Friday, January 28, 2005

புத்தகக் கண்காட்சியின் விடியோத் துண்டு

இரண்டு நிமிடக் குறும்படம். இன்னமும் சில துண்டுகளை வரும் நாள்களில் சேர்க்கிறேன். கிட்டத்தட்ட நான்கு MB சமாசாரம். அதனால் நேரம் அதிகம் எடுக்கலாம். நேரடியாக திரையில் தெரியவில்லையென்றால் இங்கிருந்து எடுத்து தனியாகப் பார்த்துக் கொள்ளவும்.



பி.கு: அனைவரது வேண்டுகோளையும் ஏற்று, தானாகவே ஓடும் படம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலே உள்ள சுட்டியிலிருந்து விடியோவைத் தருவித்துப் பார்த்துக்கொள்ளவும்.

12 comments:

  1. இந்த வீடியோ துணுக்கில் உள்ள எழுத்தாளர்கள் இவர்கள்: (வருகிற வரிசைப்படி.)
    மீனாக்ஸ்
    இரா. முருகன்
    சொக்கன்
    சோம. வள்ளியப்பன்
    குறிஞ்சிவேலன்
    சுதாங்கன் கையெழுத்திடுகிறார்
    பிரகாஷ்
    அசோகமித்திரன்


    By: பத்ரி

    ReplyDelete
  2. ரொம்பத்தான்! ஒரு ரேஞ்சுலதாம்பா இருக்காங்க கிழக்கு.

    எழுத்தாளர்தான்னாலும் 'எழுத்தாளர் மீனாக்ஸ்'னு இப்பத்தான் படிக்கறேன். பெரியாள் ஆயிட்டாங்கப்பா. வாழ்த்துகள். :)

    விடியோ எடுத்துகிட்டு தொணதொணன்னு பேசிண்டே இருக்கறது யாரு? (காலம்பரலேர்ந்து, பாத்தேளா.. ) சரிதானா என் ஊகம்?

    நிஜமாவே நிறைய இதையெல்லாம் மிஸ் பண்றேனோன்னு இருக்கு. (வயித்தெரிச்சலா இருக்குங்கதோட polite form..)

    என்னமோ போங்க.

    ReplyDelete
  3. எனக்கு தமிழில் செய்தியோடை செய்ய ஆசையாக இருக்கிறது. செயல் முறை உதவி செய்ய முடியுமா?. என்னை prasams@gmail.com என்கிற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளளாம். மிக்க நன்றி.

    By: prasanna

    ReplyDelete
  4. அண்ணா, embed பண்ணாம, சுட்டி மட்டும் குடுங்ணா, நாங்க சொடுக்கிப் பாத்துக்கறோம் :-)
    (என்னெக் கேக்காம, உலாவியில பாட்டு, படம் தானா வந்தா எனக்கு செம கடுப்பு வரும் :) )

    ReplyDelete
  5. படம் அவ்வப்போது நிற்பது ஏன்? ஒவ்வொரு முறையும் ப்ளே பட்டனை அழுத்துவது அலுப்பாக இருக்கிறது.
    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    By: Dondu

    ReplyDelete
  6. பரி: எல்லாத்தையும் ஒருதடவையாவது செஞ்சு பாக்கணும்னு செஞ்சது. இனி வெறும் சுட்டி மட்டும்தான்.

    டோண்டு: உங்களோட இணைப்பு மெதுவாக இருக்கறதுனால, முழு விடியோவும் வரதுக்கு முன்னாலயே ஏற்கெனவே வந்தது முடிஞ்சு போறதால, அப்படி ஆகுது. நான் கொடுத்திருக்கும் சுட்டியிலேர்ந்து கீழ ஏறக்கிட்டு, தனியா, பொறுமையாப் பாருங்க.

    ReplyDelete
  7. சிலரை முதன் முறையாகப் பார்க்கிறேன். வழுக்கைத் தலை பிரகாசுமா எழுத்தாளர்? தலையப் பாருங்க...பெரிய ஆர்மி பிளைட்டே வந்து தரை இறங்கலாம்போல உள்ளது! மண்டைக்கு உள்ளேயும் காலி வெளியிலும்!

    By: ராயர் ஓனர்

    ReplyDelete
  8. ராயர் ஓனர் யாருன்னு பாக்க க்ளிக் பண்ணினா எங்கியோ போகுது. (அடப் பாவிகளா!) ´§Ã §À÷Ä ¦ÃñÎ ÌØÁõ ¦Åì¸ ÓÊÔÁ¡? :-o ஆனா ஓனர் யாருன்னு தெரிஞ்சுடுச்சு.

    ReplyDelete
  9. மிகவும் நன்றி!

    ReplyDelete
  10. மிகவும் நன்றி!

    ReplyDelete
  11. பெரிய எழுத்தாளர்களின் முகங்களை எங்களுக்கு காட்டியதற்கு மிகவும் நன்றி பத்ரி.

    By: மரத்தடி ஓனர்

    ReplyDelete
  12. வீடியோ இப்போதான் பார்த்தேன்.

    எல்லாம் ஒரே சந்தோஷமா இருக்கீங்க போல..

    ம்..ம்..Enjoy..

    மடலில் கண்ட முகங்கள் அத்தனையையும் அசையும் படத்திலும் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி.

    ( அது சரி..யாரிந்த புது ஓனர்கள்.??? )

    ReplyDelete