செவ்வாய் சிறிதுநேரம்தான் உள்ளே இருந்தேன். உயிர்மை கடைக்குச் சென்று "கடவுள்களின் பள்ளத்தாக்கு" என்ற சுஜாதாவின் கட்டுரைத் தொகுப்பு ஒன்று வாங்கினேன் (விலை ரூ. 120). தேசிகன் தொகுத்தது என்றதாலும், சற்றே காத்திரமாக இருந்ததாலும். மற்றுமொரு தொகுப்பில் கட்டுரைகள் படு சுமார். அம்பலத்தில் வந்தது என்று நினைக்கிறேன்.
சுஜாதாவின் எழுத்துகளை சரியான முறையில் தொகுப்பது மட்டுமல்ல, அதைச் சரியாக, ஒழுங்காக புத்தகமாகக் கொண்டுவரவேண்டும். துண்டு துண்டாக வரும்போது வாங்குவதற்குக் கஷ்டமாக உள்ளது. மனுஷ்யபுத்திரனிடம் இதுபற்றிப் பிறகு பேச வேண்டும். விலையிலும் சற்று அதிகப்படியாகவே உள்ளது.
மனுஷ்யபுத்திரனிடம் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு தீம்தரிகிட ஸ்டாலில் மீண்டும் நுழைந்து செவ்வாய்க்கிழமைக்கான கேள்விக்கு வாக்களித்துவிட்டு, அவருடைய இரண்டு புத்தகங்களை வாங்கிக்கொண்டேன். ஒன்று அவர் தொலைக்காட்சித் தொடராக உருவாக்கிய "அய்யா"வின் கதை வசனம். இம்முறை பெரியார் தொடர்பாக நான் வாங்கிய புத்தகங்களில் இது இன்னொன்று. மற்றொன்று ஞாநியின் இந்தியா டுடே கட்டுரைகள் தொகுப்பு. (விலை ரூ. 50). முந்தையதற்கு விலை ரூ. 80 என்று வைத்துவிட்டு அதற்குக் கீழே "விலை கொஞ்சம் அதிகம்தான். உள்ளே படித்தால் காரணத்தை அறிந்துகொள்வீர்கள்" என்று போட்டுள்ளார். உள்ளே இன்னமும் படிக்கவில்லை. எதுவானாலும் ஞாநி போன்ற தனி மனிதருக்கு ஆதரவாக இன்னமும் மேலே காசு கொடுத்தே புத்தகம் வாங்கலாம்!
ஜெயமோகன் வருவாரென்று சொல்லித்தான் ராம்கி என்னை உயிர்மை ஸ்டாலுக்கு இழுத்துச் சென்றார். ஆனால் அன்று ஜெயமோகன் வரவில்லை. [Correction: ஜெயமோகன் இல்லை, சாரு நிவேதிதா. ஆனால் சாரு உயிர்மை கடையில் அப்பொழுது இல்லை!]
செவ்வாய் அன்று கவிஞர் யுகபாரதி (இவர் மனப்பத்தாயம், தெப்பக்கட்டை போன்ற கவிதை நூல்களை எழுதியவர். மன்மதராசா எனும் மிகச்சிறந்த திரைப்படப் பாடலையும் இவர் எழுதியதாகக் கேள்வி) கிழக்கு பதிப்பக சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். ஆனால் கடையில் உட்காராமல் ஊர் சுற்றி விட்டு, கடைசியில் நாகூர் ரூமியுடன் ஸ்பெஷல் பிரியாணி சாப்பிடக் கிளம்பி விட்டார்!
மிச்சம் மீதி இருந்த "அள்ள அள்ளப் பணம்" முழுவதுமாக விற்றுத் தீர்த்தது. தீர்ந்ததும் விடாமல் தமது பிரதிகளுக்காக முன்பணம் கட்டிக்கொண்டிருந்தார்கள் சிலர். இரவோடு இரவாக அதிகப் பிரதிகளைத் தயார் செய்து புதன் கிழமை கொண்டுசென்றோம்.
