Thursday, June 23, 2005

கேரளா மாநில அரசின் விபரீத புத்தி

கேரளா அரசு திடீரென இருக்கும் வேலைகளை விட்டுவிட்டு குறைந்த விலை விமானச் சேவையைத் தரும் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கலாமா என்று ஆராயப் புறப்பட்டுள்ளது.

இது எந்த மாநில அரசுக்கும் இதுவரை வராத புது யோசனை!

இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து மிகவும் சுவாரசியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. தனியார் விமானச் சேவை நிறுவனங்கள் நாளுக்கு ஒன்றாக நுழைந்துகொண்டிருக்கின்றன. 1990களில் இதே நிலை இருந்தது. அப்பொழுது புதிதாகச் சேவையை ஆரம்பிக்கும் பல நிறுவனங்களுக்கு நிர்வாக சூட்சுமங்கள் சரியாகத் தெரிந்திருக்கவில்லை. 1996-ல் ஒருமுறை NEPC விமானச்சேவையைப் பயன்படுத்தியிருக்கிறேன். படு கேவலம். ஜெட் ஏர்வேஸ் தவிர பிற சேவைகள் முற்றிலுமாக ஒழிந்தன. பின்னர் சஹாரா தொடங்கியது.

ஜெட், இந்தியன் ஏர்லைன்ஸை எளிதாகவே பின்னுக்குத் தள்ளியது. சந்தையை ஜெட், இந்தியன் ஏர்லைன்ஸ், சஹாரா மூன்றும் தமக்குள் பங்குபோட்டுக்கொண்டபோது ஏர் டெக்கான் எனப்படும் குறைந்தவிலை விமானச்சேவை வந்தது. கடந்த ஒரு வருடத்தில் ஏர் டெக்கான் சக்கைப்போடு போட்டதைப் பார்த்து பல்வேறு போட்டியாளர்களும் குறைந்தவிலை விமானச்சேவையை அளிக்க முன்வந்துள்ளனர்.

இதற்கிடையே வெளிநாடுகளுக்கான பாதைகள் ஏர் இந்தியாவின் கையில் ஏகபோகமாக இருந்ததும் மாற்றியமைக்கப்பட, அங்கும் ஜெட் ஏர்வேஸ் படு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. போட்டியை எதிர்கொள்ள, ஏர் இந்தியாவும் வளைகுடா நாடுகளுக்காகவெனவே குறைந்தவிலை விமானச்சேவையை அறிமுகம் செய்துள்ளது.

ஆனால் இந்தியன் ஏர்வேய்ஸ், ஏர் இந்தியா இரண்டும் தரத்தில் படு குறைவு. அரசு நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் மூஞ்சியை சிடுசிடுவென வைத்திருக்க வேண்டும் என்று யாரோ எழுதிவைத்திருக்கிறார்கள் போல. சொன்ன நேரத்தில் விமானம் கிளம்பும் என்று எதிர்பார்க்கவே முடியாது. கஸ்டமர் சாடிஸ்ஃபேக்ஷன் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள். கடந்த இரண்டு நாள்களாக இந்தியன் ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர்கள் லட்சத்தீவுகளில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் இந்தியன் ஏர்லைன்ஸ் விமான ஓட்டுனர் பதவி விலகிவிட்டாராம்! ஏன் இன்னொரு விமானியைக் கொண்டுவரமுடியாதா இந்தியன் ஏர்லைன்ஸால்? பதிலாக பயணிகளை, ஏதேதோ வழியாக மூக்கைச் சுற்றி கொச்சிக்கு கப்பல் மூலமாகக் கொண்டுவரப்போகிறார்களாம்!

இந்த இரு அரசு நிறுவனங்களும் தமது தரத்தை உயர்த்த சிறிதும் முயற்சி செய்வதாக இல்லை. இந்த நிறுவனங்கள் லாபம் ஈட்டுவது போலவும் தெரியவில்லை. இதே நிலை நீடித்தால், இன்னமும் சில வருடங்களில் ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் இரண்டும் தனியார் சேவைகளுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் கடையை மூடிவிடவேண்டியிருக்கலாம்.

