Saturday, January 15, 2005

புத்தகக் கண்காட்சி சனியன்று

அசோகமித்திரன் இன்று மீண்டும் கண்காட்சி அரங்குக்கு வந்திருந்தார். கட்டுரைத் தொகுதி இரண்டையும் முழுவதுமாகப் பார்த்திருக்கிறார். நன்றாக வந்திருக்கிறது என்று மிகவும் சந்தோஷப்பட்டார். அடிக்குறிப்புகள், கட்டுரை வடிவில் செய்திருந்த மாற்றங்கள், பின்னால் சேர்க்கப்பட்டுள்ள பெயரகராதி (index) ஆகியவை பற்றிய தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

சந்தோஷமாக இருந்தது.

இரா.முருகன் இன்று கையில் விடியோ கேம்கார்டரும், மலையாளப் புத்தகமுமாக வந்திருந்தார். இன்றைய சிறப்பு விருந்தினர். மலையாளம்தான் படிக்கப்போகிறார்போலும் இனி.

ஒரு பக்கம் மூன்று மொழிகளில் (அல்லது அதற்கு மேலாக) சரளமாகப் படிப்பவர்களைக் கண்டால் பொறாமையாக இருக்கிறது. மற்றொரு பக்கம் இரண்டு மொழிகளில் கூட படிக்க முடியாதவர்களை - அதுவும் ஆங்கிலம் மட்டும் படிக்கத் தெரிந்த இந்தியர்களை - நினைத்தால் வருத்தமாகவும் உள்ளது. அதுபோல பலரை புத்தகக் கண்காட்சியில் சந்திக்க முடிந்தது.

ஆங்கிலத்தில் படிக்கத் தெரிந்திருப்பது மிகவும் அவசியமானது. ஆனால் அதற்காக சொந்த மொழியில் சிறிது கூட ப் படிக்கத் தெரியாமலே வளர்ந்திருக்கின்றனர் பலரும்.

ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிடி பிரெஸ்-இலிருந்து சிலர் எங்கள் கடைக்கு வந்திருந்தனர். எளிமையான குறுக்கெழுத்துக் கட்டங்கள் நிரம்பிய புத்தகம் ஒன்றைப் போட்டிருக்கிறோம். புதிர்ப் பூங்கா என்று. தமிழில் குறுக்கெழுத்து பிரபலமானதா என்று கேட்டனர். நான் பார்த்த வரையில் தமிழ் செய்தித்தாள்கள் குறுக்கெழுத்துப் பகுதிகளைக் கொண்டவை கிடையாது. ஆனால் தினமலர் வாரமலரில் பார்த்திருக்கிறேன். ஆங்கிலச் செய்தித்தாள்களிலோ இது மிகவும் பிரபலமானது. தம் அலுவலகத்தில் வேலை பார்க்கும் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்காக இந்தப் பிரதியினை வாங்கிச் சென்றனர்.

தமிழில் அருமையான - சற்றே கடினமான - குறுக்கெழுத்துகளை உருவாக்குபவர் வாஞ்சிநாதன். தென்றல் - அமெரிக்க தமிழ் மாத - இதழில் இவரது குறுக்கெழுத்துகள் பிரபலமானவை. ஒரு மாதத்துக்கு முன்பு கிழக்கு அலுவலகத்தில் வாஞ்சியுடன் அவர் தயாரித்திருந்த சில (மிகக்) கடினமான குறுக்கெழுத்துகளை நிரப்ப முயற்சி செய்தோம். என்னால் உள்ளே நுழையவே முடியவில்லை. மற்றொரு முறை இந்தக் குறுக்கெழுத்தில் அதிக நேரம் செலவிட வேண்டும்.

-*-

இகாரஸ் பிரகாஷ் இன்றும் பல பழைய புத்தகங்களைத் தள்ளிக்கொண்டு வந்தார். எங்கிருந்துதான் இவருக்கு மட்டும் கிடைக்கிறதோ!

-*-

நேற்று கண்ணில் பட்டதில் ஒருவர் அருள். போகர் (சித்தர்) பாடல்கள், தமிழகத்தில் ஆசீவகர்கள் போன்ற சில குறிப்பிட்ட புத்தகங்களை வாங்கி வைத்திருந்தார்.

தேடத் தேட, அபூர்வமான பல விஷயங்கள் கிடைக்கின்றன.

-*-

நாள் முடியும் தருவாயில் mafoi பாண்டியராஜன் வந்தார். நிறையப் புத்தகங்களை வாங்கினார்.

பழ.நெடுமாறன், குடும்பத்துடன் வந்திருந்து புத்தகங்களை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றார்.

சபாநாயகர் காளிமுத்து வீட்டிலிருந்து ஆளை அனுப்பி அசோகமித்திரன் கட்டுரைகள் இரண்டு தொகுதிகளையும் வாங்கிவரச் சொல்லியிருந்தார்.

