Wednesday, January 19, 2005

கிராம வருமானத்தை இரட்டிப்பாக்க என்ன செய்யவேண்டும்? - 1

இந்திய கிராமங்களில் தற்போதைய சராசரி வருமானம் ஒரு தலைக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 என்று வைத்துக்கொள்வோம் (Per capita income). [சில மாநிலங்களில் இது ரூ. 4,000-7,000 வரை கூட உள்ளது.]

இது மிகவும் குறைவானது; அதிகரிக்கப்பட வேண்டியது என்பதில் யாருக்கும் ஐயமிருக்காது.

இந்த வருமானத்தை ரூ. 10,000-இலிருந்து ரூ. 20,000 ஆக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

இந்தக் கேள்விக்கு நேரடியான, எளிதான பதில் கிடையாது.

கிராமங்கள் என்றால் 500-லிருந்து 5,000 வரையிலான மக்கள்தொகை உடைய இடம் என வைத்துக்கொள்வோம். இந்தியாவில் கிட்டத்தட்ட 600,000 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கிட்டத்தட்ட 60 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இங்கு விவசாயம், மீன்பிடித்தல் போன்றவைதான் பிரதான தொழில்.

கிராமங்களில் இப்பொழுதைய குறை என்ன?

1. வருமானப் பற்றாக்குறை
2. அதனால் தேவையான வசதிகள் இல்லாமை

இதை சற்றே விரிவாகப் பார்த்தால்:

* வருமானக் குறைவினால் சிறு பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் சரியான போஷாக்கில்லாமை - malnutrition.
* சிறு கிராமங்களில் போதிய அளவு கல்வியறிவு இல்லாமை; கல்விக்கூடங்கள், நல்ல ஆசிரியர்கள் இல்லாமை (அ) குறைவு
* ஆரம்பச் சுகாதார வசதியின்மை. பிள்ளைப்பேறின்போது தாய் இறப்பது, சிறுகுழந்தைகள் சாவு (infant mortality)
* இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாப்பின்மை (மழை, வெள்ளம், வறட்சி)
* தொழில்கள் யாவும் (விவசாயம், கால்நடைகள் வளர்த்தல், மீன்பிடித்தல்) இயற்கையை நம்பி இருப்பதால், தொடர்ச்சியான, நம்பிக்கை தரக்கூடிய வருமானம் இல்லாதிருத்தல். காப்பீடு செய்யாததனால் இழப்பைச் சரிக்கட்ட முடியாத நிலை. அரசை நம்பி, அரசு தரும் மான்யத்தை நம்பி இருக்கவேண்டிய நிலை.
* முறையான கடன்வசதி பெறக்கூடிய நிலை இல்லாதிருத்தலினால், முறைசாராக் கடன், அதுதொடர்பான கடன் தொல்லை, வறட்சியின் போது கடனைத் திருப்பிக்கொடுக்க முடியாத நிலையில் தற்கொலைகள்.

* இதைத்தவிர பல்வேறு சமூகக் குறைபாடுகள் - சாதி, மதம், தீண்டாமை, ஆண்-பெண் பிரச்னை, நிலவுடைமை/பெருந்தனக்காரர் கையில் சிக்கிய ஏழைகள் நிலை, அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படுதல், சுரண்டப்படுதல் என்ற பிற தொல்லைகள்.

-*-

இந்நிலையில் கிராம வருமானத்தை எப்படி இரட்டிப்பாக்குவது?

தகவல் தொழில்நுட்பம் மூலம் கிராம வருமானத்தைப் பெருக்க முடியுமா? அதன்வழியாக கிராமப் பொருளாதாரத்தில் வளர்ச்சியைக் காண முடியுமா?

17 comments:

 1. தேவையான, அவசியமான பதிவு. எங்களது ஊரும் நீங்கும் சொல்லும் வகையிலொரு கிராமம்தான்... இந்த தொடரை வழக்கத்தைவிட ஆர்வமுடன் தொடர்ந்து படிப்பேன், ஏதாவது செய்யவேண்டும். நன்றி பத்ரி.

  ReplyDelete
 2. தகவல் தொழில்நுட்பம் ஒரு கருவியாக உபயோகப்படுமே அன்றி அதுவே முக்கியக் காரணியாக அமைய முடியாது.

  விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல். இது ஏற்கனவே ஓரளவுக்குச் செயல்பட்டாலும் நடைமுறைச் சிக்கல்கள் அதிகம். அதில் முக்கியமானது நிலத்தின் அளவு. தமிழகத்தில் பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகள்தான். தொழில்நுட்பத்தில் செய்யும் முதலீட்டுக்கு சரியான வருவாய் கிடைக்காது என்ற காரணத்தால் இன்றும் புறக்கணிக்கிறார்கள். துண்டு துண்டாக கிடக்கும் நிலங்களை ஒன்று சேர்த்துச் செய்யலாம் என்றால் குடுமிப்பிடி சண்டை உத்திரவாதம்.

  கால்நடை வளர்ப்பு, கோழிப்பண்ணை போன்ற முறைப்படுத்தப்பட்ட(ஓரளவுக்கேனும்) தொழில் இல்லை. 10-15 ஆடுகள் வளர்த்தோமா, கொழுத்த ஆட்டை ஞாயிற்றுக் கிழமை கசாப்புக் கடைக்கு அனுப்பினோமா என்றுதான் பொழுது ஓடுகிறது. இந்த ஆடுகளுக்குத் தீனி போடுவதே ஒரு பெரிய பாடு. முற்றிலும் இயற்கை உணவையே நம்பியிருக்க வேண்டிய நிலை. வறண்ட காலத்தில் இது ஒரு பெரிய பிரச்சினை.

  இன்னும் நிறைய எழுதலாம்.... ஹும்.... என்னத்த எழுதி என்னத்த பண்ண...

