Friday, June 03, 2005

அசோகமித்திரன் அவுட்லுக் செவ்வி குறித்து

நான் வாரம் ஒருமுறைதான் ராயர் காபி கிளப் படிப்பது வழக்கம். இப்பொழுது அங்கு அசோகமித்திரன் அவுட்லுக்கில் கொடுத்த பேட்டி தொடர்பான அசோகமித்திரனின் விளக்கம் பற்றி சில உரையாடல்கள் நடந்து வருகின்றன. இன்று சுந்தரமூர்த்தியின் எஸ்.வி.ஆர் பற்றிய பதிவு வழியாக கிளப்பில் நடப்பது பற்றித் தெரிந்துகொண்டேன். அதில் என் பெயரும் அடிபட்டிருப்பதால் இங்கு விளக்கம்.

அசோகமித்திரன் அவுட்லுக் செவ்வி வெளியானபோது அதில் உள்ள கருத்துகளைக் கண்டித்து அருள் பதிவில் ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தேன். அசோகமித்திரனிடமே உண்மையை விசாரித்து எழுதுகிறேன் என்று அந்தப் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேன். அதன்பின்னர் ஒருமுறை எதிர்பாராத இடத்தில் அசோகமித்திரனைச் சந்தித்தேன். அங்கு இதைப்பற்றிப் பேச முடியவில்லை. அடுத்து, நாங்கள் நடத்திய எழுத்துப் பயிற்சி முகாமில் அவரைச் சந்தித்தபோது இந்த விஷயத்தைப் பற்றி விரிவாகப் பேசினேன்.

அவுட்லுக் செவ்வி அச்சில் ஒன்றும், இணையத்தில் சற்று அதிகமாகவும் வெளியானது. இணையத்தில்தான் முக்கியமாக இந்த ஒரு விஷயம் இருந்தது.
If a nonbrahmin has a windfall he just spends it on meat and drink. The Brahmin always saves for the rainy day.
ஆனால் இந்த ஒரு விஷயம் அச்சில் இல்லை. இதை அசோகமித்திரனிடம் சொன்னேன். "அய்யய்யோ, நான் அப்பிடிச் சொல்லவே இல்லையேப்பா" என்றார். செவ்வி வெளியான சில நாள்களில், அசோகமித்திரனின் நெருங்கிய உறவினர் (பார்ப்பனரல்லாதவர்) அவரிடம் வந்து "என் அலுவலகத்தில் வேலை செய்யும் பல பார்ப்பனர்களும் குடிக்கிறார்கள், மாமிசம் சாப்பிடுகிறார்கள். அவர்கள்தான் இதைச் செய்வதில் முதலில் நிற்கிறார்கள்" என்றாராம். அசோகமித்திரனுக்கு ஒன்றுமே புரியவில்லையாம். "ஏன் இவர் இதையெல்லாம் வந்து என்னிடம் சொல்கிறார்" என்று யோசித்துக் கொண்டிருந்தாராம். இப்பொழுது என்னிடம் முழு விவரம் கேட்டதும்தான் தன்னை ஏன் பலரும் கொலைகாரன் போலப் பார்க்கிறார்கள் என்று புரிகிறது என்றும் சொன்னார்.

நான் அந்த செவ்வி பற்றி முழுமையான விளக்கம் கேட்டேன். அவரும் அதைப் பற்றிய தன் கருத்தைச் சொன்னார். இணையத்தில் வந்திருப்பது பற்றி இதுநாள் வரை தனக்கு எதுவும் தெரியாது என்றார். அவர் என்னிடம் பேசியதை நான் இங்கு எழுதும்போது வேறு தவறுகள் எதுவும் வந்துவிடாமலிருக்க அவரையே தன் விளக்கத்தை எழுதித் தருமாறு கேட்டேன். அவரும் எழுதித் தருவதாகச் சொன்னார். அது வந்ததும் அதை அப்படியே என் பதிவில் வெளியிடலாம் என்று இருந்தேன்.

வந்ததும் அப்படியே செய்கிறேன்.

