Thursday, January 27, 2005

கடத்தப்படும் பிஹார் பள்ளிச் சிறார்கள்

இந்தியாவிலேயே மோசமான மாநிலம் என்று அனைவராலும் அறியப்படும் பிஹாரில் பள்ளிச் சிறார்கள் சகட்டுமேனிக்குக் கடத்தப்படுகிறார்கள். ஒன்று, இரண்டு, இன்று மூன்று.

சக மாணவர்கள் இதை எதிர்த்து போராடுகிறார்கள். இன்றிலிருந்து பிள்ளைகளின் தாயார்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

லாலு பிரசாத் யாதவ் இது எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதி என்கிறார்.

சில நேரங்களில் பிஹாரை நினைத்தால் பயமாக உள்ளது. அங்கு உள்ளவர்களுக்கு விடிவே இல்லையா?

மாஃபியா கூட்டங்கள், கொலை, கொள்ளை, கடத்தல், இந்தியாவின் மிகவும் பின்தங்கிய பெரிய மாநிலம் என்ற பெருமை, மோசமான குடியாட்சி.

நியாயமான அதிகாரிகள் (சத்யேந்திர துபே போன்றவர்கள்) இருந்தால் அவர்கள் கொல்லப்படுவார்கள்.

பப்பு யாதவ் போன்றவர்கள் சிறையிலிருந்தபடியே தங்களது ராஜ்ஜியத்தை நடத்துவார்கள்.

உச்ச நீதிமன்ற ஆணையினால் வேட்பாளராகப் பதிவு செய்ய வரும் நேரம் பார்த்து சில ரவுடி அரசியல்வாதிகள் கைது செய்யப்படும் அவலம். (மற்ற நேரங்களில் அவர்களைப் பிடிக்க காவல்துறை முயற்சி செய்வதில்லை.)

பிஹாரை சுத்தம் செய்ய மக்கள் இயக்கம் ஒன்று உருவாக இந்தக் கடத்தல்கள் துணை நிற்குமா?

5 comments:

 1. எனக்கென்னமோ நீங்கள் சொல்வதுபோல் நடக்கும் என்ற நம்பிக்கையில்லை. இது பெஸிமிஸமாகத் தெரிந்தாலும், யதார்த்தம் அதுதான்.

  ReplyDelete
 2. related to the post http://timesofindia.indiatimes.com/articleshow/998758.cms

  By: icarus

  ReplyDelete
 3. The only solution seems to be staging some 10-15 high profile "Encounters" in Tamilnadu style. May be this is extreme, but fear rules in that state and only a reverse fear can balance the situation. Just my 2 cents worth.

  ~kannaadi

  By: kannaadi

  ReplyDelete
 4. பகுதிநேரமா அரசியலையும் முழுநேரமா ரவுடித்தொழிலையும் செய்யும் "குடி"மகன்களைக் கண்டதும் சுட்டுத் தள்ளவேண்டும். குறிப்பா லல்லுகட்சியை இந்தியா முழுதும் தடை செய்வதோடு குடும்பத்தோட தூக்கி உள்ளபோடனும்! கண்டிப்பா பீகார் வளமாகிடும். அதுசரி பீகாருக்கு அடுத்ததா திறம்பட ஆட்சி தமிழ்நாட்டில்தானாமே???

  By: எசக்கிமுத்து

  ReplyDelete
 5. இகாரஸ் கொடுத்த சுட்டிக்கு நன்றி.

  லாலு மீது மட்டும் தவறில்லை. சில காரணங்களால் மாநிலம் முழுவதுமே மோசமாகிவிடும்போது எங்காவது புரட்சியின் ஊற்றுக்கண் தெரிய வேண்டும். அங்கிருந்துதான் மாற்றங்கள் ஏற்படும்.

  'எல்லோரையும் சுட்டுவிடலாம'் போன்ற எளிமையான ஐடியாக்கள் நமக்குத் தோன்றும். ஆனால் அஃதன்று சரியான முடிவு.

  ===

  தமிழ்நாட்டில் சில பிரச்னைகள் உண்டு. ஆனால் அதற்காக பிஹாருடன் ஒப்பிட முடியாது. சுனாமிக்குப் பிறகான மீட்சிப்பணி தமிழகத்தில் நடந்த அளவுக்கு வேறெந்த மாநிலத்திலும் நடந்திருக்க முடியாது. என்னதான் சன் டிவியில் 'கெட்டதையே' காண்பித்தாலும், அரசு இயந்திரம் நன்றாகவே வேலை செய்தது.

  திமுக-அதிமுக சண்டை கருத்தளவில் இல்லாமல் தனியார் இருவருக்கிடையிலேயான (அல்லது அவர்தம் குடும்பங்களுக்கிடையேயான) குடுமிபிடிச் சண்டையாக இருந்தாலும் மாநில வளர்ச்சிப் பணிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இன்ன்னமும் திறம்பட இருக்கலாமே என்பது நமது ஆதங்கம்.

  இன்று தமிழ்நாடு எந்தக் (நல்ல) கணிப்பிலும் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்களில் வரும்.

  ReplyDelete