  ReplyDelete
 3. Àòâ ¯í¸Ç¢É À¡÷¨Å ŧÃüì¸òòì¸Ð¾¡ý.¸¢Ã¡Á¢Âô ¦À¡ÕÇ¡¾¡Ãõ ÅÇ÷óÐÅ¢¼ìܼ¡Ð ±ý¸¢È ±ñ½ò¾¢ø¾¡ý Áì¸û ¬ÇôÀθ¢È¡÷¸û. «øÄÐ ¬ðʨÅì¸ôÀθ¢È¡÷¸û. «Å÷¸Ç¢ý Å¡ú× §ÁõôÀ¼§ÅñÎÁ¡É¡ø «Å÷¸ÇÐ º¢ó¾¨É¢ø ¿¢¨È Á¡Ú¾ø ÅçÅñÎõ. ¿õ ¦À¡ÕÇ¡¾¡Ã ;ó¾¢Ã§Á ÍÂÁ⡾ÔûÇ ÁÉ¢¾É¡¸ Å¡Æ ÅÆ¢ ÅÌìÌõ ±ý¸¢È ±ñ½ò¨¾ ¸¢Ã¡Á Áì¸Ç¢ý Áɾ¢ø ÅÇçÅñÎõ.

  «ÅÛ¨¼Â þó¾ º¢ó¾¨É ÅÇ÷¨Â ¿õ ƒ¡¾¢Â «¨ÁôÒ¸û, «ÅÛìÌû Å¢¨¾ì¸ôÀðÎûÇ ã¼ ¿õÀ¢ì¨¸¸û, «Ãº¢Âø ¸ðº¢¸û ±øÄ¡§Á §º÷óÐ ÓðÎì¸ð¨¼ §À¡Îõ.

  ¸¢Ã¡Á¢Â ¦À¡ÕÇ¡¾¡Ã ÅÇ÷ ±ýÀÐ ¦ÅÚõ ¦¾¡Æ¢ø ÒÃðº¢Â¢É¡ø ÁðΧÁ º¡ò¾¢Â¦ÁýÚ §¾¡ýÈÅ¢ø¨Ä. ºãìôÀ¡÷¨Å¢ø ¿¢¨È Á¡Ú¾ø¸û §¾¨Å. ¿¢¨È þÐ ÀüÈ¢ Ţš¾¢ì¸ §ÅñÎõ. ¬É¡ø ¿õÁ¡ø ÓÊÔõ ±ý¸¢È ¿õÀ¢ì¨¸ ¿¢¨È§ŠþÕ츢ÈÐ. ¯í¸¨Çô §À¡ýÈ þ¨Ç»÷¸¨Ç À¡÷ìÌõ§À¡Ð.

  ;¡í¸ý.

  ReplyDelete
 4. பத்ரி, இது நல்ல சிந்தனை. உற்பத்தியைப் பெருக்குவதற்குப் பரி கூறியதைப் போலப் பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஒரு கூட்டுறவு போல, பலருடைய நிலங்களையும் ஒருங்கிணைத்துத் தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பயன்படுத்திச் செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும். நடைமுறைச் சிக்கல்கள் பற்றிச் சொல்ல முடியவில்லை. நீங்கள் எழுதப் போவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 5. பத்ரி, இது நல்ல சிந்தனை. உற்பத்தியைப் பெருக்குவதற்குப் பரி கூறியதைப் போலப் பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஒரு கூட்டுறவு போல, பலருடைய நிலங்களையும் ஒருங்கிணைத்துத் தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பயன்படுத்திச் செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும். நடைமுறைச் சிக்கல்கள் பற்றிச் சொல்ல முடியவில்லை. நீங்கள் எழுதப் போவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  -செல்வராஜ்.