-*-

இதுவரையில் புத்தகங்களை வாங்குபவனாக மட்டுமே இருந்த எனக்கு, விற்பவனாக மாறியிருப்பது புது அனுபவம்.

இன்னமும் ஒரு முழு நாள், ஓர் அரை நாள். இந்த முறை எனது வருத்தமே புத்தகம் வாங்குபவனாக, நிம்மதியாக சுற்ற முடியாமல் கடையோடு அடைந்திருக்க வேண்டியதாகிப் போனதுதான்:-( முடிந்தால் திங்கள் அன்றாவது எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒவ்வொரு கடையாக நுழைந்து வாங்கா விட்டாலும், புத்தகங்களைப் பார்வையிட வேண்டும்.

-*-

சென்ற முறை அப்துல் கலாமின் 'அக்கினிச் சிறகுகள்' புத்தகம் (ஆங்கிலத்தில் Orient Longman, தமிழில் கண்ணதாசன் பதிப்பகம்) சக்கைப்போடு போட்டது. இம்முறை அதே புத்தகம் குரல் புத்தகமாக (Audio book), வைரமுத்துவின் குரலில் சக்கைப்போடு போடுகிறது.

நாங்களும் பல குரல் புத்தகங்கள் கொண்டுவர முடிவு செய்திருந்தோம். அக்கினிச் சிறகுகள் குரல் புத்தகம் விற்பது சந்தோஷத்தைத் தருகிறது.

படிக்க நேரமில்லாதவர்கள், வேகமாகப் படிக்க சக்தியற்றவர்கள், கண்பார்வை குறைந்தவர்கள் (வயதானவர்கள்) அல்லது இல்லாதவர்கள், தமிழ் பேச, புரிந்துகொள்ளக் கூடிய ஆனால் படிக்க இயலாதவர்கள் எனப் பலரையும் சென்றடையலாம். தமிழ்ப் பதிப்பாளர்கள் கவனிக்க வேண்டிய பகுதி இது.

9 comments:

  1. பத்ரி,

    சிறுவர் புத்தகங்கள் குரல் புத்தகங்களாகக் கிடைக்குமா? சிறுவர்களுக்கு ஏற்ற முறையில் அவர்களைக் கவரும்வகையில் இருப்பது அவசியம். தமிழில் கிடைத்தால் சொல்லுங்கள். எனக்குத் தெரிந்து, பலர் அம்மாதிரிப்புத்தகங்களைக் கேட்கிறார்கள்.

    -மதி

    ReplyDelete
  2. you may want to check "Charkha audio books" at www.karaditales.com. This is the same company that released the audio abridged version of "Agni siragukal".

    -- mks --

    ReplyDelete
  3. //பல பழைய புத்தகங்களைத் தள்ளிக்கொண்டு வந்தார். எங்கிருந்துதான் இவருக்கு மட்டும் கிடைக்கிறதோ!//

    þý¨ÈìÌ þÃñÎ Á½¢ §¿Ãõ «í§¸ ¦ºÄ× ¦ºö§¾ý. ¿¡ý Å¡º¢ò¾ áø¸Ç¢ø, 90 º¾Å£¾õ, À¨Æ Òò¾¸ì ¸¨¼¸Ç¢ø Å¡í¸¢Â¨Å¾¡ý. ¸¢ð¼¾ð¼ 15 ÅÕ¼ô ÀÆì¸õ þÐ. (Òò¾¸ Å¢¨Ä ÀüȢ ±ý «í¸Ä¡öôÒ¸ÙìÌ þÐ×õ ´Õ ¸¡Ã½Á¡¸ þÕì¸Ä¡õ). ̓¡¾¡Å¢ý «¨ÉòÐ áø¸¨ÇÔõ þôÀÊò¾¡ý Å¡º¢òÐ, §º÷òÐ ¨Åò¾¢Õ츢§Èý. 6961 ±ýÈ ´§Ã ´Õ áø ÁðÎõ þýÛõ Á¡ð¼Å¢ø¨Ä. §¾Ê즸¡ñÎ þÕ츢§Èý. ±ýÛ¨¼Â area of interest ¦Ã¡õÀ ¦Ã¡õÀì º¢ýÉÐ ±ýÀ¾¡ø, ÀÄ ¿øÄ Òò¾¸í¸¨Ç, «¨Å ±ÉìÌ ÀÂýÀ¼¡Ð ±ýÈ ¸¡Ã½ò¾¡ø, Å¡í¸¡Áø Å¢ðÊÕ츢§Èý. ²¾¡ÅÐ ¿øÄ Òò¾¸ò¨¾ò §¾Êì ¦¸¡ñÊÕó¾¡ø, ¦º¡øÖí¸û. ¸ñ½¢ø Àð¼¡ø, Å¡í¸¢ ¨Å츢§Èý.