இப்படிப்பட்ட நிலையில் என்ன தைரியத்தில் கேரள மாநில அரசு ஒரு விமானச் சேவையைத் தொடங்க நினைத்திருக்கிறார்கள்? அதுவும் வேலை நிறுத்தத்துக்குப் பேர் போன கேரளாவில்?

18 comments:

 1. நல்லதுதானேங்க? Cochin International Airport Ltd' என்ற நிறுவனமும், இப்படி வளைகுடா நாட்டில் இருப்பவர்களின் முதலீட்டுடன் ( கணிசமான அளவு ) துவங்கப்பட்டதுதான். அதிலும், இந்த சேவையை இயக்கப் போவது அரசாங்கம் 26 % முதலீடு செய்திருக்கும் ஒரு கூட்டு நிறுவனம் தானே அன்றி மாநில அரசாங்கத் துறை இல்லை. அப்படி என்றால் அது கிட்டதட்ட தனியார் நிறுவனம் போலத்தான் இயங்கும் என்று நம்பிக்கை வைக்கலாம். மத்த ஸ்டேட்டுக்கு இல்லாத இந்த வசதியான கேரளா- வளைகுடா உறவை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி, ஒழுங்கான ஆட்களை நியமித்தால் கேரளா to வளைகுடா , வளைகுடா to கேரளா ரூட்டில் வண்டி ஓட்டியே லாபம் பார்க்கலாம். செமத்தியான ரூட்டு அது....

  ReplyDelete
 2. On IA passengers being stranded at Lakshadweep, I sent the news link to some of my friends and find below one interesting reply..

  To some extent, this happens in US as well. Sometimes the US AIRWAYS announcement comes "Ladies and gentlemen boarding FLT 1234 to Pittsburgh. The crew is missing. We will let you know when we find them". I am quoting exactly how it is. This was from the White Plains New York Airport and this has happened to me twice.

  ReplyDelete
 3. பத்ரி, நானும் பிரகாஷ் பார்ப்பது போல் தான் பார்க்கிறேன். யோசனை நல்லதுதான்.
  தரம் சரியில்லை என்பது யூனிவெர்சல் பிரச்சினைதான்.
  சிடு மூஞ்சிகளுக்கு விமர்சனத்தை கொண்டு செல்லவேண்டும் ஏதாவது ஒருவழியில்.
  இந்த புதிய சேவைகளால் ஏற்படும் போட்டி கூட அதை நாளடைவில் உருவாக்க"லாம்."

  ReplyDelete
 4. போன வார பிஸினஸ் வேர்ல்டு பாருங்கள். இந்திய சந்தைக்கு புதிதாக 14 விமான சேவை நிறுவனங்கள் வர இருக்கின்றன. இன்றைய பிஸினஸ் ஸ்டார்ண்டர்ட் செய்தித் தாளில், கோ ஏர், பாராமொளண்ட் ஏர்லையன்ஸ் மற்றும் இண்டிகோ ஏர்லையன்ஸ் பற்றிய செய்திகள் வந்திருக்கின்றன. போகிற போக்கினைப் பார்த்தால், மீனம்பாக்கத்தில் நுழைந்தவுடன் "வாங்க சார், வாங்க சார், டில்லி, பாம்பே,கல்கத்தா, பேங்களுர் எல்லா விமானமும் இருக்கு சார், நம்ம ப்ளைய்டுல ஏறிக்குங்க சார்" என்று கூவும் காலம் வரலாம் ;-)

