Thursday, January 06, 2005

TRO-வுக்கு மருந்துகள்

சென்ற வாரம் ஈழநாதன் வலைப்பதிவிலும், பின்னர் என் பதிவில் ரோஸாவசந்த் எழுதியதையும் பார்த்து, TRO அமைப்புக்கு சென்னையிலிருந்து சில மருந்துப் பொருட்களை வாங்கி அனுப்ப முடிவு செய்தேன். வெள்ளிக்கிழமைக்குள் (31.12.2004) கிட்டத்தட்ட இந்திய ரூபாய் 25,000 மதிப்புள்ள சில மருந்துகளை வாங்கி பெட்டியில் கட்டி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகத்துக்கு அனுப்பினோம்.

ஸ்ரீலங்கன் விமானச் சேவை, சுனாமி உதவிப்பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லும் என்று சொல்லியிருந்தது.

வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பினாலும் ஏதோ காரணங்களுக்காக இந்த மருந்துகள் ஏற்றிச் செல்லப்படவில்லை. முதலில் சென்னை சுங்கத்துறைப் பரிசோதனைக்காக (மருந்துகள்தானா என்று...) சனி, ஞாயிறு செலவானது. திங்கள் அன்று அதைத் தாண்டி, கிளம்பலாம் என்றால், இலங்கை தூதரக அனுமதியில்லாமல் பொருட்களை எடுத்துச் செல்லமுடியாது என்று ஸ்ரீலங்கன் சொல்லிவிட்டது.

இலங்கைத் தூதரகத்தார், TRO அனுமதிக்கப்பட்ட நிவாரண உதவிக்குழு அல்ல என்று சொன்னார்கள். அவர்களிடம் இரண்டு நாள்கள் போராடி, கடைசியாக நேற்று அனுமதி பெற்று பெட்டியை அனுப்பினோம். அனுமதி பெற, மருந்துகளை "சுகாதார அமைச்சரகம், கொழும்பு-10" க்கு அனுப்ப வேண்டுமென்றும், அங்கிருந்துதான் TRO மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று இலங்கைத் தூதரகம் சொன்னதால் அப்படியே செய்தோம். வேறு வழி தெரியவில்லை.

அனுப்பிய பொருளுக்கான Airway Bill-இல் மருந்துப் பொருட்கள் யாருக்கு (TRO) என்பதனை விளக்கி, சுகாதார அமைச்சரகத்தைச் போய்ச்சேர்ந்ததும் TRO-வுக்குத் தகவல் சொல்லச் சொல்லி எழுதியுள்ளோம். நேற்று இரவு இந்த பில் பிரதியினை தோலைநகல் மூலம் TRO கொழும்பு அலுவலகத்துக்கு அனுப்பி, அங்கிருந்த ஒருவரிடம் பேசினோம். அவர்கள் இன்று பொருட்களை எடுத்தபின் (எடுக்க முடிந்தால்!) எங்களுக்குத் தகவல் சொல்வதாகச் சொல்லியுள்ளனர்.

மேற்கொண்டு இன்னமும் சில மருந்துப் பொருட்கள் (கிட்டத்தட்ட ரூ. 20,000) என் அலுவலகத்தில் இருக்கிறது.

இன்று TRO-வுக்கு சரியான முறையில் கிடைத்த செய்தி தெரிந்தால் அதை அனுப்ப வேண்டும்.

இதற்கிடையே ஸ்ரீலங்கன் விமானச்சேவை இனி பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லப்போவதில்லை என்றும் அதற்கென கட்டணம் வசூலிக்கப்போவதாகவும் சொல்லியுள்ளனர். அதுபற்றிய விவரங்கள் இன்றுதான் எனக்குத் தெரியவரும்.

இன்று காலை 9.05 வானொலிச் செய்தியில் கேட்டது: "விடுதலைப் புலிகள் கீழிருக்கும் பகுதிகளுக்கு இந்திய அரசு நேரிடையாக எந்த உதவிப்பொருளையும் அனுப்பாது."

