Monday, January 17, 2005

புத்தகக் கண்காட்சி முடிவு

திங்கள்கிழமை என்றாலும் மிகவும் விருவிருப்பாக இன்றைய கடைசி நாள் அமைந்திருந்தது. பலர் கையில் கொண்டுவந்திருந்த காசெல்லாவற்றையும் செலவு செய்து விட்டு, நல்ல புத்தகங்களைப் பார்த்தபோது "அடடா, காசு தீர்ந்துவிட்டதே" என்று வருத்தப்பட்டனர். கிரெடிட் கார்டுகள் அதிகமானால், புத்தக விற்பனையும் அதிகமாகும் என்று தோன்றுகிறது.

சுரேஷ் கண்ணன், அருள் (மீண்டும்) கண்ணில் பட்டனர். இகாரஸ் பிரகாஷ் அவசர அவசரமாக வந்து ஜெயமோகன் புத்தகத்தை வாங்கிக்கொண்டு சென்றார். தன்னைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள அவ்வளவு ஆவல்!

ஆங்காங்கே குறைகள் இருந்தாலும், கண்காட்சி அமைப்பு சிறப்பாகவே இருந்தது. ஆனால் இன்னமும் முன்னேற்றம் தேவை. உதாரணமாக கிரெடிட் கார்ட் வசதிகள் இரண்டே இரண்டு இடங்களில்தான் அமைக்கப்பட்டிருந்தன. பல கடைக்காரர்கள் கிரெடிட் கார்டு வசதிகளைப் பயன்படுத்த மறுக்கும் பத்தாம்பசலிகளாக இருந்தனர். "அதெல்லாம் வேணாங்க... அப்புறம் காசு வாங்க அவங்ககிட்ட தொங்கிகிட்டு இருக்கணும்" என்றனர். ஆக, வாசகர் எந்தப் புத்தகத்தையும் வாங்காவிட்டாலும் பரவாயில்லை என்பதுதான் இவர்கள் எண்ணம் போலும்...

பபாசி (BAPASI) தலைவர் சொன்னதாக ரூ. 5.40 கோடி விற்பனை என்று சில செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படிப்பட்ட செய்திகள் வெளிவருவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இன்று நாளின் கடைசியில்தான் பபாசியிடமிருந்து சில கேள்விகள் கேட்டு ஒரு படிவம் வந்தது. அதில்தான் எவ்வளவு புத்தகங்கள் விற்றீர்கள், எத்தனை வருமானம் வந்தது போன்ற கேள்விகளைக் கேட்டிருந்தனர். அதில் நாங்கள் தோராயமான விற்பனை அளவைச் சொல்லியிருந்தோம். (அதற்குப் பின்னும் ஒரு மணிநேரத்துக்கு மேல் விற்பனை நடந்தது.) எல்லோரும் உண்மையான எண்ணைச் சொல்ல மாட்டார்கள் என்றே பரவலாகப் பேசிக்கொண்டார்கள். ஆனால் நான் சில பதிப்பாளர்களிடம் மேலோட்டமாகப் பேசியதில் அனைவரும் விற்பனை நன்றாக இருந்ததாகவே சொன்னார்கள். சிலர் விற்பனை படுமோசம் என்று சொன்னதாகவும் தகவல்.

எங்களுக்கு நல்ல விற்பனை.

டீம் கிழக்கு பதிப்பகம் உங்கள் பார்வைக்கு. (பா.ராகவன், இன்னும் மூவர் இந்தப் படத்தில் இல்லை.)

கிழக்கு பதிப்பகம் உழைப்பாளிகள்

15 comments:

  1. Dear Badri,

    My observations :

    1) It appears the time has come to shift the venue of the Book Fair from Arts College. What started as an annual event with 20 to 30 publishers participating has steadily grown over the years with 300+ participating and that many single and double stalls. The book loving populace has also increased manyfold during this time. To still continue staging the mela at the same venue where it was held 25 years ago is like forcing an adult to wear the baby clothes he was wearing as a child.

    With absolutely no space for moving freely, the visitors get choked and it is a herculian task to swim through the multitude of people thronging the fair - let alone stop, gaze, wander around in a relaxed manner, browse and select books. I would certainly like to buy my books that way. The space allotted for a stall is meagerly inadequate to let the visitors to walk around the displays. In stalls like Vanathi's, there was near stampade during the long pongal weekend.

