ஆஸ்திரேலியா 316/5 (90 ஓவர்கள்) - கிளார்க் 76*, கில்கிறிஸ்ட் 35*
தேநீர் இடைவேளைக்குப் பிறகான ஆட்டம் முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவின் பக்கம். நான் எதிர்பார்த்தது போலவே காடிச், கிளார்க் ஜோடி எந்தக் கவலையும் இல்லாமல் ரன்களைக் குவித்தது. கும்ப்ளேயின் மோசமான ஒரு பந்தில்தான் காடிச் அவுட்டானார். கால்திசையில் வந்த பந்தை பேசாமல் விட்டிருக்கலாம். அதை புல் செய்யப்போக, பந்து பேட்டில் படாமல் கால் காப்பில் பட்டு உள்ளே வந்து லெக் ஸ்டம்ப் மீது விழுந்தது. சுலபமாகக் கிடைக்கக்கூடிய ஒரு சதத்தை விட்டார் காடிச்.
கும்ப்ளே 400 விக்கெட்டுகளை எடுத்து விட்டார். ஆனால் இன்றைய அவரது பந்து வீச்சு சுமார்தான்!
அந்த ஒரு விக்கெட் போனாலும் கடைசிப் பகுதியில் ஆஸ்திரேலியா 32 ஓவரில் 139 ஓட்டங்களைப் பெற்று (ஓவருக்கு 4.34 ரன்கள்) இப்பொழுது நல்ல நிலையில் உள்ளது. கங்குலி (பேசாமல் பெவிலியனில் உட்கார்ந்திருக்கலாம்) தேவையில்லாது சேவாகிடம் பந்தைக் கொடுத்து, வாங்கிக் கட்டிக்கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக தன்னம்பிக்கை அதிகமான கிளார்க் ஹர்பஜன், கும்ப்ளே, பின்னர் பதான், கான் என்று எல்லாரையும் விளாசினார். கில்கிறிஸ்டுக்கு ஒரு மாதிரிதான் விளையாடத் தெரியும் - பந்தை மொத்துவது.
முதல் டெஸ்டில் விளையாடும் கிளார்க்கின் பேட்டிங் மிக நன்றாக இருக்கிறது. சுழற்பந்து வீச்சாளர்களைக் கண்டு சிறிதும் பயப்படவில்லை அவர். மிட்விக்கெட் மீதும், லாங் ஆன் மீதுமாக இரண்டு ஆறுகள், ஆடுகளத்தின் ஒவ்வொரு திசையிலும் அடித்த பதினொரு நான்குகள் என்று தன் கன்னி இன்னிங்ஸில் 76 ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இதே போல் விளையாடினால், அதிர்ஷ்டம் இருந்தால், நாளை சதம்தான்.
நாளின் முதலிரண்டு வேளைகளில் கிடைத்த நல்ல நிலையை கடைசி வேளையில் மொத்தமாக இழந்து நிற்கிறது இந்தியா.
டோலி சாய்வாலாவும் பெருமாள் முருகனும்…
5 hours ago
சொல்லி அடிப்பாரு 'கில்லி' என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்!! :-)
ReplyDeleteஆட்டத்தின் தொகுப்புரையை மிகவும் சுவையாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி.
ReplyDelete