  ReplyDelete
 6. ¸¢Ã¡ÁôÒÈí¸Ç¢ý À¢ÃɸÙìÌû ¾¨Ä¨Â ѨÆì¸ò §¾¨ÅÂ¡É ¾¸Åø¸û ±ýÉ¢¼õ þø¨Ä. «ó¾ô À¢ÃɸÙì¸¡É ¾£÷¨Å, ÁüÈÅ÷¸û ±Ø¾ì ¸¡ò¾¢Õ츢§Èý. ¿£í¸û §¸ðÊÕó¾ ' ÅÕÁ¡Éò¨¾ þÃðÊôÀ¡ìÌÅÐ ±ôÀÊ " ±ýÈ §¸ûÅ¢ìÌ ¦¸¡ïºõ «Äº¢É¡ø Å¢¨¼ ¸¢¨¼ìÌõ. ´Õ Á£ÉÅ ¸¢Ã¡Áò¨¾ ¯¾¡Ã½Á¡¸ì ¦¸¡û§Å¡õ. «ó¾ì ¸¢Ã¡Áò¾¢ø ³áÚ ÌÎõÀí¸û þÕ츢ýÈÉ. Á££ýÀ¢ÊìÌõ ¦¾¡Æ¢Ä¢ø, «Å÷¸Ç¢ý ¬ñÎ ÅÕÁ¡Éõ 12 ¬Â¢Ãõ åÀ¡ö ±ýÚ ¨ÅòÐì ¦¸¡û٧šõ. þ¨¾ ¬ñÎìÌ þÕÀòÐ ¿¡Ä¡Â¢ÃÁ¡¸ Á¡üȧÅñÎõ. «¾üÌ , þô§À¡Ð À¢Êì¸¢È Á£ý¸¨Ç Å¢¼ þÕÁ¼íÌ «¾¢¸Á¡¸ô À¢Êì¸ §ÅñÎõ. þÐ «Åí¸Ù째 ¦¾Ã¢Â¡¾¡...ýÛ Ó¨È측¾£÷¸û. «Å÷¸ÙìÌò ¦¾Ã¢Ôõ. ¬É¡ø «¾üÌò §¾¨ÅÂ¡É °üÚ¸û ( resources) «Å÷¸Ç¢¼õ þø¨Ä. «¨Å ±ýɦÅýÈ¡ø, þÕÁ¼íÌ «¾¢¸Á¡É Á£ý¸¨Çô À¢Êì¸ò §¾¨ÅÂ¡É ¯À¸Ã½í¸û, ¸ÕÅ¢¸û, «¨¾ Å¡í¸, Åí¸¢ì ¸¼ý ź¾¢, ¸ðý ¦ÀÈò §¾¨ÅÂ¡É , ¦Ã¡õÀ×õ ÀÂÓÚò¾¡¾ ±Ç¢Â ¦ºÂøӨȸû, ¸¡ôÀ£Î ź¾¢¸û, ÁüÈ ºÖ¨¸¸û, ¯¼ø¿Äį̀È× ²üÀðÎ, ¦¾¡Æ¢ø À¡¾¢ì¸¡Áø þÕì¸, ¿øÄ ÁÕòÐÅÁ¨É, ͸¡¾¡Ã ¨ÁÂí¸û §À¡ýÈ Åº¾¢¸û þÕóÐ, «Å÷¸û ¯üÀò¾¢ ¦ºöÔõ ¦À¡Õð¸ÙìÌ ºÃ¢Â¡É ¦¸¡ûÓ¾ø Å¢¨ÄÔõ þÕó¾¡ø, ´ÕÅÕ¼ò¾¢ø «Å÷¸ÇÐ ÅÕÁ¡Éõ þÃðÊôÀ¡Ìõ. Á£ý À¢ÊôÀÐ º¡÷ó¾ §ÅÚ ²§¾Ûõ Ш½ò ¦¾¡Æ¢ø¸û þÕó¾¡ø «ÅüÈ¢ø, Á£ÉÅìÌÎõÀò¨¾î §º÷ó¾ Á¸Ç¢ÕìÌ À¢üº¢ «Ç¢òÐ, ¯Àâ ÅÕÁ¡Éõ ¸¢¨¼ì¸ ÅÆ¢ ¦ºöÂÄ¡õ. ¸½¢½¢¸û, §¿ÃÊ¡¸ ¸¢Ã¡ÁôÒÈ ¦À¡ÕÇ¡¾¡Ã ÅÇ÷¢ø ¯¾Å¢ ¦ºöÔõ ±ýÚ ¿¡ý ¿¢¨Éì¸Å¢ø¨Ä. ¦¸¡ïºõ §À¡Ä ÅÇ÷ó¾ ¸¢Ã¡Áò¨¾, þýÛõ ¦ºÆ¢ôÀ¡ì¸, ¸½¢½¢Ôõ þ¨½ÂÓõ ¯¾Å¢ ¦ºöÔõ.

  By: icarus

  ReplyDelete
 7. இந்த தலைப்பிற்கென்று தனி Blog அமைக்கலாம். தகவல் தொழில் நுட்பம் ஒரு கருவியாகத்தான் அமையும்.

  ஒவ்வொரு கிராமத்திற்குமான தனித்துவம் niche என்ன என்பதைக் கண்டு அதற்கேற்றபடி செயல் பட வேண்டும்.

  எமது சிந்தனைகள்
  -அழைப்பு மையங்கள் கிராமப்புறங்களுக்கு அருகாமையில் அமைப்பதன் மூலம், கடைகள் அதிகம் முளைக்க வாய்ப்பு உள்ளது. ஆங்கிலம் தேவையாக இருப்பினும், நகர்ப்புற நெரிசல் வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருக்கிறது.

  - நகர்ப்புற வளர்ச்சியின் மூலமாக, சுற்றுலா மற்றும் பயணம் அதிகரித்து வருகிறது. சிறு தொழில்கள் (கைவினை, விடுதிகள்) முதலியவற்றை ஊக்கப்படுத்தினால், விவசாயத்தையே சார்ந்து இருப்பதை தவிர்க்கலாம்

  - நகர்ப்புற மக்களிடம் இருக்கும் பணப்புழக்கத்தை மற்ற இடங்களுக்கு வினியோகம் செய்ய, அம்மக்களுக்கான சேவைகளை அளிக்க வேண்டும். உதாரணமாக, தயாரிக்கப்பட்ட உணவு, நறுக்கப்பட்ட காய்கறிகள் போன்றவற்றின் மூலம், வருமானத்தை பெருக்கலாம்.

  - அமெரிக்க மத்திய அமெரிக்க நாடுகளில், அமெரிக்க சோளத்தை திணித்து அங்குள்ள விவசாயிகள் வயிற்றில் மண்ணள்ளி போட்டுவிட்டது. அது மாதிரி, அரிசி, தானியங்களையே நம்பி இருந்தால், நம் ஊரில் இதே கதி வந்து விடும்.  By: NS

  ReplyDelete
 8. கிராமப்புறத் தொழில்களை வரிசைப்படுத்தவேண்டும். விவசாயம், விவசாய்ம் சார் பண்ணைத் தொழில்கள், அதை ஒட்டிய சிறு தொழில்கள்(கடை, கூவி விற்பவர்கள்) விவசாயம் சாரா தொழில்கள் என.

