கோவையில் ஜெயகாந்தனுக்காக ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் அங்குள்ள சட்டக் கல்லூரி மாணவர்களும், திராவிடர் கழக உறுப்பினர்களும் ஜெயகாந்தன் தமிழில் பேசக்கூடாது; சமஸ்கிருதத்தில்தான் பேசவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். காவலர்கள் அழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்பவர்களை வெளியேற்றியபின்னர் கூட்டம் தொடர்ந்துள்ளது.
தினமணி செய்தி
ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அமைதியாக விழா வாசலில் செய்திருக்கவேண்டும். உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்து, மேடையின் முன் வந்து தகாத வார்த்தைகளால் பேசி, கூட்டத்தினை நடத்த விடாமல் செய்தது கண்டிக்கப்படவேண்டியது. சென்னையில் ராணி சீதை அரங்கின் வாசலில் கண்டனத்தைத் தெரிவித்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் அமைதியாக, கைகளில் தட்டிகளை வைத்துக்கொண்டும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் எதிர்ப்பைக் காட்டினர். ஜனநாயக சமுதாயத்தில் அதுதான் சரியான வழிமுறை.
Monday, June 06, 2005
Subscribe to:
Post Comments (Atom)
//
ReplyDeleteபத்ரி:-
ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அமைதியாக விழா வாசலில் செய்திருக்கவேண்டும். உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்து, மேடையின் முன் வந்து தகாத வார்த்தைகளால் பேசி, கூட்டத்தினை நடத்த விடாமல் செய்தது கண்டிக்கப்படவேண்டியது.
//
பத்ரி, உங்களுடன் ஒத்துப் போகிறேன்.
//
ஜெயகாந்தன்:-
தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழன் என்று சொல்வதைவிட, இந்தியாவைச் சேர்ந்த தமிழன் என்று சொல்வதையே பெருமையாக நினைக்கிறேன்.
எதிர்த்துவிட்டு, பதவிக்காக மண்டியிடுபவன் நான் இல்லை. சம்ஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளை உயர்வாகப் பேசி, அங்குள்ள மக்கள் மனதில் இடம் பிடித்து, அங்கு தமிழைப் பரப்புவேன் என்றார்.
//
இந்தோ-ஆரியம், திராவிடம் என்று இரண்டு மொழிக் குடும்பங்கள் உள்ள நாட்டில் இந்திய அரசின் மொழிவழி பன்முகப் பார்வைக்கும், சகிப்புத்தன்மைக்கும் ஒரு உதாரணம் -
இந்தியா இதுவரை செலுத்தியுள்ள செயற்கைக் கோள்களுக்கும், ஏவுகணைகளுக்கும் வைத்து வந்துள்ள பெயர்களில் சில - பாஸ்கரா, ஆரியபட்டா, ரோஹிணி, அக்னி, பிரித்வி, நாக், ஆகாஷ், திரிசூல், அஸ்ட்ரா, ப்ராமோஸ். இத்தனைகளை அனுப்ப உழைத்து வரும் விஞ்ஞானிகளில் பெரும்பாலோர் தென்னிந்தியர்கள்!
தமிழ்நாட்டுக்குள் அல்லாமல், தமிழ் நாட்டிலிருந்து மற்ற மாநிலங்களுக்குச் சென்று வரும் இரயில் வண்டிகளின் பெயர்கள் - brindavan, charminar, dakshin, garudadri, himsagar, navyana express, navjeevan express, coramandal, sangamitra, pinakini, sapatagiri, shatabdi - தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ஒன்றுதான் விதி விலக்கு என்று நினைக்கிறேன்.
இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இந்திய அரசின் sensitivity to multiethnic cultures - ஒரு உதாரணம்.
தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள வங்கிகளிலும், தபால் அலுவலகங்களிலும், தபால் பெட்டிகளிலும், இரயில் வண்டிக் கழிப்பிடங்களிலும் தேவையிருக்கிறதோ இல்லையோ ஆங்கிலமும், இந்தியும் இருக்கும். தமிழ் மட்டுமே வாசிக்கத் தெரிந்த என் தாய் உள்பட எத்தனையோ மக்களுக்கு மிகத்தேவையான அடிப்படை விசயங்கள் கூடத் தமிழில் இருக்காது.
