Saturday, January 29, 2005

நதிநீர் இணைப்பை வலியுறுத்தி உண்ணாவிரதம்

நாளை (ஞாயிறு, 30 ஜனவரி 2005, தியாகிகள் தினம்), காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரில், நதிநீர் இணைப்பை வலியுறுத்தி ஒருநாள் உண்ணாவிரதம் நடக்க இருக்கிறது. டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் மக்கள் சக்தி இயக்கம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.

மக்கள் சக்தி இயக்கத்தைத் தொடர்பு கொள்ள முகவரி:

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி
மக்கள் சக்தி இயக்கம்
17-A தெற்கு அவென்யூ
காமராஜ் நகர்
திருவான்மியூர்
சென்னை 600 041
தொலைபேசி: 2442-1810
மொபைல்: 98405-15927, 98402-47517

இதுபற்றி மக்கள் சக்தி இயக்கத்திலிருந்து எனக்குக் கிடைத்த கோப்பு ஒன்றை (PDF) இணைத்துள்ளேன். (எழுத்துருவில் சில மாற்றங்கள் மட்டும் செய்துள்ளேன்.)

12 comments:

 1. ¦ƒÂ‚ : «ó¾ ţʧ¡ «Îò¾ Àì¸òÐìÌ §À¡¸¢È Ũà þ§¾ Á¡¾¢Ã¢ ÀÎò¾Ä¡¸ò¾¡ý þÕìÌõ. ¿£í¸ IE ¯À§Â¡¸¢ôÀÅḠþÕó¾¡ø, ¦ÁÛÅ¢ø tools->internet options-> §¾÷× ¦ºöÐ, advanced options ¼¡¨À ¾ðÊÉ¡ø, multimedia ±ýÚ þÕôÀ¾ý ¸£§Æ, play video Å¢ý Àì¸ò¾¢ø ´Õ Åð¼ò¾¢ø ¦À¡ðÎ ¨Åò¾¢ÕìÌõ. Íð¦¼Ä¢¨Â ¨ÅòÐ, «¨¾ ±ÎòРŢð¼¡ø, refresh ¦ºö¾¡ø, þó¾ À¢Ãîº¨É þÕ측Ð. §¿üÈ¢ø þÕóÐ Àòâ ôÇ¡ì Àì¸õ ÅÕõ §À¡¦¾øÄ¡õ ¿¡ý «ôÀÊò¾¡ý ¦ºö¸¢§Èý. ţʧ¡ «Îò¾ Àì¸òÐìÌô §À¡¸¢È ŨÃ, ¼ÂÄôÀ÷¸û þó¾ ¯ò¾¢¨Âò¾¡ý ¸¨¼À¢Êì¸ §ÅñÎõ.

  By: Icarus

  ReplyDelete
 2. அதாவது தண்ணீரை இலவசமாகப் பெற இனியும் முயற்சி செய்யக்கூடாது. அப்படிச் செய்வதனால் யாருக்கும் எந்த உபயோகமும் கிடையாது. ஏனெனில் இவை நடக்கப் போவதில்லை. ஏதோ ஒரு விலை போட்டு, வருடத்தில் ஒரு டி.எம்.சி தண்ணீருக்கு இத்தனை ரூபாய் தருகிறேன் என்று "deal" போட வேண்டியதுதான் என்கிறார்.

  ஓரளவுக்கு நான் இத்துடன் ஒத்துப்போகிறேன். தண்ணீர் இலவசமாகக் கிடைப்பதால்தான் வீணடிக்கப்படுகிறது, பிற மாநிலங்களுக்குள்ளாக மாற்றியனுப்பப் படுகிறது. காலம் காலமாக சண்டை. இதே பக்கத்து மாநிலத்தில் பெட்ரோல் வளம் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். என்ன நடக்கிறது? மத்திய அரசு அந்த நிலத்தை ஒரு விலை போட்டு கையகப்படுத்திக் கொள்கிறது. எண்ணெய் எடுப்பதை வைத்து மாநில அரசுக்கு கொஞ்சம் ராயல்டி கொடுக்கிறது.