  தற்பொழுது நடைமுறையில் இருக்கும் மார்க்கெட், கிராமங்களின் உற்பத்தியை உறிஞ்சி, தரத்தையும் , விலையையும் நிர்ணயிக்கும் முறையாகவே உள்ளது எனச் சொல்லலாம்.
  உதாரணமாய், ஒரு ஜூஸ் தொழிற் சாலையை எடுத்துக்கொண்டால், அது பழத்தை வாங்கும் விலையையும் அது ஜூசாய் விற்கும் விலையையும் , அது ஒரு பாட்டிலுக்கு பெறும் லாபத்தையும் கணக்கில் கொண்டால், அந்த லாபத்தின் நேரடி பங்கு போகாமல், பெரும்பாதிப்பு பழத்தை கொடுக்கும் கிராமத்தானுக்குதான் போய்சேரும். இதே போன்றே இன்னபிற தொழில்களையும் ஓரளவு அலசமுடியும். [மாசா எவ்வளவு 15 ரூபாயா, இரண்டு மாம்பழம் எவ்வளவு?]
  இந்த உறிஞ்சுதலுக்கு முதலில் அரசு அளவில் சட்டம் வந்தால் பெரு மாற்றம் உண்டாகலாம். ஏற்கனவே ஏதாவது இருக்கும் என்று தெரியும். ஆனால் கிராமம் மட்டும் ஏன் அப்படியே உள்ளது என்பதுதான் பிரச்சினை.

  இன்னொரு முக்கியமான கலாச்சரத் தடை, என நான் நினைப்பது, நகர்ப்புற மக்கள் நேரடியாய் கிராமத்து பொருட்களை வாங்கமுடியாமைதான்.
  முதலில் சிந்தனை அளவில் உள்ள பரிகசிப்பு, மட்டமாய் நினைத்தல், இரண்டாவது கிராமங்கள் நகர்களிலிருந்து அறுந்து கிடப்பது.

  கமர்சியல் முன்னேற்றத்துக்கு, கமர்சியலான யோசனைகளைத் தான் சொல்லவேண்டும்,
  சிந்தனை வளர்த்து, அவன் சுயமா சிந்திக்க ஆரம்பித்து ... அதெல்லாம் மூக்கை சுத்தி தலைய தொடுற கதை. (அதற்காக படிப்பு வேண்டாம் என்று சொல்லவில்லை...உடனடியாய் செய்யவேண்டியது அதுவல்ல என்கிறேன்.. மேலும் கிராமங்களின் பள்ளிகளின் நிலைமை என்னை இன்னும் கடுப்பேத்துகிறது)
  பலாப் பழம் வாங்கனும்னா எத்த்னை பேருக்கு அவரவர் வாழும் பகுதியிலே கிடைக்கும்? எல்லோரும்
  டி-நகர் போகவேன்டியுள்ளதுதானே. இது போல் இன்னும் எத்தனையோ பொருட்கள். காதிகிராப்ட் போல் இருக்கும் கடைகளை நகர்ப்புறத்தில் ஆதரிக்கும் /பொருட்கள் வாங்கும் மக்கள் எத்தனை சதவீதம்?
  நகரின் பணம் நேரடியாய் கிரமங்களுக்கு போய்ச்சேர வழி உண்டாகாவிடில், இன்றல்ல இன்னும் 50 வருஷங்களுக்கு கிராமங்கள் தற்போதுள்ள மாதிரி அறுந்து/நலிந்து போய்தான் இருக்கும்.

  தொடரும்.....

  By: karthikramasBy: karthikramas

  ReplyDelete
 9. செமத்தியா இருக்கு இந்த இழை. ஜாலியாயிட்டேன்.

  'என்னத்த எழுதி என்னத்தச் செய்ய'- என்னத்த கன்னையா(பரி) பெசிமிஸ்டுகளை முதல்ல 4 அடி போடணும்.

  ப்ரகாஷ், 12000-த்தை இரட்டிப்பாக்க இரண்டு பங்கு மீன் பிடிக்கணுங்கறது சின்னப் பாப்பா சொல்ற கணக்கு. அக்கிரமமும்கூட. பரி சொல்றமாதிரி சிறு அளவுல தொழில் செய்யறவங்களுக்கு ஓரளவுக்கு மேல தொழில்நுட்ப விஷயங்கள்ல முதலீடு செய்யமுடியாது.

  அதனால அதுக்கும் முன்னால வெளில கடைசி நுகர்வோருக்குப்(வீட்டுல மீன்குழம்பு வெக்கற அம்மணி) போகும்போது அந்த மீனோட விலை என்னவோ அதுக்கும் பிடிக்கறவர்கிட்டேயிருந்து வாங்கற விலைக்குமான வித்தியாசத்தை நிறைய குறைக்கணும். இதுதான் மீன்பிடின்னு இல்லாம எல்லா கிராம உற்பத்திலயுமே அடிவாங்குது. கொஞ்சம் வயித்தெரிச்சலான விஷயமும்கூட.

  கார்த்திக்ராம்ஸ் point! well said.

  ReplyDelete
 10. இந்த சுட்டிகளையும் படிக்கவும் :-)

  http://us.rediff.com/money/2004/dec/21spec.htm
  http://economictimes.indiatimes.com/articleshow/980749.cms
  http://www.telegraphindia.com/1050105/asp/business/story_4213526.asp

  அகலப்பாட்டை வந்து எல்லோருக்கும் உண்ண உணவு கிடைக்குமோ இல்லையோ எல்லோருக்கும் 'பலான' விஷயங்கள் எளிதில் கிடைக்க வழி செய்யும். இப்போதே நம் நாட்டில் விசிடியிலும், செல்பேசிகளிலும் 'பலான' விஷயங்களுக்கு கிராக்கி அதிகம்.

