வெங்கட்ரமணன் எழுதிய அறிவியல் கட்டுரை ஒன்று இந்த மாத 'காலச்சுவடு' இதழில் வெளிவந்துள்ளது. இதழ் இன்னமும் சிஃபியில் ஏற்றப்படவில்லை. வந்தவுடன் சுட்டி தருகிறேன்.
குவாண்டம் இயற்பியல், கணினியின் அடிப்படை, டி.என்.ஏ மூலக்கூறுகள் போன்ற முக்கிய அறிவியல் கருத்துகளை மிக எளிமையாக, மேலோட்டமாக அறிமுகம் செய்கிறார். எப்படி அமெரிக்கர் ஒருவர் கிரிக்கெட்டை முதலில் பார்க்கும்போது குழம்புவாரோ, பின் படிப்படியாக விதிகள் புரிந்ததும் தானும் விளையாட்டில் ஈடுபடுவாரோ, அப்படியே அறிவியல் விதிகள் புரியப் புரிய, அறிவியலாளர்களும் புதுக் கண்டுபிடிப்புகளில் ("விளையாட்டு") ஈடுபடுவர் என்பதே கட்டுரையின் கருத்து.
இனி தொடர்ச்சியாக காலச்சுவடு இதழில் எழுதப்போகிறாரா என்று தெரியவில்லை. ஆள் இணையத்திலேயே காணக்கிடைப்பதில்லை. அச்சில் திடீரென வருவார் என்று எதிர்பார்க்கவில்லை.
குவாண்டம் கணினி (யுனைடட் ரைட்டர்ஸ் வெளியீடு, விலை ரூ. 55) புத்தகத்தின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைக் கருதலாம். ஆனால் அந்தப் புத்தகத்தில் இருக்கும் பல கட்டுரைகளை விட எளிமையாகவும், ஆரம்பப்பாடமாகவுமே இருக்கிறது இந்தக் கட்டுரை. (எ.கா: மேற்குறிப்பிட்ட புத்தகத்தில் 'நகலாக்கம்', 'குவாண்டம் கணினி' போன்றவை ஆழம் அதிகமான கட்டுரைகள்.)
விண்திகழ்க!
3 hours ago
பத்ரி,
ReplyDeleteவந்துகொண்டிருக்கிறேன். சில அசம்பாவிதங்களாலும், பல நல்ல விஷயங்களாலும் நான் எதிர்பாராத விதமாக இணையத்தை விட்டு விலகி நின்றேன். இதுதான் மறுவரவின் முதல் படி. இந்த நாட்களில் நான் எதையும் படிக்கக்கூட முடியவில்லை.
தமிழ்லினக்ஸ்.ஆர்க் பதிவு காலாவதியாகிவிட்டது; புதுப்பிக்க முடியவில்லை. இதற்கு நான் பலரிடமும் மன்னிப்புக் கேட்டாக வேண்டும். விரைவில் புது தளம், கணினி, நிரலி இவற்றுடன் மறுவருகைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன்.
ஆமாம், விதிகள் புரிந்தன, துவக்கம்தான், தொடர்ந்தும் எழுத உத்தேசம். இந்தத் தொடரில் வருங்காலத்தை மாற்றியமைக்கவிருக்கும் நானோதொழில்நுட்பம், உயிர்நுட்பம் உள்ளிட்ட பல விஷயங்கள் வரும். மொழிநடையச் சற்றே எளிதாக்க உத்தேசம்.
By: venkat
வெங்கட், ஆளையே காணோமேன்னு பாத்துட்டு இருந்தேன், வந்துட்டீங்க. மீண்டும் நல்வரவு. காலச்சுவடு கட்டுரைக்கு வாழ்த்துக்கள். இன்னமும் வாங்கிப் படிக்கவில்லை. அடுத்தது நானோடெக்னாலஜியா? பேஷ்... எளியோனுக்குப் புரிகிற மாதிரி இருக்கும் தானே?
ReplyDeleteBy: prakash
வாங்க வெங்கட். நானும் எங்க போய்ட்டீங்கன்னு பார்த்தேன். Take care.
ReplyDeleteவாங்க வெங்கட். மறுபடியும் உங்கள் எழுத்துக்கள் படிக்க முடியும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
ReplyDeleteBy: நவன் பகவதி
வாருங்கள் வெங்கட்! தொடர்ந்து எழுதவும்.
ReplyDeleteபத்ரி, வெங்கட் அவர்களின் கட்டுரை பற்றிய இந்த வலைப்பதிவிற்கு மிக்க நன்றி! பல வாரங்களாகவே தமிழ்லினக்ஸ்.ஆர்க் இயங்காதது பற்றியும் வெங்கட் அவர்களின் விமர்சனம் எந்தக்குழுவிலும் இடம் பெறாதது பற்றியும் வருத்தமாக இருந்தது. வெங்கட் அவர்களின் மறுமொழி மகிழ்ச்சியளிக்கிறது.
ReplyDeleteBy: ஜெ.உமா மகேஸ்வரன்