ஜெயகாந்தன் வக்காலத்து வாங்கும், தேசியக் கட்சிகளின் தன்னை நக்கிக் கொள்ளாத இலட்சணமிது. தன்னையே நக்கிக் கொண்டுள்ள திராவிடக் கட்சிகள் கையில் மத்திய அரசின் சிண்டு வந்தாலும் கூட இதையெல்லாம் மாற்ற முடியாது என்பதும், அதைப் பற்றி எந்தக் கவலையுமில்லையாமல் பதவியை வாங்க/தக்க வைத்துக் கொள்ள திராவிடக் கட்சிகள் மற்றவர்கள் காலை நக்கிக் கொண்டிருக்கின்றன என்பதுவும் தான் அவலமான உண்மை.
இத்தனை வருடமாய் கூரையேறி கோழி பிடிக்காத ஜெயகாந்தன் வானமேறி வைகுண்டம் போகப் போகிறாராம். எதற்கு இந்தச் சப்பைக் கட்டு எல்லாம்.
நன்றி - சொ. சங்கரபாண்டி
//ஜெயகாந்தன் ஒரு சிந்தனைக் கேடர்!
ReplyDeleteஅமைதியும் பொறுமையும் மாந்தனுக்கு இன்றியமையாதவை. அன்பும் அரவணைப்பும் அவனுக்கு அணிகலன்களாகும். இவற்றை உன்னதப் பண்பாகக் கொண்டு வாழும் தமிழர்களை உரசிப்பார்க்கவும் சீண்டிப்பார்க்கவும் துணிந்துவிட்டார், எழுத்தாளர் ஜெயகாந்தன். தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் எதிராக வாய்க்கு வந்ததையெல்லாம் வரம்புமீறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்.
“தனித்தமிழ் என் கால் தூசுக்குச் சமம்” என்று இருபது ண்டுகளுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் பேசி நெஞ்சை நிமிர்த்தி நடந்துகொண்டு வரும் ஜெயகாந்தனுக்குச் செருக்கும் இறுமாப்பும் எல்லை கடந்து போய்க்கொண்டிருக்கின்றன. அன்றே முகத்தில் அறைந்தாற்போல் நறுக்கென்று நாலு கடுஞ்சொற்களை விடுத்திருக்க வேண்டும், அல்லது இவ்வாறு சொல்வதன் நோக்கந்தான் என்ன? என்பதை நேருக்கு நேர் வினவி அதற்கு முடிவு கட்டியிருக்க வேண்டும்.
என்ன செய்வது தமிழ்நாட்டு மக்கள் “அவர் கிடக்கிறார், சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும்” என்று ஜெயகாந்தனின் உள்நோக்கம் தெரியாமல் ஏனோ தானோ என்று வாழ்ந்து வருவதால்தான் ஜெயகாந்தனின் செருக்குத் தனம் எல்லை மீறிவிட்டது.
“வருண வேறுபாடுகள் இருக்க வேண்டும்; ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவராசியமாக இருக்கும். தமிழைவிட சமற்கிருதந்தான் உயர்வானது; பிறமொழி கலப்பில்லாமல் தமிழில் எழுத வேண்டும்; பேச வேண்டும் என்கின்ற தமிழறிஞர்கள் தம்மைத்தாமே நக்கிக்கொள்ளும் நாய்கள்; சமற்கிருதம் இங்கே தரித்து வளர்க்கப் பட்டிருந்தால் ங்கிலம் இப்படி நுழைந்திருக்காது” எனக் கடந்த 23.04.05 இல் சென்னையில் சேவாசமிதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார். “டு நனைகிறதாம் ஓநாய்க்குக் கவலையாம்” அன்பர் ஜெயகாந்தனைப் போன்ற பலர் மறைமுகமாகவும் பிறர் மூலமாகவும் தமிழுக்குத் துரோகம் செய்துகொண்டு வருவதை யாரும் அறியாமல் இல்லை. பல இடர்களையும் இடர்நேர்ச்சிகளையும் தடங்கல்களையும் கொடுத்து தமிழ்மொழியை வளர விடாமலும் வாழ விடாமலும் செய்த காலமும் ஏன் அதையே இன்றளவும் ங்காங்கே கமுக்கமாகச் செயல்பட்டு வருவதையும் எங்களால் அறிந்துகொள்ள முடியாமலில்லை. தமிழ்ச் சொற்றொடர்களில் ங்கிலச் சொற்களைப் புகுத்தி மகிழ்ந்தவர்களும் ஜெயன்காந்தன் கூட்டத்தார்தான்.
எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு வடமொழி நண்பர்கள் பலர் இருக்கலாம். அவர்களின் கடைக்கண் பார்வையும் கருத்தூட்டங்களும் அவருக்குத் தேவைப்படலாம். அதற்காகச் சோறு போட்ட மொழியையும் அதைக் கற்றுக் கொடுத்த தமிழறிஞர்களையும் தரக்குறைவாகப் பேசுவதா?