  - அலெக்ஸ்

  By: Alex Pandian

  ReplyDelete
 11. முதலில் இந்த இழையில் முக்கா வார்த்தையில் "நல்ல ருக்கு " என்று பின்னுட்டம் அடிக்கும் ஜேஸ்ரீ போன்ற
  ஆட்களுக்கு 4 அடி போட வேண்டும். :-)

  முதலில் கிராமங்கள் தோறும், நகர மக்கள் புழங்குவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

  அரசுசார் அல்லது அரசு சாரா நிறுவனங்கள்
  சுற்றுலா, தங்குமிடங்கள் போன்றவற்றை உண்டாக்கலாம்.
  இது எல்லா கிராமங்களிலும் முடியாது. ஆனால் நிறைய கிராமங்களில் செய்ய முடியும்.
  தேனி போன்ற இடங்கள் இதற்கு உதாரணம்(தேனி நான் போனதில்லை/கேள்விப்பட்டதை சொல்கிறேன்).
  இது போன்ற தங்குமிடங்களில் , அக்கிராமத்தில் கிடைக்கும் சிறப்பு (ஸ்பெஷல்) மற்றும் அடிப்படை பொருட்களை
  சுற்றுலா வருபவர்களுக்கு கிடைக்கும்படிசெய்யலாம். இது கிராமப்பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும்.
  உதாரணமாய், இந்த நாரில் செய்த இருக்கைகள்/சோபாக்கள் போன்றன.
  இதை முதலில் சிறிய அளவில் ஆரம்பித்து, பின்னர் [இணையாக,parallel] பெரிதாக்கலாம்.
  இந்த கிராமங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளிலேயே, சுற்றுலா வர்பவர்களின் நகரத்திலிருந்து தேவையான அத்தியாவசிய பொருட்களை வரவிக்கலாம்.
  இந்த இடத்தில் அரசு துறைகளிடையே இன்னும் [co-operative] ஒத்துழைப்பு சார்ந்த திட்டங்கள் தேவை.
  இது போல் மாநில அரசுத் துரைகளிலேயே , ஒன்றுக்கு மேற்பட்ட துறைகள் சேர்ந்து இயங்கும் திட்டங்கள் உள்ளதா எனத் தெருயவில்லை. உதாரணமாய், சுற்றுலா வருபவருக்கு உணவுக்கென்று ஒரு நல்ல உணவுவிடுதியை சுற்றுலாத்துறை தவிர பிற துறை அமைத்துத்தரலாம்.

  இது போன்ற (package) திட்டங்கள் மிகப் பெரும் வெற்றியைத் தரும் வாய்புள்ளது. மேலும் சுற்றுலாவருபவர்களை ஊக்குவிக்கவும் செய்யும்.
  இன்று நகர் வாழ் மக்கள் கிராமம் என்று சொன்னவுடனேயே, "அய்யோ டாய்லெட் இருக்காதே என்ன செய்வது" என்றுதான் முதலில் நினப்பார்கள்.
  என் மூத்த அக்கா கல்யாணத்துக்கு செஞ்சி அருகில் உள்ள மேல்மலையனூர் என்ற கிராமத்துக்கு செல்லவேண்டியிருந்தது. அக்கா முதலில் சொன்ணது இதுதான். நம் சமூகத்தில் பெண்களுக்கு, வெளியூர் செல்லும்போது டாய்லெட் எத்தனை அவசியமானது என்று நான் சொல்லத்தேவையில்லை.
  கிராம்ஙகளில் கட்டணக்கழிப்பிட வெற்றியைத்தர (maintainance charge போன்ற) வாய்ப்புள்ளது. நகரத்திலிருந்து செல்லும் நான் 1 ரூபாய் தந்து நல்ல கழிப்பிடத்தை உபயோகப்ப்டுத்த தயார். அது போலவே நிறையபேர்.

  இவை போன்று , கிராமங்களில் உள்ள பொருட்களுக்கு , நகர மக்களிடம் நேரடி மார்க்கெட்டை திறக்கவேண்டும். அப்போதுதான் அவர்களது விறபனை/தரம் முக்கியமாய் வருமானம், எல்லாம் அதைத் தெடர்ந்து மேலே செல்லும்.  By: karthikramas

  ReplyDelete
 12. Hope this link will tell you something
  http://www.modelvillageindia.org/kuthambakkam.htm

  R.Balu

  By: R.Balu

  ReplyDelete
 13. கார்த்திக், முக்கால்வரில எழுதணும்னு ஒன்னும் இல்லை. ஆனா உண்மையிலேயே இந்த இழைல மத்தவங்க என்ன சொல்லவராங்கன்னு படிக்க ஆசைப்படறேன். பத்ரி ரொம்ப லேசா ஆரம்பிச்சு நிறுத்தியிருக்காரு. நடுவுல நான் ஏதாவது எழுதினா இழை திசைதிரும்பிடலாம். ப்ரகாஷ் சொல்லவந்ததும் அப்படித்தான்.

  பத்ரி:
  ///
  ...
  இங்கு விவசாயம், மீன்பிடித்தல் போன்றவைதான் பிரதான தொழில்.
  கிராமங்களில் இப்பொழுதைய குறை என்ன?
  1. வருமானப் பற்றாக்குறை
  2. அதனால் தேவையான வசதிகள் இல்லாமை
  ///

  இது ஓரளவுதான் சரி. உண்மையா வருமானப் பற்றாக்குறையினால தேவையான வசதிகள் இல்லாம இல்லை. அவங்க lifestyle-ஏ அப்படி இருக்கட்டும்னு அவங்க நினைக்கறதும் தான் பெரும்பான்மையான இடங்கள்ல முக்கிய காரணங்கள். நகரத்தில் ஒரு ஒற்றைப் படுக்கயறை கீழ்மத்தியதரக் குடும்பத்துக்கு இருக்கும் கழிப்பறை வசதிகூட கிராமத்துல இல்லாம இருப்பாங்க. ஆனா பாத்தீங்கன்னா, அலட்சியமா பானைலேருந்து 10,000ரூபாய்க் கட்டு பணம் எடுப்பாங்க.

  வீட்டுக்கு நிறைய சீரோட பொண்ணைக் கல்யாணம் செஞ்சு கூட்டிவருவாங்க. கை மெஹந்தி அழியறவரைக்கும் வேலைசெய்யக்கூடாதென்னெல்லாம் கவனமா வெச்சுப்பாங்க, வீட்டுல கலர் டிவியிலிருந்து சீர்வரிசைல வந்த கட்டில் மெத்தைவரை எல்லாம் இருக்கும். ஆனா அந்தப் பொண்ணும் மறுநாள் காலைல சொம்பு தூக்கிகிட்டுத்தான் போகும். ஒரு சாதாரண கழிவறைகூட கட்டிக்கப் பணமா இல்லை?