காபி கிளப் விவாதம்
பதிவுகள் கடிதம்

7 comments:

  1. அசோகமித்திரனின் பதிவுகள் கடிதம் படித்தேன்.
    இன்னும் கூட அசோகமித்த்திரன் இப்படி ஒரு 'புழுகல்' பேட்டி வெளியாகியது அதிர்ச்சி அடையாது குறித்து நான் அதிர்ச்சி அடைந்து போனேன் இன்னொன்று முக்கியமாக, "பிராமணர்கள்" இந்தியாவில் "ஜிவிஷ்" அல்லது யூதர்கள் போல என்று சொன்னதை மறுக்காததும் , அசோகமித்திரன் பற்றிய நிலைப்பாட்டில் ஒன்று பெரிய மாற்றத்தை இந்தக் கடிதம் கொடுத்துவிடப்போவதில்லை.
    பத்ரி , அ.மி . யின் விளக்கக் கடித்ததி தார்மிகப் பொறுப்புடன் அவுட்லுக் பத்திரிக்கைக்கு அனுப்பலாம்.
    பதிர் தட்டச்சினால் , ஆனதுக்கு இமெயில் செய்ய முடியாதா என்ன?

    இகாரசின் அவரசம் சற்று ஆச்சரியத்தை அளித்தாலும், வெங்கடேஷின் வீரமான பதில் எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை. ;-)

    எனக்கு கவலையெல்லாம், அ.மி, பொதுவான தலித் அறிவும் , அதலித் பற்றி அபிப்பிராயமும்தான்.
    இன்னமும் , அது குறைவு என்று தான் நினக்கத் தோண்ருகிறது.
    ஒரு வேளை பகிரங்கமாக , தனது மறுப்பு கடிதத்தில், தனது தலித் நிலைப்பாட்டை விளக்கினால் எல்லோருக்கும் பயனாகலாம்.

    நன்றி.

    ReplyDelete
  2. பத்ரி தட்டச்சினால் , ஆனந்துக்கு இமெயில் செய்ய முடியாதா என்ன?
    அ.மி . யின் விளக்கக் கடித்ததி தார்மிகப் பொறுப்புடன் அ.மி. அவுட்லுக் பத்திரிக்கைக்கு அனுப்பலாம்.

    --என்று வாசிக்கவும்.

    ReplyDelete
  3. If his views were not reported accurately and truly he should have written to outlook.what purpose is being served by writing to rajanaygam or pathivukal about it at this stage.and why should he wait so long even to say this.if the interview was over phone it was most likely that the correspondent would have taped it or recorded it.if the published version differs from what he has told then he could take outlook to court.he is not new to print media.nor he lives somewhere in the world where he has no access to web or outlook magazine.he tries to evade the issue.he could say some views were not published correct^ly.but then he should also tell us whether he concurs with some of the published views and if so which ones.

    ReplyDelete
  4. «ÅÕ¼Ûõ, «ÅÃÐ Á¸Û¼Ûõ ¦¾¡¼÷óÐ §Àº¢ ÅÕ¸¢§Èý. ¾¡ý ¦º¡ýÉ ´Õ Å¡÷ò¨¾Ôõ §ÀðÊ¢ø
    ÅÃÅ¢ø¨Ä ±ýÚ «Å÷ ±ýÉ¢¼õ ¦º¡øĢ즸¡ñÊÕó¾¡÷. ¯¼§É À¾¢ø ±ØÐí¸û, ¯í¸¨Çî ÍüÈ¢
    þôÀÊô ÀÄ ¸ñ¼Éí¸û ÅÕ¸¢ýÈÉ ±ýÚ ¦º¡øÖõ§À¡¦¾øÄ¡õ, ÅÆì¸õ§À¡ø «¨Á¾¢§Â ¸¡ò¾¡÷.

    ´Õ Ũ¸Â¢ø, þó¾ «¨Á¾¢, ±ý¨Éô §À¡ýÈÅ÷¸ÙìÌ ±Ã¢îºø ¾ó¾¡Öõ, «ÅÃÐ «¨Á¾¢ìÌ ´Õ ¦À¡Õû
    þÕìÌõ ±ý§È ¿¡ý ¿¢¨Éò§¾ý.

    «ÅÃÐ Á¸ý áÁ¸¢Õ‰½ý ±ý ¿ñÀ÷. «Åâ¼õ §ÀÍõ§À¡Ðõ, þ¨¾ô ÀüÈ¢ ÅÄ¢ÔÚò¾¢§Éý. «Å÷
    «ôÀ¡×ìÌ §Áø «¨Á¾¢Â¡ÉÅ÷. ¬Á¡õ... ¦ºöÂÏõ... ±ýÚ ¦º¡øĢ즸¡ñÊÕó¾¡÷.