'தி ஹிந்து'வில் மாலன் சிறுகதைகளுக்கு வந்திருந்த விமர்சனத்தை துண்டுத் தாளின் நறுக்கிக் கொண்டுவந்திருந்தார் ஓர் அமெரிக்கர். இந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு தனக்குத் தெரிந்த ஒரு தமிழருக்குப் பரிசளிக்கப்போவதாகச் சொன்னார். மிகவும் கூட்டமாக இருந்ததால் அவர் யார், பெயர் என்ன, அவரது நண்பர் யார் என்பதைக் கேட்க முடியவில்லை.
செவ்வாய் அன்று பார்த்த பிறர் ஓவியர் நாகராஜன், எழுத்தாளர் கிருஷாங்கினி ஆகியோரும், சுரேஷ் கண்ணன் ஆகியோர்.
-*-
புதன், கிழக்கு பதிப்பகம் சிறப்பு விருந்தினர் மாலன்.
டோண்டு ராகவன் வந்திருந்து நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தார். பல புத்தகங்களை அள்ளிக்கொண்டு சென்றார்.
ஐந்து மணிக்கு மாலன் வந்தபிறகு, பல வாசகர்கள் மாலனது புத்தகங்களை வாங்கி, அதில் கையெழுத்து பெற்றுக்கொண்டிருந்தனர்.
ஜெயமோகனும், நாஞ்சில் நாடனும் வந்தனர். ராகவனுடம் அளவளாவிக் கொண்டிருந்த நேரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அந்தப் பக்கம் வந்தார். ஏகப்பட்ட heavyweights ஒரே நேரத்தில் ஒரேயிடத்தில் இருக்கமுடியாது என்ற காரணத்தால் ஜெயமோகன் 'பிறகு வருகிறேன்' என்று கிளம்பிவிட்டார். கவனமாக மாலன் இருப்பதையே கவனிக்காமல், அவரிடம் பேசாமல் சென்றுவிட்டார்!
திலகவதி ஐ.பி.எஸ் (மயிரிழையில் தமிழன்பனிடம் சாகித்ய அகாதெமி பரிசை நழுவ விட்டவர்? :-) சிறிது நேரம் கழித்து வந்து மாலனின் 'சொல்லாத சொல்' கட்டுரைத் தொகுப்பை வாங்கிக்கொண்டு சென்றார்.
குழந்தை முகத்துடன் ஒரு சிறுவன் வந்திருந்தான். கேட்டதற்கு லலிதாராம் என்று சொன்னார்கள். அட, இவ்வளவு பிரமாதமாக கர்நாடக இசைக்கச்சேரிகள் பற்றி விமர்சனம் எழுதுவது இவன்தானா என்று ஆச்சரியப்பட வைத்தான்!
ஜனவரி கடைசியில் தஞ்சாவூரில் வரலாறு.com தொடர்பாக ஒரு நிகழ்ச்சி என்று தகவல் கொடுத்துவிட்டுச் சென்றான்.
புதன் அன்று எழுந்து பிற கடைகளுக்குச் செல்ல நேரம் கிடைக்கவில்லை.
[படங்கள் இன்று இரவு]
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
4 hours ago
//அள்ள அள்ளப் பணம்" முழுவதுமாக விற்றுத் தீர்த்தது// பெயருக்கு தகுந்த மாதிரி விற்பனை.
ReplyDelete.// இரவோடு இரவாக அதிகப் பிரதிகளைத் தயார் செய்து புதன் கிழமை கொண்டுசென்றோம்.//
எப்படி முடிந்தது பத்ரி.? ஒரு நாள் தயாரிப்பு பற்றி எழுதுங்களேன்..
By: Raviaa
பத்ரி,
ReplyDeleteராம்கியும் நீங்களும் சாருநிவேதிதாவை பார்க்கப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தீர்களே? பார்த்தீர்களா? :-)
suresh kannan
By: suresh kannan
அன்புள்ள பத்ரி, டிஆரோ கொழும்பு குறித்த இ-மெயில் உங்களுக்கு கிடைததா?