  எங்களுக்கு மதுரையைச் சுத்தின 18 பட்டிகள்லயும் மக்கள் இருக்காங்க. எக்கச்சக்க வெள்ளாமை, பணம், வீட்டுல எப்பவும் வயல்க்காரங்களும் வேலைக்காரங்களும் இருந்துகிட்டே இருப்பாங்க. ஆனா கழிவிடத்துக்கு 'மேற்க' தான் போகணும். குளிக்க பம்புசெட்டுக்குத்தான் போகணும். [அதுமட்டும் நல்லாத்தான் இருக்கும்னு வைங்க. :)]

  திரளிக்கு எங்க பாட்டி கார்லபோய் இறங்கிட்டு ஊருக்கு வெளிலேருந்தே அந்த ஊர் மருமகள்னு கால்ல முள் குத்த குத்த செருப்பை அவுத்துவெச்சுட்டுதான் தெருவுல நடப்பாங்க.

  இப்படி இருக்கற ஊருக்கு எந்த மருத்துவர் வந்து வேலை செய்வார்? அரசாங்கமே கட்டிக் கொடுத்தாலும் அதனாலேயே அங்க சிறப்பான செயல்பாடு இல்லாம போகுது.

  நாகை மீனவர்கள் பத்தின 'அறுசுவை' பாபுவோட கட்டுரை படிச்சிருப்பீங்க. ஆமாம், உண்மையிலேயே அன்றாடம் அவங்களும் நிறைய பணம் பாக்கறவங்கதான். ஆனா அடிப்படை தேவைகள் செய்துக்காம, அல்லது சேர்த்தும் வைக்காம அந்த வார திங்கள் அல்லது வியாழன் சந்தைலயே எல்லாப் பணத்தையும் செலவழிச்சுடுவாங்க.

  அதனால அவங்களுக்கு தேவையான வசதிகள் இல்லாம இருக்கறதுக்கு பணவசதி இல்லைங்கறது மட்டும் முக்கியமான காரணம் இல்லை; எது தங்களுக்கு முக்கியமான தேவைங்கறதுல அவங்களுக்கே மாறுபட்ட சிந்தனை இருக்குங்கறது தான் விஷயம்.
  ====
  மத்தபடி அதுக்குக் கீழ விரிவா * போட்டு நீங்க சொல்லியிருக்கற குறைபாடுகள் அவங்களுக்குக் கீழ வேலைசெய்யறவங்களுக்கு ரொம்ப சரி; ஆனா அதெல்லாம் கிராமத்துல மட்டும்னு இல்லை, நகரத்து ஏழைகளுக்கும் அதேதான், எந்தப் பாகுபாடும் இல்லாம. நகரத்துல ஒரே தெருவுல வியாபாரம் செய்யற நடைபாதை வியாபாரிகளின் எண்ணிக்கை மட்டுமே ஒரு கிராமத்தைவிடப் பெரிய அளவுல இருக்கும். (அவங்களுக்கு இயற்கை எதிரி. இவங்களுக்கும் மழை, போலீஸ், பந்த், பெரிய கடைகளோட மார்க்கெட்டிங் எல்லாம்.) மத்தபடி வருமானப் பற்றாக்குறையும் அதன்பொருட்டு வர வசதிகுறைவும் எல்லா இடத்துக்கும் பொது.
  ===

  எல்லாத்துக்கும் மேல கடன்முறை பத்தின தவறான எண்ணம் கிராமத்துல அதிகம். நகரத்து மக்களுக்கு கடன்வாங்கிச் செய்யும் முதலீடு மேல முழுநம்பிக்கை வந்து இப்ப நகரங்கள் கடன்திட்டங்கள்லதான் ஓடுது. ஆனா அந்த நம்பிக்கையோ அது பற்றின ஆழ்ந்த அறிவோ கிராமத்து மக்களுக்கு இன்னும் வரலை. முதல்படியா கடன்வாங்கவே பயப்படுவாங்க. திரும்பக் கட்டமுடியாமப் போனா என்ன செய்யறதுங்கற அளவுக்கு அதிகமான பயம்.. இது வங்கிகள் கொடுக்கற கடன்கள்லயே அவங்களுக்கு உண்டு. எதுவும் செய்யமுடியாது, வங்கிகள் திரும்ப திரும்பக் கேட்டுப் பார்த்துட்டு bad and doubtful ல எழுதுவாங்கன்னு அவங்களுக்குத் தெரியாது. சாதாரண formality reminder வந்தாலே பயந்டுதுவாங்க குடியே முழுகின மாதிரி. இந்த விஷயங்கள்ல எல்லாம் நிச்சயம் விழிப்புணர்வு இல்லை.

  எல்லாரும் தனித்தனியா முதலீடு செஞ்சு தொழில் செய்றவங்களா இருக்கறது இன்னொரு பலவீனம். அதனால அதிக அளவுல தொழில்நுட்ப முதலீடுகளைச் செய்ய முடியாது. கையகள நிலத்துக்கு டிராக்டர் வாங்க முடியுமா? 20 கோழிகளுக்கு தொழில்நுட்ப முதலீடு செஞ்சு பண்னை வைக்க முடியுமா? அதை சேர்ந்து செய்யலாம், ஒருவர் வாங்கற டிராக்டரை ஊரே நியாயமான வாடகைல பகிர்ந்துக்கலாங்கற மாதிரி ஒரு அண்டர்ஸ்டாண்டிங் கிராமங்கள்ல வரணும். 10 பேர் சேர்ந்து ஒரு பண்ணை வைக்கலாம். ஆனா அப்படி அவங்களை தொழில்முறைல சேர்க்கறது ரொம்ப கஷ்டம். இதுபற்றின விழிப்புணர்வெல்லாம் இப்ப ஓரளவு வந்துகிட்டுதான் இருக்கு.

