இந்தியா 199/7 (71 ஓவர்கள்) - படேல் 35*, கும்ப்ளே 2*
பார்திவ் படேல், இர்பான் பதான் ஜோடி மிகப் பொறுமையாக காலை முழுதும் விளையாடி ரன்கள் அதிகமாகப் பெறாவிட்டாலும் விக்கெட்டை இழக்காதிருந்தனர். கடைசியில் பில்லி பவுடன் கொடுத்த தவறான தீர்ப்பால் பதான் அவுட்டானார். ஷேன் வார்ன் வீசிய பந்து ஸ்பின்னாகி பதானின் கால் காப்பில் பட்டு, கில்கிறிஸ்டால் கேட்ச் பிடிக்கப்பட்டது. பவுடன் பந்து பேட்டின் உள்புற விளிம்பில் பட்டு பின் கால்காப்பில் பட்டுப் போயிருக்க வேண்டும் என்று தீர்மானித்தார். டிவி ரீப்ளே அப்படியாகவில்லை என்று காட்டியது.
காலையில் 27 ஓவர்களில் இந்தியா ஒரு விக்கெட்டை இழந்து 49 ரன்கள் பெற்றுள்ளது. கும்ப்ளே இனி படேலுக்கு எவ்வளவு நேரம் துணையாக இருக்கிறார் என்று பார்க்க வேண்டும். இன்னமும் ஃபாலோ-ஆனைத் தவிர்க்க 76 ரன்கள் எடுக்க வேண்டும். ஆனால் ஆஸ்திரேலியா இந்தியாவை மீண்டும் பேட் செய்யச் சொல்லாது என்றே தோன்றுகிறது. மீண்டும் தாங்களே பேட்டிங் செய்து இந்தியாவின் இரண்டாம் இன்னிங்ஸ் இலக்காக 500 ரன்களுக்கு மேல் நிர்ணயிப்பார்கள் என்றே தோன்றுகிறது.
அந்தேரியில் மூன்று தினங்கள்…
6 hours ago
No comments:
Post a Comment