ReplyDeleteBy: karthikramas
பத்ரி, மாலன் ஜெயமோகனையும் கவனமாகக் கவனிக்கவில்லையா? இல்லை, மாலன் கவனித்தும் ஜெயமோகன் அப்படி நடந்து கொண்டாரா? இதைச் சொல்லவில்லையே! ஒரு பக்கம் மட்டும் இடித்தால் யாருக்காக இடிக்கிறீர்கள் என்ற கேள்விகள் எழுமே? மாலன், ஜெயமோகன் இருப்பை எப்படி எதிர்கொண்டார் என்றும் சொல்லியிருப்பது நியாயமாக இருந்திருக்கும். மாலன் மேன்மையாக நடந்து கொண்டிருந்தால், அதைச் சொல்வதன் மூலம் அவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கி இருக்க முடியுமே. தமிழ்ச் சூழலில் இத்தகைய காய்ச்சல்கள் நிதர்சனம். இதில் ஒருதரப்பை மட்டும் நோவதில் என்ன பலன்? மாலனும் ஜெயமோகனும் உங்கள் கடைக்கு வந்த விருந்தினர்கள். அவர்கள் இப்படி ஒருவரை ஒருவர் தவிர்க்கிறார்கள் என்று அறிந்ததும், host ஆன நீங்கள் இருவரிடையே சுமூகமானப் பேச்சை உருவாக்குவதுபோல அறிமுகமோ, உரையாடலையோ தொடங்கியிருக்கலாமே? பின்னால் குறை, அதுவும் ஒருவரை மட்டும் சொல்லி எழுதுவதில் என்ன பலன். ஜெயமோகன் அப்படி நடந்து கொண்டார் என்று நீங்கள் சொல்வதை நான் நம்புகிறேன். எனவே, விஷயம் நீங்கள் சொன்னது உண்மையா என்பதைப் பற்றி இல்லை. இதை எழுதுவதன் மூலம் ஜெயமோகனின் ஆதரவாளன் என்றோ மாலனைப் பிடிக்காதவன் என்றோ அர்த்தமில்லை. ஒரு சிறிய விஷயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் கவனமாக எழுதியிருப்பதைச் சுட்டிக் காட்டவே விரும்பினேன். அன்புடன், பி.கே. சிவகுமார்
ReplyDeleteBy: PK Sivakumar
பிகேஎஸ்: நான் கல்லாப்பெட்டியில் உட்கார்ந்திருப்பவன். சுமுகப் பேச்சுவார்த்தைகளை நடத்திவைக்க எனக்கு நேரமிருக்காது. காசு வாங்கிப் போடுவதை விட்டுவிட்டு நான் அதிலெல்லாம் ஈடுபட முடியாது. நான் "கண்டதைச் சொல்கிறேன்". அவ்வளவே.
ReplyDeleteமாலன் கடையில் ஏற்கெனவே உட்கார்ந்திருக்கும் விருந்தாளி. ஜெயமோகன் கடைக்கு வந்த விருந்தாளி.
மற்றபடி நீங்கள் எழுதியிருப்பதுதான் என்னிடம் குற்றம் கண்டுபிடிப்பதைப் போல எனக்குத் தோன்றுகிறது. எனது "காணலை" அப்படியே சொல்வதற்குக் கூட நான் இரு பக்கமும் சீர்தூக்கி, நிறுத்து சொல்லவேண்டுமா என்ன?
மற்றபடி ஜெயமோகன் மாலனைப் பார்க்கவேண்டும் இருவரும் பேசவேண்டும் என்றெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. ஒருவர் மீதும் குற்றமும் வைக்கவில்லை. பார்த்தேன், எழுதினேன்.
கடைசிப் போட்டோவில் இருப்பவர் யார்? நாஞ்சில் நாடனா?
