பத்ம விருதுகளின் சட்டபூர்வ அந்தஸ்து குறித்து நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பாக டிசம்பர் 1995-ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்த விருதுகளுக்குச் சட்டபூர்வ அந்தஸ்து உள்ளதாகக் கூறியது. அதே நேரத்தில், இந்த விருதுகளைப் பெயருக்கு முன்போ, பின்போ பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது. இதைப் பட்டமாகப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவோர், அந்தப் பட்டங்களைத் திருப்பித்தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.நம் சினிமா நட்சத்திரங்கள், பிற கலைஞர்கள், அரசியல் திலகங்கள் ஆகியோர் இதைக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். யாராவது பொதுநல வழக்கு கொண்டுவரப்போக, 'உள்ளதும் போச்சுடா' என்று ஆகிவிடக் கூடாது பாருங்கள்!
எனவே, பத்ம விருதுகளை லெட்டர்பேடு, அழைப்பிதழ், சுவரொட்டி, புத்தகங்கள் உள்பட எதிலும் பெயருடன் பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவைக் கண்டிப்பாகப் பின்பற்றவேண்டும் என்று விருதுபெற்றவர்களுக்குக் [உள்துறை அமைச்சகத்தால்] கடிதம் அனுப்பப்பட்டது.
எதற்குரியது நம் வாழ்க்கை?
6 hours ago
I don't know whether those titles have any significance today(or from the day they were instituted). Yes, the government recognize the talent of an individual but ends right there.
ReplyDeleteSo it is just waste of time of those petitioners who files cases against using those titles with the individual's name.
Once Kamal said after getting PadmaShri, he feels more responsible in his professional. Do you need that title to feel more responsible? Everyone knew he has such a comic sense, so that statement was not cared by anyone:) .
By: Raj Chandra
heres the link...
ReplyDeletehttp://www.hinduonnet.com/thehindu/2003/06/04/stories/2003060402101300.htm
Couldn't find the one from www.dinamani.com
பத்ரி,
ReplyDeleteஇன்றைய தமிழ்முரசிலும் இங்கு இந்த செய்தி வந்திருந்தது. அதிருக்கட்டும்... அப்படி கொடுத்த பட்டத்தை போட்டுக்கொள்வதால் யாருக்கு என்ன நட்டம், ஏனிந்த நெறிமுறை?
பட்டம் கொடுப்பானேன் பிறகு அதைப் போட்டுக்கொள்ளக் கூடாது என்றுக் கூறுவானேன்? நிஜமாகவே புரியவில்லை.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
அன்பு பத்ரி,
ReplyDeleteசிறந்த தமிழ் வலைப் பதிவாளராகத்
தேர்வானதற்கு வாழ்த்துகள்.
அன்புடன்,
'சுபமூகா'
By: 'சுபமூகா'
அதே அதே.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
By: Dondu