Friday, January 28, 2005

லினக்ஸ் + தமிழ்

பல நாள்களாக என் மடிக்கணினியில் லினக்ஸ் பகுதிக்கு நான் செல்லவேயில்லை.

என் மடிக்கணினியின் ஒரு பகுதியில் மாண்டிரேக் தொகுப்பை ஏற்றியிருந்தேன். ஆனால் ஏதோ ஓர் உத்வேகத்தில் தமிழில் இடைமுகம் இருக்கவேண்டும் என்று மாண்டிரேக்கை நிறுவும்போது சொல்லிவிட்டேன்.

தமிழாக்கம் படு சுமார், மேலும் யுனிகோட் தமிழ் மாண்டிரேக்கில் சரியாக வேலை செய்யாத நேரம் அது. பாங்கோ, அது, இது என்று நிறையப் போராட வேண்டி இருந்தது. ஒரேயடியாக என்னை சோர்வடையச் செய்துவிட்டது. அதன்பின்னர் மாண்டிரேக் தமிழாக்கத்தில் சிறிது கவனம் செலுத்தினேன். ஆனால் அதற்கு சரியான வகையில் பங்களிப்புக் கொடுக்க முடியாது போயிற்று. இப்பொழுது அடுத்த மாண்டிரேக் தொகுப்பு 10.2 வெளிவர இருக்கிறது. நிறைய பதங்களுக்குத் தமிழாக்கம் தேவை. நண்பர்கள் பலர் ஒத்துழைத்தால் நன்றாகச் செய்யலாம். விரும்புபவர்கள் என்னை மின்னஞ்சலில் உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்.

இதற்கிடையில் எனது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பகுதியில் சில வைரஸ்கள் புகுந்து விளையாட, கணினியை முழுவதுமாக தொடக்கத்திலிருந்து நிறுவ வேண்டியிருந்தது. அப்பொழுது மடிக்கணினியில் மாண்டிரேக்குக்கு பதில் ரெட்ஹாட் 9.0 நிறுவலாம் என்று தோன்றியது. (இனி மாண்டிரேக் வீட்டில் உள்ள மேசைக்கணினியில்தான்.) ரெட்ஹாட் 9.0-வை நிறுவும்போது தமிழ் இடைமுகம் எதையும் நான் அவசரப்பட்டு நிறுவவில்லை. ஆங்கிலமே போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இனிதான் தமிழில் எழுத, படிக்க வேண்டிய சின்னஞ்சிறு விஷயங்களை நிறுவ வேண்டும். இதற்கு step-by-step உதவிப் பக்கங்கள் எதுவும் கிடைக்கவில்லை. முதலில் ஆரம்பகட்ட விஷயங்களான ஃபயர்ஃபாக்ஸ், தண்டர்பர்ட், ntfs file system படிக்கும் வசதி (இது மாண்டிரேக்கில் default ஆகவே உண்டு. ஆனால் ரெட்ஹாட் 9.0-ல் தனியாக கெர்னல் மாட்யூல் ஒன்றை நிறுவுவதன் மூலம்தான் இந்த வசதி கிடைக்கிறது.) ஆகியவற்றை இப்பொழுதுதான் நிறுவி முடித்துள்ளேன்.

தமிழ்லினக்ஸ் இணையத்தளத்தில் நிறையப் பக்கங்களை ஏற்ற வேண்டும். அப்பொழுதுதான் புதிதாக லினக்ஸ் பக்கம் வருபவர்களுக்கு வசதியாக இருக்கும். என் கணினியை ஒருவழியாக்கிய பின்னர் நானே இந்த உதவிப் பக்கங்களை எழுதிவிடலாமென்று இருக்கிறேன்.

5 comments:

  1. நீங்கள் கேட்கும் ஒத்துழைப்பு தமிழாக்கத்திற்காகவா அல்லது கெர்னல் மேம்படுத்தவா. தமிழாக்கமெனில் நான் தயார். கெர்னல் போன்ற தொழில்நுட்ப விசயங்களெனில், மன்னிக்கவும். எனக்கு சரியான விசயஞானமில்லை.