    ÀÃÀÃôÀ¡É ¸¡Ä¸ð¼ò¾¢ø ±Ð ¦º¡ýÉ¡Öõ Òò¾¢ìÌô §À¡¸¡Ð ±ýÀ¾¡ø «¨Á¾¢ ¸¡ò¾¡§Ã¡ ±ýɧš?
    this is what venkatesh says

    and badri says
    நான் அந்த செவ்வி பற்றி முழுமையான விளக்கம் கேட்டேன். அவரும் அதைப் பற்றிய தன் கருத்தைச் சொன்னார். இணையத்தில் வந்திருப்பது பற்றி இதுநாள் வரை தனக்கு எதுவும் தெரியாது என்றார்

    was he totally unaware of what has appeared in outlook till badri pointed that to him.if so this contradicts what venkatesh has written.which is true.perhaps only asokamitran can given an answer

    ReplyDelete
  5. அவருடனும், அவரது மகனுடனும் தொடர்ந்து பேசி வருகிறேன். தான் சொன்ன ஒரு வார்த்தையும் பேட்டியில் வரவில்லை என்று அவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். உடனே பதில் எழுதுங்கள், உங்களைச் சுற்றி இப்படிப் பல கண்டனங்கள் வருகின்றன என்று சொல்லும்போதெல்லாம், வழக்கம்போல் அமைதியே காத்தார்.

    ஒரு வகையில், இந்த அமைதி, என்னைப் போன்றவர்களுக்கு எரிச்சல் தந்தாலும், அவரது அமைதிக்கு ஒரு பொருள் இருக்கும் என்றே நான் நினைத்தேன்.

    அவரது மகன் ராமகிருஷ்ணன் என் நண்பர். அவரிடம் பேசும்போதும், இதைப் பற்றி வலியுறுத்தினேன். அவர் அப்பாவுக்கு மேல் அமைதியானவர். ஆமாம்... செய்யணும்... என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

    பரபரப்பான காலகட்டத்தில் எது சொன்னாலும் புத்திக்குப் போகாது என்பதால் அமைதி காத்தாரோ என்னவோ?
    this is what venkatesh says

    and badri says
    நான் அந்த செவ்வி பற்றி முழுமையான விளக்கம் கேட்டேன். அவரும் அதைப் பற்றிய தன் கருத்தைச் சொன்னார். இணையத்தில் வந்திருப்பது பற்றி இதுநாள் வரை தனக்கு எதுவும் தெரியாது என்றார்

    was he totally unaware of what has appeared in outlook till badri pointed that to him.if so this contradicts what venkatesh has written.which is true.perhaps only asokamitran can given an answer

    ReplyDelete
  6. இப்போதுதான் திரு அசோகமித்ரனின் பேட்டியைப் படித்தேன். அக்கட்டுரையில் அவரின் கருத்துகள் எனக் கூறப் பட்டுள்ளவை மிகத் தெளிவாகவே உள்ளன. தலைப்பே 'நாங்கள் யூதர்கள் போன்றவர்கள்' (அதாவது, நான்கள் மற்றவர்களை விட திறமை வாய்ந்தவர்கள்; அதனாலோ என்னவோ நாங்கள் நசுக்கப்படுகின்றோம்.) என்றுதானே உள்ளது. அதற்கு அமி. மறுப்பு தெரிவித்ததாக எங்கும் கூறப்படவில்லை. இணையத்தில் இக்கட்டுரை வந்தது தெரியாது என்று அவர் காரணம் கொடுத்திருந்தாலும், அதே கட்டுரை (சற்று சுறுக்கப்பட்டு) அச்சில் வந்தது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டுமே? அதற்காவது தன் மாற்றுக் கருத்தைத் தெரிவித்திருக்கலாம் அல்லவா!

    எனக்கு நம்பிக்கையில்லை. தன் மனதில் பட்டதைச் சொல்லிவிட்டு, எதிர்ப்பு வந்ததும் அமி. பின்வாங்குகின்றார். (செயேந்திரனின் கைதிற்குப் பின் தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவித்த சில பார்ப்பன பெண்களின் செயலை ஆமோதிக்கும் இவர், இப்படி கோழைத் தனமாக, ஒரு நிலைப்பாடோ, அறிவார்ந்த நேர்த்தியோ இன்றி பின்வாங்குவது விந்தையாகப் படுகின்றது -- வெட்கக் கேடானதும் கூட.)