    2) It is high time BAPASI arranges to host a storage and routing system for purchased books. All the visitor has to do is to select the books at the stalls, make payment and leave his address. If he / she is chennai based, before he returns home, the books purchased would reach his place. If pizza can be ordered and delivered within 30 minutes, why not books? The storage system can be strategically planned with warehouses in north, central and south Chennai to facilitate easy routing. Conveying the orders to the warehouses and confirming delivery does not look like an issue in this technology driven era.

    For visitors from outside Chennai, courier services can be used to despatch the books; or they can be made deliveries at the place of purchase itself.

    3) I am unable to understand where the huge amount collected as entry fare (/Rs 5 per head) gets accounted. It is grossly unfair to charge this amount without providing even the minimum facilities to the public. If BAPASI is really keen on creating and sustaining awareness on books and reading as a habit, the entry fare should be withdrawn.

    Warm regards,
    era.mu



    By: era murukan

    ReplyDelete
  2. வெளிநாட்டு அன்பர்கள் ஊர் வரும்போது தேடி வந்து வாங்கிட்டு போவோம்ல!

    By: மூர்த்தி

    ReplyDelete
  3. //எல்லோரும் உண்மையான எண்ணைச் சொல்ல மாட்டார்கள் என்றே பரவலாகப் பேசிக்கொண்டார்கள்.//

    ¯ñ¨ÁÂ¡É Å¢üÀ¨É¨Â ¦º¡øÄ ÁÚôÀ¾üÌ ±ýÉ ¸¡Ã½õ?

    By: prakash

    ReplyDelete
  4. அன்பு முருகன்,

    நல்ல யோசனை. ஆனால், பபாசி இதைச் செய்யும் என்று எனக்குத் தோன்றவில்லை :) இதில் எக்ஸ்ட்ரா வருமானம் வரும் என்று தோன்றினால் செய்வார்களோ என்னவோ !

    அட்லீஸ்ட், ஒவ்வொரு கடையிலும் வாங்கும் புத்தகங்களைக் கையில் தூக்கிக்கொண்டு திணறாமல், கண்காட்சிக்கு வெளியே வந்து மொத்தமாக கலெக்ட் செய்துகொள்ளும்படி ஒரு ஏற்பாடு செய்தால்கூட போதுமே

    - என். சொக்கன்,
    பெங்களூர்.

    By: N. Chokkan

    ReplyDelete
  5. இரா. முருகனை வழிமொழிகிறேன். :-) ( இரா.மு, உங்களின் ராய்ர் காபி கிளப் இப்போது தான் முடித்தேன். அருமையான பதிவு. Nice playful, casual writing. சில நாட்களில், என் வலைப்பதிவில் எழுதுகிறேன். )

    ReplyDelete
  6. நானும் கேட்கவேண்டும் என்றிருந்தேன். இந்த ஐந்து ரூபாய் கட்டணம் எங்கு போகிறது.?புத்தகம் வாங்கட்டியும் பாக்கணும்ன்னு வாறவனையும் இப்படி அஞ்சு ரூபா கட்டணம் போட்டு வெரட்டி விட்டுட்டா அப்புறம் எப்படி புத்தகங்களைப் பாத்து வாங்கணும்ன்னு ஆசை வரும்? அனுமதி இலவசம்ன்னு போடுங்கப்பா!

    எம்.கே.குமார்

    By: M.K.KUMAR

    ReplyDelete
  7. அனுமதி இலவசம்னு போட்டாக்க எல்லாரும் வந்து கும்பல் கட்டுப்படுத்த முடியாததாகிவிடும். ரூ.5 பரவாயில்லை. பெங்களூர் புத்தகக் கண்காட்சியில் அனுமதி ரூ.10ஓ என்னவோ. ஆனால் பேலஸ் கிரவுண்ட் என்பதால் இடம் விஸ்தாரமாக இருந்தது.
    - அலெக்ஸ் பாண்டியன்