இந்த நன்றிகெட்ட மரபை எங்குப்போய்க் கற்றுக்கொண்டார்? ஒரு வேளை அவரைச் சார்ந்துள்ள கூட்டத்தார் மெச்சிக் கொள்ள இப்படிச் செய்தாரா? அப்படிச் செய்திருந்தால் இவருக்கு அறிவுபூர்வமாகச் சிந்திக்கும் ற்றல் இல்லையா? அல்லது அவர்களின் கைக்கூலியா?
ஞானபீடம் பரிசுபெற்ற ஜெயகாந்தன் போன்றோர் ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஜெர்மன் நாட்டு மொழியைப் பற்றி ஒரு வேளை அவர் அறிந்து இருக்கலாம், அல்லது அறியாமலும் இருக்கலாம். அங்குள்ளோர் ஜெர்மன் மொழியில்தான் எழுதவேண்டும். அம்மொழியில் வேற்றுமொழிச் சொற்கள் கலக்கப்படக் கூடாது என்ற வரம்புண்டு; அவ்வாறு கலக்கப்பட்டிருந்தால் உடனே சம்பந்தப்பட்ட எழுத்தாளர் அந்த நாட்டின் காவலரால் தளைப்படுத்தப்படுவார். இவர்கள் தங்களது மொழியல் வைத்திருக்கும் அக்கறையும் க்கமும் எவ்வளவு பெரிய உண்மையை விளக்குகின்றது...?
இவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுபடும் நாங்கள் நாய்களா...? உமது கூட்டத்தார் தமிழில் சமற்கிருதம் கலந்து தமிழின் சிறப்பையும் செழிப்பையும் அழித்துவிடலாம் என்று திட்டமிட்டனர். அது வெற்றிபெறாமல் போகவே தமிழில் ங்கிலச் சொற்களைப் புகுத்தினார்கள். தமிழ்மொழியை வேரோடு பிடுங்கிவிட வேண்டும் என்று தமிழ்த் திரைப்படங்களிலும் தமிழ் ஊடகங்களிலும் தமிழ்ப் பண்பாட்டிற்கு மாறாகவும் அதன் உயர்நிலை மரபு நிலைகளை அழிக்கவும் ஒரு கூட்டம் துடித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறான கூட்டத்திற்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு முன்னோடி எனக் கூறுவதிலும் தவறு இருக்க முடியாது.
ஒவ்வொரு சொற்றொடரிலும் வலிந்து சமற்கிருத சொற்களைப் புகுத்தி தமிழின் தூய்மையைக் கெடுக்க கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் ஜெயகாந்தன் தமிழ் ஒன்றும் சொத்தல்ல; நான்தான் தமிழுக்குச் சொத்து என்றும், “நான் சாதி பேசறதா நினைக்கக் கூடாது. ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்களில் நீங்கள் எழுதினீர், “எதிர்காலத்தில் என் பெயருக்குப் பின்னால் ஏதேனும் பட்டம் போட்டுக் கொள்ள அசைப்பட்டால் என் ஜாதிப் பெயரான “பிள்ளைமார்” என்ற பட்டத்தையே போட்டுக் கொள்வேன்” என்று திமிரோடு கூறும் ஜெயகாந்தன் தமிழின் சொத்தாம். இவருக்கு வெட்கம் மானம் இருக்கின்றதா... அல்லது அடைமானம் வைத்து விட்டாரா? எனக் கேட்கத் தோன்றுகிறது?
வர்ணவேறுபாடுகள் இருக்க வேண்டும்; ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவராஸ்யமாக இருக்கும் என்பது உங்களைப் பொறுத்தவரை உன்னதமாக இருக்கலாம். அல்லது அது உங்களின் சொத்தாகவும் இருக்கலாம். அந்தச் சொத்து எங்களுக்குத் தேவையில்லை. தமிழ் மொழிக்கும் இனத்திற்கும் ஊறுவிளைவிக்கும் நச்சுயிரி...! எங்களைப் பொறுத்தவரை கழக இலக்கியங்களில் சாதிப்பிரிவுக்கே இடமில்லை என்பதுதான். அவைதாம் எங்கள் வாழ்வு வளங்களுக்கு வழிகாட்டிகள்!