30 comments:

 1. பத்ரி,
  உங்கள் முயற்சி பாராட்டிற்குரியது.

  இந்திய அரசு, குறைந்தபட்சம் இலங்கை அரசை வடக்கு பகுட்திகளுக்கு சரியான நிவாரணம் வழங்க நிர்ப்பந்திக்க வேண்டும்.

  நம்பி.

  ReplyDelete
 2. பத்ரி, இவ்விடத்திலே நான் எதைப் பாராட்டாக எழுதினாலும், வெறும்வாய்மொழியாகவே தோன்றலாமென்பதாலே, "நன்றி" என்ற தனி வார்த்தையோடு நிறுத்திவிடுகிறேன்.

  /"விடுதலைப் புலிகள் கீழிருக்கும் பகுதிகளுக்கு இந்திய அரசு நேரிடையாக எந்த உதவிப்பொருளையும் அனுப்பாது."/

  இது விடுதலைப்புலிகளின் அமெரிக்க இராணுவம் இந்திய உதவிக்கடற்படை ஆகியவை வடகிழக்குக்குச் செல்வதன் பின்னாலான கருத்தாக இருக்கலாம்.

  ReplyDelete
 3. badri, please clarify me. ±ó¾ ¿¡ðÎ «ÃͧÁ, §ÅÈ ¿¡ðÎ ´Õ ¿¢ÚÅÉòÐìÌ («Ð ¾ý þɧÁ ¬É¡Öõ) «ó¾ ¿¡ð§¼¡¼ «ÃÍ «ÛÁ¾¢ þøÄ¡Á §¿Ã¢¨¼Â¡ ¦À¡Õû¸¨Ç «ÛôÀÓÊÔÁ¡? «Ð ¦¾Ã¢ïº¡¾¡ý þó¾¢Â¡ ¦ºöÂÈÐ ºÃ¢Â¡ þø¨Ä¡ýÛ ¦º¡øÄÓÊÔõ. I repeat, I asking not about Jsri, an individual but a Government.

  ReplyDelete
 4. நன்றி பத்ரி,நேற்று சரியான தகவல் கிடைக்காமையினால் குழம்பிப்போயிருந்தேன்.உங்கள் பதிவின் மூலம் நேற்றுத்தான் அனுப்பப்பட்டதைத் தெரிந்துகொண்டேன்.
  உங்கள் பதிவும் முக்கியமானது TRO நிறுவனம் இலங்கை நிர்வாக சேவைகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசு சாரா தொண்டு நிறுவனம்,அவர்களிடம் முறையான அனுமதிப்பத்திரம் உள்ளது அப்படியிருக்க அவர்களுக்கு அனுமதியில்லை என்ற கூற்று துவேஷத்தின் எல்லையைச் சுட்டிக்காட்டுகின்றது.அதனை இங்கே சுட்டிக்காட்டியதற்கு நன்றி

  By: Eelanathan

  ReplyDelete
 5. மிக்க நன்றி பத்ரி.
  சரியான நேரத்தில் உதவியுள்ளீர்கள்.

  ReplyDelete
 6. பத்ரியின் இடைவிடாத முயற்சிக்கு, தளராமைக்கு பாராட்டுக்கள்.

  எனக்கு இன்னும் ஒழுங்கான இடத்திற்கு போய் சேர்ந்ததா என்பது சரியாய் புரியவில்லை. அப்படியே TROக்கு கொழும்பில் போய் சேர்ந்தாலும் (அதுவும் இன்னும் நிச்சயமாகவில்லை என்றே நினைக்கிறேன்), பாதிக்கபட்ட மக்களிடம் போய் சேருமா என்று ஒரு பிரச்சனை இருக்கிறது. பத்ரியின் முயற்சிகள் வீணாகாது என்று நம்புவோம். ஈழநாதன் urgent என்று சொல்லி அந்த மருந்துகளை கேட்டிருந்தார். பணம் கூட இல்லை, வெறும் அவசர தேவையான மருந்துகளுக்கு இத்தனை பாடா!