  கேரள அரசாங்கம் இதனை ஒழுங்காக நடத்தினால், இது ஒரு அருமையான வருமான வழியாக அமையும். கொஞ்ச நாளாக தூங்கி வழிந்துக் கொண்டிருந்த ஏர் பஸ்ஸூம், போயிங்கும், இந்திய சந்தையின் அசாதாரண வளர்ச்சிப் பார்த்து நிறைய விமானங்களை குத்தகைக்கு கொடுக்க சம்மதித்து இருக்கின்றன. பிரகாஷ் சொல்வது போல, கேரளா-வளைகுடா, ஒரு "கல்லா" கட்டும் ரூட். அதுபோல, யாராவது, பெங்களூர்-அமெரிக்கா, சென்னை-அமெரிக்கா சகாய விலைக்கு தந்தால், அதுவும், செமத்தியான தடமாக அமையும்.

  அதெல்லாம் விடுங்க, கிங்பிஷர் ஏர்லையன்ஸ் ஏர் ஹோஸ்டஸ் புகைப்படங்கள் பார்த்தீர்களா ? :-)))))

  ReplyDelete
 5. Prakash,
  The job of the govt is not to run airlines. Govt shud work for imporving the basic amenities of the people. Govt shud act as a facilitator for the business by setting up policies.

  >>கேரளா to வளைகுடா , வளைகுடா to கேரளா ரூட்டில் வண்டி ஓட்டியே லாபம் பார்க்கலாம். செமத்தியான ரூட்டு அது....

  If profit is the motive then the govt can start a IT company. It is more profitable than a airlines. :)

  related post from Ramnath of ET.
  http://ramz.blogspot.com/2005/06/smith-but-point-is-different.html

  Badri,
  your english blog's atom feed http://bseshadri.blogspot.com/atom.xml
  is not showing any new content. Pls enable feeds for your english blog.

  ReplyDelete
 6. Saravanan

  //The job of the govt is not to run airlines. Govt shud work for imporving the basic amenities of the people. Govt shud act as a facilitator for the business by setting up policies. //

  the government will not run the airlines. Government will invest in a joint venture company , that will run the airline service. It is a common practice in India. Prudent investment in the upcoming hottest sector by a state government and good governance are two different things.

  //If profit is the motive then the govt can start a IT company. It is more profitable than a airlines. :) //

  Profit is not a four letter word
  :-) and who said govts shouldn't make profits? how do we minimise fiscal deficits then? more and more taxes?

  //related post from Ramnath of ET.
  http://ramz.blogspot.com/2005/06/smith-but-point-is-different.html//

  Thanks for the link

  ReplyDelete
 7. //போன வார பிஸினஸ் வேர்ல்டு பாருங்கள். இந்திய சந்தைக்கு புதிதாக 14 விமான சேவை நிறுவனங்கள் வர இருக்கின்றன. //

  பார்த்தேன். ஆளாளுக்கு ஏர்லைன்ஸ் ஆரம்பிச்சுட்டாங்க...வி.ஜி. சந்தோசமும், விவேக் & கோ வசந்தகுமாரும் தான் பாக்கின்னு நினைக்கிறேன்.:

  //அதெல்லாம் விடுங்க, கிங்பிஷர் ஏர்லையன்ஸ் ஏர் ஹோஸ்டஸ் புகைப்படங்கள் பார்த்தீர்களா ? :-))))) //

  அய்யோ.. பாக்கலையே தல... இதோ இருங்க... கூகிள்ள கிடைக்குதான்னு பாக்கிறேன் :-)

  ReplyDelete
 8. //வி.ஜி. சந்தோசமும், விவேக் & கோ வசந்தகுமாரும் தான் பாக்கின்னு நினைக்கிறேன்.://

  வசந்த் & கோ ன்னு மாத்தி படிச்சுகிட்டேன்.

