வரும் பிப்ரவரி மாதம் 12-ம் தேதி மாலை 6.00 மணிக்கு அசோகமித்திரனை - அவரது 50 ஆண்டு கால எழுத்துப் பணிக்காக - கவுரவிக்கும் விதமாக, சென்னையில் ஒரு விழா நடக்க உள்ளது.
இடம் - tentatively - ஃபில்ம் சாம்பர் ஆடிடோரியம். அண்ணா சாலை. முழு விவரங்களை, எல்லாவற்றையும் உறுதிப்படுத்திக்கொண்டு பின்னர் எழுதுகிறேன்.
கடவு இலக்கிய அமைப்பு, கிழக்கு பதிப்பகம் இணைந்து பிறரது ஆதரவுடன் இந்த விழாவை நடத்துகிறது. முன்னின்று நடத்துபவர், தலைமை தாங்குபவர் எழுத்தாளர் பிரபஞ்சன். விழாவுக்கு வந்து பேச இருப்பவர்கள் சுந்தர ராமசாமி (அசோகமித்திரன் சிறுகதைகள் பற்றி), ஞானக்கூத்தன் (கட்டுரைகள் பற்றி), ஆ.இரா.வேங்கடாசலபதி (நாவல்கள் பற்றி), பால் சக்காரியா (சிறப்புப் பேச்சாளர்). வரவேற்புரை எஸ்.வைதீஸ்வரன், நன்றியுரை விருட்சம் அழகியசிங்கர். அம்ஷன் குமாரின் அசோகமித்திரன் பற்றிய குறும்படம் 6.00 மணிக்குத் திரையிடப்படும்.
அனைவரும் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஆலயங்கள் வழியே வரலாற்றை மீட்டெடுத்தல்
4 hours ago
உண்மையிலேயே நல்ல சேதி, நல்ல முயற்சி. இடம்,நேரம,காலம் உறுதியாக்கிவிட்டு பதியுங்கள். யாருப்பா அங்கே, மூணாவது ரோல, நடு சீட்ல கைக்குட்டையோ/ஹெல்மட்டோப் போட்டு இடம் புடிங்கப்பா
ReplyDeleteஅசோகமித்திரனின் ஆங்கிலப் படைப்புகள் பற்றிப் பேச, இந்து பத்திரிகையாளர்ரும் வரலாற்றாளருமான ராமச்சந்திர குகா (பெங்களூர்) அவர்களை அழைக்க முடியுமா என்று பாருங்களேன் பத்ரி. நானும் முயல்கிறேன் (விழா விவரங்கள் உறுதியானதும்). பி.ஏ.கிருஷ்ணனையும் அழைக்கலாம்தானே?
ReplyDeleteஇரா.மு
By: eramu
அசோகமித்ரனுக்குக் கிடைக்கும் (மிகத் தகுதியான) இந்த கௌரவத்தைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முனைப்பெடுத்துச் செய்யும் கிழக்குப் பதிப்பகத்திற்கு என் நன்றிகள்.
ReplyDeleteBy: வெங்கட்
அசோக மித்திரன் எனது அபிமான எழுத்தாளர்களில் ஒருவர். அவசியம் விழாவுக்கு வருவேன்.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல முயற்சி. கண்டிப்பாக ஆஜர் ஆகிவிடுவோம்.
ReplyDeleteBy: Lazy Geek
மிக நல்ல காரியம் இது.
ReplyDeleteவாழ்த்துகளும் , "பட்சி"க்கு பாராட்டுகளும்.
இரா. முருகனின் "பட்சி" சரியான தகவலைத்தான் சொல்லியிருக்கிறது. பாராட்டுக்கள். இயலுமாயின், விழாவைப் பற்றிப் பதியுங்கள். நன்றி.
ReplyDeleteBy: Raj Chandra