  இந்தியா வேறு ஏதாவது சொல்லியிருந்தால்தான் ஆச்சரிய படவேண்டும்.கனடா, நார்வே, இன்னும் அமேரிக்கா வேறு நிலை எடுத்தாலும் இந்தியா இதைத்தான் சொல்லும். இன்னும் புரியாதது மத்திய அரசை வற்புறுத்த கூடிய(அதற்கு முய்டற்சியாவது செய்ய கூடிய) ராமதாஸும் வைகோவும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். அவர்களின் இந்த துரோகத்தை மன்னிககவே முடியாது.

  ReplyDelete
 7. ஜெயஸ்ரீ: உங்கள் கேள்விக்கான பதில் எளிது. இலங்கை அரசு ஆரம்பம் முதலே உதவிப்பொருட்கள் நேரிடையாக தங்களிடம் வந்துசேரவேண்டும் என்றும் யாராவது பொருட்களை நேரிடையாக விடுதலைப்புலிகள் பகுதிக்கு அனுப்பினால் அது சரியானதாக இருக்காது என்றும் சொல்லிவந்துள்ளனர்.

  அதே நேரம், விடுதலைப்புலிகள் அமைப்பும், அது சார்ந்த சில தொண்டார்வ நிறுவனங்களும் இலங்கை அரசிடமிருந்து சரியான உதவிகள் தம்மிடம் வந்துசேர்வதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

  கனடாவைச் சேர்ந்த தமிழர்கள், உதவிகளில் பாதியாவது நேரிடையாக தமிழர் வாழும் பகுதிகளுக்குச் சென்று சேர வேண்டும் என்று சொல்லியுள்ளனர். கனடா அரசும், அவ்வாறே செய்துள்ளது.

  ஆகவே கொடுக்கவேண்டும் என்ற மனநிலை இருந்தால், இலங்கை அரசை வற்புறுத்தி, நேரிடையாக உதவிகளை இந்தியா தமிழர் பகுதிகளில் செய்திருக்க முடியும். கனடாவால் முடிந்தது, இந்தியாவால் எளிதாகவே முடிந்திருக்கும். ஆனால் இந்திய அரசுக்கு அந்த மனநிலை இல்லை.

  எனக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது நல்ல அபிப்ராயம் கிடையாது. ஆனால் இந்த நேரத்தில் அது முக்கியமே அல்ல. இப்பொழுது செத்துக் கொண்டிருப்பவர்கள் உயிர்தான் முக்கியம். இந்த நேரத்தில் அரசியல் பிரச்னைகள் வெளியே வரவே கூடாது.

  இந்தியா-பாகிஸ்தான் இடையே பெரும் சண்டையே நடந்து கொண்டிருந்தாலும், பாகிஸ்தானில் ஒரு நிலநடுக்கம் வந்தால் இந்தியா உடனடியாக உதவிகளை அந்நாட்டு மக்களுக்குச் செய்தாக வேண்டும். அதைப்போலத்தான் இங்கும்.

  இந்தியா, இலங்கை அரசு வழியாகத்தான் உதவிகளைச் செய்வேன் என்கிறது. ஆனால் இங்கு உதவி என்பது பல்வேறு வகைப்பட்டது. பல இடங்களில் இந்திய ராணுவம் மருத்துவக் கப்பல்களை அனுப்பியுள்ளது. ஆனால் இவை யாவும் திருகோணமலை தவிர்த்து பிற தமிழர் பகுதிகளில் அல்ல. பல்வேறு தொழில்நுட்ப உதவிகள் தேவைப்படுகின்றன. ஹெலிகாப்டர்கள் தேவைப்படுகின்றன. இதையெல்லாம் இந்திய அரசு நேரிடையாகவே செய்யவேண்டும். இலங்கை அரசின் மூலமாக எப்படிச் செய்வது? உதவிப் பொருட்களை இலங்கை அரசிடம் கொடுத்தாலும் கூட, இலங்கை அரசு நல்லபடியேதான் நடக்கிறது என்றாலும் கூட, பொருள்கள் பாதிக்கப்பட்டவர்களைச் சென்று சேர்வதற்கு வெகு நாள்களாகி விடும்.

