தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று வருகிறது. புதிய பெயர்களைச் சேர்க்கும் கடைசி நாளன்று பல ஊர்களில் சில கட்சிப் பிரமுகர்கள் கொத்து கொத்தாக விண்ணப்பங்களைக் கொடுத்திருக்கின்றனர். திமுக கூட்டணிக் கட்சியினர் இதைத்தொடர்ந்து அதிமுக ஊழல் செய்துள்ளது என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்ய, தேர்தல் ஆணையம் உடனே சில கண்காணிப்பாளர்களை அனுப்பி சோதனை செய்ய, கொத்தாகக் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பங்கள் பலவும் குழப்பங்கள் நிறைந்ததாகவும் பொய்யான தகவல்களுடனும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்த அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மீது வழக்குப் போட முடிவு செய்தது. உடனே "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்றவாறு அதிமுக ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று வழக்கு தொடுத்துள்ளார். அதாவது தேர்தல் ஆணையம், வேண்டுமென்றால் தவறான தகவல்களைக் கொடுத்த நபர்கள் மீது வழக்கு போடட்டும், ஆனால் அந்த விண்ணப்பங்களையெல்லாம் சேர்த்து தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு போடக்கூடாது என்று.
இதிலிருந்து நன்றாகவே தெரிந்துள்ளது யார் வாக்காளர் பட்டியலில் திருட்டுத்தனம் செய்துள்ளனர் என்று. இதுமட்டும் சரியாக நிரூபிக்கப்பட்டால் இந்தப் புரட்டில் ஈடுபட்ட பல அதிமுக நிர்வாகிகளை எந்தத் தேர்தலிலும் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு நிற்கக்கூடாது என்று தடை விதிக்கவேண்டும். முடிந்தால் அதிமுக மீது கடுமையான அபராதத் தொகை (100 கோடி ரூபாய்? :-) விதிக்க வேண்டும்!
இன்று கிடைத்த தகவல்படி தமிழக வாக்காளர் பட்டியல் http://eroll.tn.nic.in/ என்ற தளத்தில் கிடைக்கிறது. (இண்டெர்நெட் எக்ஸ்புளோரரில்தான் ஒழுங்காக வேலை செய்கிறது.) இப்பொழுதைக்கு மாநகராட்சிகள் (சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற), ஓசூர் தொகுதி் பெயர்ப்பட்டியல் தவிர மற்றவை கிடைக்கின்றன. மீதமுள்ளவை 11 ஜூலை அன்றுதான் கிடைக்குமாம்.
எனக்குத் தெரிந்த சிலரது பெயர்களை (அறுசுவை பாபு) நாகப்பட்டினம் பெயர்ப்பட்டியலில் தேடிப்பார்த்தேன்!
தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளிடம் வாக்காளர் பட்டியலைக் கொடுத்து பெயர்களைச் சரிபார்க்கச் சொல்லியுள்ளது. ஆனால் அதனைவிடச் சரியான வழியாக எனக்குத் தோன்றுவது ஒவ்வொரு தெருவிலும் உள்ள ஒருவராவது பக்கத்தில் உள்ள இணைய மையத்துக்குச் சென்று தத்தம் தெருவில் நிஜமாகவே வசிப்பவர்களின் பெயர்கள் மட்டும்தான் பட்டியலில் இருக்கின்றதா என்று சரிபார்க்க வேண்டும். சிறிது காசு செலவழித்தாலும் பரவாயில்லை. அரசியல் திருடர்களை நம்பிப் பயனில்லை.
டோலி சாய்வாலாவும் பெருமாள் முருகனும்…
8 hours ago
//அரசியல் திருடர்களை நம்பிப் பயனில்லை.//
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள்.
வாக்களர்பட்டியலின் சுட்டிக்கு நன்றி! ஊரில் இருக்கும் வீட்டுமுகவரியில் அம்மாவின் பெயர் உள்ளது, அப்பாவினதைக் காணோம்!! அதே முகவரியில் பக்கத்து வீட்டுப் பெண்மணி (என்று நினைக்கிறேன்)யின் பெயரையும், சம்பந்தமில்லா நபர் ஒருவரின் பெயரும் உள்ளது!! என்னுடைய பெயரையெல்லாம் சேர்க்கவேயில்லை போலுள்ளது!
ReplyDelete// ஆனால் அதனைவிடச் சரியான வழியாக எனக்குத் தோன்றுவது ஒவ்வொரு தெருவிலும் உள்ள ஒருவராவது பக்கத்தில் உள்ள இணைய மையத்துக்குச் சென்று தத்தம் தெருவில் நிஜமாகவே வசிப்பவர்களின் பெயர்கள் மட்டும்தான் பட்டியலில் இருக்கின்றதா என்று சரிபார்க்க வேண்டும். //
ReplyDeleteநல்ல யோசனைதான். ஆனால் இணையம் வாசம் இல்லாத பகுதி மக்கள் தங்கள் பெயரை சரிபார்க்க ஒரு யோசனை கூறலாமே!
//அதிமுக மீது கடுமையான அபராதத் தொகை (100 கோடி ரூபாய்? :-) விதிக்க வேண்டும்!
ReplyDelete//
Badri,
Isn't little too much to fine 10% of Jayalalitha's personal worth? :-))
//நல்ல யோசனைதான். ஆனால் இணையம் வாசம் இல்லாத பகுதி மக்கள் தங்கள் பெயரை சரிபார்க்க ஒரு யோசனை கூறலாமே!//
ReplyDeleteதேர்தல் ஆணையத்திடமிருந்து எந்தப் பகுதியின் வாக்காளர் பட்டியலும் யார் கேட்டாலும் கிடைக்கும். ஆனால் அதற்குக் கால தாமதமாகலாம். ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், ரோடராக்ட் சங்கம் (இன்னும் வேற எதுனாச்சும் இருக்கா?) போன்றவை இந்தக் காரியத்தைச் செய்யலாம்.
ராதாகிருஷ்ணன்: உடனடியாக உங்கள் தந்தையை இந்தத் தவறுகளைச் சுட்டிக்காட்டச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் he will be disenfranchised.
ReplyDeleteஅதேபோல நீங்கள் உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்தீர்களா? உங்கள் பெயர் ஏற்கெனவே பட்டியலில் முன்னர் இருந்து இப்பொழுது விடுபட்டுப் போயுள்ளதா?
விடாது துரத்துங்கள்.
வீடுகளுக்குக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் (கொடுத்திருக்கும்) புதிய எண்களால் வந்த குழப்பம் என்று நினைக்கிறேன். அரசின் இது பற்றிய (வீட்டு எண்கள்) சரியான அறிவிப்போ, தகவல்களோ மக்களுக்குத் தெரியவில்லை.
ReplyDeleteபழைய எண்ணுள்ள முகவரியில் அம்மாவின் பெயரும், புதிய எண்ணில் அப்பாவின் பெயரும் உள்ளது!!! இருந்தாலும் விசாரித்துப் பார்க்கச் சொல்லியுள்ளேன்.
ஆறேழு வருடங்களுக்கு முன்பு இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டை மட்டும்தான் என்னிடமுள்ளது. ஒருவேளை நானங்கு இல்லாத காரணத்தால் சேர்க்காமால் விட்டுவிட்டார்களோ என்னவோ. இதையும் விசாரித்துப் பார்க்கவேண்டும்.
I did the search...
ReplyDeleteI got only an Error.
Microsoft OLE DB Provider for SQL Server error '80040e14'
Incorrect syntax near the keyword 'and'.
/erchennainame_next.asp, line 96