  இவர்கள் எல்லாம் ஆரம்பித்தால் பரவாயில்லை. நம்ம சரவணா ஸ்டோர் செல்வரத்தினம் சன்ஸ் டவுன் பஸ் டிக்கெட் ரேட்டுக்கு தமிழ்நாட்டுல உள்ள எல்லா கிராமத்துக்கும் பிளைட் விட ஆரம்பிச்சுட போறாங்க. அப்புறம் போட்டிக்கு ஜெயசந்திரன் ஸ்டோர்ஸ் (அதாங்க ஜெயச்சந்திரன்), முருகன் ஸ்டோர்ஸ்னு ஒவ்வொருத்தரா ஆரம்பிச்சு, ஸ்கைவே ட்ராபிக்கை அதிகமாக்கிடப் போறாங்க.

  ReplyDelete
 9. I guess I agree with Icarus on this. Joint Ventures (govt & private in it together) have become part of the business in late 1960s itself in other industries. One such example is SPIC. So, why not airlines too.

  Thanks and regards, PK Sivakumar

  ReplyDelete
 10. மோனோபொலி இல்லாத எந்தத் துறையிலும் அரசினால் - இந்திய அரசினால் - லாபம் சம்பாதிக்க முடிந்ததில்லை.

  எனவே அரசு தொடர்புள்ள ஒரு கம்பெனி விமானம் ஓட்டினால் அதற்கு லாபம் கிடைக்கும் என்று நம்புவதற்கு இல்லை. பொதுமக்கள் பணம் வீணாவதுதான் மிச்சம்.

  மேலும் விமானத்துறையில் பல்வேறு நிறுவனங்கள் போட்டிபோட வந்துள்ளன. இவையனைத்தும் நீடித்து இருக்கப்போவதில்லை. இவற்றுள் பல அழியப்போகின்றன. அப்படிப்பட்ட நிலையில் அரசு இதில் தலையிடவேண்டியதே இல்லை. போனால் அது பொதுமக்கள் பணம் என்று இவர்கள் ஞாபகம் வைத்திருக்கவேண்டும்.

  மொத்தம் 300 கோடி ரூபாய் முதலில், 26% பங்கு என்றாலும் 75 கோடி ரூபாய் மூலதனம் கேரள அரசு கொண்டுவரவேண்டும். அந்தப் பணத்தை அடிப்படைக்கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்காக செலவிடலாம்.

  கையில் எக்கச்சக்கமாக பணத்தை வைத்துக்கொண்டு மாநில அரசுகள் எங்கு கொண்டுபோய் இதை முதலீடு செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் நிலையில் எல்லாம் இல்லை!

  என் பயமெல்லாம், அடுத்து தமிழக அரசும் இந்த மாதிரி ஏதாவது செய்யக் கிளம்பிவிடப் போகிறதே என்றுதான்!

  ReplyDelete
 11. பிரகாஷ்: கட்டமைப்புகள் துறையில் அரசுதான் ஈடுபடவேண்டும். கொச்சின் சர்வதேச விமான நிலையத்தைக் கட்டுவது என்பதே வேறு விஷயம். அதை வேறு எந்த நிறுவனமும் செய்திருக்க முடியாது. ஏனெனில் இப்பொழுதுதான் தனியாரை மும்பை, தில்லி சர்வதெச விமான நிலையங்களைக் கட்டும்/வளர்க்கும் பணிகளுக்கு அனுமதிக்க இருக்கிறார்கள் (அதிலும் கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு உள்ளது.)

  செமத்தியான ரூட், லாபம் பார்க்கலாம் என்றெல்லாம் சொல்லி கேரள அரசை நாசமாக்காதீர்கள்! அடிப்படையில் ஓர் அரசு நிறுவனத்தால், எந்தத் தனியார் நிறுவனத்துடனும் போட்டி போட முடியாது என்பதுதான் இப்பொழுது நிதர்சனமாகத் தெரிகிறதே?