    அமியின் கருத்தை மற்ற பார்ப்பனர்கள் எப்படிப் பார்க்கின்றனர் என்ற கேள்வி என்னுள் எழும்புகின்றது. அவர் கூறுவது போல், பார்ப்பனர்கள் தாங்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும் எல்லாத் துறைகளிலும் ஒரங்கட்டப்படுவதாகவும் எண்ணுகின்றனரா? அதோடு, பார்ப்பனர் அல்லாதோரை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று உள்ளுர கருதுகின்றனரா? ஒரு காலத்தில் 'கொடி கட்டிப் பறந்த' பார்ப்பனர்கள், கடந்த 50 ஆண்டுகளில் அரசியல், சமூக, பொருளாதர தளங்களில் அவர்கள் கொண்டிருந்த மேலாண்மையை இழந்து விட்டனர். கடைசிப் புகலிமாக வி்ளங்கிய காஞ்சி மடமும் இன்று ஆட்டங்கண்டுள்ளது. திட்டமிட்டு அது தகர்க்கப்பட்டதாக அமி கருதுகின்றார்...

    இச் சுழலைக் கவனத்தில் கொள்ளும்போது, ஏன் அசோகமித்திரன் அவுட்லுக்கில் கூறப்பட்ட கருத்தகளை வெளியிட்டிருக்கக் கூடும் என்று புரிந்து கொள்ள முடிகின்றது. (அதற்காக அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை; அவர் ஒரு பழமைவாதி என்பது தெளிவு.) மேலும் அவரது கருத்துகள், அருவருக்கத் தக்கதாக இருப்பினும், கடந்த 30 ஆண்டுகளாக நடப்பில் உள்ள சீரழிந்த தமிழக அரசியலின் காரணமாக ஒரு வகை கண்ணியத்தன்மையைக் கொண்டதாக தொன்றலாம். இது தவறு. எவ்வளவு காலத்திற்குப் பார்ப்பனர்கள் தங்களை வேறுபடுத்திப் பார்க்கப்போகின்றனர். அவர்களும் மற்ற குலத்தோரைப் போல தமிழர்களே. தமிழர் என்ற பெருநதியில் கலந்து அவர்கள் மெல்ல மெல்ல தங்களின் தனித்தன்மையை இழப்பார்களாயின் அதில் வருத்தப்பட என்ன உள்ளது? மேன்மையான செயல்களும் சிந்தனையும் போதும். பார்ப்பனன் என்ற போலியான பகட்டான அடையாளத்தை உதறித் தள்ளிவிட்டு, தமிழ், தமிழர் வளர்ச்சிக்காக பாடுபடுவதே சிறப்பு.

    இல்லையேல், இவர்கள் இந்துத்துவ வெறியர்களின் அகோரப் பசிக்கு இரையாவது திண்ணம்!

    வே. இளஞ்செழியன்

    ReplyDelete
  7. //எவ்வளவு காலத்திற்குப் பார்ப்பனர்கள் தங்களை வேறுபடுத்திப் பார்க்கப்போகின்றனர். அவர்களும் மற்ற குலத்தோரைப் போல தமிழர்களே. தமிழர் என்ற பெருநதியில் கலந்து அவர்கள் மெல்ல மெல்ல தங்களின் தனித்தன்மையை இழப்பார்களாயின் அதில் வருத்தப்பட என்ன உள்ளது? மேன்மையான செயல்களும் சிந்தனையும் போதும். பார்ப்பனன் என்ற போலியான பகட்டான அடையாளத்தை உதறித் தள்ளிவிட்டு, தமிழ், தமிழர் வளர்ச்சிக்காக பாடுபடுவதே சிறப்பு.

    இல்லையேல், இவர்கள் இந்துத்துவ வெறியர்களின் அகோரப் பசிக்கு இரையாவது திண்ணம்!

    வே. இளஞ்செழியன் //


    இளஞ்செழியன், மிகச்சரியாகச் சொல்லீயிருக்கிறீர்கள்.

    சாதி அமைப்பு என்பது இன்னமும் அவசியம் என்றும், அப்படிப்பட்ட பிறப்பினடிப்படையான படினிலை அமைப்பில் தாங்கள் மற்றவர்களை விட திறமையால் உயர்ந்தவர்கள் என்றும், மற்றவர்கள் விதி விலக்காக வேண்டுமானால் உயர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் கருதுகிற மனப் போக்கை விட்டு, சாதிய அடிப்படையில் பல நூற்றாண்டுகளாக் ஒடுக்கப் பட்டவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அனைவரும் ஒருசேரத் திறமையில் உயர்வதற்கு இன்னும் பல தலைமுறைகள் ஆகலாம் என்ற மனப்பக்குவத்தை அடைந்தால் அசோகமித்திரன்கள் போல பிணாத்திக் கொண்டிருக்க மாட்டார்கள்.

    இது பார்ப்பனர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்துச் சாதியினருக்கும் பொருந்தும்.

    நன்றி - சொ. சங்கரபாண்டி

    ReplyDelete