ்கிறார்கள். சிலர் (பொதுவாக ஆண்கள்) மணவாழ்வில் இருக்கும்போதே மற்றொரு பெண்ணுடனும் சேர்ந்து வாழ்கிறார்கள்.

    ஆனால் மேற்சொன்ன பலரின் கதைகள் சுவாரசியமானவை. பெனிடோ முசோலினியை எடுத்துக் கொள்ளுங்கள். அவரது முதல் 'ஆசை நாயகி' மார்கெரிடா சர்பாட்டி ஒரு யூதப்பெண். அவர்தான் 'தத்து பித்து' முசோலினியை ஓர் உறுதியான மனிதனாக்கினார். ஆனால் என்ன ஆனது? ஹிட்லருடன் சேர்ந்து கொண்டு முசோலினி பிற்காலத்தில் யூத வெறுப்பாளனாக ஆனார். சர்பாட்டியை அர்ஜெண்டினாவுக்கு நாடு கடத்தினார் (கொலை செய்யாமல் விட்டாரே!). பின் முசோலினி கிளாரா பெட்டாச்சி என்பாரை 'ஆசை நாயகி'யாக வைத்துக்கொண்டார். இரண்டாம் உலகப் போரின் முடிவில் இத்தாலிய எதிர்ப்புப் படையால் முசோலினி, பெட்டாச்சி இருவரும் பிடிக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டு நடுத்தெருவில் தலைகீழாகத் தொங்கி, செருப்பால் நாள் முழுவதும் அடிக்கப்பட்டு, பின் புதைக்கப்பட்டனர்.

    தாமஸ் ஜெபர்சன் கதை, சார்ல்ஸ் டிக்கென்ஸ் கதை - இப்படி மேற்சொன்ன பலரின் கதைகளும் சுவாரசியமானவையே. அதுபோன்ற கதைகள் தமிழகத்திலோ, இந்தியாவிலோ, இல்லையா என்ன?

    ReplyDelete
  6. Dear Badri,

    Do we really require this?

    Samuel Pepys' diaries (17th century) and to a certain extent Auto Shankar's diaries serialised in a Tamil magazine and later brought out as a book embark on this theme vividly.

    Pepy's (pronounced Peep) recordings are hailed as important micor-historical recordings of a real disturbed and turbulent period in the English history - marked by the political vaccum created by the death of Oliver Cromwel, the great London fire of 1666, the plague which killed thousands in the previous year and so on. It is a voluminous book worth reading for the language and the matter of fact narration.

    Shankar's book is yet to be judged as a worthy attmpt at recording history at lower middle class & sub altern levels with politicians of all hues walking in and out of the narration thruout. At best it appears sensational.

    rgds,
    era.mu

    By: eramurukan@yahoo.com

    ReplyDelete
  7. அட இன்னாபா இது...இவ்ளோ எதிர்ப்பா இதுக்கு..??

    வைப்பாட்டிகளை ஏன் தேடுறாங்கன்னு தெரிஞ்சா, முசோலினிலேர்ந்து, சரவணபவன் அண்ணாச்சி வரை உள்ளத்தை உருக்கும் கதைகள் வெளி வரலாம்...

    why do we have so much of inhibition/taboo on this subject..??

    ReplyDelete
  8. on Tim Sebastian and Karan Thappar
    -----------------------------------------------------

    Tim is still there conducting HardTalk interviews in BBC London. I remember writing about him in RKK (on his interactions with Yashwant Sinha - summer of 2002).

    Tim is also a novelist in English.

    Another real good British interviewer is John Snow of Channel 4. Totally unbiased and always anti establishment - I have watched people (both Pakistani's and Indians) crowding in Tandoori restaraunts in semi urban UK towns during the evening newscast by John when US invasion of Iraq was going on.

    John rejected an offer of knigthood from the Queen of England some years back.

    rgds,
    era.mu

    By: eramurukan

    ReplyDelete
  9. By the way, my post was inspired by a BBC Program! All names mentioned above, and their stories appeared in that BBC 30 minutes program. The program also mentioned one or two more names which were too local (British) and small-time, so I removed them.

    The program interviewed a few psycologists, socialogists (mostly women) and went a bit more into the minds of men & women, the social values in those times etc.