  ஆனால், இந்தியா நேரிடையாக இதை அனுப்பினால் வேகமாக, போகவேண்டிய இடத்துக்குச் சென்று சேர்ந்துவிடும்.

  தமிழர் பகுதிகளுக்குத் தேவையான மருந்துகள் இந்தியாவில் எளிதாகக் கிடைக்கின்றன. இந்திய அரசு மனது வைத்தால் நாளைக் காலைக்குள் அத்தனையையும் - அதிகமாகப் போனால் ரூ. 10 கோடி ஆகுமா? அவ்வளவுதான் இருக்கும் - சேர வேண்டிய இடத்துக்குக் கொண்டு சேர்த்துவிடலாம்.

  அதை விடுத்து, தாம் விடுதலைப் புலிகள் பகுதிகளுக்கு உதவிகளை நேரிடையாக அனுப்பினால், அதன்மூலம் ஒரு வகையில் விடுதலைப் புலிகளை அங்கீகரித்ததாகி விடும் என்பதால் அவர்களை முழுதாக நிராகரிப்பது போல இந்தியா நடந்து கொள்வது மிகவும் மோசமான, அநாகரிகமான செயல். அதைக் கண்டிக்க வேண்டியது நியாயமான இந்தியக் குடிமக்கள் அனைவரின் கடமை. அவ்வாறு செய்வதால் நாம் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் என்று ஆகாது.

  எங்கோ, ஐரோப்பாவில் தெருவில் போகிறவர்கள் எல்லோரும் மூன்று நிமிட மவுன அஞ்சலி செலுத்துகிறார்கள். அடுத்த வீட்டில் இருந்துகொண்டு, "உன் துக்கம் என் கண்ணில் படவில்லை, உன் இருப்பையே நான் அங்கீகரிக்கவில்லை" என்பது போல நாம் நடந்து கொள்வது மிகக் கேவலமான செயல்.

  ReplyDelete
 8. பத்ரி, மிக அற்புதமாய் எழுதியுள்ளீர்கள். இதைவிட தெளிவான வார்த்தைகளால் சொல்லமுடியாது. இதை அப்படியே ஒரு தனி பதிவாக எழுதுங்கள்.

  ReplyDelete
 9. suddenly I am not able to view anythingh in this blog, orE kattam kattamAka therikiRathu. Anyway I just wanted to refer to this pathivukal link, which talks about Italian, Korean, Australians in the (LTTE controlled)tamil areas. http://www.geotamil.com/pathivukal/news_relief_a.html
  (Although the original news is from
  tamilnet....)

  ReplyDelete
 10. Italians
  Daily News (Sri Lankan Gov Mouthpiece)
  http://www.dailynews.lk/2005/01/05/new19.html
  ---

  Austrlia & North Korea
  CNN
  http://edition.cnn.com/2005/WORLD/asiapcf/01/03/otsc.tamil.grant/

  ReplyDelete
 11. ஏன்? இத்தாலி நேரடியாக மருந்துப் பொருட்களை விடுதலைப் புலிகளிடமே கையளித்துள்ளதே. முயன்றால் எல்லாம் முடியும். நினைத்தால் தனது மருத்துவக் குழுக்கள் மூலமோ இந்தியத் தொண்டு நிறுவனங்கள் மூலமோ நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவ முடியும்.

  ReplyDelete
 12. ஏன்? இத்தாலி நேரடியாக மருந்துப் பொருட்களை விடுதலைப் புலிகளிடமே கையளித்துள்ளதே. முயன்றால் எல்லாம் முடியும். நினைத்தால் தனது மருத்துவக் குழுக்கள் மூலமோ இந்தியத் தொண்டு நிறுவனங்கள் மூலமோ நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவ முடியும்.வசந்தன்

  ReplyDelete
 13. "இன்னும் புரியாதது மத்திய அரசை வற்புறுத்த கூடிய(அதற்கு முய்டற்சியாவது செய்ய கூடிய) ராமதாஸும் வைகோவும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். அவர்களின் இந்த துரோகத்தை மன்னிககவே முடியாது."