    ReplyDelete
  2. பத்ரி,

    நான் மான்ட்ரேக் 10 பயன்படுத்துகிறேன் (பொழுதுபோக்காக , அன்றாட பணிகளுக்கும் பாடவேலைகளுக்கும் வின்டோஸ் தான்.

    தமிழாக்க வேலைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க நான் தயார்.

    தமிழ் லினக்ஸ் வலைத்தளத்தை மேம்படுத்துவதுபற்றி நானும் நவனும் பேசிக்கொண்டோம்.

    இதுபற்றி வெங்கட்டுக்கு மடல் எழுதினேன் இன்னும் பதில் கிடைக்க இல்லை.

    உங்களைப்போன்ற லினகஸ் ஆர்வல்கர்கள் எல்லோரும் ஒரு தமிழ் தளத்தில் ஒன்றுகூடவேண்டும்.
    அப்போதுதான் முழுமையான தமிழ் இயக்குதளத்திற்கான அனுசரணைமைய்யம் உருவாகும். அப்படி உருவாகினால்தான் தமிழ் இயக்குதளப் பாவனையை பரவலாக்கலாம்.

    இதுபற்றிய என் குறிப்பு (தற்போது இந்த திட்டத்தை கைவிட்டு தமிழ் லினக்ச் வலைத்தளத்திற்கு ஆதரவுவழங்குவதாக முடிவாயிற்று.

    http://mauran.blogspot.com/2005/01/blog-post_19.html

    தனிப்பட தொடர்புகொள்கிறேன்.

    விருது வென்றமைக்கு வாழ்த்துக்கள்.

    By: மு.மயூரன்

    ReplyDelete
  3. நாராயண்: வெறும் தமிழாக்கம் மட்டும்தான். வேறெந்த விஷயத்துக்குள்ளும் நாம் அதிகமாகத் தலையிட வேண்டியதில்லை.

    ---

    மயூரன்: என் ரெட்ஹாட் 9.0-இல் வெகு வேகமாக - கிட்டத்தட்ட அனைத்தும் வேலை செய்யுமளவுக்கு வேண்டியவற்றை நிறுவிவிட்டேன். இன்னமும் சில குட்டி 'பிரச்னை'கள் உள்ளன.

    நாம் தமிழ் லினக்ஸ் தளத்தில் ஒன்றிணைந்து வேகமாக முன்னேறலாம். உங்களது அஞ்சலைப் பார்த்து தொடர்பு கொள்கிறேன்.

    ReplyDelete
  4. Ä¢Éì…¢ø ¾É¢Â¡¾ ¬÷Åõ ±ÉìÌõ þÕ츢ÈÐ. þÕôÀ¢Ûõ ¾Á¢Æ¢ø ÀÊì¸ ÓÊ¡¾ ¸¡Ã½ò¾¡§Ä§Â «¨¾ ¿¢Ú×ÅÐõ ¾ûÇ¢ô§À¡¸¢ÈÐ. ¦ºýÈ ÅÕ¼õ Á¡ñð§Ãì 7.0 ±ýÚ ¿¢¨É츢§Èý. ¿¢Õ×õ §À¡Ð À¢Ã¨É¢ø¨Ä. À¢ýÉ÷ §ÅÚ §¸¡Ç¡Ú ²üÀðÎ Åý ¾¸¨¼ ÓØÅÐõ "·À¡÷§Áð" ¦ºö §Åñʾ¡Â¢üÚ.
    Ä¢ÉìŠ ÀüÈ¢ «Ã¢îÍÅÊ¢ĢÕóÐ, ¾Á¢Æ¢ø ŨÄò¾Çí¸¨Ç ¸¡ÏÅРŨà ¡áÅРŢÇì¸Á¡¸ ±Ø¾¢É¡ø Á¢¸×õ ¿ýÈ¡¸ þÕìÌõ. ±ÉìÌ Ä¢ÉìŠ ÀüÈ¢ «¾¢¸õ ¦¾Ã¢Â¡Ð. §ÅÚ Å¨¸Â¢ø ±ÉÐ ¯¾Å¢ §¾¨ÅôÀΦÁÉ¢ø ¦ºö ¾Â¡Ã¡¸ ¸¡ò¾¢Õ츢§Èý. ¿ýÈ¢.

    By: murugapoopathi

    ReplyDelete