Thursday, October 07, 2004

முதல் டெஸ்ட், இரண்டாம் நாள், இறுதி

ஆஸ்திரேலியா 474, இந்தியா 150/6 (44 ஓவர்கள்) - படேல் 18*, பதான் 1*

தேநீர் இடைவேளைக்குப் பின் இந்தியா ஒரு விக்கெட் கூட இழக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டால், இந்தியா நான்கு விக்கெட்டுகளை இழந்தது. இனி நாளைய ஆட்டத்தில் வியப்பைத் தரக்கூடிய ஒரே அம்சம் கில்கிறிஸ்ட் ஃபாலோ-ஆன் கொடுப்பாரா இல்லை இரண்டாவது காஜி அடிப்பாரா என்பதுதான்.

சேவாகும், கங்குலியும் ஒழுங்காக ஆடி ரன்களைக் குவித்தனர். அவ்வப்போது சேவாக் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வரும் பந்துகளைத் துரத்துவார். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புவார். கில்கிறிஸ்ட் கடைசியாக காஸ்பரோவிச்சை பந்து வீச அழைத்தார். சாதாரணமாக லெக் ஸ்டம்பில் விழுந்த பந்தை சேவாக் மேலாக அடிக்க பந்து ஷார்ட் மிட்விக்கெட்டில் நின்ற லாங்கர் கையில் சுலபமான கேட்ச் ஆனது. விவிஎஸ் லக்ஷ்மணும், கங்குலியும் சேர்ந்து கொஞ்சம் மானத்தைக் காப்பார்களா, ஃபாலோ-ஆனைத் தவிர்ப்பார்களா என்று பார்க்கும்பொழுது, கங்குலியும் காஸ்பரோவிச் வீசிய, மிடில் ஸ்டம்பில் விழுந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் ஒரு பந்தைத் தொட்டு கில்கிறிஸ்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். யுவராஜ் சிங் மெக்ராத் வீசிய அதே போன்ற ஒரு பந்தைத் தொட்டு கில்கிறிஸ்டிடம் மீண்டும் கேட்ச். இந்த கேட்ச் கங்குலி கேட்சை விட சற்று கடினம். அவ்வளவுதான்.

ஆக, முதல் ஐந்து விக்கெட்டுகளும் வேகப் பந்து வீச்சாளர்களுக்கே.

அதன்பின் லக்ஷ்மணும், படேலும் இன்னமும் கொஞ்சம் ரன்களை சேர்த்தனர். ஆனால் இந்திய அணி காலி என்று தெரிந்து விட்டது. போதாதற்கு ஷேன் வார்ன் வீசிய லெக் ஸ்பின்னர் - லெக் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்து ஆஃப் ஸ்டம்ப் நோக்கிப் போகும் பந்து - ஒன்றை லக்ஷ்மண், மைக் கேட்டிங் விளையாடுவது போல விளையாடி (அதாவது ஒன்றுமே செய்யாமல்!) ஆஃப் ஸ்டம்பை இழந்தார். ஷேன் வார்ன் இனி நிம்மதியாகத் தூங்குவார். இந்திய மட்டையாளர்களும் டுபாக்கூர் பேர்வழிகள்தான், இனியும் இவர்களிடம் பயந்து கொண்டிருக்க வேண்டியதில்லை என்று இப்பொழுது அவருக்குத் தெரிந்து விட்டது. ஆனாலும் லக்ஷ்மண் இப்படி கேட்டிங் நிலையை அடைந்திருக்க வேண்டாம்!

அதன்பின் பரிதாபகரமாக படேலும், பதானும் நேரத்தைக் கடத்தினர். இப்படியே விளையாடிக் கொண்டிருந்தால் அதிக நேரம் இவர்களால் நாளை தாக்குப்பிடிக்க முடியாது. இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் உயிரைக் கொடுத்து விளையாடினாலன்றி இந்த ஆட்டம் 3 அல்லது 4 நாள்களுக்குள் முடிந்து விடும்.

4 comments:

  1. இனி நாளைய ஆட்டத்தில் வியப்பைத் தரக்கூடிய ஒரே அம்சம் கில்கிறிஸ்ட் ஃபாலோ-ஆன் கொடுப்பாரா இல்லை இரண்டாவது காஜி அடிப்பாரா என்பதுதான்.

    Unless there is a good chance of rain, there is no possibility of enforcing a follow-on.

    By: bb

    ReplyDelete
  2. பத்ரி,
    நான் தான் முன்னமே கூறினேனே!!

    With or without Ponting, Australia is formidable. India without Tendulkar may be OK for ODIs but for Tests, we need the solidity provided by Sachin. It is clear that the team revolves around him..

    Ganguly is a good ODI cricketer and can be allowed to skipper the ODI team. He is simply not good enough for the Test team and it is high time that Dravid, a much better thinker of the game is given the opportunity to lead the test side. But as long as the "junk" Dalmiya controls BCCI (now as patron!), things will not change for the better.

    I repeat that Australia are World beaters because the team does not depend on any individual and always work as a team to win matches, with good contributions from atleast more than half the team on many occasions.

    என்றென்றும் அன்புடன்
    பாலா

    By: BALA

    ReplyDelete
  3. எப்ப தான் இந்தியன் துடுப்பாட்ட வீரர்கள் திருந்த போகிறார்களோ..... ஒரு நாளைக்கு துடுக்காகவும் .. இன்னொரு நாளைக்கு துக்கமாகவும் போகுது அவர்களின் விளையாட்டு...

    By: கவிதன்

    ReplyDelete
  4. நான் இப்பொழுதுதான் முதல் முதலாக ரசித்தேன்

    By: Nirmal Kumar

    ReplyDelete