    By: Alex Pandian

    ReplyDelete
  8. 5 ரூபாய் என்பது மிகவும் குறைவு. அது எங்கே போகிறது என்று வேறு கேள்வி. என்ன சொல்வது? மைதான வாடகை, மின்சாரச் செலவு, தண்ணீர் இணைப்பு ஆகியவற்றுகு யார் பணம் கொடுப்பது ஐயா? அப்படியே அதில் லாபம் பார்த்தாலும் அது அமைப்பாளர்களின் உழைப்பிற்கேற்றக் கூலி என்றுதான் பார்க்க வேண்டும்.
    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  9. பிரகாஷ்: உண்மையான விற்பனையைச் சொல்லாமல் இருக்க எவ்வளவோ காரணங்கள். 1. வருமான வரி 2. மோசமான தொகையாக இருந்தால் வெளியே தெரிந்தால் அவமானமாக இருக்கலாம். 3. மிகப்பெரிய தொகையாக இருந்தால் பிறர் கண்வைக்கலாமே என்று பயப்படலாம். 4. போட்டிப் பதிப்பாளர்களுக்கு தேவையின்றி சில தகவல்களைச் சொல்கிறோமே என்று சிலர் நினைக்கலாம்.

    ===

    டோண்டு: மைதானம் அரசு ஆதரவில் குறைந்த வாடகைக்குக் கிடைக்கிறது. ஒவ்வொரு பபாசி உறுப்பினரும் ஒரு சிங்கிள் ஸ்டாலுக்கு - தமிழ்ப் புத்தகங்களாக இருந்தால் - சுமார் ரூ. 7,500 வாடகை தருகிறார். டபுள் ஸ்டாலுக்கு அதைப்போல இரண்டு மடங்கு. பபாசி உறுப்பினரல்லாத எங்களைப் போன்றவர்கள் - தமிழ்ப் புத்தகங்களாக இருந்தால் - சிங்கிள் ஸ்டாலுக்கு ரூ. 10,500, டபுள் ஸ்டாலுக்கு இரண்டு மடங்கு.

    ஆங்கிலப் புத்தகங்கள் அல்லது பிறமொழிப் புத்தகங்கள் (ஹிந்தி) என்றால் மேலே சொன்னதை விட பைசா அதிகம். (இரண்டு மடங்கு என்று ஞாபகம்). ஆக 350 ஸ்டால்களில் கிட்டத்தட்ட 200 பேர் உறுப்பினர்கள். பிறர் உறுப்பினரல்லாதவர். கூட்டிக் குறைத்துப் பார்த்தால் கட்டண வசூல் குறைந்தது ரூ. 50 லட்சம் ஆகியிருக்கும். இதற்கு மேல், ஒரு மின்சார பிளக் பாயிண்டுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 100 கட்டணம் - மொத்தமாக பத்து நாள்களுக்கு ரூ. 1,000 !

    அதற்கு மேல் தண்ணீர், உணவு காண்டிராக்ட் காரர்கள் கொடுத்த பணம், விளம்பரங்கள் செய்வோர் கொடுத்த பணம், வாசலில் நுழைவுக்கட்டணமாகச் சேர்த்த பணம் என்று பணம் போதிய அளவுக்கு பபாசிக்கு வருகிறது.

    கடைக்கான வாடகையைக்் குறையுங்கள் என்று நான் கேட்கமாட்டேன். ஆனால் நுழைவுக் கட்டணத்தைக் குறைப்பதை - சென்ற வருடத்தைய ரூ. 2 என்று வைப்பதை - வரவேற்பேன்.

    தனியார் நிறுவனம் ஒன்று ஒரு கண்காட்சி நடத்துவதற்கும், industry body ஒன்று நடத்துவதற்கும் வித்தியாசம் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  10. பத்ரி அவர்களே,
    ஒன்று நிநைவில் கொள்ளுங்கள். 5 ரூபாய் என்பது ஒன்றுமேயில்லை. அதைவிடக் குறைச்சலாய் வைத்தால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போயிருக்கும்.
    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  11. கூட்டம் அதிகரிக்கட்டுமே. என்ன கவலை!. பத்ரி மற்றும் இரா.மு சொல்வது போல், நாம் இதனை எப்படி எதிர்கொள்வது என்பது தான் இன்றைய தேவை.