  எடுக்கிற எண்ணெயை மாறுகடையில் விற்பனைக்குக் கொண்டு வருகிறார்கள். அதை நம் மாநில அரசு விலைக்கு வாங்கி சில மான்யங்களுடன் குறைந்த விலைக்கு சிலருக்கு அளிக்கலாம்.

  அதைப்போலவே தண்ணீரையும் செய்ய வேண்டி வரலாம்.

  அப்பொழுது உபரி நீரை பணமாகவாவது மாற்றுவோமே என்று பக்கத்து மாநிலங்கள் நம்முடன் 'busiess deal' போட வரலாம்.

  அப்படியாவதுதான் தமிழகம், ஹரியாணா போன்ற மாநிலங்களுக்கு தண்ணீர் ஒழுங்காகக் கிடைக்கலாம்.

  ===

  மற்றபடி நதிநீர் இணைப்பு பற்றி எனக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன. மக்கள் சக்தி இயக்கம் துண்டுப் பிரசுர PDF கோப்பில் சூழலியல்வாதிகளை "பச்சை"க்காரர்கள் என்றும், வெட்டியாக ஏதோ கருத்துகளை விதைத்து, முன்னேற்றத்தைக் குலைப்பவர்கள் போலும் சித்தரிப்பது எனக்குப் பிடிக்கவில்லை. இன்று நேரம் கிடைக்கும்போது சேப்பாக்கம் பக்கம் ஒரு சுற்று பார்த்து விட்டு வருகிறேன்.

  ReplyDelete
 3. நதிநீர் இணைப்பு என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. சற்றே நேரம் கிடைத்தால் http://www.narmada.org தளத்திற்கு சென்றுப் பார்க்கவும். உலகமுழுக்க நதி நீர் இணைப்பு அல்லது இயற்க்கையாய் அமைந்த பாதையை திருப்பிவிடுதலின் துர்விளைவுகளை பல நாடுகள் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. பத்ரி சொல்வது போல் தண்ணீரை ஒரு பொருளாக மாற்றிவிட்டால் அதன் விலை மதிப்பை வைத்து தண்ணீரை பெற்றுக்கொள்ளுதல் என்பது நியாயமான வாதம். கம்யூனிச ஆட்சியில் நாடு முழுக்க அணைகளையும், பாலங்களையும் கட்டிய சீனாவை, அதன் விளைவுகளை உணர்ந்து திருந்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன் தீராநதியில்(அல்லது காலச்சுவடா) இதனைப் பற்றிய ஒரு விரிவான அலசலை முன்வைத்திருந்தது. பல நாடுகளில் இந்த இணைப்பு என்பதே இயற்க்கையை சுடுகாட்டாக்கும் என்பதை கண்டுகொண்டு அதனை கைவிட்டுவிட்டனர் என்பது உண்மை.

  சில மாதங்களுக்கு முன் சண்டிகாரும், ஹரியானாவும் டெல்லிக்கு தண்ணீர் தருதல் பற்றி அடித்துக் கொண்ட சண்டைகளை கண்கூடாய் கண்டவர்கள் நாம்.

  இதைப் பற்றி விரிவாக பேசலாம்....ஆனால் நான் வெளியே செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருப்பதால், என் எதிர்ப்பினை மட்டும் பதிந்துவிட்டு போகிறேன். இதைப்பற்றி ஏற்கனவே என்னுடைய ஒரு பதிவில் பதிந்திருக்கிறேன். சற்றே கூகிளில் "inter linking of rivers" எனத் தேடிப் பார்க்கவும்.

  போவதற்குமுன், நதிநீர் என்பது கானல் கனவு மற்றும் சுற்றுசூழலினை பாதிக்கும். இந்த சுட்டிகளைப் பார்க்கவும்.

  1. http://www.indiatogether.org/opinions/guest/interlink.htm
  2. http://www.rainwaterharvesting.org/Urban/Model-Projects.htm
  3. http://www.narmada.org/ALTERNATIVES/water.harvesting.html
  4. http://www.frontlineonnet.com/fl1925/stories/20021220001504900.htm
  5. http://www.countercurrents.org/en-ghosh150503.htm

  ReplyDelete
 4. நாராயண் சொல்வதை நான் முழுமையாக ஒத்துக்கொள்கிறேன். இது இயற்கையுடன் விளையாடுவது போலத்தான். இதனால் பல நாடுகளில் ஏற்பட்ட வறட்சிகள் அதைச் சொல்வதாக நான் நம்புகிறேன்.