தமிழை சிறுமைப்படுத்திய ஜெயகாந்தன் தமிழுக்குத் தூணா? இப்படி உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் ஜெயகாந்தன் தன்னை யார் என்று அடையாளம் காட்டிவிட்டார். தமிழ்மொழியால் உயர்ந்து ஓர் உன்னத நிலையை அடைந்தவுடன் தமிழ் அறிஞர்களை நாய்க்குச் சமமாகப் பேசுவது நன்றிகெட்ட செயல் அல்லவா...? தமிழறிஞர்களை தரக்குறைவாகப் பேசும் ஜெயகாந்தன் எந்த உயிரினத்தைச் சேர்ந்தவர்? ஐந்தறிவு கொண்ட விலங்கினமா? அல்லது அந்த நாயிலும் கீழானவரா...? காலம் அவரைக் கண்டிக்கவும் நிந்திக்கவும் தொடங்கி விட்டது. மரியாதைப் பண்பும் நாவடக்கமும் இல்லாத ஜெயகாந்தன் காலத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லித்தான் கவேண்டும்!.
(நன்றி: செம்பருத்தி மாத இதழ், மலேசியா.)//
பத்ரி விளக்கம்
//சென்னையில் ராணி சீதை அரங்கின் வாசலில் கண்டனத்தைத் தெரிவித்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் அமைதியாக, கைகளில் தட்டிகளை வைத்துக்கொண்டும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் எதிர்ப்பைக் காட்டினர். ஜனநாயக சமுதாயத்தில் அதுதான் சரியான வழிமுறை.//
தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் திரு. ஜெயகாந்தன் இதுவரை அவர் பேசியப் பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவில்லை. மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் அமைதியாக நடத்தியும் அவர் கண்டுகொள்ளாதபோது ர்ப்பாட்டம் பெரியதாகும்போது அதுவும் தமிழ் உணர்வாளர்களை மறுபடியும் சீண்டிப்பார்த்துவிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.
எழுத்தாளர் சமூக சீர்கேட்டை மீறி கொதிர்த்தெழுந்து எழுதும்போது தமிழ்ப்பற்றாளர்கள் குறிப்பாக மாணவர்கள் அடிதடியில்லாமல் நடத்திய போராட்டம் தகும்.
புமு.சுரேசு
மலேசியா
வே. ஆனமுத்து வெளியிடும் 'சிந்தனையாளன்' என்ற பத்திரிகையில் ஜெயகாந்தனின் சமீபத்திய உளறல்களைப் பற்றி ஓர் அருமையான கட்டுரை வெளிவந்துள்ளதாக ஒரு பத்திரிகையாளர் சொன்னார். அதை யாராவது வலைப்பதிவில் வெளியிடமுடியுமா?
ReplyDeleteஜெயகாந்தனின் சமூகப் பார்வையின் பிறழ்வும், அவரின் பிற்போக்கான கருத்துகளும் ஏற்கனவே அனைவரும் அறிந்ததுதான்.இன்று நேற்றல்ல, ஆரம்பத்தில் இருந்து அவர் இப்படியேதான் இருக்கிறார். அவர் ஒரு எழுத்தாளர், நல்ல கதை, நாவல் எழுதுபவர்(எழுதியவர்) அவ்வளவுதான். அவரிடம் பாரதி போன்ற சமூக நோக்கையோ, மொழிப்பற்றையோ எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை தமிழ்சமூகம் இப்போதாவது அறிந்துகொண்டதில் மகிழ்ச்சிதான். இது இன்னும் சில பெரிய எழுத்தாளர்களுக்கும் பொருந்தும். ஒரு எழுத்தாளரை அவருக்குரிய இடத்தில் வாழவிடுவதுதான் முறை.
ReplyDeleteஒரு எழுத்தாளர் சமூகசிந்தனை கொண்டவராகவும், மொழிப்பற்று கொண்டவராகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமானதுதான். ஆனால் இயல்பில் எல்லா நேரத்திலும் அவ்வாறு இருப்பதில்லை என்ற யதார்த்தத்தை நாம் என்றுதான் புரிந்துகொள்ளப்போகிறோம்?. ஏற்கனவே சொன்னபடி, இது இன்னும் சில எழுத்தாளர்களுக்கும் பொருந்தும். எழுத்தாளர்களை அவர்களுக்குரிய இடத்தில் இருக்க விடுங்கள். அவர்களை எதிர்காலத்தைக் கட்டியமைக்கப்போகும், சமுதாயத்தின் சிந்தனையை மாற்றியமைக்கப்போகும் அவதார புருஷர்களாய் வீணே கற்பனை செய்துகொள்ளவேண்டாமே.
http://muthukmuthu.blogspot.com/2005/05/blog-post_23.html