  எமக்கும் அதுதான் விளங்கவில்லை. இராமதாசை விடுங்கள், அவரைப் பற்றித் தெரியும். ஆனால் வை.கோ. என்ன செய்கிறார் என்பதுதான் புரியவில்லை. யாராவது வை.கோ அவர்களின் மின்னஞ்சல் முகவரி அல்லது வேறு ஏதாவது தொடர்பு வழிகள் தெரிந்து வைத்திருந்தால் அறியத் தரவும்.

  வசந்தன்.

  ReplyDelete
 14. வசந்தன், வைகோவிற்கு மின்னஞ்சல் முகவரி இருந்தாலும், நீங்கள் எழுதினால் அதை அவர் வாசிக்கமாட்டார். தேர்தல் அரசியல் என்று இறங்கிய பின், சந்தர்ப்பவாதம் இன்ன பிற விஷயங்கள் தவிர்க்க முடியாதது. அதனால் வைகோ, ராமதாஸ் எதை செய்திருந்தாலும், ஈழதமிழர் மீதான ஒரு பரிவு உண்மையிலேயே அடியோட்டமாய் அவர்களுக்கு உண்டு என்றுதான் நினைத்திருந்தேன்.அவர்கள் செய்துவரும் வெட்டி முழக்க அரசியலை தாண்டி, சிக்கலான கட்டங்களில் குரல் கொடுப்பார்கள் என்றே நானும் நம்பியிருந்தேன். இப்போது காட்டிவரும் மௌனம் மன்னிக்கவே முடியாது. இந்த விஷயத்திலும் அவர்கள் போலி என்று ஆகிவிட்டால், இதை முக்கியமான ஒரு பாடமாக எடுத்துகொள்வதை தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை.

  ReplyDelete
 15. பத்ரி, நான் கேட்டதை சரியாகக் கேட்கவில்லை போலிருக்கிறது. நான் இந்தியா, இலங்கை புலிகள் பகுதிக்கு உதவிகளைச் செய்யவேண்டுமா என்று கேட்கவில்லை. செய்தே ஆகவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தும் இல்லை. எல்லோருக்குமே தமிழருக்கு உதவ TRO வழியாகத்தான் போகவேண்டியதாயிற்று. ஆனால் அதை ஒரு அரசாங்கம் செய்யும்போது அந்த நாட்டின் ஆளும் அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் நேரடியாகச் செய்யமுடியுமா என்றுதான் கேட்டிருந்தேன். இந்தியா நேரடியாகவோ, சுத்திவளைத்தோ எப்படிச் செய்தாலும் இலங்கை அரசு அனுமதிக்காமல் ஹெலிகாப்டர்களையோ உணவு மருத்துவப் பொருட்களையோ அங்கே இறக்க முடியுமா? முடியும் என்று இருந்தும் இலங்கை அரசுக்காகவோ, தன்மேல் விடுதலைப் புலி ஆதரவு சாயம் வந்துவிடும் என்று பயந்தாலோதான் தவறு.

  நாம் பாகிஸ்தானுக்கு உதவி செய்வதும், கானடா, இத்தாலி மற்ற ஐரோப்பிய நாடுகள், கொரியா ஆஸ்திரேலியா நாடுகளின் நேரடி உதவியைப் போல சிங்கள அரசால் இந்தியா போன்ற நாட்டின் உதவியை எடுத்துக்கொள்ள முடியுமா? புலிகள் விஷயத்தில் ஏற்கனவே நாம் இரண்டு extreme முடிவுகளை எடுத்த வரலாறு வைத்திருக்கிறோம். அதன்பொருட்டே அவர்களுக்கு நம்மேல் நிறைய தயக்கம் இருக்கலாம். நான் சொல்ல வந்தது, நமக்கு எப்போதுவேண்டுமானாலும் 'தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும்' நிலை புலிகள் விஷயத்திலும் வந்துவிடுமோ என்ற தயக்கம் அவர்களுக்கு இருக்கலாம். மற்ற நாடுகளுக்கு அந்த அரசு அந்தக் கவலைப் படவேண்டியதில்லை. இந்த உதவிகளோடு அவர்கள் தொடர்புகளும் முடிந்துவிடும்.
  =======