  ஏரல் கடலுக்கு ஆன கதி தெரியுமா? நான் அதைப் பற்றி ஒரு பதிவு எழுத எண்ணி விவரமெல்லாம் சேகரித்தேன், பிறகு ஏனோ இயலாமல் போய்விட்டது.

  ReplyDelete
 5. பத்ரி, மத்திய அரசு எடுத்துக்கொண்டு பகிர்ந்தளித்தல் என்னும் கருத்து ஒரளவில் ஏற்புடையதாக இருந்தாலும், சற்றே உங்கள் நினைவுகளை 20 வருடங்களுக்கு முன் திருப்புங்கள். அஸ்ஸாமில் நடந்தது என்ன ? மத்திய அரசு, பெட்ரோலை அங்கு எடுத்துக்கொண்டு மாறுகடையின் விலைக்கு மிகக்குறைவாக மாநில அரசுக்குத் தந்தது. பிரபல்ல குமார் மகந்தா தலைமையிலான மாணவர் குழுமம் இதனை காரணம் காட்டி, ஆட்சியைப் பிடித்தது. ஆக, மத்திய அரசு, விலை நிர்ணயம் செய்யும் என்பது கூட எந்த அளவில் நியாயமாக கருதப்ப்டும் என்பது பில்லியன் மக்களின் கேள்வி.

  ReplyDelete
 6. நான் மத்திய அரசு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. எண்ணெயை உதாரணம் காட்டினேன். அசாமில் என்ன பிரச்னை என்பது பற்றி தனியாக ஆராய வேண்டும்.

  தண்ணீருக்கு விலை வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன். இல்லாவிட்டால் வீணாகப் போனாலும் போகட்டும், அடுத்த மாநிலத்துக்குத் தரமாட்டேன் போன்ற பிடிவாதங்கள் தொடர்ந்து நடக்கும்.

  ReplyDelete
 7. நீங்கள் சொல்லும் தண்ணீருக்கு விலை என்பதை ஒத்துக்கொள்கிறேன். என் கேள்வி, யார் இந்த விலையை நிர்ணயம் செய்வதுதான்.

  ReplyDelete
 8. நீங்கள் சொல்லும் தண்ணீருக்கு விலை என்பதை ஒத்துக்கொள்கிறேன். என் கேள்வி, யார் இந்த விலையை நிர்ணயம் செய்வது என்பது தான்.

  ReplyDelete
 9. சம்பந்தமில்லாத இன்னொரு கேள்வி, ஏன் உங்கள் பதிவிலிருந்து பா.ராகவனின் பதிவு "இல்லை" என தமிழோவியம் காட்டுகிறது. இது உங்கள் சுட்டியின் தவறா இல்லை, பா. ராகவன் அங்கு பதிவுகள் எழுதுவதை நிறுத்தி விட்டாரா?

  ReplyDelete
 10. தண்ணீரின் விலை நிர்ணயம் கூட demand/supply வழியாக நடைபெறும். மத்திய அரசு இதில் ஈடுபட வேண்டியதே இல்லை. இதில் நிறைய ஆராய வேண்டிய விஷயங்கள் உள்ளன.

  உதாரணத்துக்கு கடல்நீரைக் நன்னீராக மாற்றுவதை தமிழகம் செய்ய நாளாகும் என்று வைத்துக்கொள்வோம். ஆந்திரம் இதைச் செய்து, தமிழகத்துக்கு 1 டி.எம்.சி தண்ணீர் இத்தனை ரூபாய் என்று தர விரும்பலாம். அப்பொழுது கர்நாடகமும் இந்த சுத்திகரிப்பு இல்லாத சாதாரண காவிரித் தண்ணீரை விலைக்கு விற்க முன்வரலாம். கேரளம் ஆளியாறு/பரம்பிக்குளம் தொடங்கி பல வீணாகப் போகும் தண்ணீர்களை விற்க முன்வரலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விலை பேசுவார்கள். நமக்கு விலை குறைவாகக் கிடைக்கும் தரமான தண்ணீரை நாம் வாங்கி விளை நிலங்களுக்குப் பாய்ச்சுவதன்மூலம் விளைச்சலைப் பெருக்கி, தண்ணீருக்குக் கொடுத்த விலையை விட அதிகமான வருமானத்தைப் பெறலாம்.