  ப்ரகாஷ்:
  வருமானத்தை உயர்த்த உற்பத்தியையும் இரண்டு பங்கு ஆக்கணும்னு சொன்னது ரொம்ப ஷாக். தொழில்நுட்பம் கொண்டு வந்து திடீர்னு எல்லாரும் ரெண்டு பங்கு உற்பத்தி செய்றாங்கன்னா வெச்சுக்கலாம், அப்புறம் அதுக்கு சந்தை?? சந்தைல தேவையும் திடீர்னு அவ்வளவு உயருமா? உற்பத்தி அதிகமாகி தேவை ஏறலைன்னா விலை விழும். அப்புறம்? அது கட்டில் சோஃபா மாதிரி பொருள்களா இருந்தா பொருள் மிஞ்சி நஷ்டம் கொஞ்சமாகும். அல்லாம விவாசாயப் பொருள்களா இருந்தா ஓரளவு அரசாங்கம்(civil supplies like) ஏதாவது செய்யலாம். ஆனா மீன், காய்கறி, முட்டை மாதிரி perishable(தமிழ்ல என்ன?) பொருள்கள்? உள்ளூர் சந்தைல அவ்வளவு தேவை திடீர்னு வராது. வெளில கெடாம பாதுகாத்துக் கொண்டுபோய் சேர்க்க திரும்ப தொழில்நுட்பம் வெச்சு எல்லா முன்னேற்பாடும் செஞ்சாலும்- *எந்தப் பொருளுக்குமே இரண்டு பங்கு சந்தை* எல்லாம் கொண்டு வரவே முடியாது.
  ===
  அடிப்படைல நகரத்தைவிட கிராமங்கள்ல கல்வி மிக மிகப் பின்தங்கி இருக்காங்க, அது உண்மையோ உண்மை. அப்படியே அப்பாவோட தொழிலை extend பண்ணி செஞ்சுக்கலாங்கற அலட்சியம், சூழல்தான் காரணம். ஆக எனக்குத் தோணின வரைக்கும் கிராமத்துக்குத் தேவை அடிப்படை கல்வி, சுகாதாரம் தவிர்த்தும், தங்களுக்கு எது அடிப்படை தேவைங்கற எண்ணத்துல மாற்றம், கடன் பற்றின தெளிவு, கூட்டுத் தொழில் மற்றிய விழிப்புணர்ச்சி

  தகவல் தொழில்நுட்பம்னு சொல்லி பத்ரி நிறுத்தியிருக்காரு, எதைச் சொல்றார்னு பொறுத்திருந்துதான் பாக்கணும். விவசாயிகளுக்கு அது கொஞ்சம் ரொம்ப வருஷமாவே நடந்துகிட்டுதானே இருக்கு. வயலும் வாழ்வும் ரேஞ்சுல ஆரம்பிச்சது இன்னும் ஓயலை. மீனவர்களுக்கும் எந்த இடத்துல என்னவகை மீன் அதிகம் இருக்குங்கற மாதிரி அன்றாடத் தகவல் எல்லாம் கொடுக்கற மாதிரி ஏற்கனவே வந்திருக்கு. இன்னும் பரவலாகலைன்னு வேணா சொல்லலாம்.

  [கொஞ்சம் வரிசைப்படி எழுதாம கன்னாபின்னான்னு எழுதிட்டேன். இதுக்கும் இந்த இழைக்கும் சம்பந்தமில்லை.]

  இதைப் பாதில நிறுத்திட்டு இலக்கியம், அமெரிக்கப் பணக்காரர்கள், பாம்பு தேளுன்னு போயிட்டாங்களே, வருவாங்களா? வாரமொருமுறைதான் இந்தப் பதிவா? அதையாவது சொýÉ¡ ±ýÉ? என்னவோ போங்க. கிராமங்களை இப்படித்தான் எல்லாரும் பாதில விட்டுடறாங்க. :(

  ReplyDelete
 14. Å¡ÃòÐìÌ ´ÕӨȾ¡ý þó¾ ¸¢Ã¡Áí¸û ÀüȢ À¾¢×. ±É§Å «Îò¾ À¾¢× Ò¾ý «ýÚ¾¡ý.

  ReplyDelete
 15. ஜெயஸ்ரீ: கிராமங்களில் வருமானம் அதிகமாக உள்ளது என்ற எண்ணம் தவறானது. சும்மா சடாரென்று பானைக்குள்ளிருந்து ரூ. 10,000 கட்டை எடுப்பார்கள் என்றெல்லாம் கதை விடாதீர்கள். எல்லா கிராமங்களிலும் சில மிட்டா, மிராசுதார்கள், ஜமீன்தார்கள் இருப்பார்கள்.

  விஷ்வதுளசி படத்து நாயகன் போல.

  அவர்களிடம் மட்டும்தான் காசு இருக்கும்.

  மற்றபடி பிறர் அனைவரும் அன்றாடங்காய்ச்சிகள்தான். ஆனால் நகரங்களும் அப்படித்தானே என்றெல்லாம் சொல்லக்கூடாது.

  நகர வாழ்க்கையில் இரண்டு மூன்று உருப்படியான அம்சங்கள் உண்டு. பணக்காரர்களுக்கு, ஏழைகளுக்கு இடையில் பல்வேறு மத்தியதரக் குடும்பங்கள் உண்டு. ஏழைகளுக்கும் மேலே ஏறிப்போக வாய்ப்புகள் உண்டு. நடுத்தர வர்கத்தவர் பணம் சம்பாதிக்கவும், ஏழைகள் நடுத்தர வர்கத்துக்கு முன்னேறவும் வாய்ப்புகள் உண்டு.