  அரசுகள் தொழில்துறையில் இறங்கிக் கூத்தடிப்பதை நேரு காலத்திலேயே மினூ மசானி, ராஜாஜி ஆகியோர் கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால் அப்பொழுது நேருவின் கொள்கைகள்தான் ஜெயித்தன. இந்தியா தோற்றது. இப்பொழுதுதான் அந்தக் கொடுமையிலிருந்து நாம் மீண்டு வருகிறோம்! இருக்கும் நிறுவனங்களை அரசு disinvest செய்வதுதான் சரியான வழி. அதை விடுத்து புதிதாக நிறுவனங்களை அமைப்பது முட்டாள்தனம்.

  ReplyDelete
 12. சரவணன்: என் ஆங்கில வலைப்பதிவின் RSS feed: http://bseshadri.blogspot.com/rss/bseshadri.xml

  ReplyDelete
 13. Prakash,
  Good news first . Kingfisher airlines launch photos (From kiruba.com)
  http://www.flickr.com/photos/44124326026@N01/sets/436537/

  //the government will not run the airlines. Government will invest in a joint venture company , that will run the airline service. It is a common practice in India. Prudent investment in the upcoming hottest sector by a state government and good governance are two different things.//

  you have to see the return on investment. there are other reasons also,
  gestation period will be longer.
  competiotion from low cost airlines.
  experience of the private player in airline industry.

  I think you have not read Ramnath's blogpost completely. Read the following lines,

  amartya sen once said indian government has been overactive where it should not be active at all; and underactive where it should be active. case after case in economic history suggest that things work out better when they are left to market. yet, in many cases, people or organisations might not be in a position to participate in the market; and there are instances where markets don't work that well. this more or less defines the role of a government: if markets can do a job better, leave it to the market; and where markets can't, intervene. getting involved where you (govt) can't better do better than the market has a problem: you have to bear the opportunity cost. the problem with being overactive where you shouldn't be active is that you will be underactive where you should be active. running a businesses is best left to market, so that you can focus on areas where markets don't seem to work - rural health, rural education etc. so, the government should its stake in bhel not to make money, but as a step in getting out of a businesses it shouldn't be in.

  Govt shud focus on things like poverty allevation, health awareness and not in running a business. govt shud enter business only if no business is available to serve the people and to benefit large number of people. public sector/public-private partnership created in 1960s to encourage entrepreneurs to enter new areas. it benefited the country by providing employment for the unemployed and increasing the GDP. otherwise there is no need for govt. presence in the business.

  currently lot of airlines servicing the kereal-gulf region. there is no need for a govt. airlines.

  //Profit is not a four letter word
  :-) and who said govts shouldn't make profits? how do we minimise fiscal deficits then? more and more taxes?//

  if govt runs any business it shud strive for profitability. minimising the fiscal deficits shud be done thru financial discipline in spending and not by investing in business.

  ReplyDelete
 14. பிரகாஷ், இது உங்களுக்காக,;-))))
  http://www.flykingfisher.com/pressLaunch.htm

  PPP [Public-Private-Partnership]மாடலில் இந்தியாவில் நிறைய விஷயங்கள் நடக்கின்றன. பத்ரி சொன்னது போல் இந்த 14 நிறுவனங்களும் சந்தையில் இருக்கமுடியாது. 3-4 நிறுவனங்கள் தான் இருக்க இயலும். மற்றவை, மூடப்பட்டு விடும் அல்லது பிற நிறுவனங்கள் வாங்கி ஏப்பமிட்டுவிடும். ஆக, கன்சாலிடேஷன் கண்டிப்பாக நடக்கும். என் கேள்வி, இதனை லாபகரமான தொழிலாக நடத்த இயலுமா என்பது தான்.