    Anyway, bowing to popular opinion, there shall be no further inputs from me on this topic and apologies for the sensational nature of the title.

    ReplyDelete
  10. தலைப்பினால் வந்த பிரச்சனை. ' வைப்பாட்டி' என்பது மிக மிகக் கொச்சையான வார்த்தை. குமுதம் பாணியில் இல்லாமல், மாட்டர் ஆஃப் பாக்ட் ஆக எழுதி இருந்தால் இத்தனை எதிர்ப்பு கிளம்பி இருக்காது

    By: prakash

    ReplyDelete
  11. Àòâ, ´§Ã Å¡÷ò¨¾ ¾¡ý §ÅÏÁ¡? "Á¨ÉÅ¢ÂøÄ¡¾ Ш½" ±ýÀÐ ´Õ §Â¡ì¸¢ÂÁ¡É À¢Ã§Â¡¸Á¡¸ þÕìÌÁ¡?

    By: Meenaks

    ReplyDelete
  12. :-) :-) :-) நான் தான் முதலிலேயே சொன்னேனே இதல்லாம் வேலைக்காவாதுன்னு. கலைஞர்
    ன்னா மஞ்சள் துண்டு போடணும். அம்மான்னா ஆட்டோ அனுப்பணும். கமல்னா முத்தம் குடுக்கணும், குமுதம்னா கவர்ச்சிப்படம் போடணும், விகடன்னா தமிங்கிலம் வளக்கணும். புகாரின்னா கவிதை . பத்ரின்னா, சோஷியோ பொலிடிக்கோ எகனாமிக்கோ ஸ்டாக் ப்ரோக்கோ மேட்டர் . ரஜினிகாந்துக்கு இன்னா பிரச்சனைன்னு இப்ப புர்ஞ்சிங்களா?

    By: yaaroo

    ReplyDelete
  13. Àòâ, §ÀÕ ¦¾Ã¢Â¡¾¾¡É¡Ä º¢ì¸ø ±ýÈ¡ø, «ó¾õÁ¡×ìÌ 'ŨÃÅ¢ý Á¸û' ±ýÚ ¦ÀÂ÷. ŨÃ× ±ýÈ¡ø ¾¢ÕÁ½õ. ŨÃ× þøÄ¡Á, 'ÍõÁ¡ «ôÊ' ÅîÍì¸È §Á¼õ ŨÃÅ¢ý Á¸û. (¾¢ÕìÌÈÇ¢ø ´Õ ÓØ «¾¢¸¡Ã§Á þÕ츢ȧ¾!) Á¨ÉŢ¢ý ¯Ã¢¨Á ±Ð×õ þøÄ¡¾, Á¨ÉŢ¢ý ¸¼¨Á¸û «ò¾¨ÉÔõ ¯¨¼Â §Á¼òÐìÌ «ó¾ô ¦ÀÂ÷.

    By: †Ã¢ ¸¢Õ‰½ý

    ReplyDelete
  14. நன்றி ஹரி! சரியான பெயர்ல அப்பப்ப சில கதைகளை எழுதுகிறேன்.

    ReplyDelete
  15. இந்தமாதிரி விஷயங்கள் நடப்பதே இல்லையென்றால் இதைப்பற்றி எழுதுவது தவறு எனலாம். ஆக, இதுமாதிரி விஷயங்கள் நம்மூரில் நடப்பதே இல்லை என்று கொள்ளலாமா?

    ReplyDelete
  16. அண்ணாச்சி - கிருத்திகா
    கமல்காசன் - சி..ன், கௌள..மி
    கண்ணப்பன் - சு.யா
    பிரபல தி.நகர் கடை அதிபர்கள் - நடிகைகள்


    இப்படி எத்தனையோ தமிழ் கூறும் நல்லுலகில் இருக்க எதிர்ப்பு எதற்கு :-)

    குமார்

    அடித்தால் க வருகிறதே.. கொஞ்சம் கவனிக்கவும். (உதா: கமல்காசன்)

    By: Kumar V

    ReplyDelete
  17. இந்த உரிமை ஆண்களுக்கு மட்டும்தானா? எப்போதோ யாரோ யாருடனோ ( சோபன் பாபு) "கோயிங் ஸ்டெடி" என்று கூறியதாக நினைவு!!!
    வெங்கட்

    By: srinivas venkat

    ReplyDelete