    By: icarus

    ReplyDelete
  4. "நாங்களும் பல குரல் புத்தகங்கள் கொண்டுவர முடிவு செய்திருந்தோம்." மகிழ்ச்சியளிக்கும் தகவல்.
    மதி கந்தசாமியின் கேள்விக்கான உங்களது பதிலையும் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  5. பத்ரி, தங்களின் மற்றொருப் பதிவில் ஆதவனின் சிறுகதைத் தொகுப்பு வருவதை அறிந்து மகிழ்ந்தேன். வரும் செப்டம்பர் இந்தியா வரும்முன் தங்களின் காமதேனு மூலமாக வாங்கவேண்டியப் புத்தகப் பட்டியலில் இதுவும் சேர்ந்து விட்டது.



    By: Raj Chandra

    ReplyDelete
  6. குழந்தைகளுக்கான சில ஆடியோ புத்தகங்கள் ஏற்கெனவே உள்ளன. "கரடி கதை" என்று ஒன்று (நடிகர் நாசர் குரலில்) வாங்கி வைத்திருந்தேன். ஆனால் டேப்-பாக இல்லாமல் சிடி-யாக இருந்தால் நலம். இப்பொழுது டேப், சிடி என இரண்டு வடிவங்களிலும் நிறைய வரலாம். நான் சில மாதங்களாக சரியாகப் பார்க்கவில்லை.

    மின்வெளி விசிடி-யாக சில இதழ்களைக் கொண்டுவந்துள்ளது.

    விடியோ தயாரிக்க செலவு அதிகம் ஆகும். அதனால் 2,000 பிரதிகளாவது விற்றால்தான் போட்ட முதலாவது திரும்பி வரும் என நினைக்கிறேன். ஆனால் வெறும் குரல் சிடி/டேப் வெளியிட்டால் தயாரிப்பு செலவு குறைவு.

    இரண்டுமே நன்கு நடக்க சந்தைப்படுத்தல் அவசியமாகிறது. புத்தகங்களுக்காவது ஓரளவுக்கு சந்தை உருவாகியுள்ளது. ஓராயிரமாவது விற்கப்படும். ஆனால் மற்றவற்றுக்கு அவ்வளவு எளிதல்ல. விநியோக முறை வலுப்பட்டால் பல புதிய சோதனை முயற்சிகள் வெளிவரலாம்.

    ReplyDelete
  7. பல ஆன்டுகளுக்கு முன் சிவசங்கரி, தனது தாய் தன்க்குச் சொன்ன கதைகள் அம்மா சொன்ன கதைகள் என்ற பெயரில் குரல் புத்தகமாக வெளியிட்டார். ஒலிப்பேழை வடிவில் வெளியிடப்பட அதனுடன், குழந்தைகள் வாசிக்கும் வண்ணம் பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்ட படங்கள் நிறைந்த அச்சுப் புத்தகமும் சேர்த்தே கொடுக்கப் பட்டது. வானதி அந்த நூலை பதிப்பித்தார்கள் என்று ஞாபகம். அது போன்ற முயற்சிகள் மதி விரும்புவதைப்போல குழந்தைகள் தமிழ் பயில உதவும்.. நான் குமுதம், குங்குமம் இவற்றின் ஆசிர்யராக இருந்தபோது வாரம் தோறும் தமிழில் குறுக்கெழுத்துகளை வெளியிட்டு வந்திருக்கிறேன். தமிழில் குறுக்கெழுத்துகளுக்கு பெரும் பரிசுகளை அறிவித்து ஒரு காலத்தில் தமிழ் மக்களை போதையில் ஆழத்திய 'பெருமை' விகடனுக்கு உண்டு. கல்கிக்கும் வாசனுக்கும் கருத்து வேறுபாடுகள் எழ அதுவும் ஒரு காரணம்.
    மாலன்

    ReplyDelete
  8. நன்றி சத்யராஜ்குமார்! சென்ற முறை ஊருக்குச் சென்றபோது கோவையில் மின்வெளியின் விளம்பரத்தைக் கண்ட நினைவு. அவசரத்தில் விவரங்களைக் காணமுடியவில்லை.

    ReplyDelete
  9. ¿ýÈ¢ ºòÂáˆÌÁ¡÷, ¯í¸û «È¢Ó¸ò¾¢üÌ! À¡Ã¾¢Â¡Ã¢ý Ò¾¢Â ¬ò¾¢Ýʨ ÁøÊÁ£Ê¡ º¢.Ê.¡¸ ¦ÅǢ¢ðÎû§Ç¡õ. «ôÐø ¸Ä¡õ Å¡ú쨸 ÅÃÄ¡ü¨ÈÔõ Å¢º¢Ê ¡¸ ¦ÅǢ¢ðÎû§Ç¡õ.
    ¦¾¡¼÷ÒìÌ: dpal@minveli.com

    By: Dhanapal, Minveli

    ReplyDelete