Tuesday, January 11, 2005

புத்தகக் கண்காட்சியில் திங்கள்கிழமை

வாரயிறுதிக்குப் பின்னர் வந்த முதல் வேலை நாள். ஞாயிறு நெருக்கியடித்த கூட்டத்துக்குப் பிறகு திங்கள் அமைதி.

கிழக்கு பதிப்பகம் கடைக்கு சிறப்பு விருந்தினராக சன் டிவியில் 'நேருக்கு நேர்' நிகழ்ச்சி நடத்தும் திரு.வீரபாண்டியன் வந்திருந்தார். அவர் எழுதி, தானாகவே பதிப்பித்த 'ஆகட்டும் பார்க்கலாம்' என்னும் காமராஜர் வாழ்க்கை வரலாறு புத்தகமும் எங்கள் கடையில் விற்பனைக்கு உள்ளது.

நடிகர் ராஜேஷ் வீரபாண்டியனைச் சந்திக்க வந்தார். வந்தவரை உடனடியாகக் கவர்ந்தது எம்.ஜி.ஆர்-எம்.ஆர்.ராதா 'சுட்டாச்சு சுட்டாச்சு' புத்தகம். உடனே அதை வாங்கிக்கொண்டார். அப்படியே ராஜேஷும், வீரபாண்டியனும் பேசிக்கொண்டிருக்கும்போது சிவாஜியையும், எம்.ஜி.ஆரையும் ஒப்பிட்டுப் பேசினர். சிவாஜியை ராஜேஷ் வாழ்க்கை வரலாறு எழுதச் சொல்ல, அப்பொழுது நடந்த உரையாடல்...

"சார், நீங்க உங்க வாழ்க்கை வரலாறை, நடிப்புக்கலையைப் பத்தி எழுதி..."

"எழுதி...?" (சிவாஜியின் சிம்மக்குரலைக் கற்பனை செய்து கொள்ளவும்)

"புத்தகமாப் போடலாமே..."

"போட்டு...?"

"எல்லோரும் படிப்பாங்களே..."

"படிச்சு...?"

"அதைப் படிச்சு நடிப்பைக் கத்துப்பாங்களே..."

"அட போடா! நீ படிப்ப... உன்னை மாதிரி இன்னும் நாலு பேர் படிப்பான். அவ்வளவுதான்! இதையெல்லாம் படிச்சு நடிப்பைக் கத்துக்க முடியுமா? போய் வேலையைப் பாருடா!"

சிவாஜி நடிப்பு என்பது படிப்பதால் வராது. உள்ளார்ந்தே இருக்கும் ஒரு குணம் என்று நினைத்திருந்தாராம். ஆனால் எம்.ஜி.ஆர் பிறரைப் பார்ப்பதன் மூலம், படிப்பதன் மூலம் கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தாராம். "இப்பல்லாம் இருக்கற நடிகர்கள் யாராவது எம்.ஜி.ஆர் மாதிரி ராஜா வேஷம் போட முடியுமா?" என்று சொல்லிவிட்டு தொடர்ந்து கண்காட்சியில் பிற கடைகளுக்குச் சென்றுவிட்டார் ராஜேஷ்.

இகாரஸ் பிரகாஷ் வந்தார். தெருவோரத்தில் அள்ளிச்சேர்த்த சில அருமையான புத்தகங்களைக் காட்டினார். உள்ளேயும் சில புத்தகங்களை வாங்கியுள்ளார். தெருவோரக் கடைகளுக்கு நாளையாவது செல்லவேண்டும் என்று முடிவு கட்டினேன்.

1994-ல் அடித்து இன்னமும் மிச்சமிருக்கும் சுஜாதாவின் "டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு" நாடகம் -- இகாரஸ் ஒன்று வாங்கிவிட்டு இன்னமும் நான்குதான் இருக்கிறது; உடனே போய் வாங்கவும் என்று சொன்னார். (நாகை குமரிப் பதிப்பகம் வெளியீடு!) உடனே ஒன்று வாங்கினேன். (வெறும் ரூ. 19 மைனஸ் ரூ. 2 = ரூ. 17)

மீதி நாளை.

3 comments:

  1. ˘̢,
    ̓¡¾¡Å¢ý «ó¾ Òò¾¸õ ¾£÷óÐ §À¡Ìõ Óý Å¡í¸ ¬¨º. ¿£í¸û Å¡í¸¢ ¨ÅòÐì ¦¸¡ûÇ ÓÊÔÁ¡. ¿¡ý ¸¢ÆìÌ À¾¢ôÀ¸õ «Ãí¸¢ø Å¡í¸¢ì ¦¸¡û¸¢§Èý. Ţ¡Æý ÅÕž¡ö ¾¢ð¼õ.

    ReplyDelete
  2. இதே போல பூம்புகார் பதிப்பகத்தில் அந்த கால புஷ்பா தங்கத்துரை, கிருஷ்ணமனி எழுதிய நாவல்கள் மிகவும் சொற்ப விலைக்கு கிடைக்கின்றன. பா. ராகவனின் பறவை யுத்தம் நாவலும் சொற்ப விலைக்கு ( மற்ற புத்தக விலையுடன் ஒப்பிடும் போது) வாங்கினேன்.

    97ம் ஆண்டு முதன்முதலாக சென்னை புத்தக கண்காட்சி சென்றபோது 15 ரூபாய்க்கு வாங்கிய நாவல் சுஜாதாவின் நிலா நிழல். தற்போது அதை உயிர்மைப் பதிப்பகத்தார் வண்ணமயமாக வெளியிட்டு 75 ரூபாய்க்கு விற்கிறார்கள்.

    அன்புடன்

    ராஜ்குமார்

    ReplyDelete
  3. சுஜாதாவின் நிலா நிழல் 15 ரூபாய்க்கு கணையாழி பதிப்பகம் மூலம் வெளிவந்தது.

    சுரேஷ் கண்ணன்

    By: suresh kannan

    ReplyDelete