  பணக்காரர்களுக்கும், மத்தியதரத்தவர்களுக்கும் தேவைப்படும் என்று பல வசதிகள் உருவாக்கப்பட்டு, பிறருக்கும் அந்த வசதிகள் ஓரளவுக்காவது சேரும். மொபைல் போன்கள் முதலில் பணக்காரர்களுக்காக மட்டும்தான் வந்தது. (உள்ளூர்த் தொலைபேசிக்கே ஒரு நிமிடத்துக்கு ரூ. 48 வரை வசூலித்த காலங்கள் உண்டு... 1997 வரையில் கூட!) இப்பொழுது ரிக்ஷா வலிப்பவருக்கும் கூட மொபைல் செல்பேசி உபயோகப்படுகிறது.

  கிராமங்களுக்கு இதுபோன்ற வசதிகள் உடனடியாகக் கிடைத்துவிடுவதில்லை. கிராமத்தில் இருக்கும் ஒத்தைப் பணக்காரருக்காக செல்பேசி டவர்களை யாரும் நடுவது கிடையாது.

  கிராமங்களின் சராசரி வருமானமாக நான் சொல்லியிருப்பது இந்திய சென்சஸ் விவரத்திலிருந்து.

  கிராமத்தில் ஒருவர் சர்வ சாதாரணமாக பத்தாயிரம் ரூபாயை எடுத்துக் காட்டினார் என்றால் அங்கு ஏழைகள் இன்னமும் ஜாஸ்தி, அவர்கள் வருடத்துக்கு ரூ. 10,000 ஐயும் விடக் குறைவாகத்தான் சம்பாதிக்கிறார்கள் என்று உணர வேண்டும். (சராசரி எப்படிக் கணக்கிடப்படுகிறது என்று யோசித்துப் பாருங்கள்.)

  ====

  அப்படியே பணம் அவர்களிடம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஏன் காட்டுக்குப் போய் வெளிக்குப் போகவேண்டும் என்று நினைக்கிறார்கள்? இதனால் பெண் பிள்ளைகளுக்கு எவ்வளவு அவமானம்? கஷ்டம்?

  நமது மத, சாதி அமைப்புகள் பழமையை ஆராதிப்பவை. ஒருவேளை, என் முப்பாட்டன்/முப்பாட்டி காட்டுக்குப் போய்தான் வெளிக்குப் போனார்கள், எனவே நாமும் அப்படித்தான் செய்வோம் என்று அடம் பிடிப்பவர்கள் பலர் இருக்கலாம். ஒருவர் கூடவா 'இல்லை, நான் வேறு விதமாக நடந்துகொள்வேன்' என்று சொல்லியிருக்க மாட்டார்கள்? சில மாறுதல்கள் உள்ளிருந்து வராது.

  வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அடுத்து வரும் பகுதிகளை ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கும். எனவே ஏன் சராசரி வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்று அடுத்து எழுதுகிறேன்.

  ReplyDelete
 16. இதுக்குத்தான் நான் குறுக்க எழுதாம இருந்தேன். 10000 எடுத்துத் தர்றது, கடன் வாங்க பயப்படறது, சேர்ந்து தொழில் செய்ய மறுக்கறது, எதுவுமே கதை இல்லை; நிஜம். இருக்கற பணத்தை சரியா திட்டமிட்டு முதலீடு செய்யவோ சேமிக்கவோ தெரியலை.

  Reminder 3 கலர்ல carbon paper வெச்சு எழுதி, அதுல மஞ்சக் கலர் வாங்கினவருக்குப் போயி, அவர் மஞ்ச நோட்டீஸ்னு நினைச்சு, பாங்க் வாசல்ல வந்து மண்ணை வாரித் தூத்தினதெல்லாம் பாத்திருக்கேன். ஊர்கூடி சமாதானம் செய்யவேண்டியதாப் போச்சு. அறியாமை அறியாமை அறியாமை அதன் நீட்சியான பயம்.

  அவங்களுக்குக் கீழ வேலைசெய்யறவங்களுக்கு வறுமைன்னு தான் நானே சொல்லியிருக்கேனே.

  ///
  மத்தபடி அதுக்குக் கீழ விரிவா * போட்டு நீங்க சொல்லியிருக்கற குறைபாடுகள் அவங்களுக்குக் கீழ வேலைசெய்யறவங்களுக்கு ரொம்ப சரி;
  ///
  ==

  கழிவறை வேணும்னு நினைக்கறவங்க இருக்காங்க, அவங்க தன்வீட்டுப் பெண்களுக்கு வேணும்னு நினக்கறதைவிட எப்பவோ லீவுக்கு வர பிள்ளை பேரன்களுக்காக இருக்கட்டும்னு கட்டறதுதான். இந்த சதவிகிதம் ரொம்பக் குறைச்சல். ஊருக்குள்ள இருக்கற பெண்கள் இதைக் கஷ்டமாவே நினைக்கறதில்லைங்கறதுதான் ஆச்சரியம் கலந்த எரிச்சல்.

  வருமானத்தை அதிகரிக்கணும், கல்வி சுகாதாரத்தை மேம்படுத்தனும், சுற்றுலாத்துறை இன்னும் நிறைய தீவிரமா இங்கெல்லாம் செயல்படணும்(நம்நாட்டு சுற்றுலாத்துறை படு தெண்டம்.) எல்லாத்தோடயும் நானும் ஒத்துப் போறேன். ஆனாலும் உங்க இழைக்கும் என் பதிலுக்கும் சம்பந்தம் இல்லைன்னும் எழுதியிருக்கேன். நீங்க மேல எழுதுங்க. நான் கடைசியா ஏதாவது சொல்ல இருந்தா சொல்றேன்.

  ReplyDelete