சில கன்னட அமைப்புகள் ஒன்று சேர்ந்து, கர்நாடக அரசு பள்ளிக்கூடங்களில் ஒன்றாம் வகுப்பு முதலே ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்று கேட்கிறார்களாம். இதற்கு உதாரணமாக தமிழகத்தைக் காட்டியிருக்கிறார்கள். கன்னடப் பள்ளிக்கூடங்களில் ஐந்தாவது வகுப்பில்தான் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக நடத்தத் தொடங்குகிறார்களாம்.
மாநிலத்தில் 30 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கன்னட மீடியத்தில் படிப்பதாகவும், 25 லட்சம் பேர் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி முதற்கொண்டே ஆங்கிலம் கற்றுக்கொள்வதாகவும், அதனால் கன்னட மீடியத்தில் படிக்கும் 30 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும் இந்த அமைப்பினர் சொல்கின்றனர். உடனடியாக முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தைப் பாடமாக வைக்காவிட்டால் போராடுவோம் என்றும் சொல்கிறார்கள்.
The federation made it clear that they are for Kannada as the medium of instruction, but the Government must respond to the needs of present-day employment.
ஆங்கிலத்தில் பாடம் வைத்துவிட்டால் மட்டும் வேலை வாய்ப்பு கொட்டுகிறதா? என்பதையும் யோசிக்கவேண்டும். ஆங்கிலம் நிச்சயம் (குறிப்ப்ட்ட)வெளிநாடுகளில் உதவலாம் . ஆனால் எத்தனை சதவீதம் கல்லூரி முடித்தவர்களில் எத்தனை சதவீதம் உள்ளூர்/உள்நாடு வேலைவாய்ப்பில் அமர்கிரார்கள். எத்தனை சதவீதம் வெளிநாடுகளுக்கு போகிறார்கள் என்பது போன்ற ஒரு சர்வே செய்தால் தெளிவாய் ஒரு முடிவுக்கு வரலாம். சும்மா 30 லட்சம் பேர் எல் கே ஜி லேயிருந்து- ஆங்கிலம் படிக்காமல் , பாதிக்கப்படுகிறார்கள் என்று "மொட்டை தாத்தா குட்டையில் விழுந்த" கணக்கு சொன்னால் எப்படி? ஏன் தமிழிலே 10 வரை படித்து பின் ஆங்கிலத்துக்கு போனவர்கள் அமெரிக்காவில் இல்லை? இந்த தெளிவற்ற அப்ரோச் -தான் கடுப்பேத்துகிறது.
ReplyDelete(எம்ப்ளாய்மெண்ட் டேட்டா + எடுகேஷன் போர்ட் டேட்டா) = ? ;-)
கார்த்திக்ராம்ஸ் கோபித்துக்கொள்ள வேண்டாம். ஒன்பதாம் வகுப்பு அல்ல; ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆரம்பிக்கலாம்; தவறில்லை. ஆனால்,medium of instruction தாய்மொழியிலும், அதோடு சேர்ந்து ஆங்கிலமும் இன்னும் எம்மொழியாயினும் சிறு வயதிலிருந்தே ஆழமாக, தீவிரமாகக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். இதைப் பற்றி பல இடங்களில் பலரும் பன்னிப்பன்னி பேசி, எழுதி வருகிறோம்; பயனிருப்பதாகத்தான் தெரியவில்லை!
ReplyDeleteதருமி, நானும் நீங்கள் சொல்வதையேதான் சொன்னேன். ஆங்கிலம் படிப்பதில் உள்ள இன்றைய , வசதிகளை நான் மறுக்கவில்லை. "வேலைவாய்ப்பு" என்று காரணம் காட்டி தாய்மொழிக் கல்வியை குறைப்பார்களோ என்று நினைக்கிறேன். அதுவும் எந்த அளவு உண்மை என்று மட்டுமே கேட்கிறேன்.
ReplyDeleteபத்ரி, கார்த்திக்:
ReplyDeleteஆங்கில மொழியை கற்றுக்கொடுப்பதற்கும், ஆங்கிலமொழியூடாக மற்ற பாடங்களைக் கற்றுக்கொடுப்பதற்கும் வித்தியாசமிருக்கிறது. முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் மொழிப்பாடம் இருக்கவேண்டும் என்பதில் தவறில்லை (சரியான முறையில் சொல்லிக்கொடுத்தால்). கல்வி கற்பித்தலே ஆங்கிலத்தினூடாகத் தான் செய்யவேண்டுமென்பது சரியாகப் படவில்லை. உயர்நிலைப்பள்ளி வரையிலாவது மற்றபாடங்களை நம் மொழியிலேயே படிக்கலாம். அதுவரை தமிழில் பாடநூல்களை சிறப்பாகவே எழுதமுடியும்.
நான் 11 வரை தமிழிலும் கல்லூரியில் ஆங்கிலத்தில் படித்தேன். என்னால் இரண்டு மொழியிலும் பேசவோ, படிக்கவோ, எழுதவோ முடிகிறது. கிராமப்புறத்தில் ஆங்கிலப்பள்ளிகளில் படிக்கும் இந்த தலைமுறை உறவுக்காரப் பிள்ளைகள் பலருக்கு தமிழும் தெரியவில்லை. ஆங்கிலமும் ஒழுங்காகத் தெரியவில்லை. அவர்களின் மொழித்திறமை படுமோசமாக இருக்கிறது.
சுந்தரமூர்த்தி: நீங்கள் சொல்வதுதான் என் கருத்தும். இதுபற்றி ஒரு பதிவையும் சமீபத்தில் எழுதியுள்ளேன்.
ReplyDeletehttp://thoughtsintamil.blogspot.com/2005/06/blog-post_111849301130141714.html
Though unconnected with the subject, let me record it here, Badri.
ReplyDeleteToday is the 30th anniversary of the declaration of Emergency by Indra Gandhi.
It is interesting to note politicians of every hue have chosen to forget this.