  ---

  ராகவன் வலைப்பதிவை தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

  ReplyDelete
 11. செயல் படுத்தப் படுமா இந்த யோசனை? உண்மையை சொல்வதென்றால், இது தண்ணீர் விற்பது/வாங்குவது மட்டுமல்ல. இங்கே தண்ணீர் என்பது விவசாயியின்
  சென்டிமென்ட் சார்ந்த விசயம். நீங்களும் நானும் பேசிக் கொள்வதுப் போல் "நீ இவ்வளவுக்கு தருவியா/மாட்டியா" என்ற வியாபார ரீதியிலான முடிவு அல்ல.

  தண்ணீரை விற்று தான் நாங்கள் நிதி சேர்க்கவேண்டிய நிலையில் இல்லை என ஈகோவுடன் இருக்கக்கூடிய மாநிலங்கள் இல்லை என ஒரே வரியில் கூறிவிடமுடியாது. மேலும், கர்நாடக பிரச்சினையிலேயே, கர்நாடக விவசாயிகள் காவிரியில் வீழ்ந்து தற்கொலை செய்ய துணியுமளவிற்கு முட்டாள் தனமாக எதிர்த்தார்கள். இத்தகைய சுழ்நிலையில், இது எவ்வாறு முன்னெடுத்துச் செல்லபடும் என்பதும் மிக முக்கியமான கேள்வி.

  ஒரு வேளை நீங்கள் சொல்வது போல் நடக்க முயன்றால், என்கென்னவோ, வெள்ளத்தாலேயும், புயலாலேயும் அதிகமாக பாதிக்கப்படும் வட மாநிலங்கள் இதற்கு ஒத்துக்கொள்ளும் சாத்தியங்கள் அதிகம். ஆனால், எப்படி, தண்ணீரை அனுப்புவது என்னும் logistics பிரச்சனை தலை தூக்கும்.

  ஆயினும், இது ஒரு நல்ல முன்மாதிரியாய் அமையும் என எதிர்பார்க்கலாம்.

  ReplyDelete
 12. oru theernda vivaadam. cila valaiththalangalil nam vaazhvu piracchinaikalukku vidaikal atangividum enpathaithavira. iyarkaiyodu vilaiyaada vendaam enkirathu oru vaatham. manitha kula cariththirame iyarkayodu vilayaiduvathuthaan. karikaal chozhan ceithathu thavaraa? aanaal etharkkum oru varambu, ellai irukka vendum.
  theepakarpa india paalaivanamagum naal vegu thooraththil illai. itharku www.narmada.org enna pathilai vaithirukkirathu? 2002 oru aandil mattum thamizakaththil ore oru maavattathilirundu - Dharmapuri - 32000 kutumbangal thanneeraith thedi pulam peyarndana enpathu pulli vivaram. inthap pulli, perithaagi, 32000 kodiyaagum naal nammidaiye vandu kondirukkirathu. nathigalai inaippathu putthisaalithanam mattum alla. ithu oru manitha unarvin, tholainookin, thavirkka mudiyaatha kattaayam. THERE IS NO ALTERNATIVE.
  neerukku valai nirnayippathu cendra aandu Kyoto nagaril nadantha ulaka neervala maanaattil paravalagavum paraparappagavum pesappattathu. Virtual Water enum ciththaantham munvaikkappattathu. ithu ulagengilum etrukkollappadum naal thooraththil illai. enenil, irupathaam nootrandil ennai valam ulakai aandathendraal, irupathondraam nootraandil neer valam ulakai aalum.
  nandri.
  vaazhthukal
  s. parthasarathy

  ReplyDelete