  தனிமனிதர்கள் பணம் அனுப்பும்போது பரவாயில்லை; பிரச்சனை இல்லை. TRO-வின் வங்கிக் கணக்கு இருந்தால் போதும். ஆனால் பொருள்கள்.. எனக்குத் தெரியும் யார் பத்ரி என்று. ஆனால் இலங்கை அரசுக்கு? இந்தியாவில் இருந்துவரும் எந்தப் பொருளையும் மோசமான/அவசர சூழ்நிலை என்ற ஒரே காரணத்திற்காக ஒரு போர்ச்சூழல் நாட்டின் எதிர்கள் பகுதிக்கு அவர்கள் சரிபார்க்காமல் மருந்துப் பொருள்களாகத்தான் இருக்கும் என்று அனுமானத்தில் விட்டுவிடுவார்களா? அதே மோசமான சூழ்நிலையில்தான் சிறுமிகள் பாலியல் வன்முறையிலிருந்து, பிணத்தின் உடலிலிருந்து நகைத் திருட்டுவரை எல்லாம் நடக்கிறது. நான் சொல்லவருவதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். [இல்லையா? :(]
  =========

  வைகோ, ராமதாஸ் போன்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வியே அபத்தம். அவர்களுக்கு அரசு ஏதாவது செய்துவிட்டால்தான் கஷ்டம். அரசு செய்யாமல் இருக்கவேண்டும். அதைவைத்து அவர்கள் அரசியல் செய்யவேண்டும். இது வைகோவிற்கு மட்டுமல்ல, பொதுவாக எல்லா அரசியல்வாதிகளுக்கும் எல்லாப் பிரச்சனைகளின் போதும் பொருந்தும். வைகோ பற்றி இலங்கைத் தமிழர்களுக்கு இது ஒரு பாடமாகட்டும்.

  ஆனால் அரசுக்கு வைகோ சொல்லித்தான் எடுத்துச் செய்யவேண்டும் என்று இல்லை. அவர்களுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். அவர்களேதான் செய்யவேண்டும்.

  ஆனால் நான் கேட்க நினைத்தது, 'நேரடியாக அனுப்புவதில்லை' என்ற முடிவை இந்தியாவே எடுத்ததா, இலங்கை அரசு இந்தியாவிற்கு மட்டும் நேரடியாக அனுப்பத் தடை விதித்ததா என்றுதான். பொதுவாக 'இந்த' நேரத்தில் ஏதாவது இணையத்தில் பேசவே எனக்கு நிறைய தயக்கம் இருக்கிறது. I took liberty in your blog. Also, though not the proper answer for my doubt, as otherwise, thanx for your detailed reply. Very nice of you. It also speaks many truths. As per Mr.Rosavasanth's suggestion please post it separately. Wish you success in all your endeavours! God Bless.

  ReplyDelete
 16. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 17. முதலில் பத்ரியின் முயற்சிகளுக்கு நன்றி.