  பாராமொளண்ட் ஏர்லெயன்ஸ் (PA) 614 கோடி ரூபாய் கொடுத்து ஒரு பிரேசில் விமானத்தினை தருவிக்க இருக்கிறது. 80 இருக்கைகள் கொண்ட அவ்விமானத்தின் மூலம் ஒரு நாளைக்கு 5 டிரிப் அடிக்க இயலும். சாதாரணமாக இந்திய விமானங்களின் இருக்கை கொள்ளளவு (capacity utilisation)70 -80% மட்டுமே. 1500 ரூபாய் ஒரு டிக்கெட் என்று வைத்தாலும், ஒரு நாளைய வருமானம் 4.9 இலட்சம். இதில் எரிபொருள், விமான நிலைய சேவைகள், வரி, பணியாளர் சம்பளம் என்று கழித்தால், 3 இலட்சம் தேறலாம். இந்நிலையில் எந்த காலத்தில் PA தன் கடனையடைக்கும், லாபம் சம்பாதிக்க இயலும்.

  // மோனோபொலி இல்லாத எந்தத் துறையிலும் அரசினால் - இந்திய அரசினால் - லாபம் சம்பாதிக்க முடிந்ததில்லை.//

  90% ஒத்துக் கொள்கிறேன். அதையும் தாண்டி, சில அரசு நிறுவனங்கள் [இந்தியன் ஆயில், ஒ.என்.ஜி.சி] போன்றவை இருக்கவும் செய்கின்றன. இதனை கேரள அரசு நிர்வகித்தால், கோவிந்தா தான். ஆனால், கேரள அரசு இதில் ஒரு பங்காளியாக மட்டுமிருந்து தனியார் நிறுவனங்கள் நிர்வகித்தால், கொஞ்சமாய் உருப்பட வாய்ப்புகள் அதிகம்.

  ReplyDelete
 15. நாராயண்: ஓ.என்.ஜி.சி, எல்.ஐ.சி ஆகிய இரண்டுமே இத்தனை நாள் மோனோபொலி நிலையில்தான் இருந்தன. பி.எஸ்.என்.எல் கூட. நேற்றுதான் அவற்றுக்கான போட்டிகள் உருவாகியுள்ளன.

  எனவே இன்னமும் 20-30 வருடங்கள் கழித்து எல்.ஐ.சி, ஓ.என்.ஜி.சி பற்றிப் பார்ப்போம்.

  அரசு பிறர் ஈடுபட விரும்பாத துறைகளிலும், பொதுநலத்திலும் மட்டும்தான் ஈடுபடவேண்டும் என்பது கருத்து. சாலைகள் அமைப்பது, ஆரம்பக் கல்வி, சுகாதாரம், சமூக நலம்... அவ்வளவுதான். அதற்குமேல் எதையும் செய்ய லாயக்கற்றது அரசு.

  ReplyDelete
 16. 'Those who forget history are condemned to repeat it' என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். இன்னும் நான் சொல்வேன்: 'Those who live under a government that forgets history are condemned to relive it'. இந்த 2005-இலும் கேரளா அரசாங்கத்துக்கு இப்படி ஒரு சோதனை தேவையில்லை. பத்ரி சொல்வது 100% சரி. ஓ.என்.ஜி.சி. பி.எஸ்.என்.எல். எல்லாம் இன்னும் பத்து - இருபது வருஷம் கழிச்சு (அதுக்குள் எதாவது மோனோபாலி சட்டம் போட்டு அதுகளைக் காப்பாத்தினாலொழிய) குப்பை கம்பெனிகளாக(வே?) இருக்கும் என்றே என் அனுமானம். இந்தியாவில் ஒரு சாத்தியம், தனியார் சேவைகள் ஒரேயடியாக புரட்சிகரமான சேவை தந்து ஆச்சரியப்படுத்துவதில்லை. அவையும் குப்பைகளை ஒப்புநோக்கி சகதியில் சுகிக்கத் தயாராகிவிடுகின்றன.

  ReplyDelete
 17. இகாரஸினுடைய எண்ணம் தான் என்னதும்.

  பார்ட்னராக இணைந்து கேரள அரசு இதைச் செய்யுமானால் நல்ல டப்பு கிடைக்க வழி உள்ளது.