ReplyDeleteBy: icarus
¬Á¡õ ¬Á¡õ. º¢ÅìÌÁ¡÷ ÀñÊ𠦺¡øÅо¡ý ºÃ¢. ¦ÃñÎ ¦¸ŠðÎ Åó¾¢Õ측í¸, «Åí¸ÙìÌû§Ç þÕì¸¢È À¢ÃɨÂò ¾£òÐ ¦Å츢Ȩ¾ Å¢ðÎðÎ «ôÀÊ ±ýÉ ¦À¡øÄ¡¾ Å¢üÀ¨É? ¸øÄ¡Å¢§Ä º¢øÄ¨È Å¡í¸¢ô §À¡¼È¨¾ ±øÄ¡õ ¸¨¼§Ä þÕì¸¢È §ÅÈ ¬º¡Á¢í¸ À¡òÐì¸ Á¡ð¼¡í¸Ç¡? þÉ¢§ÁøðÎ þôÀÊ Àñ½¡¾£í¸. Åó¾¡í¸ýÉ¡, ¦ÃñÎ §ÀÕ ¨¸¨ÂÔõ ÒÊîÍ ÌÖ츢 Å¢Îí¸. ¸ðÊô ÒÊî͸¢ðÎ §À¡Š ÌÎò¾¾£í¸ýÉ¡ þýÛõ Ä¡Àõ. 'þ¨ÁÂí¸¨ÇÔõ þ¨½òÐ ¨Åò¾ þ¨½Âò ¾ÇÀ¾¢' ýÛ ¯íì¸ÙìÌ Àð¼õ ÌÎò¾¢Õì¸Ä¡õ. º¡ýŠ §À¡î§º.....
ReplyDeleteBy: anonymous
இகாரஸ்: ஆமாம்.
ReplyDelete«ýÒûÇ Àòâ «Å÷¸ÙìÌ
ReplyDeleteŽì¸õ. À¾¢ôÒò ШÈ¢ø ¸¡ÄÊ ¨Åò¾¢ÕìÌõ ¾í¸ÙìÌ ±ý Å¡úòÐì¸û.
¾í¸Ù¨¼Â ŨÄôÀ¾¢Å¢ø ¯Â¢÷¨Á Å¢üÀ¨É ¨ÁÂò¾¢üÌ ¾¡í¸û ÅÕ¨¸ ¾ó¾Ð ÀüȢ ÌÈ¢ôÒ¸¨Ç ÀÊò§¾ý. ¿ýÈ¢. ̓¡¾¡Å¢ý ±ØòÐì¸¨Ç ¦¾¡ÌôÀÐ ÀüȢ ¾í¸û §Â¡º¨É¸¨Ç ¸ÅÉò¾¢ø ¦¸¡û¸¢§Èý. À¢Ã¨É ±ýɦÅýÈ¡ø ̓¡¾¡Å¢ý ÀÄ ¸ðΨÃò ¦¾¡ÌôÒ¸ÙìÌ ¦¾¡¼÷óÐ ÁÚ À¾¢ôÒ¸û Åó¾Åñ½õ ¯ûÇÉ. ̓¡¾¡Å¢ý Óó¨¾Â À¾¢ôÀ¡Ç÷¸ÙìÌ À¡¾¢ôÒ Åá¾ Ũ¸Â¢§Ä§Â ¯Â¢÷¨Á «ÅÃÐ áø¸¨Ç À¾¢ôÀ¢òÐ ÅÕ¸¢ÈÐ.
Òò¾¸ò¾¢ý Å¢¨Ä ÀüȢ ¾í¸û ÌÈ¢ôÒ ¾ÅÈ¡ÉÐ. ¾Á¢Æ¢ø ÌÈ¢ôÀ¢ð¼ ¾Ãò¾¢ø ¾Â¡Ã¡Ìõ Òò¾¸í¸ÙìÌ À¾¢ôÀ¡Ç÷¸Ç¡ø ¦À¡ÐÅ¡¸ ¨Åì¸ôÀÎõ ´Õ Å¢¨Ä§Â ¯Â¢÷¨Á¢ý áø¸ÙìÌõ ¨Åì¸ôÀθ¢ýÈÉ. þ¨¾ ¿£í¸û ´ôÀ¢ðÎ «È¢óÐ ¦¸¡ûÇÄ¡õ. Å¡ºî¸÷¸Ç¢ý ¿Ä¨ÉÔõ «¾¢¸ôÀÊÂ¡É Å¢üÀ¨É¨ÂÔõ ¸½ì¸¢ø ¦¸¡ñΠ̨Èó¾ Å¢¨Ä¢ø áø¸¨Ç À¾¢ôÀ¢ì¸ Å¢ÕõÒõ ź¾¢ À¨¼ò¾, ¦ÀÕó¾ý¨ÁÂ¡É À¾¢ôÀ¡Ç÷¸û þÕó¾¡ø ¿øÄо¡ý. Ðþ¢‰¼ÅºÁ¡¸ ¯Â¢÷¨Á «ò¾¨¸Â ´Õ þ¼ò¾¢ø þø¨Ä.