  வைகோ இப்போது பிணையில் தான் வெளியிலிருக்கிறார். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசக்கூடாது என்பதும் அதில் ஒரு நிபந்தனை. இதில் ஏதாவது சொல்லப்போய் மீண்டும் உள்ளே வைத்துவிடுவார்கள் என்ற பயம் இருக்கலாம். உள்ளே போனால் மீண்டும் வெளியே வர அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் (அப்போது தான் பெரியண்ணனின் கடைக்கண் பார்வை அவர் மேல் படும்). இதற்கெல்லாம் பயந்துதான் ஒன்றும் பேசாமலிருக்கிறார் என்றால் மற்ற நேரங்களில் அவர் பேசுவதை வெட்டி வீறாப்பு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

  சுந்தரமூர்த்தி

  By: M. Sundaramoorthy

  ReplyDelete
 18. சு.மு. ,
  வைகோ நிபந்தனை காரணமாகவோ, பயம் காரணமாகவோ சும்மா இருக்கிறார் என்று எனக்கு தோன்றவில்லை. குறைந்த படசம் அடக்கியாவது அதேநேரம் வாசித்திருக்க முடியும். ஏன் சும்மா இருக்கிறார் என்பது (அவருக்கு அரசியல்ரீதியாகவும் இதனால் பாதிப்பு வராது என்ற நிலமையில்)புரியவில்லை என்றுதான் என்னால் சொல்லமுடிகிறது - சும்மா இருப்பது பச்சை துரோகம் என்பது தெளிவாக இருப்பினும்!

  ReplyDelete
 19. காலையிலே பதிய வேண்டும் என்று இருந்தேன் முடியவில்லை.. இந்திய அரசாங்கம் சொல்வது இதுதான். எங்களுக்கு ஏற்கனவே ஏற்பட்ட கசப்பான அனுபவங்களினால் இந்த முறை நாங்கள் எந்தவிதமான சிக்கலிலும் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை.

  உன்மை என்னவென்றால், தமிழ் மக்களைப் பற்றிய நிலையை விட எங்களுக்கு இலங்கை அரசின் மீது நம்பிக்கை அதிகம். ±í¸Ç¢ý Àí¸Ç¢ôÒ ±ýÀÐ þÄí¨¸ «ÃÍìÌ ¯¾×ÅÐ ÁðΧÁ. ÒÄ¢¸û þó¾¢Â¡Å¢ø ¾¨¼ ¦ºöÂôÀð¼ þÂì¸õ. «¾É¡ø, «Å÷¸Ç¢ý Á£Ð நம்பிக்கை þø¨Ä. þ¾É¡ø, 1 Äðºõ Áì¸û þÈó¾¡Öõ ±í¸ÙìÌ ¸Å¨Ä¢ø¨Ä. ±¨¾ô ÀüÈ¢Ôõ ±í¸ÙìÌ ¾É¢ ¸ÕòÐ ¸¢¨¼Â¡Ð. ¦º¡øÄô §À¡É¡ø, Àòâ ¦º¡øÅÐ §À¡ø, ÒÄ¢¸¨Çô ÀüȢ «À¢ôÀ¢Ã¡Â¡í¸¨Ç µÃõ ¾ûÇ¢ Å¢ðÎ, ¯Â¢÷¸¨Çô ÀüÈ¢ ¸Å¨Äô À¼ §ÅñÊ §¿ÃÁ¢Ð.

  «Ð ºÃ¢, ±í§¸¡ þÕìÌõ Á¡Äò¾£×ìÌ À⾡ÀôÀÎõ þó¾¢Â «ÃÍìÌ Äðºõ ¾Á¢Æ÷¸¨Çô ÀüÈ¢ ¸Å¨Ä À¼ §¿ÃÁ¢ø¨Ä §À¡Öõ. ¾Á¢Æý ±í§¸ þÕó¾¡Öõ «Åý þÇ¢îºÅ¡Âý ¾¡ý!!

  ReplyDelete
 20. Óý À¾¢Å¢ø Å¢ðÎô §À¡ÉÐ. ±§¾¡ À¼ò¾¢ø ¸×ñ¼Á½¢Â¢ý Å¡iò¨¾ ¾¡ý ¿¢¨ÉìÌ ÅÕ¸¢ÈÐ. " þí§¸, áÁ¾¡Í, ¨Å.§¸¡-ýÛ þÃñÎ Á¡ÉŠ¾Ûí¸Ûí¸ þÕó¾¡í¸!! §¾Ê, §¾Ê À¡ì¸§Èý...¸¢¨¼ì¸§Å Á¡ð§¼ýÈ¡ýí¸!!"