  நேரம், பயணம், சேவை, சேவை செய்பவர்கள் என அனனத்திலும் கேவல நிலையில் இருக்கும் ஏர் இந்தியாவும் இண்டியன் ஏர்லைன்ஸும் விரைவில் மூடுவிழா காணப்போவதென்பது உறுதி.

  உடனடி மூடுவிழாவுக்கு அச்சாரம் வேண்டுமா, சிங்கப்பூர் -சென்னை ரூட்டை தனியாருக்கும் சிங்கப்பூர் சார்ந்த பட்ஜெட் விமானசேவைக்கும் கொடுத்துப்பார்க்கட்டும். நாலே நாளில் பயணச்சேவை கடைசிச்சேவை ஆகிவிடும்!

  நரைன் சாருக்கு நன்றி. ஹி..ஹி

  எம்.கே.

  ReplyDelete
 18. தாராளமயமாக்கல் கொள்கைக்கு எதிரானவன் என்ற தோற்றம் எழ வாய்ப்பு இருப்பதால் என்னுடைய அவசர அவசரமான விளக்கம்.

  அரசாங்கம் எல்லாத் துறைகளிலும் வாயை வைப்பதும், மூக்கை நுழைப்பதும் எனக்கும் உடன்பாடானதல்ல. ஆனால், ஒரு திட்டம் இலாபகரமாக இயங்கும் என்று தெரிந்தால் - தெரிந்தால் என்பதை கோடிட்டுப் படிக்கவும் - அந்தத் திட்டத்திலே, 26% முதலீடு செய்வது, என்னைப் பொறுத்த வரை புத்திசாலித்தனமான காரியம். 300 கோடி ரூபாய் திட்டத்தில், சுமார் 80 கோடி ரூபாயை அரசாங்கம் போடப் போகிறார்கள் என்றால், டபக்கென்று செக்கை கிழித்து நீட்டி விட்டு, லாபத்துக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள் என்று அர்த்தமில்லை. இப்போதுதான், இந்த திட்டம் ஒர்க் அவுட் ஆகுமா என்று பார்ப்பதற்காக, ஒரு ஆலோசகரைத் தேடச் சொல்லி இருக்கிறார்கள். அந்த ஆலோசகர் வந்து ஆராய்ந்து பார்த்துவிட்டு, இது வேலைக்காவது என்று அறிக்கை தந்தால் அத்தோடு தீர்ந்தது பிரச்சனை. அப்படி இல்லாமல், இது நல்ல லாபம் தரக்கூடிய திட்டம் என்று சொன்னால், அதிலே, அரசாங்கம் 80 கோடி ரூபாய்களை முதலீடு செய்யலாமா வேண்டாமா? வேண்டாம் என்றால் , ஏன்? திட்டம் வெற்றிகரமாக நடந்து, வருடா வருடம், பி.எச்.ஈ.எல் லும், இன்ன பிற நவரத்னாக்களும், மினிரத்னாக்களும், கோடிக் கணக்கில் டிவிடெண்டைக் கொண்டு போய், மத்திய அரசாங்கத்துக்கு கொட்டிக் கொடுக்கிற மாதிரி, கேரள அரசுக்கும் டிவிடெண்டு வந்தால் வேண்டாம், எங்களுக்கு லாபம் சம்பாதிக்கிற நோக்கமில்லை என்று சொல்லிவிட முடியுமா?

  இது போன்ற சோதனை முயற்சிகளை எல்லாம் செய்யவே கூடாதா? அதுவும் என்ன எட்டாயிரம் கோடி ரூபாய் திட்டமா? வெறும் எண்பது கோடி ரூபாய்...அரசாங்கம் அடிப்படை கட்டமைப்பு வசதிகளிலும், சமூக நலத்திட்டங்களிம் அக்கறை காட்ட வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், தொழில் துறை வளர்ச்சிக்கும் இதற்கும் என்ன தொடர்பு? அது மெயினாக நடக்க்வேண்டும். இடையில் இது போன்றவையும் நடக்க வேண்டும்.

  ReplyDelete