¬¾ÅÉ¢ý áø¸¨Ç ¸¢ÆìÌ À¾¢ôÀ¢ôÀÐ Á¢¸×õ Á¸¢ú. ¬É¡ø «ÅÃÐ º¢Ú¸¨¾ò ¦¾¡ÌôÒ¸û ¸¡ÄÅ⨺ôÀÎò¾ôÀðÎ ÓبÁÂ¡É ´Õ ¦¾¡ÌôÀ¡¸ ÅçÅñÊ ´Õ ¸¡Ä ¸ð¼ò¾¢ø «§¾ ¦ÀÂâø ¾É¢ò¾É¢ ¦¾¡ÌôҸǡ¸ ¦ÅǢ¢ÎÅÐ ¦À¡Õò¾Á¡É¾¡¸ ¿¡ý ¸Õ¾Å¢ø¨Ä. «ÅÃÐ ¾¨ÄӨȢý ±øÄ¡ ±Øò¾¡Ç÷¸ÙìÌõ ÓØò ¦¾¡ÌôÒ¸û ¦ÅÇ¢ÅóÐ Å¢Ã¢Å¡É Å¡º¸ ¸ÅÉò¨¾ô ¦ÀüÚÅÕõ ÝÆÄ¢ø ¿£í¸û «Åü¨È Á£ñÎõ ¯¾¢Ã¢Â¡¸ À¾¢ôÀ¢ôÀÐ ¬¾ÅÉ¢ý Å¡º¸ý ±ýÈ Ó¨È¢ø ±ÉìÌ ¸Îõ ²Á¡üÈò¨¾ «Ç¢ì¸¢ÈÐ.
¸¢ÆìÌ À¾¢ôÀ¸ò¾¢ý ±øÄ¡ ÓÂüº¢¸ÙìÌõ ±ý Å¡úòÐì¸û.
«ýÒ¼ý
Áۉ Òò¾¢Ãý
By: manushyaputhiran
என் பதிவுக்கு வந்து பின்னூட்டம் அளித்ததற்கு நறி மனுஷ்யபுத்திரன்.
ReplyDeleteநீங்கள் சொல்வதைப் போல ஆதவன் சிறுகதைகளை காலவரிசைப்படுத்தி, செம்பதிப்பாகத்தாண் கொண்டுவரப்போகிறோம்.
இப்பொழுது கொண்டுவந்திருப்பது ஆதவனின் குறுநாவல்கள் மட்டும் அடங்கிய தொகுதி.
வரப்போகிற சிறுகதைத் தொகுப்பு, கெட்டி அட்டையில், அசோகமித்திரன் கட்டுரைகளுக்குக் கொடுக்கப்பட்ட அதே கவனத்துடன், நேர்த்தியாகவே கொண்டுவரப்படும்.
குறுநாவல் தொகுப்பின் கடைசிப் பக்கத்தில் வந்த செய்தி சற்றே குழப்பம் அளிப்பதாக இருக்கலாம். அவரது முந்தைய சிறுகதைத் தொகுதிகளின் பெயர்களை அப்படியே குறிப்பிட்டிருந்ததால் ஏற்பட்ட விளைவு அது.
ஆனால் அந்தத் தொகுதியில் அவர் எழுதிய சிறுவர் கதைகள் இருக்காது. அதுமட்டும் தனித் தொகுதியாக வெளியாகும். அதைப்போலவே நாடகமும் தனியாக இருக்கும்.