    நிறைய ஜனங்க வரட்டும் சாமி!! நிறைய பேருக்கு புத்தகம் வாங்கலேன்னாலும், இந்த மாதிரி புத்தக்மெல்லாம் இருக்குன்னு தெரியட்டும். என்ன கெட்டுப் போச்சு. அதுவும் இல்லாம, இன்னிக்கு புத்தகக்கண்காட்சி picnic spot மாதிரி மாறியிருக்கு! சுண்டல், பாவு பாஜி, பெரிய அப்பளம் அப்படின்னு போயிட்டுருக்கு! கூட்டம் வரட்டும்.

    இந்த கூட்டத்தை எப்படி மேனேஜ் பண்றோம், இனிமேல் என்ன பண்ணப் போறாங்கன்னு யோசிக்கறதுதான் அடுத்த கட்டம்.

    ReplyDelete
  12. கூட்டம் அதிகரிக்கட்டுமே. என்ன கவலை!. பத்ரி மற்றும் இரா.மு சொல்வது போல், நாம் இதனை எப்படி எதிர்கொள்வது என்பது தான் இன்றைய தேவை.

    நிறைய ஜனங்க வரட்டும் சாமி!! நிறைய பேருக்கு புத்தகம் வாங்கலேன்னாலும், இந்த மாதிரி புத்தக்மெல்லாம் இருக்குன்னு தெரியட்டும். என்ன கெட்டுப் போச்சு. அதுவும் இல்லாம, இன்னிக்கு புத்தகக்கண்காட்சி picnic spot மாதிரி மாறியிருக்கு! சுண்டல், பாவு பாஜி, பெரிய அப்பளம் அப்படின்னு போயிட்டுருக்கு! கூட்டம் வரட்டும்.

    இந்த கூட்டத்தை எப்படி மேனேஜ் பண்றோம், இனிமேல் என்ன பண்ணப் போறாங்கன்னு யோசிக்கறதுதான் அடுத்த கட்டம்.

    ReplyDelete
  13. சென்னையுடன் ஒப்பிடும்போது, பெங்களூர் புத்தகக் கண்காட்சி மிகச் சிறியது - ஆகவே, பத்து ரூபாய் கட்டணம் ரொம்ப அதிகம்தான். (வண்டி நிறுத்துவதற்கு இன்னொரு ஐந்து ரூபாய் :))

    இரண்டு ரூபாய் என்பது ஓரளவு நியாயமான கட்டணம் என்று சொல்லலாம் - அப்படிக் கூட்டம் அதிகமாக வந்தால்தான் வரட்டுமே ! பத்துப் பேரில் ஒருவர்கூடவா புத்தகம் வாங்கமாட்டார்கள் ?

    என். சொக்கன்,
    பெங்களூர்.

    By: N. Chokkan

    ReplyDelete
  14. //எல்லோரும் உண்மையான எண்ணைச் சொல்ல மாட்டார்கள் என்றே பரவலாகப் பேசிக்கொண்டார்கள்.//
    அப்படி சொல்லியே தலைவர் இறுதிக்கூட்டத்தில் விற்பனை ரூ. 6 கோடி என்றும் அதில் ரூ. 1. கோடிக்கு மேல் நூலகங்களால் என்றும் வருகையாளர்கள் எண்ணிக்கை 7 லட்சம் (இது கடந்த வருடத்தைவிட 1.40 லட்சம் அதிகம்) என்று பேசியதாக செய்தி வந்திருக்கிறது.

    மிக்க மகிழ்ச்சி....

    ReplyDelete
  15. //எல்லோரும் உண்மையான எண்ணைச் சொல்ல மாட்டார்கள் என்றே பரவலாகப் பேசிக்கொண்டார்கள்.//
    அப்படி சொல்லியே தலைவர் இறுதிக்கூட்டத்தில் விற்பனை ரூ. 6 கோடி என்றும் அதில் ரூ. 1. கோடிக்கு மேல் நூலகங்களால் என்றும் வருகையாளர்கள் எண்ணிக்கை 7 லட்சம் (இது கடந்த வருடத்தைவிட 1.40 லட்சம் அதிகம்) என்று பேசியதாக செய்தி வந்திருக்கிறது.

    மிக்க மகிழ்ச்சி....

    அன்பு.

    By: அன்பு

    ReplyDelete