  ReplyDelete
 21. ஆஹா, நாரைன், என்னே உங்கள் சாகசம்! ஒரு பக்கம் இந்தியாவோ அதன் பிரதிநிதிகளோ சொல்லி கொள்ளாத ஒரு நியாயத்தை, இந்தியா சார்பாய் நீங்களே அழகாய் வெளியிட்டு, இன்னொரு பக்கம் 'தமிழன் இளிச்சவாயன்' சர்டிஃபிகேட் வேறு. பேஷ்..பேஷ்..!

  ReplyDelete
 22. அன்புள்ள வசந்த், இது பகடி மட்டுமே. உங்களின் தார்மீக கோவம் எனக்கும் உண்டு. நான் சொல்லவந்தது, இந்திய அரசின் இரட்டைத் தன்மையே ஒழிய,வேறு இல்லை. மன்னிக்கவும், அந்த Phrase ஒரு தவறான தகவலை முன்னிறுந்தால்.

  ReplyDelete
 23. அன்புள்ள வசந்த், இது பகடி மட்டுமே. உங்களின் தார்மீக கோவம் எனக்கும் உண்டு. நான் சொல்லவந்தது, இந்திய அரசின் இரட்டைத் தன்மையே ஒழிய,வேறு இல்லை. மன்னிக்கவும், அந்த ஒரு தவறான தகவலை முன்னிறுந்தியிறுந்தால்.

  ReplyDelete
 24. நன்றி நரைன். நான் தவறாக வாசித்திருந்தால் மன்னிக்கவும். ஏற்கனவே பெயரிலியுடன் நீங்களிட்ட(?) சண்டையை படித்ததனால் எனக்கு இப்படி ஒரு வாசிப்பு வந்திருக்கலாம்! இந்திய அரசின் இரட்டைதன்மை குரீத்தே நீங்கள் பேச வந்திருந்தால் மகிழ்ச்சி!

  ReplyDelete
 25. I am very very sorry Narain. I mistook you for a suren. I sincerely apologise for that. anbuLLa vasanth

  ReplyDelete
 26. Doesn't really matter Vasanth , as long as we think for the common good. I am a regular reader of your blog. Interesting thoughts. I go with your view on Venkat Saminathan's issue with Kalachuvadu. and also on your post on Subramanyam Swami.

  btw, Sorry Badri for using your blog to give feedback for Vasanth.

  ReplyDelete
 27. எங்களால் இங்கிருந்து மருந்து மற்றும் உணவுப்பொருட்களை அனுப்ப முடிகின்றது. இதுவரை பிரச்சனை ஏதும் இல்லை. அடுத்த வாரம் நிவாரணப் பொருட்களுடன் இலங்கை செல்கின்றேன்.

  By: வே. இளஞ்செழியன்

  ReplyDelete
 28. நன்றி நரைன்!

  இளஞ்செழியன் இங்கிருந்து என்றால் எங்கிருந்து? சென்னையிலிருந்தா?

  ReplyDelete
 29. மலேசியா. ஆனால், இப்போதுதான் தகவல் கிடைத்தது: இலங்கைக்குக் கொள்கலன்களை அனுப்பினால் அவை திரும்பி வருமா என்ற அச்சம் இருக்கின்றதாம். அதனால், அதன் உரிமையாளர்கள் தயங்குகின்றனர்...

  By: வே. இளஞ்செழியன்

  ReplyDelete
 30. மலேசியா. ஆனால், இப்போதுதான் தகவல் கிடைத்தது: இலங்கைக்குக் கொள்கலன்களை அனுப்பினால் அவை திரும்பி வருமா என்ற அச்சம் இருக்கின்றதாம். அதனால், அதன் உரிமையாளர்கள் தயங்குகின்றனர்...

  By: வே. இளஞ்செழியன்By: வே. இளஞ்செழியன்

  ReplyDelete